தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 03


தேவனுடைய  இரட்சிப்பின் நற்செய்தி

பொருளடக்கம் ஏழு

7-0 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக வெளிப்படுகிறது :-
 
7-1 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகள் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்து மகிமையடைந்த படியால், அவைகள் இரட்சிப்பின் அதிபதியான கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாக தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிறது. Hos_6:1-4, 2Sa_23:3-4, Deu_32:2, Isa_55:10-11, Psa_90:4, 2Pe_3:8, Joh_12:32, Luk_24:1-7, Isa_8:18-22, Isa_29:1-4, Rev_5:1-7, Rev_3:1, 
 
1 தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிற இரட்சிப்பின் நற்செய்தி 
 
1. வேதம் 2. சாட்சிகள் 3. வழிகள் 4. கட்டளைகள் 5. பிரமாணங்கள் 6. கற்பனைகள் 7. நீதி நியாயங்கள் / நியாயத்தீர்ப்புகள்; ஆகிய இந்த ஏழு வகையான வார்த்தைகளில் வெளிப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளாகவும், இருளில் பிரகாசிக்கிற ஏழு விடி வெள்ளி நட்சத்திரங் களைப்போல உள்ள தேவனுடைய வார்த்தைகளை, தம்முடைய தூதர்களாக அனுப்புகிறவர் சொல்லுகிற இரட்சிப்பின் நற்செய்தி Rev_1:4-5, Rev_4:5, Rev_5:6, Zec_3:9, Zec_4:10, Psa_12:6, Rev_1:20, 2Pe_1:19, Job_38:12-13, Joh_1:1-5, Joh_12:34-36, Isa_55:10-11, Mat_23:28, Luk_16:15, Joh_21:6,
 
2 தேவனுடைய ஏழு ஆவிகளின் மூலம் வெளிப்பட்ட தேவனு டைய ஏழு பிரமாணங்கள்; கிறிஸ்துவின் சரீரமான மண் குகையில் பரிசோதிக்கப்பட்டு உண்மையான சாட்சியை பெற்று, இருளில் பிரகாசிக்கிற ஏழு நட்சத்திரங்களைப் போலவும், தேவனுடைய ஏழு கண்களின் ஓளியாகவும், பரிமாண வளர்ச்சியடைந்து, பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது.
 
3 கிறிஸ்துவாகிய மூலைக்கல்லின் பரிமாணத்தில் வெளிப் படுகிற ஏழு புள்ளிகள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதி பலிக்கிறது. Zec_4:7-10, 
 
4 தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் வெளிப்பட்ட வானவில்லின் வெளிச்சத்தினுடைய பரிமாணத்தில் வெளிப்படுகிற ஏழு நிறங்கள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதி பலிக்கிறது. Gen_9:8-17, 
 
5 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஜீவ சுவாசத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனுடைய ஜீவாத்துமாவின் ஏழு செயல்பாடுகள், தேவனுடைய ஏழு கண்களைப் போல பிரதி பலிக்கிறது 
 
6 வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து வெளிப்படுகிற வெளிச்சத்தின் பரிமாணங்களில் ஏழு திசைகள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது. . Eze_9:1-2, Jer_47:2, Psa_48:2, Job_37:21-22, Psa_74:2, Psa_75:6, Job_35:13-16, 
 
7 தேவனுடைய வாயிலிருந்து வெளிப்படுகிற வசனங்களின் சத்தம், பரிணாம வளர்ச்சியின் மூலம் சங்கீத சுரமண்டலத்தின் ஏழு இராகங்களாக வெளிப்பட்டு, தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது. . Psa_49:4, Psa_92:2-3,
 
8 தேவனுடைய வாயிலிருந்து வெளிப்படுகிற வசனங்களின் விசுவாசங்கள் /கருத்துக்கோட்பாடுகள், சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல,தேவனுடைய ஏழு பிரமாணங்கள் வெளிப்பட்டு, தேவனுடைய ஏழு கண்களைப் போல பிரதிபலிக்கிறது. Psa_19:1-10, Psa_119:1-8, 
 
9 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட இரகசியங்கள், சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல, ஏழு வகையான உவமை மொழிகளில் வெளிப்பட்டு,தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது
 
7-2 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களுக்குள்ளே ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கிற ஆவிக்குரிய யூதர்கள், முதலாவது தேவனால் தெரிந்து கொள்ளப்படுகிறார்கள். Zec_10:1-5, Zec_12:7-10, Zec_12:1-6, Num_23:8-9, Num_23:18-24, Num_24:5-9, Isa_37:30-32, Eze_21:1-7, Eze_21:8-17, ஷ்நஉமூ10:1-5, ஷ்நஉமூ12:7-10, 
 
7-3 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே ஓய்வு நாள் பிரமாணத்தை பரிசுத்தமாக ஆசரிக்கிற ஆவிக்குரிய யூதர்கள், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களில் காத்திருந்து முன்மாரி மழையின் மூலம் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்ட பிறகு; பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவதற்காக, சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களில் காத்திருந்து அபிஷேக ஆவியை பெற்றுக் கொள்ளுகிறார்கள்.
 
