தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 03
தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம் ஆறு
6-0 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக வெளிப்படுகிறது :-
6-1 யூதா கோத்திரத்தின் சிங்கமான இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த படியால் இரட்சிப்பின் அதிபதியாக வெளிப்படுகிறார். . Rev_5:1-7, Heb_2:9-13, Act_5:27-32, Gen_49:8-12, Num_23:19-24, Num_24:16-19, Mic_5:8-9,
6-2 இஸ்ரவேலருக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் ஓய்வு நாளின் பிரமாணங்கள்.
தேவனுடைய ஒரு நாள் மனிதனுக்கு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஆறு நாள் மனிதனுக்கு ஆறு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஏழாவது நாள் மனிதனுக்கு ஏழாவது ஆயிரம் வருடங்கள். 2Pe_3:8, Psa_90:4, Heb_3:7-19, Heb_4:1-10, Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11, Isa_56:1-8,
ஆதாம் முதல் இன்று வரை மனித சரித்திரத்தில் ஆறு ஆயிரம் வருடங்கள் முடிந்து ஏழாவது ஆயிரம் வருடங்கள் ஆரம்பமாகி தொடர்கிறது Ecc_8:5-6, Hos_6:1-3, Joh_12:32-33,
கீழே குறிப்பிட்ட தலைப்புகள் ஆயிரம் வருடங்களின் சம்பங் வங்களாக ஆயிரம் தலைமுறைகளுக்குள்ளே ஒரு தலைமுறையான இந்த தலைமுறையில் நடைபெறுகிறது
1. ஓய்வு நாள் Act_2:15-21, Joe_2:28,
2. பின்மாரியின் மழைக்காலம் Mal_4:1-6, Zec_10:1,
3. உபத்திரவகாலம்/ மகா உபத்திரவகாலம் Dan_12:1-13, Mat_24:14-22,
4. நீதியை சரிகட்டும் நாட்கள் Mar_13:8-13, Luk_21:20-28,
5. அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிற நாட்கள் Dan_7:13-28, Oba_1:17-21,
6. தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பின் நாள் 1Pe_4:16-17,
7. ஆயிரம் ஆண்டுகளின் ஆட்சியின் காலம் Rev_15:2,
8. தேவனுடைய இராஜ்ஜியத்தின் காலம் Rev_20:4-6,
1. ஓய்வு நாளில் சாதரண வேலை ஒன்றும் செய்ய வேண்டாம்
Exo_31:13-17, Exo_35:2, Deu_5:12-15,
2. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட வேண்டாம்
Exo_35:1-3, Lev_26:26, Hos_7:4-8, Isa_50:10-11,
3. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட விறகு பொறுக்க வேண்டாம்:-
ஓய்வு நாளில் / தேவனுடைய இராஜ்ஜியத்தில் பரிசுத்த வேதாகம புஸ்தகத்திலிருந்து விருப்பமான / ஆசீர்வாதமான வசனங்களைப் பொருக்கி எடுத்து அவைகளினால் தங்களுக்கு ஆவிக்குரிய அப்பங்களை சுட வேண்டாம் மேலும் தங்களுக்கு ஆவிக்குரிய வெளிச்சம் / எழுப்புதல்களை உண்டாக்குவதற்க்காக கீழே குறிப்பிட்ட கர்த்தருடைய பிரமாணங்களில் மனிதனுடைய கற்பனைகளை இணைக்க வேண்டாம். Num_15:32-36, Jer_7:17-20, Jer_44:16-19,
1. கர்த்தருடைய வேதம்
2. கர்த்தருடைய வழிகள்
3. கர்த்தருடைய நியாயங்கள்
4. கர்த்தருடைய சாட்சிகள்
5. கர்த்தருடைய கட்டளைகள்
6. கர்த்தருடைய கற்பனைகள்
7. கர்த்தருடைய பிரமாணங்கள்
8. கர்த்தருடைய ஆசரிப்பு முறைகள்
4. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் Neh_14:15-22, Isa_58:1-14,
5. ஓய்வுநாளில் வெளியே இருந்து எந்த ஒரு பொருளையும் எருசேலம் நகரத்திற்கு உள்ளே கொண்டு வரக்கூடாது :-
தேவனுடைய இராஜ்ஜியத்தில் வெளியே இருந்து எந்த ஒரு சுய விசுவாச எண்ணங்களையும், தேவனுடைய சத்தியமான வார்த்தை களுக்குள்ளே கொண்டு வரக்கூடாது.
