தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 25


தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 3-0

உப்பின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது:-

1-0 பூமிக்கு உப்பாயிருக்கிறவர்களின் மூலம் தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்களுடைய உப்பின்    சாரத்தை / குணாதிசயங்களை /சுவைகளை  வெளிப்படுத்துகிறவர்களுடைய   கிரியைகளும் பிரதிபலன்களும்   

2-0 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற மூலைக்கலாகிய   கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுடைய  திட அஸ்திபாரத்தின்மேல் விலையேறப்பெற்ற கல், பொன், வெள்ளி, மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணுகிறது;- .

3-0 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற மூலைக்கலாகிய   கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுடைய  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டினவர்களுடைய  வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று ஸ்நானங்களுக்கடுத்த பிரமாணத்தினால் பரிசோதிக்கப்படுகிறது:- 

1-0 பூமிக்கு உப்பாயிருக்கிறவர்களின் மூலம் தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்களுடைய உப்பின்    சாரத்தை / குணாதிசயங்களை /சுவைகளை  வெளிப்படுத்துகிறவர்களுடைய   கிரியைகளும் பிரதிபலன்களும்   

1-1 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. Mat 5:3   

1-2 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். Mat 5:4   

1-3 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். Mat 5:5 

1-4 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். Mat 5:6 

1-5 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். Mat 5:7   

1-6 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். Mat 5:8   

1-7 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். Mat 5:9 

1-8 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. Mat 5:10   

1-9 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; Mat 5:11 

1-10 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. Mat 5:12   

1-11 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் Mar 9:50  

1-12 புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. Col 4:5-6   

1-13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. Mat 5:13

1-14 நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். Lev 2:13; Mar 9:49  ,

1-15 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. Mat 5:14-16 

2-0 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற மூலைக்கலாகிய   கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுடைய  திட அஸ்திபாரத்தின்மேல் விலையேறப்பெற்ற கல், பொன், வெள்ளி, மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணுகிறது;- .

2-1 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின்  மூலைக்கல்

2-2 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற மூலைக்கலாகிய   கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுடைய  திட அஸ்திபாரம்

2-3 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  விலையேறப்பெற்ற  கல்   

2-4 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  பொன்,   

2-5 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  வெள்ளி

2-6 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  மரம்,

2-7 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  புல்,

2-8 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  வைக்கோல்

2-1 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின்  மூலைக்கல்/ கிறிஸ்து:-

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன? அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார். Luk 20:17-18  

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். Isa 28:16 

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. .Joh 1:1-5 

Isa_28:16; Pro_8:22-32Joh_1:1-8,Joh_1:9-14, Joh_1:18, Joh_6:46;Joh_16:28,Joh_17:3; Rom_3:29-30, Rom_10:12; 1Co_8:6; Gal_3:20; Eph_4:6,Psa_2:1-6, Psa_2:7-12, Gen_1:1-4, Gen_1:26-28; Psa_33:6, Heb_11:3; 2Pe_3:5-6, Psa_102:25-26; Isa_45:12, Isa_45:18Col_1:12-16;Col_1:17-21Heb_1:1-6,Heb_1:7-14,  Heb_3:1-4;Heb_11:27; Rev_4:11,Job_38:1-11; Job_38:12-22, Job_38:23-32, Job_38:33-41,   Psa_104:1-10;Psa_104:11-20; Psa_104:21-30;Psa_104:31-35; Isa_40:1-8,Isa_40:9-15,Pro_30:4,

2-2 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற மூலைக்கலாகிய   கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுடைய  திட அஸ்திபாரம்;-

1 செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்,

2 தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,

3 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்,

4 கைகளை வைக்குதல்,

5 மரித்தோரின் உயிர்த்தெழுதல்,

6 நித்திய நியாயத்தீர்ப்பு

7 பூரணராகும்படி கடந்து போவதற்கு  நீதியின் வசனங்கள்

ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. Heb 6:1-2 

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிற படியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.

பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களை யுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். Heb 5:12-14   

2-3 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  விலையேறப்பெற்ற  கல்லின் பொருள் ஞானம் / ஆண்டவருக்குப் பயப்படுகிற தினாலும்,  பொல்லாப்பை விட்டு விலகுகிறதினாலும், பெற்றுக்கொள்ளுகிற ஞானத்தின் மூலம் வெளிப்படுகிற நீதியின் கிரியைகள்;  விலையேறப்பெற்ற  கல்லின்  விலையைவிட உயர்ந்தது:-

ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது? அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை. ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது. Job 28:12-15 

ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.  பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது. எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. Job 28:16-19 

இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும். Job 28:20-23 

அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து, Job 28:24-25   

மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி, மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான். Job 28:26-28 

2-4 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  பொன்னின் பொருள் புத்தி  / ஆண்டவருக்குப் பயப்படுகிறதினாலும்,  பொல்லாப்பை விட்டு விலகுகிறதினாலும், பெற்றுக்கொள்ளுகிற புத்தியின் மூலம் வெளிப்படுகிற நீதியின் கிரியைகள்;  பொன்னின் விலையைவிட உயர்ந்தது:-

பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.

அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம். Pro 16:16-19 

2-5 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  வெள்ளியின்  பொருள் அறிவு  / ஆண்டவருக்குப் பயப்படுகிறதினாலும்,  பொல்லாப்பை விட்டு விலகுகிறதினாலும், பெற்றுக்கொள்ளுகிற அறிவின்  மூலம் வெளிப்படுகிற நீதியின் கிரியைகள்;  வெள்ளியின்  விலையைவிட உயர்ந்தது:-

நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். Pro 1:24-26  

நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். Pro 1:27-28 

அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். Pro 1:29-31 

பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். Pro 1:32-33 

2-6 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  மரத்தின் பொருள் / தேவனுடைய தரிசனங்களை ஓரளவு உணர்ந்து கொண்டவர்கள் அல்லது  தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருந்து கிட்டப் பார்வை உள்ளவர்கள்:-

பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். Mar 8:22-23 

அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.  பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். Mar 8:24 -26

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2Pe 1:4 

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். 2Pe 1:5-7 

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். 2Pe 1:8-9 

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். 2Pe 1:10-11 

  

2-7 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  புல்லின், பொருள் / மனிதனின் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின்  பெருமை ஆகியவைகளின் கிரியைகள் :-  

பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. 

கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது. Isa 40:6-8 

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல,

அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1Jn 2:15-17 

2-8 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிற  வைக்கோலின்  பொருள் / மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுடைய  மாயைகளினால்  வெளிப்படுகிற கிரியைகள்:-  

சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார். அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள். Isa 5:16-17 

மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,   நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ! Isa 5:18-19 

தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! Isa 5:20-21 

சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! Isa 5:22 -23

இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே. Isa 5:24 

3-0 சீயோனிலே வைக்கப்பட்டிருக்கிற மூலைக்கலாகிய   கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுடைய  திட அஸ்திபாரத்தின் மேல் கட்டினவர்களுடைய  வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று ஸ்நானங்களுக்கடுத்த பிரமாணத்தினால் பரிசோதிக்கப்படுகிறது:- 

3-1. சமுத்திர ஜலத்தினால் ஞானஸ்தானம்

3-2. யோர்தான் தண்ணீரினால் ஞானஸ்தானம்

3-3. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம்

3-4. தேவனுடைய அக்கினியினால் ஞானஸ்தானம்

3-5. பாதாள அக்கினியில் அனலினால் ஞானஸ்தானம்

3-6. பின்மாரி மழையின் ஜலத்தினால் ஞானஸ்தானம்

3-7. அக்கினி கலந்த கண்ணாடிக்கடலின் ஜலத்தினால் ஞானஸ்தானம்

3-8. அக்கினியும் கந்தகமும் கலந்த நித்திய நரகத்தில் ஞானஸ்தானம்

3-1. சமுத்திர ஜலத்தினால் ஞானஸ்தானம்:-

பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட் ஜனங்கள் தேவ அறிவினாலும் மகிமையினாலும் ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக் கொள்ளுதல் / தேவ ஜனங்கள் தேவ அறிவையும், மகிமையும் பெற்று அதில் திரளான காலங்களின் அளவுகள் நிறைந்திருக்கும்போது, அதை தங்கள் ஆத்துமாவின் தாகத்திற்கேற்றப்படி நடை முறைபடுத்த முடியாது. ஆனால் அவர்கள் அவைகளின் அறிவை அறிந்து கொண்டு அதன் வழியாக கடந்து செல்ல முடியும்.  1Co_10:1-2, Psa_136:13-15, Psa_78:13, Psa_33:7, Exo_14:21-22, Neh_9:11, Isa_11:9, Hab_2:14, Isa_6:3, Num_14:21, Psa_107:23-30, Rom_2:14-15, Rom_2:27, Isa_5:13, Hos_4:6, Jud_1:13, Isa_57:20, Pro_15:7,

