தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 24


தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தில் முடிவடைகிறது.

பொருளடக்கம் 9-0

9-0 தேவனுடைய வார்த்தைகளை    பெற்றுக்கொண்டவர்கள் பலிபீடத்திற்கு வருகிறபோது   மாயை  என்னும் ஜல்லடையின் மூலம் ஜாதிகளிலிருந்து  பிரித்தெடுக்கப்பட்டு ; தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்களிலிருந்து தப்புகிறார்கள்;-

9-1 ஜாதிகளிலிருந்து மாயை  என்னும் ஜல்லடையின் மூலம்  தேவனுடைய வார்த்தைகளை    பெற்றுக்கொண்டவர்கள் பிரித்தெடுக்கப்படுகிறபோது; கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருகிற பெரும்பாதையான வழி  இருக்கும்

9-2 இஸ்ரவேலின் இரண்டு கோத்திரங்களாகிய யூதாவிற்கும் லேவிக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

9-3 இஸ்ரவேலருடைய  கீழ்ப்படியாமையினால் தேவனுடைய இரட்சிப்பு  இடறிவிழுகிறபோது  புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது; அதுபோல புறஜாதிகளுடைய கீழ்ப்படியாமையினால் தேவனுடைய இரட்சிப்பு  இடறிவிழுகிறபோது, மீண்டும் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பு கிடைக்கிறது

9-4-0 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களாகிய தேவனுடைய வார்த்தைகளை  புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள்

9-5-0 தேவனுடைய ஊழியத்திற்கு வருகிற  மூன்று வகையான ஜனங்கள்

9-6-0 தேவனுடைய நாமத்தை பின்தொடர்கிற நாண்கு வகையான ஜனங்கள்

9-7-0 நாலு கொம்புகளுக்கு மத்தியில் இருக்கிற  பலிபீடத்தின் பிரமாணங்களை பின்பற்றுகிற யூதாவையும், இஸ்ரவேலையும், எருசலேமையும், சிதறடித்த ஜாதிகளுடைய நாலு கொம்புகளை; பயமுறுத்தி விழத்தள்ளி,  மாயை  என்னும் ஜல்லடையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறார்கள்;-

9-8-0 ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, இஸ்ரவேலின்  பன்னிரண்டு புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.

9-1-0 ஜாதிகளிலிருந்து மாயை  என்னும் ஜல்லடையின் மூலம்  தேவனுடைய வார்த்தைகளை    பெற்றுக்கொண்டவர்கள் பிரித்தெடுக்கப்படுகிறபோது; கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருகிற பெரும்பாதையான வழி  இருக்கும்

இஸ்ரவேலர் மற்றும் புறஜாதிகளிலிருந்தும்  தேவனுடைய வார்த்தைகளை    பெற்றுக்கொண்டவர்கள்; மாயை  என்னும் ஜல்லடையின் மூலம்   ஜாதிகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறபோது; கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருகிற பெரும்பாதையான வழி இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

 Isa_1:21-27;Psa_48:1-5,  Isa_19:19-25;Isa_11:10-16,Isa_66:19-24, Isa_27:8-13,Isa_30:19-24Isa_35:1-5Isa_35:6-10, Isa_40:1-5Isa_62:1-6, Isa_62:7-12Isa_42:16, Isa_58:12, Isa_59:8, Jer_6:16, Jer_18:15,Luk_14:15-20, Luk_14:21-24,

இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும். நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். Isa 30:27-28  

பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள்.

கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். Isa 30:29-30  

அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார். Isa 30:31-32   

தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும். Isa 30:33

 Exo_27:1-8,   Exo_38:1-7, Exo_35:16Exo_38:30, Exo_39:39,Isa_8:1-7;Isa_8:8-15,Isa_30:27-33,Amo_9:9-10; Zec_1:18-21, Eze_43:20-21,Eze_43:15,

 

9-2-0 இஸ்ரவேலின் இரண்டு கோத்திரங்களாகிய யூதாவிற்கும் லேவிக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்; அவர்களில் அநேகர் தேவன் எங்களோடே இருக்கிறார் என்றும்,   அநேகர் கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றும், ஒருவர் பின் மற்றவர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்:-

இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்;

அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு, யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். Isa 8:6-8   

ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார். Isa 8:9-10

Isa_8:5-10 ; Isa_8:11-15 ; Amo_5:14-15 ; Jer_14:8-12;   Isa_48:1-2Jer_7:3-4; Mic_3:10-11,;Isa_28:7-13,Isa_28:14-20,Isa_30:28, Amo_9:8-10 ,Isa_41:21-24 ;Isa_41:25-29  ;  Mat_7:21-23 ; Luk_13:24-30 ; Joh_5:41-44 ,Joh_12:43 Mat_6:2, Mat_23:5-7; Luk_16:15;1Th_2:6;

மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார். அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள். Zec 10:3-4 

அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள். Zec 10:5   

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். Amo 5:14-15

Gen_28:15; Deu_31:6, Deu_31:8; Jos_1:5; 1Sa_12:22; 1Ch_28:20; Psa_37:25, Psa_37:28; Isa_41:10, Isa_41:17;Heb_13:5Zec_8:20-23;Amo_5:14-15 1Co_14:20-25; Isa_7:10-16, Isa_7:21-22, Num_16:1-3;    Hag_1:12-13, Hag_2:4-5, Joe_2:27, Zec_2:10-11, Zec_8:23, Zec_10:1-5, Isa_45:14, Zep_3:14-17, Rev_21:3,

9-3-0 இஸ்ரவேலருடைய  கீழ்ப்படியாமையினால் தேவனுடைய இரட்சிப்பு  இடறிவிழுகிறபோது  புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது; அதுபோல புறஜாதிகளுடைய கீழ்ப்படியாமையினால் தேவனுடைய இரட்சிப்பு  இடறிவிழுகிறபோது மீண்டும் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பு கிடைக்கிறது

இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.

 Rom_11:1-5; Rom_11:6-10; Rom_11:11-15; Rom_11:16-20; Rom_11:21-25; Rom_11:26-30;Rom_11:31-36;

9-4-0 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களாகிய தேவனுடைய வார்த்தைகளை  புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள்;-

9-4-1.  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கு மட்டும்     சமீபமாக  வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்

9-4-2.  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய இருதயத்திற்கு மட்டும்     சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்

9-4-3.  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கும்      இருதயத்திற்கும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்

9-4-1 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்;-

தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு ; அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்.  / அறிக்கையிடுகிறவர்களுடைய ஆத்துமா, மாயக்காரனுடைய நீதியினால் பிழைக்கிறது. இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருப்பார்கள்.

9-4-2.  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய இருதயத்திற்கு மட்டும்     சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்;-

 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக் கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா மனுஷ நீதியில் / சுய நீதியில் பிழைக்கிறது. இவர்கள்பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

9-4-3.  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கும்      இருதயத்திற்கும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்;-

கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள், மேலும் இவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்களின் வரிசையில் வந்து சேர்ந்து, தேவர்கள் என்ற பெயரையும் பெற்றுக் கொள்ளுவார்கள்.

9-5-0 தேவனுடைய ஊழியத்திற்கு வருகிற  மூன்று வகையான ஜனங்கள்;-

9-5-1. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு./ முதலாம் வருஷத்திலே தானாய் விளைகிறதை சாப்பிடுகிறவர்கள்;-

9-5-2. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தன்னை சமர்ப்பித்துக் கொண்டவர்களின் ஊழியர் அழைப்பு. /இரண்டாம் வருஷத்திலே தப்பிப் பயிராகிறதை  சாப்பிடுகிறவர்கள்;-

9-5-3 தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு. / மூன்றாம் வருஷத்திலே  விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிக்கிறவர்கள்;-

9-5-1. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு../ முதலாம் வருஷத்திலே தானாய் விளைகிறதை சாப்பிடுகிறவர்கள்;-.