Luk_24:46-49, Act_1:4-5, Act_1:12,Act_2:1, Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:20-23, Joh_14:26-27, Joh_16:7-8, 1Co_2:12-16, Isa_34:16-17, 1Co_14:5-6, Act_1:8, 1Co_12:4-11, Rom_12:2-8, Eph_4:11-13, 1Pe_4:10-11, Act_2:14-21, Joe_2:28-32, Joe_2:17-18, Joe_2:1-2, 
 
7-4 கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்தும் நான்கு பலிபீடத்தின் ஆராதனை முறைகள். . Zec_1:18-21, Zec_11:7-13, Zec_11:14-17,
 
1 தேவனுடைய கட்டளையின்படி இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடந்த பின்பு வாக்குத்தத்த தேசத்திலே பன்னிரெண்டு கல்லுகளை நாட்டி அவைகளில் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை எழுதி; ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் கூறின இடத்தில் பிள்ளைகளுக்கு / பின் சந்ததிக்கு அடையாளமாக கட்டப்பட்ட பலிபீடம். (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் பாதுகாக்கப்படுகிறது.) Deu_27:1-10, Deu_28:1-10, Deu_29:1-14, Deu_30:1, Jos_4:1-9, Psa_78:1-5, Psa_78:6-11, 
 
மனிதர்களுடைய சுய ஆலோசனைப்படி தாங்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்யத்தக்கவர்கள் என்பதை தங்களுடைய பிள்ளைகளுக்கு / பின் சந்ததியாருக்கு அறிவிக்கும் படியாக; நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் இல்லாமலும், அதன் தொடர்புடைய ஆசீர்வாதங்களும் சாபங்களும் உள்ளடங்கிய தேவனுடைய வார்த்தைகள் இல்லாமலும், மற்றவர்களுடைய பார்வைக்கு மட்டும் பெரிதாக காட்சியளிக்கும்படியாக கட்டப்பட்ட பெரிய பலிபீடம் (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் சிதறடிக்கப் பட்டது)
 
Num_32:1-5, Num_32:17-24, Jos_22:1-8, Jos_22:9-14, Jos_22:15-20, Jos_22:21-28, Jos_22:29-33,
 
2 எருசலேமிலே வாசம் பண்ணின இளைய தலைமுறையினர் தேவனுடைய ஆலோசனைகளிலும் பிரமாணங்களிலும் கண்டிப்பாக இருந்து, எருசலேம் ஆலய பலிபீடத்தில் தேவனுக்கு பலிசெலுத்தி ஆராதித் தார்கள் (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் பாதுகாக்கப் பட்டது.) .) 2Ch_10:1-11, 2Ch_10:12-19, 2Ch_11:1-4, 1Ki_12:1-11, 1Ki_12:12-19, 1Ki_12:20-24,
 
இஸ்ரவேலின் பத்து கோத்திரத்திலுள்ள முதியோர்களின் ஆலோசனைப்படி, தாவீதின் வம்சத்தை விட்டு பிரிந்து சென்று, மனிதர்களுடைய சுய ஆலோசனையின் படி உருவாக்கப்பட்ட இரண்டு கன்றுக்குட்டிகளை வணங்கி, மேடைகளில் ஆராதனை செய்து வந்தார்கள். (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது) 2Ch_11:13-17, 2Ch_13:8-12, 1Ki_12:25-33, 2Ki_17:13-19, 2Ki_17:20-23,
 
3 இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் சிறையிருப்புக்கு சென்றபோது, சமாரியாவிலே குடியிருந்து ஜனங்களில் ஈனமானவர்களை ஆசாரியர்களாக நியமித்து, கர்த்தருக்கு பயந்தும், தாங்கள் விட்டு வந்த ஜாதிகளின் முறைமைகளை பின்பற்றியும், மேடைகளை கட்டி ஆராதனை செய்து வந்தார்கள் (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது.) 2Ki_17:21-27, 2Ki_17:28-34, 2Ki_17:35-41, Lev_18:1-5,
 
4 எருசலேமிலுள்ள ஆலய பலிபீடத்தில் ஜாதிகளுடைய ஆசரிப்பு முறைகளை கொண்டு வந்து தேவனுக்கு ஆராதனை செய்து வருகிறார்கள் (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது) ) Eze_9:1-4, Eze_9:5-11, Eze_11:1-6, Eze_11:7-12, Eze_11:13-21, Eze_5:5-11 
 
7-5 மனிதன் தன்னுடைய கிரியைகளை நிறைவேற்றுவதற்காக மாடு மற்றும் கழுதைக்கு கடிவாளம் போடுவது போல தேவனும் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்களுடைய அறிவிலும் புத்தியிலும் கடிவாளம் போட்டு தேவனுடைய இரட்சிப்பின் ஊழியங்களை நிறைவேற்றுகிறார்.
 
1)Isa_1:3, Zec_10:1-5, Psa_39:1-5, Psa_32:8-11, Pro_26:3, 1Co_9:7-10, 1Ti_5:18, Deu_25:4, Jas_3:1-5, 2)Luk_13:15-17, Luk_14:1-6, 3)Gen_49:8-12, Mat_21:1-5, Joh_12:14-16, Zec_9:9, 
 
4)Act_2:1-8, Act_2:14-21, 1Co_12:4-12, 5),Joh_6:37-39, Joh_6:40, Joh_6:44-45, Joh_6:54, 6) Isa_30:19-24, Isa_32:15-20, Jdg_5:9-11, Job_36:27-33, Job_29:21-25, Job_28:20-28, Job_28:12-19,
 
7)Isa_1:3, Hos_8:8-12, Jer_2:20-25, Jer_14:1-6, Jer_31:15-20, Isa_32:9-15, Job_11:11-16, Job_39:5-8 , Job_6:5-6, Psa_104:10-11, Job_24:1-6, Pro_7:19-24, Isa_7:21-25, Job_30:11,
 
8)Dan_5:20-21, Dan_4:19, Dan_4:24-27, Dan_4:28-33, Dan_4:34-37, Amo_4:1-3, Isa_30:27-33, Isa_37:28-35, 2Ki_19:28-34, Eze_38:1-9, Eze_39:1-7, 
 
7-6-0 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பின் ஊழியங்களை நிறைவேற்றுவதற்காக; கிறிஸ்தவர் களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்களுடைய அறிவிலும் புத்தியிலும், தேவன் கடிவாளம் போட்டு கட்டினபடியால், அவர்களுடைய இருதய சிந்தனைகளிலும் கிரியைகளிலும் தினந்தோறும் புதிய விடியக்காலத்து வெளிச்சம் போல, பல தேவ தரிசனங்கள் கீழே குறிப்பிட்ட பல வழிகளில் வெளிப்படுகிறது. 
 
