தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 24


தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தில் முடிவடைகிறது.

பொருளடக்கம் 4-0

4-0 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்:- 

தேவனாகிய கர்த்தர் ஆதாமின் நாசியிலே ஜீவசுவாசத்தை ஊதினபோது, ஜீவாத்துமாவானான் அதுபோல:  கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட நித்தியஜீவ வார்த்தைகளை தங்களூடைய ஆத்துமாவின் ஜீவசுவாசமாக  ஏற்றுக்கொள்ளூகிறவர்கள்; அவனவன் தன் தன் வரிசையிலே நித்திய ஜீவனில் உயிர்ப்பிக்கப்பட்டு  ஜீவாத்துமாவாக பிழைக்கிறார்கள்.

4-1 பிதாவினால் கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுகிறபோது: முதற்பலனாகிய கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட நித்தியஜீவ வார்த்தைகளை தங்களூடைய ஆத்துமாவின் ஜீவசுவாசமாக  ஏற்றுக்கொள்ளூகிறவர்கள்; கிறிஸ்துவின் சரீர அவயவங்களாகிய மணவாட்டி சபையாக அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவார்கள்:-

பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். Joh 5:21-24 

மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். Joh 5:25-27   

நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். Joh 17:6 -7

நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. Joh 17:8-9  

என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். Joh 17:10-11 

நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. Joh 17:12   

4-2 கிறிஸ்துவின் சரீர அவயவங்களாகிய மணவாட்டி சபை:  முதற்பலனாகிய கிறிஸ்துவின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து; நித்தியஜீவ வார்த்தைகளை கர்ப்பத்தரித்து, அவைகளை ஜீவசுவாசமாக வெளிப்படுத்துகிறபோது தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும் பண்ணுவேன். Eze 37:11-12 

என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்;

நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். Eze 37:13-14 

பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். Joh 5:28-29 

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். Joh 17:14-15 

நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். Joh 17:16-19 

நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். Joh 17:20-21

4-3 முதற்பலனாகிய கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட நித்தியஜீவ வார்த்தைகளை தங்களூடைய ஆத்துமாவின் ஜீவசுவாசமாக  ஏற்றுக்கொள்ளாதவர்கள்; பூமிக்குரிய  நயவஞ்சகமான ஆசீர்வாதங்களினால் வஞ்சிக்கப்பட்டு, நன்மை தீமைகளை வெளிப்படுத்துகிற பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண நீதியினால்  அந்திக் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவார்கள்:-

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு துணையாக கொடுக்கப்பட்ட ஸ்திரியாகிய சபையானது பூமிக்குரிய  நயவஞ்சகமான ஆசீர்வாதங்களினால் வஞ்சிக்கப்பட்டு, நன்மை தீமைகளை வெளிப்படுத்துகிற பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண நீதியின் கிரியைகளை புசித்து ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கும் அவைகளையே பின்பற்றும்படி ஸ்திரியாகிய சபை கொடுக்கிறது, இதனால் சபையும், ஜெயங்கொள்ளுகிறவர்களும் தேவனுடைய ரூபத்தையும்  சாயலையும் இழந்து போனார்கள்.

முதற்பலனாகிய கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட நித்தியஜீவ வார்த்தைகளை தங்களூடைய ஆத்துமாவின் ஜீவசுவாசமாக  ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து மரணத்திலே நிலைத்திருக்கிறபடியால் ;  தேவனாகிய கர்த்தர்: ஆதாமிற்கு கொடுத்த சாபங்கள் இவர்களை பின்தொடர்கிறது  

தேவனாகிய கர்த்தர்: ஆதாமிற்கு கொடுத்த சாபங்கள்:-

1 தேவனாகிய கர்த்தர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்;

2 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்

3 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். Gen 3:17-19 

4 தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

5 தேவனாகிய கர்த்தர்:  மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். Gen 3:22-24 

4-4 பூமிக்குரிய நயவஞ்சகமான ஆசீர்வாதங்களினால் சபையானது வஞ்சிக்கப்பட்டு, நன்மை தீமைகளை வெளிப்படுத்துகிற பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண நீதியினால் தேவ பத்தியில்லாத விபஞ்சார சந்ததியை சபை  பெற்றெடுக்கிறபடியால் தேவனாகிய கர்த்தர்: ஆதாமின் விலா எலும்பாகிய  ஸ்திரீக்கு கொடுத்த சாபங்கள் இவர்களை பின்தொடர்கிறது:-

