தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 03
தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம் ஒன்று
1-0 ஏழு சபைகளுக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-1 முதல் சபை - எபேசு பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-2 இரண்டாம் சபை - சிமர்னா பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-3 மூன்றாம் சபை - பெர்கமு பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-4 நான்காம் சபை - தியத்திரா பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-5 ஐந்தாம் சபை - சர்தை பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-6 ஆறாம் சபை - பிலதெல்பியா பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-7 ஏழாம் சபை - லவோதிக்கேயா பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
1-1முதல் சபை - எபேசு பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி (Rev 2:1) Rev_2:1
ஏழு நட்சத்திரங்கள் - ஏழு சபையின் தூதர்கள்.
1. கிறிஸ்துவின் வசனம் இருளில் பிரகாசிக்கிற விடி வெள்ளி நட்சத்திரம் - கிறிஸ்துவின் வசனம் ஏழு சபைகளுக்கும் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கும் தூதர்கள். Rev_1:20, Rev_1:12-13, Rev_1:16
2. ஏழு பொண் குத்து விளக்கு - ஏழுபட்டணத்து சபை களின் மத்தியில் உலாவிக் கொண்டிருந்து, ஏழு சபைகளுக்கும் தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிற கிறிஸ்துவின் வசனம் சொல்லுகிறதாவது. 2Pe_1:19, Joh_1:1-5,
(Rev 2:2-3) Rev_2:2-3
இந்த வசனங்களில் சொல்லப்படுகிற கீழே குறிப்பிட்ட எட்டுவகையான காரியங்களை தேவன் அறிந்திருக்கிறார்.
1. உன் கிரியைகளையும் - வெளிப்பட்ட கிரியைகளையும்
2. பிரயாசத்தையும் - செய்ய நினைக்கிறவைகளையும்
3. பொறுமையையும் - பொறுமையாக இருந்ததையும்
4. பொல்லாதவர்களை சகிக்காமல் - பொல்லதாவர்களை பொறுத்துக்கொள்ளாமல்
5. கள்ள அப்போஸ்தலர்களையும் அவர்களுடைய பொய் களையும், யூதர்களுக்கு அப்போஸ்தலனா? அல்லது புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனா? யாருக்கு அப்போஸ்தலன்? என்று உணர்ந்து கொள்ளாமல் தன்னைத்தான் அப்போஸ்தலன் என்று சொல்லுகிற கள்ள அப்போஸ்தலர்களையும் 2Co_11:12-15, Gal_2:7-8,
6. துன்பம் / கஷ்டம் சகித்துக் கொண்டிருப்பதையும்
7. பொறுமையாக இருந்து கொண்டிருப்பதையும்
8. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் சோர்ந்து போகமல் முயற்சி செய்கிறதையும் தேவன் அறிந்திருக்கிறார்.
Rev 2:4) Rev_2:4,
ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் தேவனுக்கு குறை உண்டு Jer_2:1-2, Jer_2:4-6, Rev_2:2-3 வசனங்களில் சொல்லப்பட்ட எட்டு வகையான நன்மையான காரியங்களை உன்னிடம் இருந்தாலும், நீ இரட்சிக் கப்பட்ட போது உன்னிடம் ஆதியில் இருந்த அன்பு இப்பொழுது உன்னிடம் இல்லை, ஆதியில் இருந்த அன்பை மறந்து போனாய்.
Rev 2:5)Rev_2:5,
1 நீ இரட்சிக்கப்பட்டபோது உனக்கு இருந்த அன்பிலிருந்து, நீ இப்பொழுது எந்த அளவிற்கு கீழே விழுந்திருக்கிறாய் என்பதை நினைத்து மனத்திரும்பி; உன் இளவயதின் பக்திக்கும், நீ இரட்சிப்பின் உடன்படிக்கை செய்த போது உனக்கு இருந்த நேசத்திற்கும் மீண்டும் திரும்புவாயாக.
2 நீ மனந்திரும்பாமல் இருந்தால் உன் விளக்கிலிருந்து விளக்கு தண்டை தேவன் நீக்கிப் போடுகிறார் இப்பொழுது உன் விளக்கு தரையில் வைக்கப்படுகிறபடியால் மற்றவர்களுக்கு விளக்கு வெளிச்சம் தடை செய்யப்பட்டு உனக்கு மட்டும் உன் விளக்கு வெளிச்சம் பிரகாசிக்கிறது.
ஆவியின் படி பொருள்:-
நீ மனந்திரும்பாமல் இருந்தால் உன் நற்கிரியைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வழி முறைகளை / ஊழியத்தின் எல்லைகளை தேவன் தடை செய்கிறார் இப்பொழுது உன் நற்கிரியை களின் எல்லைகள் / ஊழியத்தின் எல்லைகள் குறைக்கப்பட்டு, உன் நற்கிரியைகள் மற்றவர்களுக்கு வெளிப்படாமல் உனக்கு மட்டும் வெளிப்படுகிறபடியால் உனக்கு நீயே ஞானியாக / நீதிமானாக காணப்படுகிறாய்
உன் விளக்கு தண்டை தேவன் நீக்கிப்போட்ட இந்த தருணத்தில், உன்னுடைய விளக்கை மரக்காலின் கீழாவது, பாத்திரத்தின் கீழாவது, கட்டிலின் கீழாவது மூடி வைக்காமல், மீண்டும் உன் விளக்கை, தேவன் விளக்கு தண்டின் மேல் வைக்கும் படியாக, நீ இரட்சிக்கப்பட்ட போது செய்து கொண்ட உடன்படிக் கையின் நேசத்திற்கு வந்து சேர்ந்து, மீண்டும் மனந்திரும்பும் போது நீ இழந்து போன விளக்கு தண்டை மீண்டும் தேவன் உன்னுடைய விளக்கிற்கு கொடுப்பார்.
