தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 25


தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 5-0

5-0 வஸ்திரங்களின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது

5-1 வேத பிரமாணத்தின்படி  நீதியின்  வஸ்திரம்  தரித்து  விருந்து

5-2 திராட்சரசத்திலே  தன் வஸ்திரத்தையும், அங்கியையும்  சுத்தம்  செய்தல்.

5-3 தீமையை ஜெயங்கொள்ளுவதால்  நீதியின்  வஸ்திரம்  தரித்து விருந்து

5-4 வேத பிரமாணத்தின்படி  இரத்த  சாட்சிகளுக்கு  நீதியின்  வஸ்திரம்

5-5 இரத்த சாட்சிகளாக  மரித்தபடியால்  நீதியின் வஸ்திரம்

5-6 சபைகளில் சுய நீதியின்  வஸ்திரம்  தரித்து விருந்து

5-7 மறுதேசத்து  வஸ்திரம்  தரித்திருக்கிற  ராஜகுமாரரின்  விருந்து.

5-8 சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து  ராஜகுமாரரின்  வஸ்திரம் தரித்து   விருந்து கொண்டாடுகிறவர்களின்  பிரதிபலன்கள்.

5-1 வேத பிரமாணத்தின்படி  நீதியின்  வஸ்திரம்  தரித்து  விருந்து

நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளு வதற்கு வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக் கொள்ளுதல்:-

வேத பிரமாணத்தின்படி நன்மை, தீமைகளை அறிந்து கொண்டு, தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளுவதின் மூலம் நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளுதல்

Rev 19:7  நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

Rev 19:8  சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

Rev 19:9  பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

Isa_64:6, Rev_22:14, Heb_5:12-14, Amo_5:14, Gen_1:16-17, Gen_21:8-10, Gal_4:28-31, Isa_28:9, Heb_6:1-2, 2Ti_3:16-17, Tit_3:8, Eph_5:23-26,

5-2 திராட்சரசத்திலே  தன் வஸ்திரத்தையும், அங்கியையும்  சுத்தம்  செய்தல்.

யூதர்கள் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளுவதற்காக தங்கள் வஸ்திரத்தையும், அங்கியையும் கிறிஸ்து வின் உபதேசத்தினால் சுத்தம் செய்து கொள்ளுதல்  Gen_49:8-12

 Gen 49:8  யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.

Gen 49:9  யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?

Gen 49:10  சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

Gen 49:11  அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக் கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.

Gen 49:12  அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.

5-3 தீமையை ஜெயங்கொள்ளுவதால்  நீதியின்  வஸ்திரம்  தரித்து விருந்து

புற ஜாதிகள் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளுவதற்கு தங்களுடைய மனசாட்சியின் பிரமானத்தின் படி தீமையை நன்மையால் ஜெயங்கொள்ளுவதால் நீதியின் வஸ் திரத்தை தரித்துக் கொள்ளுதல் :-

Joh 9:31  பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

Joh 9:32  பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே.

Joh 9:33  அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.

Joh 9:34  அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.

Joh 9:35  அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.

Joh 9:36  அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.

Joh 9:37  இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.

Joh 9:38  உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

Joh 9:39  அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.

Joh 9:40  அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.

Joh 9:41  இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

Rom 4:5  ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

Rom 4:6  அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:

Rom 4:7  எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

Rom 4:8  எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

Rom 4:9  இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.

Rom 4:10  அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்த போதோ,விருத்தசேதனமில்லாதவனாயிருந்த போதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்த போதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்த போதே.

Pro_1:23-25, Pro_10:17, Pro_4:13, Pro_5:6, Pro_15:31-33 , Isa_2:1-4, Mic_4:1-3,Isa_65:12-14, Jer_15:16-21, Isa_33:15-17, Job_28:12-14, Job_28:20-28, Gen_4:7, Rom_8:27-33,

5-4 வேத பிரமாணத்தின்படி  இரத்த  சாட்சிகளுக்கு  நீதியின்  வஸ்திரம்

வேத பிரமாணத்தின்படி இரத்த சாட்சிகளாக மரித்த பரிசுத்தவான்களுக்கு நீதியின் வஸ்திரம் கொடுக்கப்படுகிறது Rev_6:9-11,

Rev 6:9  அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.

Rev 6:10  அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

Rev 6:11  அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

5-5 இரத்த சாட்சிகளாக  மரித்தபடியால்  நீதியின் வஸ்திரம்

தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளுக்கு, இரத்த சாட்சிகளாக மரித்த புறஜாதிகளுக்கு வெண்மையான வஸ்திரம் கொடுக்கப்படுகிறது:-

புற ஜாதிகள் தங்களுடைய மனசாட்சியின் பிரமாணத்தின்படி தீமையை நன்மையால் ஜெயங்கொள்ளுவதற்கு, இரத்த சாட்சிகளாக மரித்தபடியால் வெண்மையான வஸ்திரம் கொடுக்கப்படுகிறது  Rev_7:9-17,

Rev 7:9  இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

Rev 7:10  அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

Rev 7:11  தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

Rev 7:12  ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.