6. ஓய்வு நாளில் உங்களுடைய வீடுகளிலிருந்து எந்த ஒரு பொருளையும் வெளியே கொண்டு வரக்கூடாது.
தேவனுடைய இராஜ்ஜியத்தில் உங்களுடைய அறிவு சிந்தனைகளிலிருந்து சொந்தமான யோசனைகளையோ / விதிமுறை களையோ / எந்த ஒரு சுய விசுவாசமான எண்ணங்களையோ வெளியே கொண்டு வரக்கூடாது.
6-3 ஆவிக்குரிய யூதர்கள் ஓய்வு நாளின் பிரமாணத்தை பரிசுத்தமாக ஆசரிக்கிறபடியால் எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களில் காத்திருந்து முன்மாரி மழையின் மூலம் வருகிற பிதாவின் வாக்குத்ததமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள். . Act_1:4-5, Act_1:12, Act_2:1, Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:20-23,
6-4 ஆவிக்குரிய யூதர்கள் முன்மாரி மழையின் மூலம் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்ட பிறகு ஆவியில் பெலனடைந்து, தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப் பினால் முதலாவது எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிலும், இரண்டாவது யூதேயாவாகிய தேவனுடைய ஆசரிப்பு முறைகளின் சுத்திகரிப்பிலும், மூன்றாவது சமரியாவாகிய புற ஜாதிகளிடத்திலும், நான்காவது பூமியின் கடைசி வரை பரவியிருக்கிற தேவனை அறியாதவர்களிடத்திலும் சாட்சி களாக இருந்தார்கள். . Act_1:8, 1Co_12:4-11, Rom_12:2-8, Eph_4:11-13, 1Pe_4:10-11,
6-5 ஆவிக்குரிய யூதர்கள் முன்மாரி மழையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டபடியால், அவர்கள் மூலம் எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும் இஸ்ரவேலருக்கும் புற ஜாதிகளுக்கும் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது. Gal_2:7-10, Joh_4:22-25,
6-6 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் இடறிவிழுந்தும் கீழ்படியாமலும் இருந்த தன் சொந்த ஜனமாகிய இஸ்ரவேலரையும் யூதர்களையும் தேவன் தள்ளினாலும் /சுபாவ ஒலிவ மரக்கிளையை தேவன் வெட்டினாலும் ; அவர்களுக்குள்ளே யாராவது ? கிறிஸ்துவின் விசுவாசத்தி னால் தேவ நீதியின் பிரமாணத்தை தேடுகிற ஆவிக்குரிய யூதர்கள் இருந் தால் , தேவன் அவர்களை கண்டறிந்து அவர்கள் மூலமாக தேவனுடைய இரட்சிப்பு எழுத்தின்படியுள்ள யூதர்களுக்கும்/ இஸ்ரவேலருக்கும், புற ஜாதிகளுக்கும்/ கிறிஸ்தவர்களுக்கும் வெளிப்படுகிறது. Gal_2:7-10, Rom_9:30-33, Rom_11:11, Joh_1:11-13, Joh_4:22-25
6-7 மோசே தீர்க்க தரிசியின் மூலம் லேவியர்களுக்கு தேவன் கிருபையாக கொடுத்த தேவனுடைய ஊழிய அழைப்புகள் கிறிஸ்துவின் முதலாம் வருகையில் நீக்கப்பட்டு / பிடுங்கப்பட்டு தேவனுடைய இராஜ்ஜியத்திற்கேற்ற கனிகளை கொடுக்கிற ஆவிக்குரிய யூதர்களுக்கு கிருபையாக கொடுக்கப்படுகிறது. . Heb_7:11-14, Heb_10:19-25, Num_18:6-7, Mat_10:40-42, Luk_20:9-16,
6-8 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் எழுத்தின்படியுள்ள இஸ்ரவேலர்கள்/ யூதர்கள் கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் மூலம் தேவ நீதியின் பிரமாணத்தை தேடாமல்; பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் கிறிஸ்துவாகிய மூலைக்கல்லில் / மூல உபதேசத்தில் இடறிவிழுந்து, இவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது, இவர்கள் கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை தேவனுடைய சாபங்கள் இவர்களை தொடருகிறது. Rom_9:30-33, 1Pe_2:6-8,
6-9 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறி விழுந்த சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய இஸ்ரவேலரையும் / யூதர்களையும், தேவன் சுபாவ ஒலிவ மரத்திலிருந்து வெட்டி எடுத்து ; வெட்டப்பட்ட அந்த இடத்தில் காட்டொழிவ மரமாகிய புறஜாதிகளை/ கிறிஸ்தவர்களை தேவன் ஒட்ட வைக்கிறார்.இப்பொழுது காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்கள், சுபாவ ஒலிவ மரத்தினுடைய வேருக்கும் சாரத்திற்கும் பங்குள்ளவர்களாக இருந்து தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுகிறார்கள். . Rom_11:7-11,
6-10 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய இரட்சிப்பை, கிருபையாக கொடுக்கிறபோது தேவனுடைய முன் எச்சரிப்புடன் நியாயத்தீர்ப்பின் செய்தியும் அறிவிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய முன் எச்சரிப்புடன் முதலாவது நியாயத்தீர்ப்பின் செய்தி.
காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவனே! நீ சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய யூதனுக்கு விரோதமாக பெருமை பாராட்டாதே; பெருமை பாராட்டினால் நீ வேரை சுமந்து கொண்டிருக்கிறாய் / உன்னுடைய ஆவிக் குரிய வாழ்க்கை தலை கீழாக இருக்கிறது என்று அறிந்து கொள்ளுவாயாக.
கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய முன் எச்சரிப்புடன் இரண்டாவது நியாயத்தீர்ப்பின் செய்தி..
இடறிவிழுந்தும் கீழ்படியாமலிருந்த தன் சொந்த ஜனமாகிய சுபாவ ஒலிவ மரக்கிளையான யூதர்களை தேவன் தப்பவிடாமல் வெட்டும் போது, இடறிவிழுந்தும் கீழ்படியாமலும் இருக்கிற காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களையும் தேவன் தப்ப விடாமல் வெட்டுவார்; ஆகையால் கிறிஸ்தவர்கள் முன் எச்சரிப்புடன் ஜாக்கிரதையாக இருந்து கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய முன் எச்சரிப்புடன் மூன்றாவது நியாயத்தீர்ப்பின் செய்தி.
கிறிஸ்துவின் முதலாம் வருகையில் தேவனால் வெட்டப்பட்ட சுபாவ ஒலிவமரக்கிளையாகிய யூதர்களை, தேவன் மீண்டும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சுபாவ ஒலிவமரத்துடன் ஓட்ட வைக்கும்போது ; காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களில் இடறி விழுந்தவர்களையும், கீழ்படியாதவர்களையும் தேவன் தப்பவிடாமல் சுபாவ ஒலிவ மரத்திலிருந்து வெட்டி எடுத்து, அவர்களை காட்டிலே எறிந்து விடுவார்/ கிறிஸ்தவர்களும் புறஜாதிகளாகவே மதிக்கப்படுவார்கள். Rom_11:16-18, Rom_11:19-22,
6-11 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் முன்மாரி மழையின் மூலம் பிதாவின் வாக்குத்தத்மான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, தேவனை விட்டு பின்வாங்கிப் போகிறவர் களுக்கு, தேவன் அவர்களுக்குள்ளே பொய்யின் ஆவிகளையும், வஞ்சிக்கிற ஆவிகளையும் அனுப்பி, அவர்கள் தேவனிடம் மனந்திரும்பும் வரை, அவைகளுக்கே அடிமையாகும் படி ஒப்புக்கொடுக்கிறார். 2Th_2:1-4, 2Th_2:7-12, 2Th_2:13-17,
6-12 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கிற / வருகிற வாக்குத்தத்தம், கிறிஸ்துவின் விசுவாசத்தை பின் பற்றுகிற சந்ததிக்கு அளிக்கப்படும் வரை/ வருமளவும்; வேதம் எல்லாரையும் இஸ்ரவேலரையும் புறஜாதிகளையும் ஏகமாய் பாவத்தின் கீழ் அடைத்து, நியாயப்பிரமாணத்தின் காவலில் வைத்திருந்து, கிறிஸ்துவின் முதலாம் வருகையில் கிறிஸ்துவின் விசுவாச சந்ததிக்கு பிதாவின் வாக்குத்தத்தை கொடுக்கிறது. . Gal_3:19-24,