3 உன் நற்கிரியைகளின் எல்லைகளை / ஊழியங்களை தேவன் நிக்கிக் போட்ட இந்த தருணத்தில், உன் நற்கிரியைகளை கீழே குறிப்பிடுகிற மூன்று காரியங்களின் அடிப்படையில் செயல்படுத்தாமல் இருக்க வேண்டும்
1. மரக்காலின் கீழ் / வியாபரத்தின் அடிப்படையில் நற்கிரியைகளை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் Luk_11:33-36,
2. பாத்திரத்தின் கீழ் / பட்டம், பதவிகளின் அடிப்படையில் நற்கிரியைகளை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் Luk_12:31-40, Luk_12:35, Luk_12:33-34, Job_22:2-3, Job_35:1-8,
3. கட்டிலின் கீழ் / சோம்பாலாக, நித்திரை மயக்கமாக நற்கிரியைகளை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் Mat_5:14-16, Mar_4:21-25, Luk_8:16-18,
மூன்று காரியங்களின் அடிப்படையில் செயல்படுத்தாமல் இருந்து கொண்டு, மீண்டும் உன் நற்கிரியைகளின் எல்லைகளை / ஊழியத்தின் எல்லைகளை தேவன் விரிவாக்கும் படியாக நீ இரட்சிக்கப்பட்ட போது செய்து கொண்ட உடன்படிக்கையின் நேசத்திற்கு வந்து சேர்ந்து மீண்டும் மனந்திரும்பும்போது; நீ இழந்து போன உன்னுடைய நற்கிரியைகளின் / ஊழியத்தின் எல்லைகளை, தேவன் மீண்டும் உன்னுடைய நற்கிரியைகளுக்கு கொடுக்கிறபடியால் அநேகருக்கு உன்னுடைய நற்கிரியைகள் வெளிப்படும்.
Rev 2:6)Rev_2:6,
மதப்போதகத்தின் அடிப்படையிலான விசுவாசத்தினுடைய கொள்கைகளில் தீவிரமாக இருந்து கொண்டு அவைகளை தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறவர்களை தேவன் வெறுக்கிறார். Rev_2:15,
Rev 2:7)Rev_2:7,
முதலாம் சபையின் ஜெயங்கொள்ளுதல், காதுள்ளவன் கேட்கக் கடவன் :-
ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கொடுப்பேன். கீழே குறிப்பிட்ட மூன்று காரியங்களை ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு ஜீவ விருட்சத்தின் கனியை தேவன் புசிக்கக் கொடுப்பார்.
1 நீ இரட்சிக்கப்பட்டபோது உனக்கு இருந்த நேசத்திற்கு வந்து சேர்ந்து மறுபடியும் மனந்திருப்புதல்
2. நீ இழந்து போன விளக்கு தண்டை மறுபடியும் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டு உன் விளக்கு வெளிச்சம் அநேகருக்கு பிரகாசமாக இருப்பது.
3. மதபோதகத்தின் விசுவாச கிரியைகளை விட்டு மனந்திரும்பி கிறிஸ்துவின் விசுவாச கிரியைகளை பின்பற்றுவது
நித்திய ஜீவ வார்த்தைகளின் விசுவாச கிரியைகளை செய்து ஆவி ஆத்துமா, நித்தியமாக பிழைப்பது; இந்த மூன்று காரியங்களை ஜெயங்கொள்ளாமல் இருக்கும் போது ஜீவ விருட்சத்தின் கனியை / நித்திய ஜீவ வார்த்தைகளின் விசுவாசத்தையும் அதன் கிரியைகளையும் பகுத்து அறிந்து கொள்ளாமல் ஆவி, ஆத்துமா மரணமடைகிறது Rev_2:2, Rev_2:14, Heb_5:12-14, Isa_5:20-23, Eze_33:13-16,
1-2 இரண்டாம் சபை - சிமர்னா பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
Rev 2:8) Rev_2:8,
முந்தினவரும் பிந்தினவரும் - விசுவாசத்தை துவக்கிற வரும் முடிகிக்கிறவருமாகிய கிறிஸ்துவின் குணாதிசயங்களைப் பெற்ற கிறிஸ்துவின் வார்த்தை அறிவிக்கிற நற்செய்தி Rev_1:5,
Rev 2:9) Rev_2:9,
1. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்
2. உன் உபத்திரவத்தை அறிந்திருக்கிறேன்
3. நீ ஐசுவரியமுள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித் திரத்தை அறிந்திருக்கிறேன்.
4. கள்ள யூதர்களின் தூஷணங்களை அறிந்திருக்கிறேன்.
1. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்:-
உனக்கு அறிந்திருக்கிற தேவ ஞானத்தினால் உன்னுடைய நீதியின் கிரியைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறபோது, உன்னுடைய அறியாமைமையினால் உனக்கு வருகிற உபத்திரவத்தை தேவன் அறிந்திருக்கிறார்
2. உன் உபத்திரவத்தை அறிந்திருக்கிறேன்:-
எழுத்தின் படியும், ஆவியின் படியும், இருக்கிற தரித்திரமும் அதனால் வருகிற உபத்திரவமும் தொடர்ந்து வருவதற்கு, தரித்திரம் தனக்கு உதவியாக சில நல்ல வல்லமையுள்ள ஆயுதங்களை தன் கையில் வைத்திருக்கிறது.
Pro_23:21, Pro_13:18, Pro_21:20, Rev_6:6 Pro_21:17
தரித்திரம் இந்த வல்லமையுள்ள ஆயுதங்களை சமயத்திற் கேற்றபடி மிக துள்ளியமாக பயன்படுத்தி தனக்கு வருகிற எல்லா ஆசீர்வாதங்களையும் உள்ளே வரவிடாமல் தடை செய்கிறது. Pro_6:9-11, Pro_24:30-34, Pro_20:13, Pro_19:15 Ecc_10:18,
தரித்திரம் வைத்திருக்கிற வல்லமையுள்ள ஆயுதங்களை யார்? மிக சாதுர்யமாக அதனிடமிருந்து திருடி எடுத்துக் கொள்ளுகிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதங்களையும் தடையில்லாமல் பெற்று அனுபவிக்கலாம். Mat_25:24-30, 1Ti_6:6-10, 1Ti_6:17-19, Pro_22:1, Pro_22:4, Jam_2:5-7,
ஒருவனுடைய ஆசீர்வாதங்களை உள்ளே வரவிடாமல் தடுப்பதற்காக, தரித்திரம் தன் கையில் வைத்திருக்கிற வல்லமை யுள்ள ஆயுதம் சோம்பல்.
ஒருவனுடைய ஆசீர்வதங்களை உள்ளே வரவிடாமல் தடுப்பதற்காக தரித்திரம் தன் பக்கம் வைத்திருக்கிற சில இரகசியமான வல்லமையுள்ள ஆயுதங்கள்.
1. புத்திமதிகளை தள்ளிவிடுதல்.
2. புத்தி மதிகளை அலட்சியப்படுத்துதல்.
3. சிற்றின்பத்தின் காலத்தை செலவழிப்பது.
4. மற்றவர்களை குற்றப்படுத்தி தன்னுடைய குறைகளை நியாயப்படுத்துவது.