  1. மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்ட ஊழியர் அழைப்பு

1Co_2:11, Col_2:21-23, Mat_15:8-9, Isa_29:13, Joh_10:5-13, Jer_12:2, Eze_33:30-32, Jer_14:14-15, Jer_27:14-15, Jer_29:26, Jer_23:23-40, Jer_29:8-9,

  1. மூன்று மேய்ப்பர்களின் ஊழியர் அழைப்பு

Zec_11:5-8, Eze_34:1-5, Jer_23:1-13, Eze_34:9-10, Amo_6:3-7, Eze_34:4-8, Jud_1:16, Jer_22:17, Jer_12:24, Psa_28:3, Isa_66:5, Joh_16:2, Eze_33:30-32, Jer_12:1-6, Isa_29:9-13, Mat_15:7-9, Mar_7:6-8, Amo_6:5-6, Eze_33:31-32, Isa_65:5, Isa_66:3, Isa_66:17, Hos_7:4-6, Isa_56:10-12,

9-5-2. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தன்னை சமர்ப்பித்துக் கொண்டவர்களின் ஊழியர் அழைப்பு.  /இரண்டாம் வருஷத்திலே தப்பிப் பயிராகிறதை  சாப்பிடுகிறவர்கள்;-

தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தன்னை சமர்பித்து கொண்டவர்களின் ஊழியர் அழைப்பு. Isa_56:3-8, Joh_6:37 , Joh_12:26 , Joh_6:45, Joh_10:16, Mat_19:12,

9-5-3. தேவனுடைய  இராஜ்ஜியத்திற்கு; தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களுடைய  ஊழியர் அழைப்பு.  / மூன்றாம் வருஷத்திலே  விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிக்கிறவர்கள்;-

யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

  1. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களை தேவன் தெரிந்து கொள்ளுதல்.

Rom_8:28-39, Rom_9:14,Rom_9:15-23, Rom_9:24-33, Rom_10:13-19, Isa_53:1,Rom_10:20, Rom_11:7-10, Rom_11:1-6, Rom_11:11-15,Rom_11:16-27, Rom_11:28-36, Joh_3:27, Amo_4:13, Psa_94:9-11, Pro_16:9, Mat_20:23, Jer_10:23, Ecc_9:1, Heb_5:41Co_1:25-31, Isa_45:1-6Luk_19:5 , Joh_6:39-40, Joh_6:45-46, Joh_6:53-58, Act_9:15, Isa_54:13-17, Isa_66:14,

  1. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் ஆவியில் பிறந்தவர்கள் Joh_10:1-15, Psa_22:9-10, Psa_71:6, Psa_139:13-16, Isa_49:1, Jer_1:5, Luk_1:15, Gal_1:15,Rev_12:2, Rev_12:5, Rev_12:13, Rev_12:17, Mic_4:10, Zec_2:7, Isa_66:7-10, Psa_110:3, Isa_29:19, Mic_5:7, Joh_1:12-13, Rom_8:5-14Joh_3:6-8,
  2. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களின் முன் எச்சரிப்புக் காக ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணம் அறிவிக்கப்படுகிறது.

Lam_4:2, 2Co_4:6-7, Psa_116:12-13, Jer_18:1-10, Lev_26:1-13, Lev_26:14-15, Lev_26:16-39, Lev_26:40-46, Deu_28:1-15, Jer_19:1-13, Isa_29:9-14 , Isa_29:15-24, Isa_30:1-15, Rom_9:19-23, Job_2:8 , Job_33:8-14,

4 தேவனால் முன் குறிக்கப்பட்ட வாக்குத்தத்தின் மகன் ஈசாக்கு

Gen_13:16, Gen_15:5, Gen_22:17, Gen_26:4-5,Hos_1:10, Isa_10:21-22, Rom_9:1-9, Gen_9:27, Gen_18:9-14, Gal_4:29-31, Isa_54:1-17, Gal_3:14-18, Gal_3:19-29,

  1. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் யூதருடைய முறைகளை பின்பற்றுவதினால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்

Rom_2:28-29, Joh_2:4-11, Joh_4:21-26, Zec_2:7-10, Zec_10:3-4, Zec_8:20-23, Zec_12:4-7, Num_23:21, Isa_45:14, Zep_3:14-17,Zec_2:10-11, Zec_10:5, Mat_28:20,

  1. ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணம்

Rom_12:1-6, 1Co_4:6, 2Co_10:12-18, Eph_4:1-7, 1Th_2:11, Col_1:9-11, 1Co_7:17-24, 2Pe_1:1-4, 2Pe_1:10-11, Act_9:15, 1Co_12:11-12, 1Co_12:27, Zep_2:8-10, 1Pe_4:10, Hab_2:4-20, Psa_73:1-28, Jer_12:1-17,

9-6-0 தேவனுடைய நாமத்தை பின்தொடர்கிற நாண்கு வகையான ஜனங்கள்;-

9-6-1  தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள்   தேவனுடைய    நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.

