7-0-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும் இணைந்து தேவனுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறபோது; தேவனாகிய கர்த்தர்: ஆதாமின் மனைவியாகிய ஸ்திரீக்கு, கொடுத்த சாபங்கள் நிறைவேறி முடிவடைகிறது:-
7-1-0 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை, ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆவி ,ஆத்துமா, சரீரத்தில் பூரணமாக ஏற்றுக்கொண்டு ஜீவனுள்ள ஆத்துமாவாக பிளைத்துக்கொண்டிருக்கிறவர்கள்: தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களையும் ஏற்றுக்கொள்ளுகிறபோது, கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுகிறார்கள்
7-1-1 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆத்துமாவின் அறிவில் பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய ஆவிக்குரிய கண்களின் தரிசனங்கள் வெளிப்படுகிறது
7-1-2 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை ஜீவ சுவாசமாக தங்களுடைய இருதயத்தின் ஆவியில், பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய இருதயத்தின் ஆவியில், தரிசனங்கள் வெளிப்படுகிறது
7-1-3 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை ஜீவ சுவாசமாக தங்களுடைய சரீரத்தின் அவயவங்களில், பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய சரீரத்தின் அவயவங்களில், கிரியைகள் வெளிப்படுகிறது
7-1-4 கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் தங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்கிறவர்கள்: ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்காக, ஆத்துமா, ஆவி, சரீரம் , ஆகிய இவைகளில் ஜீவ சுவாசமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக, அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள்
7-2-0 தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் மூலம் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக பிறந்த கிறிஸ்துவின் மணவாட்டி சபை, தேவன் பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணங்களை கர்ப்பந்தரித்து, சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
7-2-1 தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் மூலம் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக பிறந்த கிறிஸ்துவின் மணவாட்டி சபை, தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையின் மூலம் சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவன் தங்களுக்கு பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்
7-2-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபை, தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து தேவன் பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணங்களின் மூலம் ஜீவ சுவாசமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து, சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்
7-3-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும், சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவனுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறார்கள்
தேவனுடைய மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு: பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினார்கள்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின:-
7-3-1 தேவனுடைய முதலாவது தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு: பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; அப்பொழுது பாதாளக்குழியின் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்து மனுஷர்களை சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
7-3-2 தேவனுடைய இரண்டாவது தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு: பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்;
அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களை மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்
7-3-3 தேவனுடைய முன்றாவது தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு: பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின
7-4-0 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
7-4-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் அறிவைப் பெற்று தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள் Rev_14:1-5, Rev_19:9,
7-4-2 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
கிறிஸ்துவுடன் இருப்பவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பவட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருப்பார்கள்
இவர்கள் பரிசுத்த ஆவி, அபிசேஷக ஆவி, சத்திய ஆவி, ஆகியவைகளின் கிரியைகளினால் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.
7-4-3 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
ஒரு ஸ்திரீ சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையை பெறும்படி பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறாள். Rev_12:1-5,
7-4-4 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில்பெயர்எழுதப்பட்டவர்கள் மிருகத்தின்அடையாளத்தையும் அசுத்த ஆவிகளின் அற்புதங்களையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Rev_13:8, Rev_17:8,
7-4-5 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
தேவன் பரிசுத்தவான்களுக்கு1260 நாள் அளவும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அதிகாரங்களைக் கொடுத்தார். பரிசுத்தவான்கள் தேவ வசனத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள். Rev_11:3, Rev_12:11
7-4-6 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
பரிசுத்தவான்கள் தங்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வசனத்தைக்கொண்டு கடிந்து கொண்டு உபதேசம் பண்ணும்போது அதை எதிர்ப்பவர்கள் எழுத்தின் படியுள்ள பட்டயத்தைக்கொண்டு வெட்டுவார்கள் ஆனாலும் சமாதானத்தின் சுவிசேஷத்தை உடையவனாயிருந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்கள் எலியாவைப்போல பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் Rev_13:9-10, Rev_14:12-13,
7-4-7 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
அந்திக் கிறிஸ்துவின் முத்திரைஅடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக் கொள்ளாதவர்கள் மூன்று அசுத்த ஆவிகளையும் ஜெயங்கொண்டு தேவனுடைய முத்திரை அடை யாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைவார்கள். Rev_20:4-6
7-4-8 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து அக்கினி கலந்த கண்ணாடிக் கடலில் ஞானஸ்தானம், பெற்று மகிமையடைவார்கள். . Rev_15:2-3, Rev_4:6,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)