பாதாளம் மரணம், ஆகியவைகளின் திறப்பின் வாசலின் வாதைகளினால்; சரீரத்தில் வியாதிப்பட்டிருந்தாலும், ஆவி,ஆத்துமாவில் தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய் கொண்டவனுமாயிருந்தாலும், அவனுக்கு கர்த்தருடைய நாமத்தினாலே எண்ணெய்பூசி; உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுகிறபோது நீங்கள் சொஸ்தமடைவீர்கள்:-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்; இரட்சிப்பின் பாத்திரமாகிய உடன்படிக்கையில் நிலைத்திருந்து, போஜனபான பாத்திரங்களாகிய சரீரத்தின் உட்புறத்தினுடைய வல்லமைகளை ஜெயங்கொண்டு முதலாவது சுத்தமாக்காமல், அவைகளின் வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக்குகிறவர்கள்;
பாதாளம் மரணம், ஆகியவைகளின் திறப்பின் வாசலின் வாதைகளினால்; சரீரத்தில் வியாதிப்பட்டிருந்தாலும், ஆவி,ஆத்துமாவில் தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய் கொண்டவனுமாயிருந்தாலும்: அவனுடைய தேவனுடைய ஆலயமாயிருக்கிற ஆவி,ஆத்துமா,சரீரம், பரிசுத்தமாயிருக்கும்படியாக,
இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆவிக்குரியதாயிருக்கிற ஆசரிப்பு முறைகள் , ஆராதனை முறைகள் மூலம்: ஆவிக்குரிய நிலையில் தேவனுடைய வார்த்தைகளினால் அன்றாடபலியை / எண்ணையாகிய கடிந்துகொள்ளுதலின் உபதேசத்தைக்கொண்டு; மூப்பர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி / அவர்களுடைய பாவங்களை கண்டித்து உணர்த்துகிறபோது;
அலட்சியப்படுத்தாமல், அவைகளை ஏற்றுக்கொண்டு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணி, எப்பொழுதும் ஆவி, ஆத்துமா,சரீரத்தில் மனந்திரும்பி, நற்கிரியைகளுக்கு முன்னேறுகிறதன் மூலம் சொஸ்தமடைகிறவர்கள் தேவனுடைய நாமம் மகிமைக்காக சாட்சியாக வாழவேண்டும். அன்றாடபலி நிறுத்தப்படும்போது, இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து, அறியாமையாகிய இருளை சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். Psa 141:5; Mat 25:1-13
நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன். Psa 141:5 Jas 5:14-16; Ecc 9:8-9.
பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். Mat 25:1-4
மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். Mat 25:5-8
புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. Mat 25:9-10
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். Mat 25:11-13
மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். Rev 6:5
Jam_5:14-16;Jam_5:17-20; Heb_12:5-10;Heb_12:11-17; 1Ti_5:19-20;1Ti_6:3-5;Job_40:10-14; Psa_141:5, Pro_6:23; Pro_21:20, Ecc_9:8,Isa_1:6, Mic_6:15,Deu_28:40; Mat_25:3-4 , Mat_25:8-9,Psa_116:12-13, Mar_6:13, Luk_10:34, Rev_6:6,
Previousதேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)