9-6-2 தேவனுடைய நாமத்தை  விளங்காதிருந்த / புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். அவர்கள் தேவனுடைய நாமத்தை விளங்காதிருக்கிறபடியால் இன்றையத்தினம் வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்

 

9-6-3 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.

9-6-4  தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை  அடையாமலிருக்கிறார்கள்.

9-6-1  தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள்   தேவனுடைய    நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்;-

இவர்களுடைய வாய்  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தூரமாக விலகியிருந்தாலும்,அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால்; விசாரித்து தேடாத தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.

 

9-6-2 தேவனுடைய நாமத்தை  விளங்காதிருந்த / புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். அவர்கள் தேவனுடைய நாமத்தை விளங்காதிருக்கிறபடியால் இன்றையத்தினம் வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்;-

இவர்களுடைய வாயும் இருதயமும் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தூரமாக விலகியிருக்கிறபடியால் இன்றையத்தினம் வரைக்கும் தேவனுடைய நாமத்தை விளங்காதிருந்து கடினப்பட்டிருக்கிறார்கள்.

9-6-3 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்;-

இவர்களுடைய வாயும் இருதயமும்  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.

9-6-4  தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை  அடையாமலிருக்கிறார்கள்;-

இவர்கள் தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமலும் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை  அறியாமலும், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவனுடைய நீதிப்பிரமாணத்திற்கு  கீழ்ப்படியாதிருந்து. இடறுதற்கான கல்லில் இடறிவிழுந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுடைய இருதயம்  கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு     தூரமாக விலகியிருந்துகொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால்: தேவனுடைய நீதிப்பிரமாணத்திற்கு   கீழ்ப்படியாதிருந்து. இடறுதற்கான கல்லில் இடறிவிழுந்து கொண்டிருக்கிறார்கள்.

9-7-0 நாலு கொம்புகளுக்கு மத்தியில் இருக்கிற  பலிபீடத்தின் பிரமாணங்களை பின்பற்றுகிற யூதாவையும், இஸ்ரவேலையும், எருசலேமையும், சிதறடித்த ஜாதிகளுடைய நாலு கொம்புகளை; பயமுறுத்தி விழத்தள்ளி  மாயை  என்னும் ஜல்லடையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறார்கள்;-

9-7-1 இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள்  பிள்ளைகளுக்கும்  என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லப்பட்ட பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலிருந்து  எடுத்து, அவைகள் கில்காலிலே வைக்கப்பட்டிருக்கிறது; இந்த கர்த்தருடைய கட்டளையை ஜாதிகள்  சிதறடித்தபோது,  ஜாதிகளுடைய முதலாவது கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-

9-7-2 சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானபோது; இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: தங்களுக்கு சுமத்தின கடினமான வேலையையும், பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; என்கிற முதியோர்களுடைய ;  ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படி ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தபோது ஜாதிகளுடைய இரண்டாவது  கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-

9-7-3 இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளான  அந்திக்கிறிஸ்துக்களுக்கும்,  கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும்; தேவனுடைய கோபத்தினால்  கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போல மாயைகளின் வெளிப்பாடுகள் புரண்டு வருகிறபோது; தேவன் எங்களோடே இருக்கிறார் என்கிற வார்த்தை  ஜாதிகளுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போல வெளிப்படுகிறதன் மூலம்  ஜாதிகளுடைய மூன்றாவது  கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-

