8 யோபு, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, பாவங்களை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டபோது; யோபு தன்னுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலையடைவதற்காக செய்ய வேண்டிய தேவனுடைய சித்தத்தின் நீதியின் கிரியைகளை தேவன் வெளிப்படுத்தின பின்பு யோபின் சிநேகிதனாகிய தேமானியனான எலிப்பாசின் மூலம் யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்யும்படி தேவன் கட்டளையிட்டார்;-
8-1 யோபு, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, பாவங்களை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டார்.
8-2 யோபு தன்னுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலையடைவதற்காக செய்யவேண்டிய தேவனுடைய சித்தத்தின் நீதியின் கிரியைகளை தேவன் வெளிப்படுத்தினார்.
8-3 யோபின் சிநேகிதனாகிய தேமானியனான எலிப்பாசின் மூலம் யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்யும்படி தேவன் கட்டளையிட்டார்.
8-4 யோபு, தன் சிநேகிதருடைய புத்தியீனத்துக்குத் தக்கதாக சர்வாங்க தகனபலிகளை செலுத்தி; பாதாளம் மரணம் ஆகியவைகளின் சிறையிருப்பிலிருந்து விடுதலையடைந்தார்.
8-1 யோபு, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, பாவங்களை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டார்;-
கர்த்தர் யோபுக்கு உத்தரமாக: சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார். அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். Job 40:1-5
அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். Job 42:1-6
2 யோபு, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, பாவங்களை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டபோது; யோபு தன்னுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலையடைவதற்காக செய்யவேண்டிய தேவனுடைய சித்தத்தின் நீதியின் கிரியைகளை தேவன் வெளிப்படுத்தினார்;-
இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு, நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு, பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி,
துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு. நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு. அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன். Job 40:10-14
3 யோபின் சிநேகிதனாகிய தேமானியனான எலிப்பாசின் மூலம் யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்யும்படி தேவன் கட்டளையிட்டார்.
கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. Job 42:7
ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார். Job 42:8
4 யோபு, தன் சிநேகிதருடைய புத்தியீனத்துக்குத் தக்கதாக சர்வாங்க தகனபலிகளை செலுத்தி; பாதாளம் மரணம் ஆகியவைகளின் சிறையிருப்பிலிருந்து விடுதலையடைந்தார்.
அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். Job 42:9-10
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள். Job 42:11
(Job_42:10,)Job_40:1-9,Job_40:10-14, Job_42:1-6,Job_42:7-10,Act_9:1-6, Act_9:7-14,Act_9:15-20,
Previousதேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)