5. பணம் / பதவி இவைகளை நாடி ஓடுவது.
6. கர்த்தருக்கு பயப்படாமல் இருப்பது.
7. வேலைகளில் சோம்பல் / உதாசீனம்.
3. நீ ஐசுவரியமுள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித் திரத்தை அறிந்திருக்கிறேன்:-
நான் ஆவிக்குரிய காரியங்களில் நீதிமான் / ஞானி என்று சொல்லுகிறவர்கள், தங்களுக்கு இருக்கிற ஆவிக்குரிய தரித்திரமாகிய தங்களுடைய பாவத்தையும் அறியாமைமையும் உணர்ந்து கொள் ளாமல் இருக்கிறபடியால், எழுத்தின் படியும், ஆவியின் படியும், தரித் திரம் இருக்கிறது; இதனால் வாழ்க்கையில் உபத்திரவமும் தொடரு கிறதை தேவன் அறிந்திருக்கிறார்
Rev_3:17 Hos_12:7-8,Rev_3:18-19 Psa_12:6, Psa_119:140, 1Co_8:2-3, Pro_28:11,
4. கள்ள யூதர்களின் தூஷணங்களை அறிந்திருக்கிறேன்:-
கள்ள யூதர்களினால் தேவனுடைய நாமம் புற ஜாதிகளிக்குள்ளே தூசிக்கப்படுகிறதை தேவன் அறிந்திருக்கிறார் Rev_3:9, Rom_2:17-24, Rom_2:25-29,
Rev 2:10) Rev_2:10,
1)நன்மை செய்கிறபடியால் படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே. தீமை செய்கிற படியால் படப்போகிற பாடுகளைக் குறித்து முழுமையாக பயப்பட வேண்டும்.
2. பிசாசனவன் உங்களை சோதிப்பதற்காக சிலரை பத்து நாள் காவலில் போடுவான்.
3. நன்மை செய்கிறபடியால் பத்து நாள் காவலில் படப்போகிற பாடுகளைக் குறித்து பயப்படாதே.
4. மரணம் வரை / முடிவு வரை நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்பட்டு ஜீவ கீரிடத்தை பெறுவான். Jam_1:12-15, 2Pe_2:9-10, Jam_1:2-4, 1Co_10:13, Rev_2:10,
Rev 2:11 Rev_2:11,
இரண்டாம் சபையின் ஜெயங்கொள்ளுதல், காதுள்ளவன் கேட்கக் கடவன் :-
கட்டாயம் அல்ல, விருப்பமுள்ளவர் கேட்கக்கடவக்கள் / ஏற்றுக்கொள்ளக்கடவர்கள், ஜெயங்கொள்ளுகிறவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினி நரகத்தில் பங்கடைவதில்லை / தள்ளப்படுவதில்லை Rev_20:14-15,
1 உன் ஆவிக்குரிய காரியங்களில் உள்ள தரித்திரம் ஜசுவரியமாக மாற வேண்டும்.
2 உள்ளத்தில் ஆவிக்குரிய யூதனாக மாற வேண்டும்
3 சோதனைகளை நன்மையினால் ஜெயங்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று காரியங்களுக்காக மனந்திரும்பி ஜெயங் கொள்ளுகிறவர்கள் ஜீவ கீரிடத்தை / நித்திய இராஜ்ஜியத்தின் பதவிகளை பரிசாக பெற்றுக் கொள்ளுவார்கள்.
1-3 மூன்றாம் சபை - பெர்கமு பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி.
Rev 2:12 Rev_2:12
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை வைத்திருக்கிறவர்/ தேவனுடைய வார்த்தைகளையும் அதனுடைய கிரியைகளையும் நிறைவேற்றுகிறவர் சொல்லுகிற நற்செய்தி Rev_1:16 Heb_4:12, Psa_149:6-9, Pro_5:1-14, 2Ti_2:12-13, Psa_89:34, Isa_55:10-11,
Rev 2:13 Rev_2:13
1. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்
2. சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற பூமியில் குடியிருக்கிறதை அறிந்திருக்கிறேன்.
3. பூமியில் தேவனுடைய நாமத்தை பற்றிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கிறேன்.
4. அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களில் உண்டான விசுவாசத்தை மறுதலியாமல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
Rev 2:14 Rev_2:14 ,
ஆகிலும் சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்கு குறை உண்டு, பிலேயாமின் போதகத்தை பின்பற்று கிறவர்கள் உன்னிடத்தில் உண்டு Mic_6:5-9, Num_25:1-3, Num_25:16-18, Num_31:16, 2Pe_2:15-17,
Rev 2:15 Rev_2:15,
மதத்தின் அடிப்படையிலான போதகத்தை தேவன் வெறுக்கிறார். Rev_2:6,
Rev 2:16 Rev_2:16,
பிலேயாமின் போதகம், மதத்தின் போதகம் ஆகிய இவைகளிலிருந்து மனந்திரும்பு; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடத்தில் வந்து என் வாயின் பட்டயத்தால் அவர்களோடு யுத்தம் பண்ணுவேன் / தேவனுடைய நியாயத்தீர்ப்பு நடைபெறும் Joh_12:47-48, Mat_7:24-29, Deu_8:3, Job_22:22, Job_23:12, Jer_9:20,
Rev 2:17 Rev_2:17,
மூன்றாம் சபையின் ஜெயங்கொள்ளுதல், காதுள்ளவன் கேட்கக் கடவன் :-
கட்டாயம் அல்ல, விருப்பமுள்ளவர் கேட்கக்கடவக்கள் / ஏற்றுக்கொள்ளக்கடவர்கள்,
1 பிலேயாமின் போதகத்தைப் போல உள்ள கள்ள தீர்க்க தரிசிகளின் போதகம் / உபதேசம்
2 நிக்கொலாய் மதத்தின் போதகம் / கிறிஸ்துவின் விசுவாச அடிப்படையில் உள்ள மதப் போதகம், அவைகளின் மார்க பேதங்களின் உபதேசங்கள் ஆகிய இவைகளிலிருந்து மனந்திருப்பி ஜெயங்கொள்ள வேண்டும்,
ஜெயங்கொள்ளுகிறவர்களின் பிரதிபலன்கள்
1. மறைவான மன்னா தேவனுடைய சத்தியமான வார்த்தை களின் விருந்து
2. வெண்மையான குறிக்கல் / அடையாளத்தின் கல்
3. வெண்மையான கல்லில் புதிய நாமம்.