3-2. யோர்தான் தண்ணீரினால் ஞானஸ்தானம் :-

பாவத்திலிருந்து மனம் திரும்பியவர்கள் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக்கொள்ளுதல் / தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று நம்பி, யாரையும் பின்பற்ற வேண்டாம் அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம்,

நீங்கள் நித்திய ஜீவ வார்த்தைகளால் ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளும்போது நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் வெகுதூரத்திலிருந்து உங்களால் பார்க்க முடியும். Mar_9:1, Luk_9:24-27Joh_3:3, Luk_17:20-23Tit_3:5, 1Pe_1:231Pe_3:21,

நித்திய ஜீவ வார்த்தைகள் நித்திய காலமாக இருப்பதால் அவைகளுக்கு குறிப்பிட்ட கால அளவுகள் வரையறுக்கப்படவில்லை, ஆனால் ஒருவர் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் ஞானஸ்தானம் பெற்று அவைகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளும்போது, நித்திய ஜீவ வார்த்தைகளின் கால அளவுகளை அவனுடைய கிரியைகளின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு;

தேவனுடைய வார்த்தைகளை நிறைவேறுவதற்கு தேவையான கால அளவுகளை  எடுத்துக்கொள்ளுகிறது./ உடன்படிக்கை செய்து கொண்டவரின் கிரியைகள் மூலம் நித்திய ஜீவ வார்த்தைகளின் சுவையும் வெளிப்படுகிறது.  Mat_16:15-19, Joh_6:65-69, Joh_1:1-5, Isa_51:1, 1Ki_5:17, 1Ki_6:7, 1Pe_1:4, 1Pe_1:23, 1Jo_1:1-4, Act_5:19-20,Pro_5:3-7, Jer_2:13, Phi_2:14-16, Jer_23:28-29,

3-3. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம் :-               

கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் பரிசுத்த ஆவியின் சத்திய வார்த்தைகளினால்  பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக் கொள்ளுதல் /பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; பரிசுத்த ஆவியின் சத்திய வார்த்தைகளால் ஒருவன் மறுபடியும் பிறந்து அவன் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது.

Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5, .Mat_3:11, Luk_3:16, Mar_1:8, Joh_1:31-34 , Act_1:4-5, Joh_14:16-18, Joh_14:26, Joh_15:26-27, Joh_16:7-14, Joh_17:17-23 Exo_13:21-22 , Exo_14:19-201Co_10:1-2, Neh_9:12, Neh_9:19-20, Psa_105:39, Psa_78:14, Exo_24:15-18, Exo_40:38, Deu_1:33 , Isa_4:2-6, Psa_143:10, Job_32:8, Pro_20:27,

3-4. தேவனுடைய அக்கினியினால் ஞானஸ்தானம் :-

பரிசுத்தவான்கள் தேவனுடைய அபிஷேக ஆவியினால் ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக் கொள்ளுதல் / தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக அபிஷேக ஆவியுடன்  உடன்படிக்கை செய்து  தேவனுடைய சித்தத்தின் திட்டம் நிறைவேற்றப்படுதல்.

தேவனுடைய உடன்படிக்கையின் மூலம்  எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுகிறபோது; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்:-

தேவனுடைய உடன்படிக்கையின் மூலம்  எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுகிறபோது; அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். Mar 9:49  1Co 3:13

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. 1Co 3:10-11  

ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 1Co 3:12-13 

அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும். நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1Co 3:14-16 

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். 1Co 3:17-18 

தேவனுடைய அபிஷேக ஆவியின் உடன்படிக்கைக்கு எதிராக செயல்படும் துன்மார்க்கர்கள் தேவ அக்கினியால் பட்சிக்கப்படுதல் Exo_13:21-22, Exo_14:24, Isa_10:16-17, Zec_2:5, Isa_4:2-6, Neh_9:12, Neh_9:19, Psa_104:4, Heb_1:7, Son_8:6, Isa_66:15-16, Oba_1:18, Joe_2:5, Exo_3:2, Act_7:30, Psa_29:7, Act_2:3,Deu_32:2, 2Sa_22:9, Psa_7:13, Psa_18:8, Psa_39:3, Jer_5:14, Jer_20:9, Lam_1:13, Zec_12:6, Mat_3:11, Luk_3:16,