7-6-1 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது இருளிலே வெளிச்சம் பிரகாசிக்கிறது. Hos_6:1-3, Joh_1:1-5, Joh_3:19-21, 2Pe_1:19, Isa_50:10-1, Job_38:12-13,
 
7-6-2 கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்களின் நன்மை தீiமைகளை பகுத்தறிகிறபோது இருதயத்தில் தேவ நீதியின் வசனம் வெளிச்சமாக வெளிப்படுகிறது. . Heb_6:1-2, Heb_5:12-14,Rom_9:4, Rom_3:1-2, 
 
7-6-3 தேவனுடைய கற்பனைகளின்படி நடக்கிறபோது நற்கிரியைகளினால் வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. Isa_60:1-9, Isa_60:9-14, Isa_51:3-5, Mic_4:1-4, Isa_2:1-6, Joh_7:18-19, Joh_12:43,
 
7-6-4 கிறிஸ்துவின் வார்த்தைகளின் மூலம் மனந்திரும்பின பின்பு நீதியின் கிரியைகளை செய்கிறபோது வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. . Mat_6:16-18, Isa_58:5-10, Isa_58:11-14,
 
7-6-5 கிறிஸ்துவின் வார்த்தைகளின் மூலம் நேரடியாக நீதியின் கிரியைகளை செய்கிறபோது வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. Mat_5:14-16, Mat_6:21-23, Luk_8:16-18, Luk_11:33-36, Luk_12:32-37, Rev_2:5,
 
7-6-6 தேவனுடைய ஆலோசனைகளை அனு தினமும் சிந்தித்து, தியானிக்கிறவர்களுடைய இருதயத்தில் வெளிச்சம் பிரகாசித்து வார்த்தைகளாக வெளிப்படுகிறது. Gen_6:8-9, Mal_2:5-9, Jer_23:18-24, Jer_23:25-32, 1Co_2:4-10, 1Co_2:11-16, Isa_64:4-14, 
 
7-6-7 ஒரு குறிப்பிட்ட வசனத்தின் தொடர்பில், நியாயப் பிரமாணத்தையும் தீர்க்க தரிசனங்களையும் சிந்தித்து தியானிக்கும் போது, தேவ நீதியின் வசனம், இருதயத்தில் புதிய வெளிச்சமாக வெளிப்படுகிறது. Rom_3:20-22, Rom_10:6-11, Deu_30:11-16, Deu_30:17-20, 1Jo_4:1-6, 2Jo_1:7-11,
 
7-6-8 ஒரு குறிப்பிட்ட வசனத்தின் தொடர்பில் நியாயப் பிரமாணத்தையும் அவைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றப் பட்ட சாட்சியின் வசனத்தையும் சிந்தித்து தியானிக்கும் போது இருதயத்தில் புதிய விடியக்காலத்து வெளிச்சம் வெளிப்படுகிறது. . Isa_8:16-20, Isa_41:21-29, Joh_10:34-36, Dan_5:12-17, Psa_82:1-8, Psa_75:1-10, Son_6:9-10, 
 
7-7 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்கள்; முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களினால் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் மூலம் ஆவியில் பெலனடைந்து, முதலாவது எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிலும், இரண்டாவது யூதேயாவாகிய தேவனுடைய ஆசரிப்பு முறைகளுடைய சுத்திகரிப்பிலும், மூன்றாவது சமாரியாவாகிய கிறிஸ்தவர்களிடத்திலும், நான்காவது பூமியின் கடைசி வரை பரவியிருக்கிற புற ஜாதிகளிடத்திலும் சாட்சியாக இருக் கிறார்கள். Act_1:4-5, Act_1:12, Act_2:1, Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:20-23, Act_1:8, 1Co_12:4-11, Rom_12:2-8, Eph_4:11-13, 1Pe_4:10-11, 
 
7-8 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள்; முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்ட படியால், அவர்கள் மூலம் எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், புறஜாதிகளுக்கும் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது. Gal_2:7-10, Rom_9:30-33, Rom_11:11, Rom_11:16-18, Rom_11:19-22, Joh_1:11-13, Joh_4:22-25,
 
7-9 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இடறிவிழுந்தும், கீழ்படியாமலும் இருக்கிறவர்களை தேவன் தள்ளினாலும் /சுபாவ ஒலிவ மரத்திலிருந்து காட்டொழிவ மரக்கிளையாகிய கிறிஸ்தவர்களை தேவன் வெட்டினாலும், அவர்களுக்குள்ளே, யாராவது? கிறிஸ்துவின் விசுவாசத்தினால் தேவ நீதியின் பிரமாணத்தை தேடுகிற ஆவிக்குரிய யூதர்கள் இருந்தால், அவர்களை தேவன் கண்டறிந்து, அவர்கள் மூலமாக தேவனுடைய இரட்சிப்பு, எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும், புறஜாதிகளுக்கும் வெளிப்படுகிறது. Gal_2:7-10, Rom_9:30-33, Rom_11:11, Rom_11:16-18, Rom_11:19-22, Joh_1:11-13, Joh_4:22-25,
 
7-10 மோசே தீர்க்க தரிசியின் மூலம் லேவியர்களுக்கு தேவன் கிருபையாக கொடுத்த தேவனுடைய ஊழிய அழைப்புகள்; கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களிடமிருந்து நீக்கப்பட்டு, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கேற்ற கனிகளை கொடுக்கிற ஆவிக்குரிய யூதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. . Heb_10:19-25, Heb_7:11-14, Num_18:6-7, Mat_10:40-42, Luk_20:9-16, 
 
