தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 03
தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம் ஐந்து
5-0 தேவனுடைய சிங்காசனத்தில் சகல ஜனங்களுடைய இரட்சிப்பின் கிரியைகளை நியாயத்தீர்ப்பதற்காக; வேத புஸ்தகம், ஞாபக புஸ்தகம், ஜீவ புஸ்தகம், ஆகிய மூன்று புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது.
5-1-0 வேத புஸ்தகம் :-
5-1-1 தேவனுடைய வீட்டிலே முதலாவது நியாயத்தீர்ப்பை துவங்குவதற்காக, முதலாவது வேத புஸ்தகம் திறக்கப்படுகிறது.
5-1-2 வேத புஸ்தகத்தின் ஏழு முத்திரைகளை உடைப்பதற் கும், திறந்து வாசிப்பதற்கும் ஜெயங்கொண்டிருக்கிற ஆட்டுக் குட்டியானவரின் ஏழு கண்கள்.
5-1-3 தேவனுடைய ஏழு முத்திரைகளை உடைக்கவும் திறந்து வாசிக்கவும் அதிகாரம் பெற்றவைகள் கிறிஸ்துவின் வார்த்தை கள்.
5-1-4 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஏழு ஆவி களான ஏழு பிரமாணங்களும் தேவனுடைய சித்தத்தை நிறை வேற்றுகிறது.
5-1-5 தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு, முதலாவது சிங்காசனத்திற்கு முன்பாக தேவனுடைய ஏழு அடையாளங்களை சாட்சிகளாக வெளிப்படுத்திக் காட்டுகிறது.
5-1-6 தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு இரண்டாவதாக, தேவனுடைய ஏழு பிரமாணங்களை ஏற்றுக் கொண்ட 1,44,000 பரிசுத்தவான்களை சாட்சிகளாக வெளிப் படுத்திக் காட்டுகிறது.
5-1-7 தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு மூன்றாவதாக தேவனுடைய வசனங்களை ஏற்றுக்கொண்ட திரளான ஜனங்களை இரத்த சாட்சிகளாக வெளிப்படுத்திக் காட்டுகிறது.
5-1-8 தேவனுடைய ஏழு ஆவிகளுடைய ஏழு பிரமாணங் களை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுடைய நெற்றியில் / அறிவில் தேவ னுடைய ஏழு முத்திரை அடையாளங்கள் தேவனால் போடப் படுகிறது.
5-1-9 கடந்த காலங்களில் வாழ்ந்த அநேக பரிசுத்தவான்கள் தேவனுடைய ஏழு பிரமாணங்களை ஏற்றுக் கொண்டபடியால், அவர் களுக்கு தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தேவனால் போடப்பட்டிருக்கிறது.
5-1-10 இந்த கடைசி நாட்களில் வாழ்கிற அநேக உபத்திரவகால பரிசுத்தவான்களுக்கு தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்கள் தேவனால் போடப்படுகிறது.
5-1-11 தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொண்ட 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்கள் தேவனுடைய வீட்டிலே முதலாவது நியாயத் தீர்ப்பை துவங்குகிறார்கள்.
5-1-12 கிறிஸ்துவின் சரீர அவயவங்களான 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்களில் யாராவது ? தலையாக மாற நினைக்கிறார்களோ, அப்பொழுது அவர்கள் அந்திக் கிறிஸ்துவாக மாறுகிறார்கள்.
5-1-13 தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக / அருகில் வைத்திருப்பவர்களுக்கு, தேவனுடைய வார்த்தைகள் முத்திரையிடப்பட்டிருக்கிறது
5-2-0 ஞாபக புஸ்தகம் :-
5-2-1 ஆயிரம் ஆண்டு ஆட்சி துவங்குவதற்கு முன்பு, முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்த பரிசுத்தவான்களை நியாயத் தீர்ப்பதற்காக, இரண்டு புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது.
5-2-2 மணவாட்டி சபையாகிய 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்களை அடையாளம் காண்பதற்காக ஞாபக புஸ்தகம் திறக்கப்படுகிறது.
5-2-3 கர்த்தருக்கு பயந்து, தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, இரத்த சாட்சியாக மரித்த திரளான ஜனங்களை அடையாளம் காண்பதற்காக ஞாபக புஸ்தகம் திறக்கப்படுகிறது.