Joh_6:48-51, Joh_6:56-58, Amo_8:11-14, Exo_16:20-30, Lev_25:20, Isa_34:16-17, Isa_65:12-15,
1-4 நான்காம் சபை - தியத்திரா பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
Rev 2:18 Rev_2:18,
அக்கினி ஜூவாலை போன்ற கண்களும், பிரகாச முள்ள வெங்கலம் போன்ற பாதங்களையுடைய தேவ குமாரன் சொல்லுகிறதாவது / சகலத்தையும் பரிசோதித்து நியாயத்தீர்ப்பு கொடுக்கிற கிறிஸ்துவின் வார்த்தை சொல்லுகிற நற்செய்தி :- Rev_19:12-13, Rev_1:14-15, 2Ch_16:9,Psa_11:4-7,
Rev 2:19 Rev_2:19,
இந்த வசனத்தில் சொல்லப்பட்ட ஆறு காரியங்களை அறிந்திருக்கிறேன்.
1. உன் கிரியைகள் 2. உன் அன்பு 3. உன் ஊழியம் 4. உன் விசுவாசம் 5. உன் பொறுமை 6. முன் செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறது, ஆரம்ப முதல் கிரியைகளில் படிப்படியாக முன்னேறி வளர்ச்சியடைதல் / முந்தினோர் பித்தினோராக மாறாமல் எப்பொழுதுமே முத்தினோராகவே இருப்பது 2Pe_2:20-22, 2Pe_1:4-7, 2Pe_1:8-12, Mat_19:30, Mar_10:31, Luk_13:30, Mar_4:26-29,
Rev 2:20 Rev_2:20,
உன் பேரில் எனக்கு குறை உண்டு
Rev 2:19 Rev_2:19, - ஆறு நன்மைகள் இருந்தாலும் இன்றும் குறைகள் உண்டு கள்ள தீர்க்க தரிசியான யேசேபேலின் போதகத்தால் சபைகளில் தேவனுடைய ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்டு வேசித்தனம் பண்ணவும், விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிக்கவும், தியத்திரா சபை இடங்கொடுக்கிறது.
விசேஷ வரம் பெற்றவர்கள் என்று கள்ளத்தீர்க்க தரிசிகளை சபைக்கு அழைத்து வந்து, அவர்களுடைய போதகத்தினால் தேவ ஜனங்கள் வஞ்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை மீறுவதற்கும், ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளை பின்பற்றுவதற்கும் சபை இடம் கொடுக்கிறது. 1முiமூ21:9-10, 1Ki_21:9-10, Pro_27:23, Jer_23:1-4, Eze_34:1-10, Zec_11:4-6,
Rev 2:21 Rev_2:21,
கள்ள தீர்க்க தரிசிகளுக்கு மனந்திருப்புவதற்கு தவணை கொடுத்தேன், ஆனால் மனந்திரும்புவதற்கு அவர்களுக்கு விரும்பம் இல்லை.
Rev 2:22-23 Rev_2:22-23,
1. யேசபேலை கட்டில் கிடையாக்குவேன்:- கள்ள தீர்க்க தரிசிகளுக்கு கனநித்திரையின் ஆவியை கட்டளையிட்டு, அவர்களுடைய ஊழியங்களை கட்டில் கிடையாக்குவேன்.
2. கள்ளதீர்க்க தரிசிகளை அங்கிகரித்து அதனால் பொருள் சாம்பாதித்தவர்கள் தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பாமல் இருக்கும்போது தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளப்படுவார்கள்.
3. கள்ளதீர்கக தரிசிகளை அங்கிகரித்து ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆவி, ஆத்துமா சாகவே சாகும்.
4. அப்பொழுது தேவனே உள்ளத்திரியங்களையும், இருதயங்களையும், ஆராய்கிறவரென்று எல்லா சபைகளும் அறிந்து கொள்ளும்.
5. மீதியாக இருக்கும் மற்றவர்கள் ஒவ்வொருவருடைய கிரியைகளின்படி தேவன் அவர்களுக்கு பிரதிபலனைக் கொடுக்கிறார்.
Isa_29:10-14, Isa_5:11-16, Jer_17:9-11, Jer_17:5-6, Jer_17:7-8, Psa_84:5-7, Psa_146:3-5,
Rev 2:24 Rev_2:24,
யேசபேலின் கள்ளத்தீர்க்க தரிசன போதகத்தை பின்பற்றாதவர்கள், சாத்தானுடைய ஆழங்களை அறிந்து கொள்ளாமல் இருக்கிறவர்கள், ஆகிய இவர்களுக்கு வேறொரு பாரமும் இல்லை / ஆகிய இவைகளை அறிந்தவர்களுக்கு இதுவே பாரம்.
1. கள்ள தீர்க்கதரிசன போதகத்தை பின்பற்றுகிறவர்களுக்கு, அதுவே அவர்களுக்கு பாரம். Jer_23:36, Jer_23:33-34, Jer_23:38-40, 2Pe_2:1-3,
2. தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றுகிறவர்களுக்கு அது அவர்களுக்கு பாரம் இல்லை. . 1Jo_5:3, Mat_11:28, Psa_55:22, Jer_23:35-37, Rom_2:14-15, Heb_5:12-14, Mic_6:8-9, Psa_49:4, Psa_92:2-3, Pro_3:7-10,
3. சாத்தானுடைய ஆழங்களை அறிந்தவர்களுக்கு அதுவே அவர்களுக்கு பாரம்.
Gen_1:2, Job_28:12-14, Pro_9:13-18, Ecc_7:24, Psa_107:23-30, Gen_49:5-7, 1Co_13:2, Eze_28:3-10, 2Th_2:7-12,
4. தேவ ஆவியினால் தேவனுடைய ஆழங்கள், இரகசியங்கள், ஆகிய இவைகளை உணர்ந்து கொண்டவர்களுக்கு, அது அவர்களுக்கு பாரம் இல்லை.
