8-0-0 சாத்தான் குடிகொண்டிருக்கிற சிங்காசனங்களை, பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலே தொடர்ந்து நிலைத்திறுத்துவதற்காக: அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததிகளும்; போராடுகிறபோது, தேவனாகிய கர்த்தர்: ஸ்திரீயை வஞ்சித்த சர்ப்பமாகிய சாத்தானுக்கும், கொடுத்த சாபங்கள் நிறைவேறி முடிவடைகிறது:-
8-1-0 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்பட்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கையில் இடறிவிழுகிறபோது, அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறார்கள்:-
8-1-1 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆத்துமாவின் அறிவில் பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல், தங்களுடைய ஆவிக்குரிய கண்களின் தரிசனங்களில் இடறிவிழுகிறார்கள்
8-1-2 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை ஜீவ சுவாசமாக தங்களுடைய இருதயத்தின் ஆவியில், பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல், தங்களுடைய இருதயத்தினுடைய ஆவியின், தரிசனங்களில் இடறிவிழுகிறார்கள்
81-3 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை ஜீவ சுவாசமாக தங்களுடைய சரீரத்தின் அவயவங்களில், பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் ; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல் தங்களுடைய சரீரத்தின் அவயவங்களுடைய , கிரியைகளில் இடறிவிழுகிறார்கள்
8-1-4 கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் தங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்காதவர்கள்: ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்காக, ஆத்துமா, ஆவி, சரீரம் , ஆகிய இவைகளில் ஜீவ சுவாசமாகிய நித்திய ஜீவ வார்த்தைகள் இல்லாதபடியால் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறமுடியாமல், அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளில் இடறிவிழுந்து மாயைகளை சுதந்தரித்துக்கொள்ள்ளுகிறார்கள்
8-2-0 அந்திக்கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களின் மூலம் சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உபதேசங்களை கர்ப்பந்தரித்து, தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
8-2-1 அந்திக்கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களின் மூலம் சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையின் மூலம் தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்
8-2-2 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களின் மூலம் உபதேசங்களை கர்ப்பந்தரித்து, தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது, தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்
8-3-0 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள் பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததிகளும்; தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து; சாத்தான் குடிகொண்டிருக்கிற சிங்காசனங்களை, பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலே தொடர்ந்து நிலைத்திறுத்துவதற்காக போராடுகிறார்கள்
8-3-1 நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது; அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். Rev 15:5-6
8-3-2 தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது. அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய்த் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன். Rev 15:8 Rev 16:1 ;
8-3-3 ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும்,
சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன. Rev 19:17-18 Rev 19:21 ;
8-3-4 மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். Rev 19:19-20
8-3-5 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு, தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.
ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. Rev 16:10-12
8-3-6 ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். Rev 20:1-3
8-3-7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்;
8-3-8 அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். Rev 20:7-10.
8-4-0 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
8-4-1 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்கள்; மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும், விரோதமாகவும் இணையாகவும், விசுவாசத்திலும் கிரியைகளிலும் செயல்படுவார்கள். Rev_19:20,
8-4-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான் , ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள் Rev_16:13-15,
8-4-3 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். Rev_17:6, Rev_18:4, Rev_18:24,
;
8-4-4 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் மிருகத்தை வணங்கி அசுத்த ஆவிகளின் அற்புதங்களை தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளுவார்கள் Rev_13:8, Rev_17:8,
8-4-5 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
கீழே விழத்தள்ளப்பட்ட சாத்தான் மிருகத்தின் முத்திரையை பெற்றவர்களுக்கு 42 மாதமளவும் பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து ஜெயங்கொள்ளும்படி அதிகாரம் கொடுத்தது Rev_13:1,
8-4-6 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
ஒருவன் பரிசுத்தவான்களுக்கு தீமை செய்யத் திட்டமிடுகிறபோது, அது போலவே தேவன் அவனுக்கு தீமையை திட்டமிட்டுச் செய்வார். ஒருவன் தீமை செய்கிறதிலிருந்து விலகி நன்மை செய்கிறபோது, தேவன் அவன் மேல் வைத்த நியாயத்தீர்ப்பை அவனை விட்டு விலக்குவார்; Rev_11:5,
8-4-7 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும்கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய கோபாக்கினையில் பங்கடைவார்கள் Rev_16:1-2, Rev_14:9-11,
8-4-8 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான், ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள். Rev_19:20, Rev_20:10,
தேவனாகிய கர்த்தர்: ஆதாமின் விலா எலும்பாகிய ஸ்திரீக்கும் சர்ப்பத்திற்கும் கொடுத்த சாபங்கள்:-
1 தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
2 தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; Gen 3:13 -16
3 தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயையும் சர்ப்பத்தையும் பார்த்து: உனக்கும் ஸ்திரீக்கும், பகை உண்டாக்குவேன்; உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்;
4 ஸ்திரீயும், ஸ்திரீயின் வித்துக்களும்; இணைந்து சர்ப்பத்தையும் சர்ப்பத்தின் வித்துக்களின் தலையை நசுக்குவார்கள், சர்ப்பமும் சர்ப்பத்தின் வித்துக்களும் இணைந்து ஸ்திரீயையும், ஸ்திரீயின் வித்துக்களின்; குதிங்காலை நசுக்குவார்கள்
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)