9-7-4  இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாக மாறின   அந்திக்கிறிஸ்துக்களும்,  கள்ளத்தீர்க்கதரிசிகளும்; தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியாகிய மனந்திருப்புதலை, நீக்கி, பாழாக்கும் அருவருப்பாகிய  கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களின், மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகள்;   உபதேசங்களாக  வெளிப்படுகிறதன் மூலம்  ஜாதிகளுடைய நான்காவது  கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-

9-7-1 இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள்  பிள்ளைகளுக்கும்  என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லப்பட்ட பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலிருந்து  எடுத்து, அவைகள் கில்காலிலே வைக்கப்பட்டிருக்கிறது; இந்த கர்த்தருடைய கட்டளையை ஜாதிகள்  சிதறடித்தபோது,  ஜாதிகளுடைய முதலாவது கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-

கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகள் கில்காலிலே வைக்கப்பட்டிருக்கிறது; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள்  பிள்ளைகளுக்கும்  என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று யூதாவும்  இஸ்ரவேலரும் எருசலேம் குடிகளும்/ஒன்பது கோத்திரங்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும்,  சொல்லுகிறார்கள்.  

ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழெல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள். அவர்கள் யோர்தானில் எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி, இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள். Jos 4:19-22  

பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும், உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினது போல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.Jos 4:23-24 

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்தில்  யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள். அந்த பார்வைக்குப் பெரிதான  பீடம், சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்க தகனங்களாலும் பலிகளாலும் சமாதான பலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்றும்;

கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்கும், எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த ஜாதிகளாகிய  ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும்,அதற்கு ஏத் என்று பேரிட்டார்கள்.

9-7-2 சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானபோது; இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: தங்களுக்கு சுமத்தின கடினமான வேலையையும், பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; என்கிற முதியோர்களுடைய ;  ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படி ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தபோது ஜாதிகளுடைய இரண்டாவது  கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-  

ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி: என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான். 1Ki 12:13-14  

ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. 1Ki 12:15 

ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 1Ki 12:16

ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான். பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான். 1Ki 12:17-18  

அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போயிருக்கிறார்கள். யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை. 1Ki 12:19-20

இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். 1Ki 12:27  

ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். 1Ki 12:28-29  

இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள். அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். 1Ki 12:30-31  

யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து, தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான். 1Ki 12:32-33 

9-7-3 இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளான  அந்திக்கிறிஸ்துக்களுக்கும்,  கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும்; தேவனுடைய கோபத்தினால்  கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போல மாயைகளின் வெளிப்பாடுகள் புரண்டு வருகிறபோது; தேவன் எங்களோடே இருக்கிறார் என்கிற வார்த்தை  ஜாதிகளுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போல வெளிப்படுகிறதன் மூலம்  ஜாதிகளுடைய மூன்றாவது  கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-

இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு, Isa 8:6-7 

யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.

ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார். Isa 8:8-10    

கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது: இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. Isa 8:11-13 

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். Isa 8:14-15   

இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும். நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். Isa 30:27-28   

9-7-4  இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாக மாறின   அந்திக்கிறிஸ்துக்களும்,  கள்ளத்தீர்க்கதரிசிகளும்; தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியாகிய மனந்திருப்புதலை, நீக்கி, பாழாக்கும் அருவருப்பாகிய  கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களின், மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகள்;   உபதேசங்களாக  வெளிப்படுகிறதன் மூலம்  ஜாதிகளுடைய நான்காவது  கொம்பின்  அடையாளம் வெளிப்படுகிறது;-

தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள்./ பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினார்கள்

பழைய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல; புதிய ஏற்பாடு  தேவனுடைய ஜனங்களூம் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள்

கிறிஸ்து பரலோகத்திலிருந்து  இறங்கிவரத் தாமதிக்கிறதை புதிய ஏற்பாடு கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகள்/ ஏழு ஸ்திரீகள் கண்டபோது, அவர்கள் ஆரோன்/ஆரோனுடைய சந்ததியாரிடத்தில் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: எகிப்தின் அநித்தியமான பாவசந்தோஷங்களிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்து, இரட்சிப்பை கொடுத்த அந்த கிறிஸ்துவிற்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீங்கள் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தேவனுடைய ஆராதணை முறைகளை எங்களுக்காக உண்டுபண்ணுங்கள் என்றார்கள்.