Luk_6:47-49, Gen_1:2 1Co_2:4-10, 1Co_2:11-16, Isa_64:4-5, Psa_42:7, Gen_1:2, Joh_5:39, Isa_34:16-17, Psa_111:2, Psa_1:1-6, Mal_3:13-18, Pro_1:10-19, Num_16:38, 2Ti_3:5-7, 2Pe_3:3-4, 2Pe_2:1-3 Psa_25:14, Pro_3:32, Isa_37:30-32, Jer_4:3, Hos_10:12-13, Mat_13:7,
Rev 2:25 Rev_2:25,
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள்:-
Rev_2:19, உன் கிரியைகள் 2. உன் அன்பு 3. உன் ஊழியம் 4. உன் விசுவாசம் 5. உன் பொறுமை 6. முன் செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறது ஆரம்ப முதல் கிரியைகளில் படிப்படியாக முன்னேறி வளர்ச்சியடைதல் / முந்தினோர் பித்தினோராக மாறாமல் எப்பொழுதுமே முத்தினோராகவே இருப்பது 2Pe_2:20-22, 2Pe_1:4-7, 2Pe_1:8-12, Mat_19:30, Mar_10:31, Luk_13:30, Mar_4:26-29,
ஆறு வகையான நற்கிரியைகளை தேவன் வருமளவும் உறுதியாக பற்றிக் கொண்டிருங்கள்.
Rev 2:26-28 Rev_2:26-28,
நான்காம் மூன்றாம் சபையின் ஜெயங்கொள்ளுதல், காதுள்ளவன் கேட்கக் கடவன் :-
உன் பேரில் எனக்கு இருக்கிற குறைகளை நீ ஜெயங்கொள்ள வேண்டும்.
1. யேசபேலின் போதகம் - கள்ள தீர்க்க தரிசனம்.
2. சாத்தானின் ஆழங்கள் - அசுத்த ஆவியின் உபதேசங்கள்
(Rev 2:25, Rev_2:25, Rev : 2-19 Rev_2:19,) இவைகளில் உள்ள ஆறு வகையான நற்கிரியைகளை உறுதியாக பற்றிக் கொண்டிருந்து, ,(Rev 2:20,Rev_2:20,
Rev 2 :24 Rev_2:24, )
சொல்லப்பட் யேசபேலின் போதகம், சாத்தானின் ஆழங்கள் ஆகியவைகளை ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு கீழே குறிப்பிடுகிற மூன்று ஆசீர்வாதங்களை தேவன் தருகிறார்.
நான்காம் சபையில் ஜெயங்கொண்டவர்களின் பிரதிபலன்கள் :-
1. ஜாதிகளின் மேல் அதிகாரத்தை கொடுப்பேன் :-
ஜாதிகளின் ஊழிய அழைப்பு / ஆளுகையை உனக்கு கொடுப்பேன்.
2. இரும்புக் கோலால் ஜாதிகளை ஆளுவான் அவர்கள் மண்பாண்டங்கள் போல நொறுக்கப்படுவார்கள்/ தேவனுடைய நியாயத்தீர்ப்பின் செய்தியைக் கேட்கும் போது அவர்கள் இருதயம் மண் பாண்டங்கள் போல நொறுக்கப்படும்.
3. விடிவெள்ளி நட்சரத்திரத்தை அவனுக்கு கொடுப்பேன்.
இருளில் பிரகாசிக்கிற கிறிஸ்துவின் வார்த்தையை பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு பிரகாசிக்கிற ஒளியாக இருப்பது Rev_2:26, Rev_2:24, Rev_2:19, Rev_2:24, Rev_2:27, Psa_2:1-9, Rev_2:28, 2Pe_1:19, 2Co_4:6,
Rev 2:29 Rev_2:29
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன்/ பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை விரும்பமுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கடவர்கள்.
1-5 ஐந்தாம் சபை - சர்தை பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
Rev 3:1 Rev_3:1,
1-0 தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்க ளையும் உடையவர் சொல்லுகிற இரட்சிப்பின் நற்செய்தி
1. வேதம் 2. சாட்சிகள் 3. வழிகள் 4. கட்டளைகள் 5. பிரமாணங்கள் 6. கற்பனைகள் 7. நீதி நியாயங்கள் / நியாயத்தீர்ப்புகள்; ஆகிய இந்த ஏழு வகையான வார்த்தைகளில் வெளிப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளாகவும், இருளில் பிரகாசிக்கிற ஏழு விடி வெள்ளி நட்சத்திரங் களைப்போல உள்ள தேவனுடைய வார்த்தைகளை, தம்முடைய தூதர்களாக அனுப்புகிறவர் சொல்லுகிற இரட்சிப்பின் நற்செய்தி
Rev_1:4-5, Rev_4:5, Rev_5:6, Zec_3:9, Zec_4:10, Psa_12:6, Rev_1:20, 2Pe_1:19, Job_38:12-13, Joh_1:1-5, Joh_12:34-36, Isa_55:10-11, Mat_23:28, Luk_16:15 , Joh_21:6,
தேவனுடைய ஏழு ஆவிகளின் மூலம் வெளிப்பட்ட தேவனு டைய ஏழு பிரமாணங்கள்; கிறிஸ்துவின் சரீரமான மண் குகையில் பரிசோதிக்கப்பட்டு உண்மையான சாட்சியை பெற்று, இருளில் பிரகாசிக்கிற ஏழு நட்சத்திரங்களைப் போலவும், தேவனுடைய ஏழு கண்களின் ஓளியாகவும், பரிமாண வளர்ச்சியடைந்து, பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது.
1-1 கிறிஸ்துவாகிய மூலைக்கல்லின் பரிமாணத்தில் வெளிப் படுகிற ஏழு புள்ளிகள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதி பலிக்கிறது. Zec_4:7-10,
1-2 தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் வெளிப்பட்ட வானவில்லின் வெளிச்சத்தினுடைய பரிமாணத்தில் வெளிப்படுகிற ஏழு நிறங்கள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதி பலிக்கிறது. . Gen_9:8-17,
1-3 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஜீவ சுவாசத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனுடைய ஜீவாத்துமாவின் ஏழு செயல்பாடுகள், தேவனுடைய ஏழு கண்களைப் போல பிரதி பலிக்கிறது
1-4 வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து வெளிப்படு கிற வெளிச்சத்தின் பரிமாணங்களில் ஏழு திசைகள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது. Eze_9:1-2 ,Jer_47:2 ,Psa_48:2,Job_37:21-22, Psa_74:2,Psa_75:6,Job_35:13-16,
1-5 தேவனுடைய வாயிலிருந்து வெளிப்படுகிற வசனங்களின் சத்தம், பரிணாம வளர்ச்சியின் மூலம் சங்கீத சுரமண்டலத்தின் ஏழு இராகங்களாக வெளிப்பட்டு, தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது. Psa_49:4, Psa_92:2-3,
1-6 தேவனுடைய வாயிலிருந்து வெளிப்படுகிற வசனங் களின் விசுவாசங்கள் / கருத்துக்கோட்பாடுகள், சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல, தேவனுடைய ஏழு பிரமாணங்கள் வெளிப்பட்டு, தேவனுடைய ஏழு கண்களைப் போல பிரதி பலிக்கிறது. Psa_19:1-10, Psa_119:1-8,
1-7 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட இரகசியங்கள், சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல, ஏழு வகையான உவமை மொழிகளில் வெளிப்பட்டு, தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது.