7-11 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எழுத்தின் படியுள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் மூலம் தேவ நீதியின் பிரமாணத்தை தேடாமல், பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடுகிறபோது; கிறிஸ்துவாகிய மூலைக்கல்லில் / மூல உபதேசத்தில் இடறி விழுந்து, இவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது. இவர்கள் கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை தேவனுடைய சாபங்கள் இவர்களை தொடருகிறது. Rom_9:30-33, 1Pe_2:6-8, Rom_11:7-11,
 
7-12 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறி விழுந்த காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர் களையும் / லேவியர்களையும் சுபாவ ஒலிவ மரத்திலிருந்து வெட்டி எடுத்து, வெட்டப்பட்ட அந்த இடத்தில் சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய இஸ்ரவேலரையும் / யூதர்களையும் தேவன் மீண்டும் ஒட்ட வைக்கிறார். இப்பொழுது காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களை புற ஜாதிகளைப்போல காட்டிலே எரிந்து விடுகிறார் / அவர்கள் புற ஜாதிகளாகவே மதிக்கப்படுவார்கள். Rom_11:19-22, Rom_11:23-32,
 
7-13 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சுபாவ ஒலிவ மரங்கிளையாகிய ஆவிக்குரிய யூதர்களை தேவன் மீண்டும் அங்கிகரிக்கும் போது, இரட்சிப்பின் நற்செய்தியுடன் புது உடடன்படிக்கையினாhல் முற்பிதாக்களின் ஆசீர்வாதங்களும் மரித்தோரின் உயிர்தெழுதலைப்போல வெளிப்படுகிறது.
 
சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய யூதர்களை தேவன் தள்ளி விடுதல் உலகத்தை ஒப்புரவாக்கும்போது; அவர்கள் மீண்டும் தேவனால் அங்கிகரிக்கப்படுகிறது மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போல இருக்கிறது.
 
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களின் கீழ்படியாமையினாலே வெட்டப்படும் போது, கிறிஸ்து வின் முதலாம் வருகையில் வெட்டப்பட்ட சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய யூதர்களை சொந்த ஜனங்களை தேவன் மீண்டும் ஒட்ட வைப்பார் /அங்கிகரித்து பிதாக்களின் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுவாhர்.
 
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய யூதர்களை தேவன் மீண்டும் சுபாவ ஒலிவ மரத்துடன் ஓட்ட வைக்கும் போது / தெரிந்து கொள்ளும் போது, அவர்கள் முற்பிதாக் களின் நிமித்தம் அன்பு கூரப்பட்டவர்களாக இருக்கிறபடியால் தேவன் அவர்களுடைய அவ பக்தியை அவர்களை விட்டு விலக்கி, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, மீண்டும் அவர்களுடன் புது உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். Rom_11:23-32, Jer_31:31-34, Jer_32:38-40; Heb_8:8-12, Heb_10:16-22,
 
7-14 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பெந்தெ கொஸ்தே என்னும் ஆத்துமா அறுவடை பண்டிகை வந்தபோது, கிறிஸ்துவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ஆவிக்குரிய யூதனுடைய வஸ்திரத்தை /நீதியின் கிரியைகளை பிடித்துக் கொண்டு பத்து புற ஜாதிகள் / கிறிஸ்தவர்கள் தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோhம்; ஆகையால் உங்களோடே கூட நாங்களும் கர்த்தரின் பர்வதத்திற்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டு எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களுக்கும் சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களுக்கும் வந்து சேருவாhர்கள். Act_1:4-5, Act_1:12, Act_2:1, Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:20-23, 
 
7-15 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவன் எங்களோடே இருக்கிறார் என்று சொல்லுகிற யாக்கோபின் வம்சத்தார் / கிறிஸ்தவர்கள் தாங்களே பரிசுத்த நகரத்தார் என்று சொல்லிக்கொண்டு, தங்களுடைய பட்டயத்தை மண்வெட்டியாக மாற்றியமைத்துக் கொள்ளாமலும் தங்களுடைய ஈட்டியை அறிவாளாக மாற்றியமைத்துக் கொள்ளாமலும், முரட்டாட்டம் பண்ணி; எருசலேமாகிய கர்த்தருடைய வார்த்தைகளுக்கும், சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களுக்கும் வராமல் இருக்கிறவர்களை தேவன் கை விட்ட படியால், அவர்கள் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்ட இரட்சிப்பு மரணமடைகிறது. மேலும் இவர்கள் மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை, தேவனுடைய சாபங்கள் இவர்களை தொடருகிறது.
 
Isa_8:5-16, Isa_48:1-2, Isa_58:1-2,Isa_2:1-6,Isa_28:15-19, Mat_1:23, Mic_3:10-11, Amo_5:14, Jer_8:8, Jer_14:9-10, Jer_18:9-10, Jer_23:16-17, Amo_9:10, Eze_11:3-12, Eze_11:13-21, 
 
7-16 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பத்து புற ஜாதிகள் / கிறிஸ்தவர்கள் தங்களுடைய பட்டயத்தை மண்வெட்டியாக மாற்றியமைத்துக் கொள்ளுவதின் பொருள் :-
 
இருபுறமும் கருக்குள்ள தேவ வசனமாகிய பட்டயத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணுகிறது போல; அவைகளை தங்களுடைய வாழ்க்கையிலும் ஏற்றுக்கொண்டு மனந்திரும்புகிற போது, அவைகள் மண்வெட்டியின் உபயோகம் போல தங்கள் முன்னேற்றத்திற்காக நீதியின் கிரியைகளை விதைக்கிறார்கள்.
 
