தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 24


தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தில் முடிவடைகிறது.

பொருளடக்கம் 5-0

5-0   சீயோன் மலையில் உள்ள ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் தேவனுடைய ஆலயத்திலும், பலிபீடத்திலும்,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்:-  

சீயோன் மலையில் உள்ள ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின்;   தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும்; பரிசுத்தவான்களுடைய நீதியின் கிரியைகளின் மூலம் எண்ணிப்பார்கிறபோது: பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையும்,

பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளும், தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை 1,44,000; வரிசைகளில் வருகிறவர்கள்   நிறைவாகும்போது புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மூலம்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக,பெற்றுக்கொள்ளூகிறார்கள் Rev 11:1-2; Heb 12:23 

5-1 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய், நமக்காக தமது மாம்சமாகிய திரையின் வழியாக;  மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு,  புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்; அழைக்கப்பட்டவர்கள் தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமில் ;   வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.  

தேவனால்  வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரலோகத்திலுள்ளவைகளூக்கு,  வரப்போகிற நன்மைகளின் பொருளை  சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.  

நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். Heb 6:17-20   

5-2 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கிறவர்கள்: தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமில்   வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட   நிலையானதும்;  உறுதியானதுமான  நித்திய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள்:-  

நமக்கு இரண்டாம் கூடாரமாகிய  மகா பரிசுத்த ஸ்தலத்தில் அல்லது  ஆவி,ஆத்துமாவில்,  ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் முதலாம் கூடாரமாகிய  சரீரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. Heb 13:9-10    

முதலாங்கூடாரம் நிற்குமளவும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக் கூடாதவைகளாயிருக்கிறது. Heb 9:8-9

முதலாம் கூடாரமாகிய பாவ சரீர அவயவங்களை,  பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, இரண்டாம் திரையாகிய  பாவ மாம்சத்திலே, பாவத்தின்  இச்சைகளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்போது; தங்களூடைய  மனச்சாட்சியில் அல்லது  ஆவி,ஆத்துமாவில் மரணத்தை உருவாக்கும்  செத்தக் கிரியைகள்  சுத்திகரிக்கப்படுவதால், Heb 9:11-17 ;  

இரண்டாம் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிக்கப்பட்டு,  இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் பரிசுத்த ஆவியானவரால்  வெளிப்படுத்தபடுகிறது. Rom 8:1-3  Rom 12:1-3

இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆவிக்குரியதாயிருக்கிற ஆசரிப்பு முறைகள் , ஆராதனை முறைகள் மூலம்; பரலோகத்திலுள்ளவைகளூக்கு,  வரப்போகிற நன்மைகளின் பொருளை சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக; முதலாம் கூடாரமாகிய பாவ சரீர அவயவங்களை,  பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறவர்கள்: Heb 9:22-26 

இரண்டாம் கூடாரமாகிய ஆவி,ஆத்துமாவில், பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொண்டு, புத்தியுள்ள ஆராதனை செய்து: இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்களுடைய  மனம் புதிதாகிறதினாலே; ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே ஆவி,ஆத்துமாவில், மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமடைகிறார்கள்.

மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிற  பொன்னாற்செய்த தூபகலசம், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், ஆரோனுடைய தளிர்த்த கோல், உடன்படிக்கையின் கற்பலகைகள்; ஆகிய இவைகளின் தொடர்புடைய ஆவிக்குரிய பொருளூக்கேற்றபடி: (2Co 3:6-18; Heb 9:3-5)

ஜீவனுள்ள  தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் தமது சித்தத்தின்படியே, தேவன் அவனவனுக்குப் பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின்படியே, தங்களுடைய இருதய  பலிபீடத்திற்குரியவைகளைப் புசித்து, ஒரே சரீரமாகிய  கிறிஸ்துவின்  அநேக அவயவங்கள் அல்லது    1,44,000, வரிசையில் வருகிறவர்கள்; நீதியைக் கொடுக்கும் ஊழியர் அழைப்பை சுதந்தரித்துக்கொண்டு,  

இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்; இவர்கள் சீயோன் மலையில் உள்ள ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின்;   தேவனுடைய ஆலயத்திற்கும் , பலிபீடத்திற்கும் வந்தடையகிறபோது புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மூலம்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை பெற்றுக்கொள்ளூகிறார்கள் Rev 11:1-2; Heb 12:23 


Social Media
Location

The Scripture Feast Ministries