2-0 நீ உயிருள்ளவனென்றும் பெயர் பெற்றிருந்தும் செத்தவ னாக இருப்பதை அறிந்திருக்கிறேன்.
நீ மற்றவர்களுக்கு முன்பாக ஆவி, ஆத்துமாவின் உயிர் உள்ளவனென்று பெயர் பெற்றிருந்தாலும் உன்னுடைய ஆவி, ஆத்துமாவை, தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டு; நீயே உன்னை பரிசோதிக்கும்போது, உன்னுடைய ஆவி, ஆத்துமா, மரணமடைந்திருக்கிறது; வெளியே நீதிமானாகவும், உள்ளே துன்மார்க்கனாகவும், உள்ள மாயக்காரனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை வெளிப்படுகிறது
Mat_23:25-28, Luk_16:15 , Isa_64:6, Job_22:1-2, Job_25:4, Job_32:1-2, Job_35:1-8, Phi_3:9-11, Rom_9:31-32, Jer_23:11-15, Mat_23:23, Mat_7:21-29, Eze_13:9-16, Joh_21:6,
Rev 3:2 Rom_3:2,
நீ விழித்துக்கொண்டு சாகிறதற் கேதுவானவைகளை ஸ்திரப்படுத்து :-
1. நீ உன்னுடைய ஆவி, ஆத்துமாவை பரிசோதித்து, உன்னு டைய ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்குகிற காரியங் களை கண்டறிந்து அவைகளிலிருந்து மனந்திரும்பு.
2. உன் கிரியைகள் தேவனுக்கு முன்பாக நிறைவுள்ளவை களாக நான் / கிறிஸ்து காணவில்லை நீங்கள் மனுஷர்களுக்கு முன்பாக நீதிமான்களாக காணப்படுகிறீர்கள், ஆனால் நீங்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் அல்ல
Rev 3:3 Rev_3:3 ,ஆகையால் நீ தேவனிடம் கேட்டு பெற்றுக் கொண்ட வகையை நினைவு கூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு
1 தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொண்டவைகள் :-
1-1 ஜெப விண்ணப்பத்தினால் தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொண்டவைகளுக்காக தேவனுடைய நாமத்திற்கு சாட்சியாக வாழ்வது, தேவனுடைய பிரமாணத்தின்படி காணிக்கை, தசமபாகம் தேவனுடைய ஆலயத்தில் செலுத்துவது.
Mal_3:7-10, Deu_28:12, Isa_50:4, Deu_28:23-24, Lev_26:19-20,Lev_26:3-4, Zec_10:1-4, Job_29:21-23, Deu_11:13-17, Psa_18:21-26, Jer_5:23-27, Jer_17:7-11,
1-2 பொருத்தனையினால் தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொண்டவைகளுக்காக; பொருத்தனை செய்யப்பட்ட காணிக்கையை தேவனுக்கு செலுத்துவது
Ecc_5:4-6, Pro_20:25, Nah_1:15, Jon_2:8-10, Psa_50:14-15, Psa_66:14, Psa_116:12-14, Psa_116:17-19, Psa_76:11, Num_30:1-8, Exo_20:7, Pro_30:9; Jer_4:2; Mat_5:33-37, Hos_7:8-10,
2 நீ விழித்திராவிட்டால் திருடனைப் போல உன் மேல் வருவேன் :-
நீ விழித்திருந்து மனந்திருப்பாவிட்டால் நீ எதிர்பார்க்காத நேரத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு உன் மேல் வரும்
3. நான் உன் மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்:-
தேவனுடைய நியாயத்தீர்ப்பு உன் மேல் வரும் நேரத்தை அறியாதிருப்பாய் / தேவனுடைய நீயாயத்தீர்ப்பு உன் மேல் எந்த நேரத்திலும் வெளிப்படலாம்.
Rev 3:4 Rev_3:4,
தங்களுடைய நீதிக்கிரியைகளை அசுத்தப்படுத் தாதவர்கள் /பின்மாறிப்போகாதவர்கள் தங்கள் நீதியின் வஸ்திரத்தை தரித்துக் கொண்டு என்னோடே கூட நடப்பார்கள்.
Rev_19:7-9, Rev_14:1-4 Isa_4:1,Job_14:1-3, Job_15:14, Job_25:4, ,Heb_12:5-8,Heb_12:15-17 Gal_4:29-31,Deu_32:36, 1Ki_14:10, 1Ki_21:21, 2Ki_9:8, 2Ki_14:26, Rev_3:18, Rev_16:15,
Rev 3 :5 Rev_3:5,
ஐந்தாம் சபையின் ஜெயங்கொள்ளுதல், காதுள்ளவன் கேட்கக் கடவன் :-
சர்தை சபையின் ஜெயங்கொள்ளுதல் :-
1 மாயக்காரணை ஜெயங்கொள்ளுவது
2 தேவ நீதியில் ஜெயங்கொள்ளுவது
3 பின்மாற்றத்தை ஜெயங்கொள்ளுவது
4 கேட்டு பெற்றுக் கொண்டவைகளில் ஜெயங் கொள்ளுவது.
ஜெயங்கொள்ளுகிறவர்களின் பிரதிபலன்கள்:-
1 வெண் வஸ்திரம் / நீதியின் வஸ்திரம் தரிப்பிக்கப்படும்.
2 ஜீவ புஸ்தகத்தில் பெயர் கிறுக்கிப் போடாமல், இருப்பது. , , Psa_69:28, Psa_69:21-28 ,Jer_17:13
3 பிதாவின் முன்பாகவும், தூதர்களுக்கு முன்பாகவும் அவனுடைய நாமத்தை அறிக்கையிடுவது
Rev 3:6 Rev_3:6,
காதுள்ளவன் கேட்கக்கடவன் :-
விருப்பமுள்ளவர்கள் இவைகளை ஏற்றுக் கொள்ளக்கடவர்கள்.