5-3 -0 ஜீவ புஸ்தகம் :-
5-3-1 தேவனுடைய பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்காக, மூன்று புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது.
5-3-2 ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவர்களை அடையாளம் கண்டு, அக்கினி நரக நியாயத்தீர்ப்பிற்கு நியமிப்பதற்காக ஜீவ புஸ்தகம் திறக்கப்படுகிறது
5-1-0 வேத புஸ்தகம் :-
5-1-1 தேவனுடைய வீட்டிலே முதலாவது நியாயத்தீர்ப்பை துவங்குவதற்காக முதலாவது வேத புஸ்தகம் திறக்கப்படுகிறது:-
இந்த கடைசி காலம் வரை முத்திரையிடப்பட்டிருந்த வேத புஸ்தகத்தின் இரகசியங்களைத் தேடி, இங்கும் அங்கும் ஓடி, ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, உலகத்தோற்றத்திற்கு முன்னே, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வேத புஸ்தகத்தின் ஏழு முத்திரைகளை உடைத்து, ஏழு முத்திரை அடையாளங்களின் இரகசியங்களை வெளிப்படுத்திக் கொடுக்க அதிகாரம் பெற்றிருக்கிறார். Dan_12:4, Amo_8:11-13,Rev_5:1-5, Dan_12:4, Dan_7:9-10, Rev_20:11-12, Rev_5:1, Rev_10:8-11,
5-1-2 வேத புஸ்தகத்தின் ஏழு முத்திரைகளை உடைப்பதற்கும் திறந்து வாசிப்பதற்கும் ஜெயங்கொண்டிருக்கிற ஆட்டுக்குட்டியானவரின் ஏழு கண்கள்:-
உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்கு ட்டியானவரின் ஏழு கண்கள், தேவனுடைய ஏழு ஆவிகளாக பூமியெங்கும் அனுப்பப்படுகிறது. முதலாவது எல்லா ஆவி, ஆத்து மாக்களின் சிந்தனைகளிலும், இரண்டாவது ஆவியின்படி தேவனுடைய பாதபீடமாகிய பூமியெங்கும் / தேவன் நடந்து சென்ற பாதங்களின் அடையாளங்களாக வெளிப்படுகிற, வேத புஸ்தகத்தின் தேவனுடைய வார்த்தைகளிலெங்கும், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷ புஸ்தகமெங்கும், ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் அசைவாடி, ஏழு முத்திரைகளை உடைக்கவும் திறந்து வாசிக்கவும் அதிகாரமுள்ளவைகளாக அனுப்பப்படுகிறது. Rev_5:6, 2Ch_16:9,Zec_4:10 ,Zec_3:9 ,Rev_1:4-5, Rev_2:1, Rev_2:18, Rev_3:1, Rev_4:5,
5-1-3 தேவனுடைய ஏழு முத்திரைகளை உடைக்கவும் திறந்து வாசிக்கவும் அதிகாரம் பெற்றவைகள் கிறிஸ்துவின் வார்த்தைகள் :-
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற கிறிஸ்துவின் வார்த்தைகள் தேவனுடைய ஏழு கண்களின் வெளிச்சத்தைப் போல ஏழு ஆவிகளாக பூமியெங்கும் மகா தீவிரமாக செல்லுகிறது, அதன் பார்வைக்கு மறைவாக ஒன்றும் தப்புவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சம் இருட்டில் பிரகாசிக்கும் போது விடிவெள்ளி நட்சத்திரத்தின் வெளிச்சம் போலவும், வானவில்லின் வெளிச்சத்தைப் போலவும் பிரகாசிக்கிறது.
வானவில் வெளிச்சத்தின் பரிமாணங்களில் ஏழு வண்ணங்கள் பிரதிபலிப்பது போல தேவனுடைய வார்த்தைகளிலிருந்து ஏழு வகையான தேவனுடைய பிரமாணங்கள் வெளிப்படுகிறது. தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட கிறிஸ்துவாகிய வார்த்தைகளிலிருந்து வெளிப்படுகிற பரிமாணங்களின் ஓசைகள் சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல பிரதிபலித்து, கீழே குறிப்பிடுகிற தேவனுடைய ஏழு வகையான பிரமாணங்களின் ஓசையாக வெளிப்பட்டு தொனிக்கிறது.