Rev 7:13  அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

Rev 7:14  அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

Rev 7:15  ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

Rev 7:16  இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.

Rev 7:17  சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

5-6 சபைகளில் சுய நீதியின்  வஸ்திரம்  தரித்து விருந்து

வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக் கொண்டு நித்திய  ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளா மல், தங்கள் சுய நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு தேவனுடைய வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசாக / பிரதிபலனாக இந்த பூமியில் தங்கள் விரும்பின பதவிகளை தங்க ளுடைய பிரதிபலனுக்காக தாங்களே, தங்களுக்கு நியமித்துக் கொள்ளுதல்

Est 1:9  ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.

Est 1:10  ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,

Est 1:11  ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.

Est 1:12  ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.

Est 1:13  அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

Est 1:14  ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:

Est 1:15  ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.

Est 1:16  அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்கு மாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.

Est 1:17  ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.

Est 1:18  இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.

Est 1:19  ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

Est 1:20  இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.

Est 1:21  இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,

Est 1:22  எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத் தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான். Isa_4:1, Rom_2:17-24, 1Ti_1:5-11, Isa_2:5-6, Isa_5:8-12, 1Co_3:1-9, Jer_4:1-6Jdg_5:9-11, Jud_1:10-16,

5-7 மறுதேசத்து  வஸ்திரம்  தரித்திருக்கிற  ராஜகுமாரரின்  விருந்து.

வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக் கொண்டு நித்திய  ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள் ளாமல், தங்கள் சுய நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு தேவனுடைய வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்கள் : தங்கள் மனம் விரும்பின தேவனுடைய இராஜ்ஜியத்தின் பதவிகளை தங்களுடைய பிரதிபலனுக்காக இந்த பூமியிலே தாங்களே, தங்களுக்கு நியமித்துக் கொள்ளுதல்

Zep 1:4  நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

Zep 1:5  வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,

Zep 1:6  கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

Zep 1:7  கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.

Zep 1:8  கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.

Zep 1:9  வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

Zep 1:10  அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார். Zep_1:4-10, Amo_6:1-8, Amo_6:9-13, Dan_5:1, Isa_65:8-14, 1Co_11:18-22, Pro_5:1-6,Pro_5:7-13, Pro_5:14-20, Pro_5:21-23, Pro_2:10-15, Pro_2:16-19, Pro_2:20-22Pro_6:23-24Pro_7:1-5 , Pro_7:6-10, Pro_7:11-15, Pro_7:16-20, Pro_7:21-27, Pro_9:13-18,

5-8 சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து  ராஜகுமாரரின்  வஸ்திரம் தரித்து   விருந்து கொண்டாடுகிறவர்களின்  பிரதிபலன்கள்.

வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய  ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளாமல், தங்கள் சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து  ராஜ குமாரரின்  வஸ்திரம் தரித்துக்கொண்டு தேவனுடைய வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவனுடைய நீதியுள்ள நியாயத் தீர்ப்பு

வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு: தேவன் தம்முடைய இராஜ்ஜியத்தின் பதவிகளை பரிசாக கொடுக்க வரும்போது ;

Luk 14:7  விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:

Luk 14:8  ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.

Luk 14:9  அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.

Luk 14:10  நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.

Luk 14:11  தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

ஆனால் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவன் பந்தியில் மிகவும் முதன்மையான இடமாகிய இராஜாவின் ஸ்தானத் தில் அமர்ந்து கொண்டு, நான் தான் கிறிஸ்து என்று சொல்லிக் கொள்ளுகிற இராஜ வஸ்திரத்தை தரித்திருக்கிறவனைப் பார்த்து :

Mat 22:11  விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:

Mat 22:12  சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.

Mat 22:13  அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

Mat 22:14  அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

Mat 24:3  பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

Mat 24:4  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

Mat 24:5  ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

Isa 65:12 Isa_65:12, ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் : இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள் ; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

Isa 65:13 Isa_65:13, இதோ, என் ஊழியக்காரர் மன மகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மன நோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.

. Mat_23:5-12, Mat_24:23-26, Joh_7:18, Joh_12:43, Isa_2:5-6, 1Th_2:6,Rom_11:8-10, Psa_69:22-28, Psa_109:5-10, Isa_28:7-13,Isa_29:9-14,Jer_7:34, Jer_16:9, Jer_25:10, Rev_18:23,


Social Media
Location

The Scripture Feast Ministries