அப்பொழுது ஆரோன்/ஆரோனுடைய சந்ததியார்கள் கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகள்/ ஏழு ஸ்திரீகள் பின்பற்றுகிற கீழே குறிப்பிட்ட உபதேசங்களின் ஆலோசனைகளை கேட்டு, அவைகளை பகுத்து,பிரித்து, வரிசைப்படுத்தினபோது மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகள்: கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களின் சபை உபதேசங்களாக வெளிப்பட்டது.

1 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் மூல உபதேசங்கள்                                                2 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் பிரிவினைகளின் உபதேசங்கள்

3 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் மார்க்க பேதங்களின் உபதேசங்கள்

4 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் மனிதனுடைய  உபதேசங்கள்

5 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் முன்னோர்களின் உபதேசங்கள்

6 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் ஜாதிகளின் உபதேசங்கள் 

7 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் விக்கிரகங்களின் உபதேசங்கள்

புதிய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் / கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகள்/ ஏழு ஸ்திரீகள் தங்கள் விரும்பின தேவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்து, தங்கள் சொந்த நீதியின் கிரியைகளை வெளிப்படுத்துவதற்காக தங்கள் விரும்பின வண்ணங்களில் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு; ஒரே பூரண புருஷனாகிய கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு கிறிஸ்துவின் பெயர் மாத்திரம் எங்கள்மேல் கிறிஸ்தவர்கள் என்று விளங்கட்டும் என்பார்கள். (ஏசாயா 4:1)

இப்படிப்பட்ட மனுஷருடைய கற்பனைகளையும் கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களையும் சபையின் உபதேசங்களாகப் போதித்து, வீணாய் தேவனுக்கு ஆராதனை செய்து; பின்பு ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்திருக்கும் இந்த ஆராதனை முறைகள்: பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரக ஆராதனையாகவும், பாழாக்குகிற அருவருப்பாகவும்   நின்றுகொண்டிருக்கிறது (1கொரிந்தியர் 10:7,மத்தேயு 15:9, ஏசாயா 29:13)

9-8-0 ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, இஸ்ரவேலின்  பன்னிரண்டு புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. Act 17:24-25   

மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. Act 17:26-27   

ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். Act 17:28-30  

9-8-1 ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு  யூதா கோத்திரத்தார்  முதலாவது வருகிறார்கள்;-  

9-8-2 ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு  பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர்கள் இரண்டாவது வருகிறார்கள்

9-8-3 ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு வராமல் முரட்டாட்டம் பண்னி, தேவனுடைய நியாத்தீர்ப்பிற்கு தப்ப சீயோனுக்கு ஓடி வருகிறவர்களும் இடறிவிழுகிறவர்களும்

9-8-1 ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு; யூதா கோத்திரத்தார்  முதலாவது வருகிறார்கள்;-

இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். Isa 4:2-4

அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும். பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். Isa 4:5-6  

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு, நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார். Mic 4:6-7

மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும். இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும். Mic 4:8-9

சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். Mic 4:10-11

ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார். சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய். Mic 4:12-13

9-8-2 ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு  பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர்கள் இரண்டாவது வருகிறார்கள்;-

ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள். Zec 8:21-22

அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். Zec 8:23

ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். Mic 4:1

திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். Mic 4:2

அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. Mic 4:3

அவனவன் தன் தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம். Mic 4:4-5   

9-8-3 ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு வராமல் முரட்டாட்டம் பண்னி, தேவனுடைய நியாத்தீர்ப்பிற்கு தப்ப சீயோனுக்கு ஓடி வருகிறவர்களும் இடறிவிழுகிறவர்களும்;-

யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே. Isa 2:5-6

அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை. அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள். Isa 2:7-8

சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர். கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். Isa 2:9-11

பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய். நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? Jer 2:20-21

நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ. Jer 2:22-23

வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். Jer 2:24

உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். Jer 2:25

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. Joh 7:16-18  


Social Media
Location

The Scripture Feast Ministries