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பத்து புற ஜாதிகள் / கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஈட்டியை அறிவாளாக மாற்றியமைத்துக் கொள்ளுவதின் பொருள் :-
 
ஈட்டியைப் போல கசப்பான வார்த்தைகளை பேசுகிறவர்கள், அவைகளை விட்டு மனந்திரும்புகிறபோது, அவர்கள் தங்களுடைய நற்கிரியைகளின் ஆசீர்வாதங்களை அறுத்து புசிப்பார்கள். . Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:20-23, 
 
7-17 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பலிக்கிற / வருகிற ஆவி, ஆத்துமா, சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுகிற சந்ததிக்கு அளிக்கும்படியாக; வேதம் எல்லாரையும் யூதர்களையும் இஸ்ரவேவர்களையும் / கிறிஸ்தவர்களையும் / லேவியர்களையும் ஏகமாய் பொய்யின் கீழ் அடைக்கலமாக்கி மாயையின் கீழ் / மாய்மாலத்தின் மறைவிடத்தின் கீழ் காவலில் வைத்திருக்கிறது./ நீதிப்பிரமாணத்தை பின்பற்றுகிற சந்ததி வரும் வரை, வேதம் எல்லாரையும் ஏகமாய் மாயையின் காவலின் கீழ் வைத்திருக்கிறது. Rom_8:19-23, 2Co_5:1-10, Isa_28:14-15, Isa_5:18-25, Isa_8:5-15, Isa_7:1-9, Isa_30:27-28,
 
7-17-1 நீதிப்பிரமாணம் ஒரு தலைமை ஆசிரியர் :-
 
நீதிப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிற படியால் நீதிப்பிரமாணத்தின் நீதியானது, பொய்யின் கீழ் அடைக்கலமாக்கப் பட்டு மாயையின் மறைவிடத்தின் கீழ் காவலில் இருந்த நம்மை விடு தலையாக்கி, கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுதவதற்கு வழி நடத்துகிற ஒரு தலைமை ஆசிரியராக இருக்கிறது. 
 
7-17-2 கிறிஸ்து ஒரு தலைமை ஆசிரியர் :-
 
கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிறபடியால், கிறிஸ்து ஒரு தலைமை ஆசிரியர்.
 
கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை தன் சரீரத்தில் நிறை வேற்றின பின்பு, கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தின் நீதிக்கிரியைகளை நிறை வேற்றுவதற்காக, பாதாளத்தில் / பூமியின் தாழ்விடங்களில் இறங்கி, சிறைபட்டவர்களை சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்து, உன்னதத்திற்கு ஏறினார்; கிறிஸ்துவை தலையாகப் பற்றிக்கொண்டு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குக்குத்தக்க பூரண புருஷராக எல்லாவற்றிலும் / நீதிப்பிரமாணத்தின் விசுவாசத்திலும், கிரியைகளிலும் கிறிஸ்துவை பின்பற்றி, வளர்கிறவர்களாக இருக்கும் படி அப்படி செய்தார்.. Rom_8:2-4, 1Pe_3:18-19, 1Pe_4:5-11, Eph_4:7-16, Psa_68:18, Isa_42:6-7,
 
7-17-3 கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகள் இருதயத்திற்கு சமீபமாக இருக்கும்போது, அவைகள் பாதாளமாகிய இருதயத்திற்கு இறங்கி சென்று நீதிப்பிரமாணத்தை பிரசங்கிக்கிறது :-
 
கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை தன் சரீரத்தில் நிறை வேற்றின போது, கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டது போல, தங்களுடைய சரீரத்தில் நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்றுகிறபோது, தங்களுடைய ஆவி, ஆத்துமாவில் உயிர்ப் பிக்கப்பட்டவர்கள்; கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தை நிறைவேற்று வதற்காக, தேவனுடைய வார்த்தைகளை தங்கள் இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து , கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா, பாதாளத்தில் இறங்கினதுபோல தங்களுடைய ஆவி, ஆத்து மாவையும் பூமிக்குரிய பாதாளமாகிய தங்களுடைய இருதயத்தில் இறங்கச் செய்து நீதியின் பிரமாணத்தை பிரசங்கிக்கிறது.
 
Rom_10:6-11, Deu_30:11-14, Pro_27:20, Pro_30:15-16, Hab_2:4-6,
 
7-17-4 கிறிஸ்து பாதாளத்தில் சிறைபட்டவர்களை விடுதலையாக்கினதுபோல, தன்னுடைய சரீர அவயவங்களை மாயைகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, அவைகளை நீதிக்கு அடிமையாக மாற்றுவது :-
 
கிறிஸ்துவின் பிரசங்கத்தினால் பாதாளத்தில் பாவத்திற்கும், மரணத்திற்கும் சிறைபட்டிருந்தவர்களை கிறிஸ்து விடுதலையாக் கினதுபோல; தன்னுடைய ஆவி, ஆத்துமாவே தன்னுடைய இருதயமாகிய பாதாளத்தில் இறங்கிச் சென்று, பொய்யின் ஆவிகளுக்கும் மாயையின் ஆவிகளுக்கும் சிறைபட்டிருக்கிற தன்னுடைய சரீர அவயவங்களுக்கு நீதியின் பிரமாணத்தை பிரசங்கித்து, மனந்திருப்பி, அவைகளை நீதிக்கு அடிமையாக்கிக் கொள்ளுகிறார்கள். Rom_7:14-25, Rom_8:7-18, 2Co_5:1-10, 2Co_5:17-20, 1Co_15:46-54,
 
7-17-5 கிறிஸ்துவின் புத்திர சுவிகார மகிமையின் சுயா தினத்தை சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள், கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள்.
 
