தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 25


தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 6-0

புறம்பான ஜென்மசுபாவ  மனுஷனுடைய நியாயப்பிரமாணம், உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய நீதிப்பிரமாணம்,,ஆகியவைகள்    விவாக உடன்படிக்கையின் குணாதிசயங்களோடு ஒப்பிடப்படுகிறது

6-1 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன், தன்னுடைய,ஜென்ம சுபாவமான மனுஷனுடைய பாவத்தை; தன்னுடைய பாவ சரீரத்திலே  ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கேற்றபடி, தன்னுடைய ஆவிக்குரிய மனுஷனுடைய கண்கள் திறக்கப்பட்டு, நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடைய  பூரண வயதுதையடைந்து,  பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவனாக வளர்ச்சியடைகிறான்.

6-2 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன், தன்னுடைய பலவானாகிய  ஜென்ம சுபாவமான மனுஷனை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து,  முந்திக் கட்டுகிறபோது: அவனுடைய  வீட்டுக்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளாகிய ஜென்ம சுபாவங்களை  தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மூலம் தன்னுடைய ஆவிக்குரிய மனிதனுக்கு   நன்மைகளாக கொள்ளையிட முடியும்:-

6-3 தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையின் மூலம்  ஜென்மசுபாவ  புறம்பான மனுஷனையும் அவன் செய்கைகளையும் அழிந்தும், ஆவிக்குரிய உள்ளான மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறதினால்  நாளுக்குநாள் புதிதாக்கப்பட்டு;  தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவு, புத்தி, ஞானம், ஆகியவைகளை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்:-

6-4 புறம்பான ஜென்மசுபாவ  மனுஷனுடைய நியாயப்பிரமாணம் விவாக உடன்படிக்கையின் குணாதிசயங்களோடு ஒப்பிடப்படுகிறது:-  

6-5 உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய நீதிப்பிரமாணம்  விவாக உடன்படிக்கையின் குணாதிசயங்களோடு ஒப்பிடப்படுகிறது:-

6-6 உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய நீதிப்பிரமாணத்தை;   இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் மூலம் தேடாமல்,  புறம்பான ஜென்மசுபாவ  மனுஷனுடைய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே அடைய முயற்சிசெய்கிறவர்கள்  சீயோனிலிருக்கிற திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லில் இடறி விழுகிறார்கள்:-

6-7 உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய நீதிப்பிரமாணத்தை;   இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் மூலம் தேடாமல்,  புறம்பான ஜென்ம சுபாவ  மனுஷனுடைய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே அடைய முயற்சிசெய்கிறவர்கள்; ஏழு பரஸ்திரீகளை பின்தொடர்ந்து, தங்கள்  சொந்த ஆகாரத்தைப் புசித்து, தங்கள்  சொந்த வஸ்திரத்தை தரித்துக்கொண்டு,  தங்கள் நிந்தை நீங்கும்படிக்கு ஒரே பூரண புருஷனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்:-

6-8 நியாயப்பிரமாணம் மூலம் புறம்பான ஜென்மசுபாவ  மனுஷனுடைய ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம், இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் மூலம் உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய , நீதியைக் கொடுக்கும் ஊழியம்;அகியவைகளுடைய  மகிமையையுடைய வேறுபாடுகள்:-  

6-1 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன், தன்னுடைய,ஜென்ம சுபாவமான மனுஷனுடைய பாவத்தை; தன்னுடைய பாவ சரீரத்திலே  ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கேற்றபடி, தன்னுடைய ஆவிக்குரிய மனுஷனுடைய கண்கள் திறக்கப்பட்டு, நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடைய  பூரண வயதுதையடைந்து,  பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவனாக வளர்ச்சியடைகிறான்:-

மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.  மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். Rom 8:6-8 

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். Rom 8:9-10 

அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. Rom 8:11-12   

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். Rom 8:13-14

Rom_8:1-8, Rom_8:9-15, Rom_12:1-3, Gal_6:12-18, Gal_5:13-17, Gal_5:18-23,   2Co_5:1-81Co_15:50-54;1Co_15:55-58;   Gal_4:21-25, Gal_4:26-31; 2Co_4:14-18; Col_3:9-11;   Gen_3:4-7; Gen_3:8-11; Gen_3:17-21; Ecc_3:18-20Ecc_6:3-6Gen_3:4-7Isa_41:21-24, Joh_10:34-38,Heb_5:12-14; 2Ti_2:11-18,  