1-6 ஆறாம் சபை - பிலதெல்பியா பட்டணத்து சபைக்கு
தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
Rev 3:7 Rev_3:7,
1. பரிசுத்தமுள்ளவர்
2. சத்தியமுள்ளவர்
3. தாவீதின் திறவு கோலை உடையவர்
4. பூட்டக் கூடாதபடி திறக்கிறவர் (எதிர்காலத்தை யாரும் தடை செய்யாதபடி திறந்து விடுகிறவர்)
5. திறக்கக் கூடாதபடி பூட்டுகிறவர் (கடந்த காலம் இனி ஒரு போதும் வராதபடி தடை செய்கிறவர்)
ஆகிய இவைகளின் அதிகாரத்தை உடையவர் சொல்லுகிற தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
Rev 3:8 Rev_3:8,
1. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்.
2. கொஞ்சத்தில் உண்மையாக இருந்து தேவனுடைய நாமத்தை மறுதலியாமல் வசனத்தை கைக்கொண்டபடியால், புதிய நன்மைகளை உனக்கு தருகிறேன். அதை ஒருவனும் தடை செய்ய மாட்டான் Ecc_9:11-12, Psa_31:15,
Rev 3:9 Rev_3:9 ,
தேவனுடைய நாமம் புற ஜாதிகளுக்குள்ளே தூசிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த கள்ள யூதர்கள், உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து கொள்ளுவதால், தேவன் உன்மேல் அன்பாக இருப்பதை அறிந்து கொள்ளும்படி செய்வார். Rev_2:9, Rom_2:17-24,
Rev 3:10 Rev_3:10,
நீ பொறுமையைக் குறித்த வசனங்களை காத்துக் கொள்ளுகிறபடியால் சோதனைகளுக்கு தப்பித்துக் கொள்ளுவாய் Rom_15:4, , Luk_8:15, Luk_21:16-19, Rom_5:3-4, Rom_12:12,
Rev 3:11 Rev_3:11,
ஒருவரும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாபடி உனக்குள்ளவைகளை காத்துக்கொள் (உன் நற்கிரியைகளில் முன்னேறிச் செல்லு) ) Mat_25:21, Luk_19:17 ,
1, Rev 3:8 (Rev_3:8 ) கொஞ்சத்தில் உண்மையாகயிருந்து அதிகத்தில் உண்மையுள்ளவனாக முன்னேறு
2, Rev 3:10 (Rev_3:10,) பொறுமையிலிருந்து நீடிய பொறுமைக்கு முன்னேறி சோதனைகளுக்கு தப்புவது (பொறுமை இழந்தால் சோதனைகள், எரிச்சல், கோபம், வாக்குவாதங்கள் தொடரும்)
ஆறாம் சபையின் ஜெயங்கொள்ளுதல், காதுள்ளவன் கேட்கக் கடவன் :-
பிலதெல்பிய சபையின் ஜெயங்கொள்ளுதல் :-
1 Rev 3:8 (Rev_3:8 ) நற்கிரியைகளில் பின்வாங்கிப் போகாமல் முன்னேறுவதில் ஜெயங்கொள்ளுவது
2, Rev 3:10 (Rev_3:10,) பொறுமையைக் காத்துக் கொண்டு சோதனைகளை ஜெயங்கொள்ளுவது
Rev 3:12 Rev_3:12,
ஜெயங்கொள்ளுகிறவர்களின் பிரதி பலன்கள்:-
1 தேவனுடைய ஆலயத்தில் தூணாக இருப்பதால் அவன் தேவனுடைய ஆலயத்தை விட்டு நீங்காமல் நிலைத்திருப்பான்.
2 தலைமுறை தலைமுறையாக இருக்கும் தேவனுடைய நாமத்தை அவன் மேல் எழுதுவேன்
3 புதிய எருசலேமிற்கு பங்குள்ளவன் என்பதை அவன் மேல் தேவன் எழுதுவார் Exo_3:13-15, Rev_19:12-13, Rev_21:2,
Rev 3:13 Rev_3:13,
காதுள்ளவன் கேட்கக்கடவன் / விருப்பமுள்ளவர்கள் இவைகளை ஏற்றுக் கொள்ளக் கடவர்கள்.
1-7 ஏழாம் சபை - லவோதிக்கேயா பட்டணத்து சபைக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
Rev 3:14 Rev_3:14,
உண்மையும், சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆரம்பமும் முடிவுமாயிருக்கிற கிறிஸ்துவாகிய தேவனுடைய வார்த்தை, அறிவிக்கும் தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி Rev_1:5 , Joh_1:1-5, 2Pe_3:5-6,
Rev 3:15 Rev_3:15,
1. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் 2. நீ குளிருமல்ல, அனலுமல்ல 3. நீ குளிராயாவது, அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்; உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ பாவியுமல்ல நிதிமானும் அல்ல. நீ பாவியாகவோ அல்லது நீதிமானாகவோ இருநதால் நல மாயிருக்கும். Isa_41:21-24, Pro_5:3-7, Mat_6:24, Luk_16:13-15,
Rev 3:16 Rev_3:16,
உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ எப்பொழுதுமே பாவியாகவும் இல்லாமல், நீதிமானகவும் இல்லாமல், இந்த இரண்டிற்கும் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறபடியால், உன்னை தேவனுடைய வாயிலிருந்து தேவன் வாந்தி பண்ணிப் போடுகிறார் .
தேவன் உன்னை வாந்தி பண்ணினபடியால் நீயும் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்ட வார்த்தைகளையும் ஆசீர் வாதங்களையும், வாந்தி பண்ணிப்போடுகிறாய் / தூக்கிப்போடு கிறாய், மேலும் உன்னுடைய குடும்பமும், சமுதாயமும், தேசமும் உன்னை வாந்தி பண்ணிப்போடுகிறது / உன்னை வெளியே தூக்கிப் போடுகிறது.
. Num_12:7-14, Isa_28:7-9, Hab_2:15-16, Jer_48:26, Jer_25:27-29,Job_20:15-18, Pro_15:2, 2Pe_2:20-22, Lev_20:22-23, Job_20:12-16, Psa_59:7-9, Isa_57:20-21,
தேவனுடைய வார்த்தைகளை நீ வாந்தி பண்ணி அதிலே புரளுகிறபடியால், உன்னுடைய ஆவிக்குரிய மனிதனாகிய மாயக் காரன் மற்றவர்களுக்கு முன்பாக வெளிப்படுகிறான், இப்பொழுது நீ பாவியாகவும் இல்லாமல் நீதிமானாகவும் இல்லாமல் இருக்கிற உன்னுடைய இரட்டை வேடம், ஆவிக்குரிய மனிதனின் உள்ள குஷ்டரோகம் / மாயக்காரன் எல்லாருக்கும் முன்பாக வெளிப்படுகிறான்.