பொய்யின் அடைக்கலத்திலிருந்தும் மாயையின் மறைவிடத்தின் காவலிருந்தும் விடுதலையாகுகிறவர்கள், கிறிஸ்துவின் நீதிப் பிரமாணத்தினால், ஆவியின் வரங்களைப் பெற்றுக் கொண்டு, தங்களுடைய சரீர அவயவங்களை நீதிக்கு அடிமையாகும்படி ஒப்புக் கொடுக்கிறவர்கள்; கிறிஸ்துவின் புத்திர சுவிகார மகிமையின் சுயாதினத்தை சுதந்தரித்துக் கொண்டு, கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள். 1Co_12:1-7, 1Co_12:8-12, 1Co_12:12-21, 1Co_12:22-31, Eph_4:11-13, Eph_4:21-32, 
 
7-17-6 கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தை பின்பற்றாமல் மாயையின் மறைவிடத்திலே அடைக்கலமானவர்களுக்கு தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு Isa_28:14-15, Isa_28:16-21, Isa_30:27-28, Isa_30:8-17, Psa_2:1-12,
 
7-17-7 இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய அந்திக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்க தரிசிகளும், அவர்கள் கட்டின மனோ இராஜ்ஜியமான மாயையின் மாளிகையும் தேவனுடைய வாதை களினால் நித்தியமாக நியாயத்தீர்க்கப்படுகிறது. Isa_7:1-9, Isa_8:5-15, Isa_30:27-28, Job_15:31-35, Eze_13:1-8, Eze_13:9-16, Eze_13:17-23, Mat_7:15-20, Mat_7:21-29, Isa_8:19-22, 1Sa_12:19-25, 
 
7-18 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக் குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள், எருசலேமாகிய தேவனுடைய வார்த்தைகளிலும், சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களிலும் காத்திருந்து, தங்களுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் வசனங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:20-23, 
 
7-19 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர் களுக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள் தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்களுடைய நெற்றியிலே / அறிவிலே பெற்றுக்கொண்டு, அவர்கள் 1,44,000 ஆண் பிள்ளைகள் வரிசையில் வந்து சேர்ந்து: மோசே மற்றும் எலியா தீர்க்கதரிசியின் ஊழிய அழைப்பை பெற்று, ஜனங்களை கர்த்தருடைய வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்தும் ஊழியத்தையும் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய ஆயத்தப்படுத்தும் ஊழியத்தையும் நிறைவேற்றுகிறார்கள்.
 
இவைகளைக் குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள் 6-2 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட 1.44.000 ஆண்பிள்ளைகள் கைப்பற்றும் வழி முறைகள் என்கிற தலைப்பில் பார்க்கவும்
 
7-20 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள் தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்களுடைய நெற்றியிலே / அறிவில் பெற்றுக்கொண்டதினால் மோசே மற்றும் எலியா தீர்க்கதரிசியின் ஊழிய அழைப்பை பெற்று; பரிசுத்த ஸ்தலத்திலே நடைபெறும் அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் நெற்றியிலே / அறிவிலே தேவனுடைய ஏழு முத்திரைகளை அடையாளம் போட்டு, தேவனுடைய வீடாகிய சபையிலே தேவனுடைய நியாயத்தீர்ப்பை துவங்குகிறார்கள். 
 
இவைகளைக் குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள் அத்தியாயம் ஏழு 7-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய ஆயத்தப்படுத்தும் ஊழியத்தை நிறைவேற்றுதல். 
 
அத்தியாயம் எட்டு 8-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறை வேற்றுதல் என்கிற தலைப்பில் பார்க்கவும்
 
7-21-0 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய வீட்டிலே / இருதயமாகிய தேவனுடைய வீட்டிலே, தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு துவங்குகிறபோது, தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்களுடைய நெற்றியில் / அறிவில் பெற்றுக்கொள்ளாதவர்களை இருதயமாகிய பாதாளத்தின் வாசல்களை மேற்கொண்டு வருகிற பொல்லாத ஆவிகள் உபத்திரவப்படுத்துகிறது. 1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1,
 
7-21-1 தேவனுடைய வீட்டிலே நடைபெறும் தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியில் பெற்றுக்கொள்ளும் தேவ முத்திரையின் ஏழு அடையாளங்கள் :-
 
1. தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பின் முதலாம் அடையாளம்
 
பலிபீடத்தின் பிரமாணங்களை பின் பற்றி நடக்க வேண்டும்.
 
2. தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பின் இரண்டாம் அடையாளம் புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது.
 
3. தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பின் மூன்றாம் அடையாளம்
 
கர்த்தருடைய பஸ்கா விருந்தை புசிக்க வேண்டும்.
 
4. தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பின் நான்காம் அடையாளம் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்
 
5. தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பின் ஐந்தாம் அடையாளம் மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும் 
 
6. தேவனுடைய முதலாம் நியாயத்திர்ப்பின் ஆறாம் அடையாளம் இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்.
 
7. தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பின் ஏழாம் அடையாளம் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும். 
 
இவைகளைக் குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள் 4-3-3-6 தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பு :- என்கிற தலைப்பில் பார்க்கவும்
 
7-21-2 ஸ்திரியாகிய சபையிலிருந்து 1.44.000 ஆண்பிள்ளைகள் தேவனுடைய ஏழு முத்திரையின் அiடாயளங்களை பெற்றுக் கொள்ளுவதால் ஆண்பிள்ளைகள் பிறக்கிறது :-
 
தேவனுடைய வீட்டிலே துவங்கும் நித்திய நியாத்தீர்ப்பின் மூலம் தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்கள் நெற்றில் அடையாளங்களாகப் பெற்றுக்கொள்ளும் 1.44.000 ஆண் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்காக சபையானது பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறது. . 1Pe_4:16-18, Rev_12:1-2, Rom_8:19-22,
 
