6-0 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் அல்லது பலிபீடத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்திலிருந்து, தேவனை மகிமை படுத்துகிற புறஜாதிகளின் ஆசீர்வாதங்கள்:-
தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற புறஜாதிகள், தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு, அல்லது கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களாகிய 1,44,000, வரிசையில் வருகிற ஊழியர் ஒருவனுக்கு: விசேஷமாக உபத்திரவ காலத்தில் கீழே குறிப்பிட்ட நன்மைகளில் நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
1 தீர்க்கதரிசி / நீதிமான் / சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். Mat 10:40
2 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்;
3 தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்;
4 அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
5 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்;
6 வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;
7 காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.
6-1 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்திக்காமல் இருக்கிறவர்களூடைய ஆசீர்வாதங்கள்:-
தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற புறஜாதிகள்: முதலாம் கூடாரமாகிய பரிசுத்த ஸ்தலம், மற்றும் இரண்டாம் கூடாரமாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற மிகவும் சிறியவராகிய ஊழியர் ஒருவனுக்கு:
விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்திக்காமல் இருக்கிறவர்களை: ராஜா தமது வலது பக்கத்தில் பிரித்தெடுத்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு இராஜ்யத்தைச் நேரடியாக சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்பார். Mat 25:31-46
6-2 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு, விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்தித்து இரத்தசாட்சியாக மரிக்கிறவர்களூடைய ஆசீர்வாதங்கள்:-
தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற புறஜாதிகள், பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற மிகவும் சிறியவராகிய ஊழியர் ஒருவனுக்கு; விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்தித்து இரத்தசாட்சியாக மரிக்கிறவர்கள், நேரடியாக தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வந்தடைகிறார்கள். Rev 7:9-17
நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)