6-2 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன், தன்னுடைய பலவானாகிய  ஜென்மசுபாவமான மனுஷனை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து,  முந்திக் கட்டுகிறபோது: அவனுடைய  வீட்டுக்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளாகிய ஜென்ம சுபாவங்களை  தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மூலம் தன்னுடைய ஆவிக்குரிய மனிதனுக்கு   நன்மைகளாக கொள்ளையிட முடியும்:-

பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. Mat 12:24-25   

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். Mat 12:26-27 

நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். Mat 12:28-29 

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. Mat 12:30-31 

எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். Mat 12:32-33   

 

Mar_3:23-27;Job_12:6;Pro_3:11-18;   Job_22:22-30; Job_28:12-19; Job_28:20-28;1Co_2:11-16Luk_11:20-26; Mat_12:25-30; Psa_49:6-15,Mat_16:26,

6-3 தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையின் மூலம்  ஜென்மசுபாவ  புறம்பான மனுஷனையும் அவன் செய்கைகளையும் அழிந்தும், ஆவிக்குரிய உள்ளான மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறதினால்  நாளுக்குநாள் புதிதாக்கப்பட்டு;  தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவு, புத்தி, ஞானம், ஆகியவைகளை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்:-

நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். Col 3:7-8 

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. Col 3:9-10   

அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். Col 3:11 

 

Col_3:9-11; 2Co_4:15-16;Rom_2:27-29Eph_3:15-19;Gal_4:21-25, Gal_4:26-31; 1Co_2:11-16, 1Co_15:35-45;

6-4 புறம்பான ஜென்மசுபாவ  மனுஷனுடைய நியாயப்பிரமாணம் விவாக உடன்படிக்கையின் குணாதிசயங்களோடு ஒப்பிடப்படுகிறது:-  

நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? Rom 7:1 

அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். Rom 7:2 

ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. Rom 7:3 

அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். Rom 7:4 

நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. Rom 7:5 

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். Rom 7:6 

Rom_7:1-5Rom_7:6-10Rom_7:11-15; Rom_7:16-20; Rom_7:21-25; 1Ti_1:7-11Rom_2:17-24,Rom_2:25-29,  

6-5 உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய நீதிப்பிரமாணம்  விவாக உடன்படிக்கையின் குணாதிசயங்களோடு ஒப்பிடப்படுகிறது:-

நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன் தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்? Mal 2:10 

யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினார்கள். Mal 2:11 

இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும், உத்தரவு கொடுக்கிறவனாயினும், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார். Mal 2:12 

நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார். Mal 2:13 

ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே. Mal 2:14 

அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். Mal 2:15 

தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். Mal 2:16 

 

Mal_2:10-16; Pro_5:15-23,  Ecc_9:7-12;1Co_2:11-16; ,Phi_3:9-15;

6-6 உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய நீதிப்பிரமாணத்தை;   இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் மூலம் தேடாமல்,  புறம்பான ஜென்மசுபாவ  மனுஷனுடைய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே அடைய முயற்சிசெய்கிறவர்கள்  சீயோனிலிருக்கிற திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லில் இடறி விழுகிறார்கள்:-

உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 1Co 5:1-2 

நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,  நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், 1Co 5:3-4 

அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? 1Co 5:5-6 

ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.  ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். 1Co 5:7-8 

6-7 உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய நீதிப்பிரமாணத்தை;   இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் மூலம் தேடாமல்,  புறம்பான ஜென்ம சுபாவ  மனுஷனுடைய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே அடைய முயற்சிசெய்கிறவர்கள்; ஏழு பரஸ்திரீகளை பின்தொடர்ந்து, தங்கள்  சொந்த ஆகாரத்தைப் புசித்து, தங்கள்  சொந்த வஸ்திரத்தை தரித்துக்கொண்டு,  தங்கள் நிந்தை நீங்கும்படிக்கு ஒரே பூரண புருஷனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்:-

ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு, Pro 2:10-13 

தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய். Pro 2:14-17 

அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக. Pro 2:18-20 

செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள். Pro 2:21 -22

6-8 நியாயப்பிரமாணம் மூலம் புறம்பான ஜென்மசுபாவ  மனுஷனுடைய ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம், இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் மூலம் உள்ளான ஆவிக்குரிய மனுஷனுடைய , நீதியைக் கொடுக்கும் ஊழியம்;அகியவைகளுடைய  மகிமையையுடைய வேறுபாடுகள்:-  

புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. 2Co 3:6-7 

ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமை யுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. 2Co 3:8-9 

இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல. அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். 2Co 3:10-12 

மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. 2Co 3:13-14 

மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 2Co 3:15-17 

2Co 3:18  நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.


Social Media
Location

The Scripture Feast Ministries