தேவனுடைய வீட்டிலே நித்திய நியாயத்தீர்பை துவங்கு வதற்காக, எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளின் நிமித்தம் தங்கள் இருத யத்தில் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் நெற்றியில்; தேவனுடைய முத்திரை அடையாளங்களைப் போட்டு, அவர்களின் நடுவிலிருந்து ஆண் பிள்ளைகளை பிரித்தெடுப்பதற்காக பரிசுத்த ஸ்தலத்திலுள்ள மூப்பர்களிடத்திலிருந்து சங்காரம் செய்யத் துவங்கினார்கள். Eze_9:1-11, Eze_11:1-13, Jer_25:29, Isa 66:6-10 
 
7-21-3 ஆண்பிள்ளைகளை இனம் கண்டறிதல் :-
 
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்களை போல, தேவனுடைய முத்திரை அடையாளத்தின் வசனங்களின் தேவ அறிவை, ஒருவனுடைய சரீரமாகிய கூடாரத்தில் வாசம் பண்ணும் தலைச்சன் பிள்ளையாகிய ஜென்ம சுபாவ மனிதன் தரித்திருக்கும் போது அவன் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் செய்து கொண்ட இரட்சிப்பின் உடன்படிக்கை மரணம் அடையாமல் ஜீவ னோடியிருக்கும். 
 
தேவ முத்திரையின் அடையாளத்தை ஒருவனுடைய ஜென்ம சுபாவ மனிதன் தரித்திருக்கும்போது அவன் முதற்பலனாக / ஆண் பிள்ளையாக / தலைச்சன் பிள்ளையாக பிரித்தெடுக்கப்படுகிறான் இப்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை நிறை வேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக மாறு கிறார்கள்.
 
தேவனுடைய முத்திரை அடையாத்தின் தேவ அறிவை கீழே குறிப்பிட்ட நான்கு வழிமுறைகளில் ஏற்றுக்கொள்ளுபவர்கள் எகிப் தின் வாதைகளிலிருந்து காக்கப்படுவது போல ஆவி ஆத்துமாவில் தேவன் அனுப்பும் நியாயத்தீர்ப்பின் மூலம் உண்டாகும் சாபங் களிலிருந்து காக்கப்படுகிறார்கள்.
 
1. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை தங்கள் அறிவிலும், செயலிலும், எதிர்த்து நிற்காமல் ஏற்றுக்கொண்டு நடைமுறைபடுத்துகிறவர்கள்.
 
2. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை ஏற்கனவே கொஞ்சம் அறிந்தவர்கள், மேலும் முழுமையாக தேவ அறிவை அறிந்து கொண்டு நடைமுறை படுத்துகிறவர்கள். 
 
3. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறி வினால் இயன்றளவு நற்கிரியைகள் செய்துகொண்டு, மேலும் தேவ அறிவை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சியோடு போராடு கிறவர்கள்
 
4. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவினால் நற்கிரியைகள் செய்வதற்காக நல் மனம் உள்ளவர்களாக யிருந்து, நற்கிரியைகள் செய்து முன்னேறுவது; மேலும் தங்களைப் போல உள்ளவர்களுடன் இணைந்து, கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக நற்கிரியைகளை செய்து தேவ சித்ததை நிறை வேற்றுகிறவர்கள். 
 
மோசேயின் மூலமாக அறிவிக்கப்பட்ட தேவவார்த்தை களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் கீழ்ப்படிந்து எகிப்தின் பத்து வாதை களிலிருந்து காக்கப்பட்டது போல; மேலே குறிப்பிட்ட இந்த நான்கு வகையான ஜனங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றும் போது ஆவி. ஆத்துமாவில் தேவன் அனுப்பும் நியாயத்தீர்ப்பின் மூலம் உண்டாகும் சாபங்களிலிருந்து காக்கப்படுகிறார்கள். Rev_9:1-4, Rev_7:1-4, Rev_7:13-14, 
 
7-21-4 தேவனுடைய முத்திரையின் அறிவை ஏற்றுக் கொள்ளாத வர்களுக்கு தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு :-
 
தேவனால் முன் குறிக்கப்பட்ட 1,44,000 ஆண் பிள்ளைகள் நாங்கள் தான் என்று யார்? உரிமை கொண்டாடாடினாலும், அல்லது யார்? 1,44,000 ஆண்பிள்ளைகள் வரிசையில் சேர்ந்து கொள்ள விரும்பினாலும், அவர்கள் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாளமாகிய தேவ வார்த்தையின் தேவ அறிவை பெற்று இருக்கிறார்களா? என்று தயவு செய்து பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்; ஏனென்றால் தேவ முத்திரையின் அறிவை சரியாக புரிந்து கொள்ளாமல் அல்லது அறியாதிருக்கும்போது, தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பின் தண்டனையை அடைய நேரிடும்.
 
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்கள் இல்லாத வீட்டில் தலைச்சன் பிள்ளை மரணமடைந்தது போல, தேவ முத்திரை யின் தேவ அறிவை ஏற்றுக்கொள்ளாத தலைச்சன் பிள்ளையாகிய ஜென்ம சுபாவ மனிதனுடைய கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கை யில் இரட்சிப்பு மரணமடையும்; தேவ முத்திரையின் அறிவை ஏற்றுக்கொள்ளும்போது மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ள அநேக வாய்ப்புகள் உள்ளது.
 