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய ரூபமும் சாயலுமான நித்திய மகிமையை தரித்துக் கொண்டிருக்கும்போது, தேவனுடைய கட்டளையின்படி நன்மை தீமை இன்னதென்று பகுத்தறிகிற அறிவை தங்களுடைய  ஆவிக்குரிய ஆகாரமாக புசிக்காமல்; தேவனுடைய நீதியின் பிரமாணங்களையும், நித்திய ஜீவ வார்த்தைகளையும் ஆவிக்குரிய ஆகாரமாக புசிக்கும்போது, அவர்கள் நிர்வாணிகளாயிருந்தும் வெட்கப்படாதிருந்தார்கள்   Gen_3:11, Gen_2:15-17, Gen_2:21-25, 2Co_5:1-3,

ஆதாமும் ஏவாளும் எப்பொழுது தேவனுடைய கட்டளையை  மீறி, நன்மை தீமை இன்னதென்று பகுத்தறிகிற அறிவை தங்களுடைய  ஆவிக்குரிய ஆகாரமாக புசிக்கிறார்களோ அப்பொழுது தேவனுடைய ரூபமும் சாயலுமான நித்திய மகிமை, அவர்களை விட்டு விலகுகிறபடியால், அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு,  அவர்களுடைய புத்தி தெளிகிறபடியால் தங்களுடைய நிர்வாணம் தங்களுக்கு வெளிப்பட்டு / உணர்த்தப்பட்டு வெட்கம் அடைகிறார்கள்.   Gen_3:5-7, 2Co_5:1-8, 1Jo_3:20,

இஸ்ரவேல் ஜனங்கள் கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் நன்மை தீமைகளை வெளிப்படுத்துகிற மனசாட்சியின் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிப்பிரமாணத்தை தேடின படியால்,  சீயோனிலிருக்கிற மூலைக்கல்லில் இடறி விழுந்தார்கள் அது போல;

நன்மை தீமைகளை பகுத்தறிகிற அறிவினால் வெளிப்படுகிற கிரியைகளின் மூலம், ஆதாமும் ஏவாளும் தேவனுடைய ரூபமும் சாயலுமான நித்திய மகிமையிலும் நித்திய ஜீவனிலும் பிழைக்க வகை தேடினபோது, ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையில் மரித்து இடறி விழுந்தார்கள்.  Rom_9:30-33, Rom_3:20-21, Rom_7:7-11, Rom_2:14-15, Rom_2:27, Eze_20:23-25, Eze_33:12-16,

நன்மை தீமை இன்னதென்று பகுத்தறிகிற அறிவை ஆவிக்குரிய ஆகாரமாக புசித்து, தங்கள் கண்கள் திறக்கப்பட்டதினால் தங்களுடைய நிர்வாணமாகிய பாவங்களை உணர்ந்து கொண்டவர்களுக்கு தேவனுடைய சத்தத்தை கேட்க முடிகிறது.

அல்லது தேவனுடைய நீதியின் பிரமாணங்களையும், நித்திய ஜீவ வார்த்தைகளையும் உணர்ந்து கொண்டவர்களுக்கு தன்னுடைய / மற்றவர்களுடைய நிர்வாணமாகிய பாவங்களை  உணர்ந்து கொள்ள முடிகிறது. Gen_3:6-8,Exo_16:8, Exo_32:21-27, , Hos_2:8-10, Rev_3:17-19, Rev_16:15,

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு துணையாக கொடுக்கப்பட்ட சபையானது, தேவனுடைய நீதியின் பிரமாணங்களையும், நித்திய ஜீவ வார்த்தைகளையும் ஆவிக்குரிய ஆகாரமாக கொடுத்து, ஜெயங்கொள்ளுகிறவர்களை உருவாக்காமல் / தேவ பத்தியுள்ள சந்ததியை பிரசவிக்காமல், பூமிக்குரிய நயவஞ்சகமான ஆசீர்வாதங்களினால் சபையானது வஞ்சிக்கப்பட்டு, நன்மை தீமைகளை வெளிப்படுத்துகிற பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண நீதியினால் தேவ பத்தியில்லாத விபஞ்சார சந்ததியை சபை  பெற்றெடுக்கிறது.

ஸ்திரியாகிய சபை இந்த காரியத்தை செய்தபடியால் தேவன் ஸ்திரியாகிய சபைக்கு கொடுத்த சாபத்தினால், இப்பொழுதும் ஆவிக்குரிய நிலையில் ஆத்துமாக்களை பெற்றெடுக்கும் போது மிகவும் வேதனையோடு சபை பெற்றெடுக்கிறது. 2Co_11:2-4, 1Ti_2:11-15, 1Ti_1:5-11, Job_14:1-2, Job_15:14, Job_25:4-6, Rom_2:17-24, Gal_4:21-25, Gal_4:26-31, Pro_30:23,

தேவனாகிய கர்த்தர்: ஆதாமின் விலா எலும்பாகிய  ஸ்திரீக்கு கொடுத்த சாபங்கள்:-

1 தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். தேவனாகிய கர்த்தர்  ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.


Social Media
Location

The Scripture Feast Ministries