3-5. பின்மாரி மழையின் ஜலத்தினால் ஞானஸ்தானம் :-

பின்மாரி மழையின் ஞானஸ்தானம்  Zec_10:1, Deu_32:1-2, Lev_26:1-4, Deu_28:12, Deu_28:24, Isa_50:4, Job_23:25-34, Isa_30:8-13, Isa_30:27-28, Isa_8:5-10, Isa_57:20-21, Job_4:19, Job_29:21-23, Job_28:25-28, 2Ch_7:13-14, Isa_41:21-29,    

பின்மாரி மழையின் தேவ வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளும்போது மணல் மேல் போடப்பட்ட அஸ்திபாரத் தின் பெலம் பரிசோதிக்கப்பட்டு, அதன் வடிவம் தகர்க்கப்பட்டு, அதனுடைய கிரியைகள் வெளிப்படுத்தப்படும்.

 Mat_7:24-27, Eze_13:10-16, Isa_28:14-19, Luk_6:48-49, Jer_17:5-13, Psa_69:28, Jer_23:25-34, Isa_30:8-13, Isa_30:27-28, Isa_8:5-10, Isa_57:20-21, Job_4:19, Job_22:16, Mic_1:6,               Job_4:19, Job_22:15-22,Job_22:23-30, Eze_30:1-4,Isa_19:14-17; Isa_9:13-20,Isa_58:5-8,Isa_58:9-12,Isa_36:6, Eze_29:6-7,   Mic_1:3-7,

மணல் மேல் போடப்பட்ட அஸ்திபாரத்தின் கற்கள் கன்மலை யிலிருந்து எடுக்கப்பட்டவைகள் Job_39:13-18, Hab_1:6-11, Rev_20:8, Psa_5:10, Psa_33:10, Pro_12:5, Job_5:13, Rev_17:13, Psa_139:17-18, Psa_94:19, Job_12:14-25, Joh_21:25, Pro_8:26-29, Ecc_3:20,

3-6. பாதாள அக்கினியில் அனலினால் ஞானஸ்தானம் :-

கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் போடப்பட்ட அஸ்தி பாரத்தின் பெலத்தை பரிசோதிக்கும்படி பாதாளத்தின் வல்லமையான மரண இருள் போன்ற கஷ்டங்கள், சோதனைகளால், ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தின் கிரியைகளை வெளிப்படுதல் /

நித்திய ஜீவ வார்த்தைகள் இல்லாமல் பாதாள அக்கினியின் அனலில் அகப்படும்போது முதலாம் மரணம் நேரிடும் இதனால் தேவனுடைய ரூபமும், சாயலும் நஷ்டமடைந்து அக்கினியும் கந்தகமும் கலந்த நித்திய நரகத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். Mat_16:15-19, 1Co_3:10-17, Job_20:26, Psa_49:6-15, Job_14:20-22, 1Co_5:1-5, Son_8:6, Job_31:1-12, Deu_32:22-29, Hos_8:14, Hos_13:14-16, Psa_16:8-11, Act_2:25-28, Psa_18:7, Lam_4:11, Psa_11:3, Psa_80:5,

3-7. அக்கினி கலந்த கண்ணாடிக் கடலின் ஜலத்தினால் ஞானஸ்தானம்

முதலாம் மரணத்தை ஜெயங்கொண்டு முதலாம் உயிர்தெழு தலில் பங்கடைந்த பரிசுத்தவான்கள் ஒளியை வெளிப்படுத்தும் விலை மதிப்புள்ள கனிம பொருள்கள் பொடியாக்கப்பட்டு அதனுடன் அக்கினியும் கலந்த அடர்த்தியான ஜலத்தினால் ஞானஸ்தானம் பெற்று தாங்கள் அடைந்த தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையின் நிலையை வெளிப்படுத்துதல். Rev_4:6, Rev_15:2,

3-8. அக்கினியும் கந்தகமும் கலந்த நித்திய நரகத்தில் ஞானஸ்தானம் :-

இரண்டாம் மரணத்தில் பங்கடைந்த துன்மார்க்கர்கள் நித்திய அக்கினி நரகத்தில் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்ட நிலையிலே இருந்து, தாங்கள் அடைந்த தேவனுடைய மகிமையின் நிலைகளை வெளிப்படுத்துதல். Job_18:13, Rev_14:10, Rev_19:20, Rev_20:10,


Social Media
Location

The Scripture Feast Ministries