ஒருவன் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாள மாகிய தேவ அறிவை ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய சுய விசுவா சத்தை நிலை நிறுத்தும்படியாக மனிதனுடைய அறிவில் முயற்சி செய்யும் போது; அவனுடைய அறியாமையினால் மிருகமாகிய அந்திக் கிறிஸ்த்துவின் முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியிலும், வலது கையிலும் பெற்றுக்கொண்டு 
 
அந்திக் கிறிஸ்துவின் மண வாட்டி சபையாக மாறி, தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களுக்கும், அவைகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் விரோதமாக அறிவிலும் கிரியைகளிலும், செயல்படுவதால் அந்திக் கிறிஸ்துக்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகள் ஆகிய இவர்களுடன் நேரடியாக அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
 
தேவனால் முன் குறிக்கப்பட்ட 1.44.000 ஆண்பிள்ளைகளாகிய மணவாட்டி சபை நாங்கள் என்று உரிமை கொண்டாடுகிற தேவ ஜனமாகிய சீயோன் குமாரத்தியே! உனக்கு கிடைத்த இந்த நாளிலாவது சமாதானத்திற்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் உனக்கு நலமாயிருக்கும்; 
 
முதற்பலனாக / ஆண் பிள்ளையாக / தலைச்சன் பிள்ளையாக 1.44.000 வரிசையில் சேரவிரும்புகிறவர்கள் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
 
இந்த தீர்க்க தரிசன தேவ வார்த்தைகளை வாசிக்கிறவன் கேட்கிறவன் இவைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள் Rev_1:2-3, 
 
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன் ; விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன். Rev_22:14-17, 
 
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்க தரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் தேவன் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார். 
 
Rev 22:19 ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப்புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்.
 
7-21-5 ஆண் பிள்ளைகளின் விசுவாச நற்கிரியைகள்:- Rev_14:1-5 , Rom_7:1-6, 2Th_2:7-12, 2Co_11:2,
 
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் உறுதி யாக நிலைத்திருப்பவர்கள்.
 
2. பிதாவின் நாமமான தேவ வார்த்தையை தங்கள் ஆவியில் ஏற்றுக்கொண்டவர்கள்.
 
3. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றுகிறவர்கள்.
 
4. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளிலே கபடமும் கள்ளத் தீர்க்க தரிசனமும் இல்லாமல், தேவனுடைய வார்த்தையை சாட்சியாக அறிவிக்கிறவர்கள்.
 
5. ஸ்திரியாகிய சபையினால் தங்களை கரை படுத்திக் கொள்ளாதவர்கள்.
 
6. அந்திக் கிறிஸ்துவின் சொருபத்தையும் அதன் அறிவையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். 
 
7. மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட் டையும் கற்றுக் கொண்டு தேவ சுரமண்டலத்தோடு பாடக்குடிய வர்கள்.
 
8. தேவனுடைய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவைபற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்கதரிசனங்களை வாசித்தும் கேட்டும், இவைகளை கைக்கொண்டு பாக்கியவான்காளாக மாறுகிறவர்கள். Rev_1:2-3, 
 
9. தேவனுடைய வார்த்தை, இயேசு கிறிஸ்துவை பற்றின சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்கதரிசன வசனங்களில் காத்திருந்து ஏழு சபைகளின் தேவதரிசனத்தைப் பெற்று ஆவியில் மருரூபம் அடைந்திருப்பவர்கள். Rev_1:9-11,
 
10. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங் களை புசித்து கிறிஸ்துவை தங்களுடைய இராஜாவாக அங்கிகரித்து அல்லேலூயா; என்று கெம்பீர சத்தமிடுகிறவர்கள் Rev_19:7-10 
 
11. தேவனுடைய கற்பனைகளை பின்பற்றி அவருடன் செய்து கொண்ட விசுவாச உடன்படிக்கையில் உறுதியோடு பொறு மையாக காத்திருப்பவர்கள் மிருகத்தின் முத்திரையை தங்கள் நெற்றி யிலும் வலது கையில் தரித்துக் கொள்ளாலும், மிருகத்தின் சொருபத்தை வணங்காமலும் இருந்து தங்களை காத்துக் கொள்ளுகிற வர்கள். Rev_14:9-13,
 
12. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ் துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங்களை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி சாத்தானை ஜெயிப்பவர்கள். Rev_12:7-12,
 
13. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ் துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங்களை பின்பற்றி 1.44.000 எண்ணிக்கையில் வருகிறவர்களுடன் வலுசர்ப்பம் 42 மாதம் யுத்தம் செய்தது. இந்த யுத்தத்தில் சிரச்சேதம் பன்னப்படுவது அல்லது மரணத்தை காணமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது, தங்கள் விசுவாசத்திற்கும் பொறுமைக்கும் ஏற்றபடி மாறுபடுகிறது. Rev_12:13-17, Rev_13:7-10
 
14. தேவ வசனத்தின் நிமித்தமும் இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றின தினாலும் கொல்லப்பட்ட ஆத்துமாக்கள் பலி பீடத்தின் கீழ் வந்து சேர்வார்கள். அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டு சிறிது காலம் இளைப்பாரிக் கொண்டு இருப்பார்கள். Rev_12:13-17, Rev_13:7-10
 
15. தேவ வசனத்தின் நிமித்தமும் இயேசுகிறிஸ்துவின் சாட் சியை பின்பற்றி, மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்ளாமல் மரித்தவர்கள், அல்லது கொல்லப்பட்ட ஆத்துமாக்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் அரசாளுவார்கள். Rev_20:4-6,,
 
7-22-1 தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்களுடைய நெற்றியிலே / அறிவிலே பெற்றுக் கொண்ட சீயோன் குமாரர்கள் / குமாரத்திகள் தங்களுடைய இருதய சுரமண்டலங்களை வாசித்து கெம்பீர சந்தத்தோடு பாடும் சீயோனின் கீதங்கள்.
 
இவைகளைக் குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள் அத்தியாயம் நான்கு என்கிற தலைப்பில் பார்க்கவும்:-
 
7-22-2 தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்க்கர்கள் தங்கள் ஆவியின் முறிவினாலே புலம்பி பாடும் புலம்பலின் பாடல்கள்.
 
இவைகளைக் குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள் அத்தியாயம் ஐந்து என்கிற தலைப்பில் பார்க்கவும்:-

Previous
Home
Social Media
Location

The Scripture Feast Ministries