Rev 3:17 Rev_3:17,
தன்னிடம் உள்ள மாயக்காரனுக்கு (1 பரிதபிக்கப்பட்டவன் 2 தரித்திரன் 3 குருடன் 4 நீர்வாணி) இந்த நான்கு வகையான குறைகள் இருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளாமல்; (1 நான் பாக்கியவான் 2 நான் ஜசுவரியவான் 3 நான் திரவியமுள்ளவன் 4 எனக்கு ஒரு குறையுமில்லை) என்று; தன்னிடம் உள்ள ஆவிக்குரிய மனிதனுக்கு நான்கு வகையான ஆசீர்வாதங்கள் இருக்கிறது என்பதை மாயக்காரனே தன்னைக் குறித்து புகழ்ந்து கொண்டிருப்பது.
Hos_12:7-8, Mat_25:29-30 , Pro_13:18, Pro_24:30-34, Isa_42:18-19, Isa_56:10, 2Pe_1:9, Zep_1:17, Mat_13:14, Hos_2:8-10, Amo_2:10-16,
Rev 3:18 Rev_3:18,
1. நீ ஜசுவரியவனாகும்படி நெருப்பிலே புடமிடப்பட்ட, பொண்ணுக்கு ஒப்பான தேவனுடைய வார்த்தைகளை என்னிடம் வாங்கிக் கொள்ள உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்
Psa_12:6, Psa_119:140, Job_28:12-19,
2. உன் நீர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்ளுவதற்கு வெண் வஸ்திரமாகிய நீதியின் கிரியை களை என்னிடத்தில் வாங்கிக் கொள்ள உனக்கு ஆலோசனை சொல் லுகிறேன். Rev_16:13-15, Rev_19:8,
3. கண் பார்வைக்கு உட்புற பாதுகாப்பு:-
உன்னுடைய ஆவிக்குரிய கண்களின் குருட்டுத்தன்மை நீங்குவதற்கு, எண்ணெயாகிய கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொண்டு, பிரகாசமுள்ள பார்வையைப் பெற்று, தேவ தரிசனங்களை தெளிவாக கண்டு உணர்ந்து கொள்ளும்படி உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்
Mat_6:22-23, Luk_11:34-36, Mat_6:16-18, Psa_141:5, Luk_10:33-35, Rev_6:5-6, Mat_25:3-4 , Mat_25:8,Psa_116:12-13, Mar_6:13, Jam_5:14, Luk_12:35-40, Heb_6:4-8, Isa_7:5-7, (Isa_8:20-22, )
4. கண் பார்வைக்கு வெளிப்புற பாதுகாப்பு :-
தன்னுடைய ஆவிக்குரிய கண்களுக்கு தெளிவாகவும், பரவலாகவும், வெளிப்படுகிற தேவ தரிசனங்களை ஒருங்கிணைத்து, அவைகளுக்குள்ளே தேவன் தனக்கு பகிர்ந்து அளிக்கிற தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுவதற்கு; கர்த்தருக்கு பயந்து, பொல்லாப்பை விட்டு விலகி தேவனுடைய பிரமாணங் களுக்கு கீழ்படிய வேண்டும். Pro_23:5, Isa_33:15-17, Deu_16:19, Psa_101:3, Psa_119:37, 1Jo_2:15-16, Job_31:7-12, Pro_30:15,
Rev 3:19 Rev_3:19
தேவனால் நேசிக்கப்படுகிறவர்கள், தேவனுடைய வழிகளிலிருந்து வழி விலகும்போது, தேவன் கடிந்து கொண்டு சிட்சிக்கிறார் ; ஆகையால் இவர்கள் ஜாக்கிரதையாக இருந்து மனந் திரும்பி மீண்டும் தேவனுடைய வழிகளில் நடந்து தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். ,Job_5:17-27, Heb_12:5-13, Pro_1:23-33, Zec_7:9-14,Zec_1:1-6,Hos_14:1-3, Isa_66:4, Jer_2:27, Eze_8:16,
Rev 3:20 Rev_3:20
1 இருதயத்தின் வாசற்படியிலே தேவனுடைய வார்த்தை நிற்று தட்டிக் கொண்டிருக்கிறது
2 ஒருவன் தேவனுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, தன்னுடைய இருதயக் கதவை திறக்கும்போது தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை தேவன் விருந்தாக புசிக்க கொடுக்கிறார்.
Rev_19:6-9, Pro_8:34-36, Jam_5:9, Mat_24:33, Luk_12:35-40, Mat_25:6-13, Mat_22:1-14, Luk_14:15-24, Isa_65:13-14, Pro_9:1-6, Zep_1:7-8, Est_1:5-8, Est_1:9-14,
3. தேவன் கொடுத்த சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசித்து, தேவனுடைய இருதயத்தை சந்தோஷப்படுத்துவதற்காக தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது, ஒருவன் தேவனுடைய இருதயத்திற்கு கொடுக்கும் விருந்து.
Rev_3:20, Joh_4:31-34,Pro_23:15-16, Pro_27:11, Pro_22:17-21,Joh_16:7-13; Joh_14:16-21; Joh_14:26; Joh_15:26-27;Luk_10:22, Joh_14:23-24; Eph_4:30, Act_1:4-5, Isa_2:3, Joh_15:7; Act_1:8, Act_1:12,1Co_12:4-12, Mat_25:15; Rom_12:3-6, Rom_15:20; 1Co_12:11-12; Eph_4:7-13; 1Pe_4:10-11, 1Co_4:6-7, 1Co_12:28-31,,2Co_10:14; Psa_149:1-9 Hab_2:1-4,
Rev 3:21 Rev_3:21,
ஏழாம் சபையின் ஜெயங்கொள்ளுதல், காதுள்ளவன் கேட்கக் கடவன் :-
கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங் கொண்டு பிதாவின் வலது பக்க சிங்காசனத்தில் உட்கார்ந்தது போல, பாவத்தையும், மரணத்தையும் ஜெயங்கொள்ளுகிறவர்கள் எவர்களோ, அவர்கள் கிறிஸ்துவின் வலது பக்க சிங்காசனத்தில் உட்காரும் படி கிறிஸ்து அருள் செய்கிறார்.
Rev 3:22 Rev_3:22, இவைகள் கட்டாயம் அல்ல, விருப்பமுள்ளவர்கள் இவைகளை ஏற்றுக் கொள்ளக் கடவர்கள்.