1. வேதம் 2. சாட்சிகள் 3. வழிகள் 4. கட்டளைகள் 5. பிரமாணங்கள் 6. கற்பனைகள் 7. நீதி நியாயங்கள் Psa_119:1-8, Psa_19:1-10, Lev_18:1-5, Deu_29:1,Psa_147:19-20, Psa_78:1-12, Psa_78:67-68, 2Ki_17:13-20, 2Ki_17:32-41,
5-1-4 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஏழு பிரமாணங்களும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறது :-
தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஏழு பிரமாணங்கள் ஒவ்வொன்றும், ஒரு யுத்த வீரனைப் போல ஜெயங்கொள்ளுவதற் காகவும் ஜெயங்கொள்ளுகிறவைகளாகவும் புறப்பட்டு, தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, தனக்கு நியமிக்கப்பட்ட தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருந்து, தேவன் என்ன காரியமாக அனுப்பினரோ, அந்த காரியங்களை தேவன் விரும்புகிற காரியமாக செய்து முடித்து, ஜெயங்கொண்டவைகளாக மீண்டும் தன் வரிசையின் படி தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வந்து சேர்ந்து; சகல ஜனங்களையும் நியாயத்தீர்ப்பதற்காக சாட்சிகளாகவும், அற்புதங்களாகவும் அடையாளங்களாகவும் தங்களுடைய கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது. Rev_6:1-2,Psa_19:1-10,Psa_147:15,Joe_2:1-2, Isa_5:25-30,Jer_1:11-19,Psa_147:19-20, Mal_3:1,Rev_9:13-21,
5-1-5 தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு முதலாவது சிங்காசனத்திற்கு முன்பாக தேவனுடைய ஏழு அடையாளங்களை சாட்சியாக வெளிப்படுத்திக் காட்டுகிறது:-
1 வானவில் Rev_4:3, Rev_10:1,
2 ஏழு ஆவிகள் Rev_4:5, Rev_3:1,
3 ஏழு கண்கள் Rev_1:14, Rev_2:18, Rev_5:6, Zec_4:10
4 ஏழு நட்சத்திரங்கள் Rev_3:1, Rev_2:1, Rev_1:16.
5 ஏழு குத்து விளக்குகள் Rev_2:1,
6 ஏழு தீபங்கள் Rev_4:5,
7 குத்து விளக்கின் ஏழு அகழ்கள் Rev_11:1-4, Zec_4:1-6 ,Zec_4:11-14 ,
5-1-6 தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு இரண்டாவதாக, தேவனுடைய ஏழு பிரமாணங்களை ஏற்றுக் கொண்ட 1,44,000 பரிசுத்தவான்களை சாட்சிகளாக வெளிப்படுத் திக் காட்டுகிறது :-
தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு சிங்காசனத்திற்கு முன்பாக தேவனுடைய ஏழு பிரமாணங்களை ஏற்றுக்கொண்டு, ஏழு முத்திரைகள் உடைக்கப்பட்டதற்கு சாட்சிகளாக மாறின 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான் களை கிறிஸ்துவின் அவயவங்களாக வெளிப்படுத்திக் காட்டுகிறது ; இவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக மாறி சீயோனின் புதிய பாடல்களை பாடி, கிறிஸ்துவுடன் அரசாட்சியை பகிர்ந்து கொள்ளு கிறார்கள். Isa_55:10-11,Rev_11:1-2, Rev_6:9-11, Rev_5:6-10, Rev_1:4-6, Rev_14:1, Isa_8:16-20,
5-1-7 தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு, மூன்றாவதாக தேவனுடைய வசனங்களை ஏற்றுக் கொண்ட திரளான ஜனங்களை இரத்த காட்சிகளாக வெளிப்படுத்திக் காட்டுகிறது:-
தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு, சிங்காசனத்திற்கு முன்பாக வந்து சேர்ந்து ; தேவனுடைய வசனங்களை தங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அவைகளுக்காக இரத்த சாட்சிகளாக மரிக்கிற திரளான ஜனங்களை தேவனுடைய ஆலயத்தில் கொண்டு வந்து, சாட்சிகளாகவும், அற்புதங்களாகவும், அடையாளங்களாகவும் வெளிப்படுத்திக் காட்டுகிறது; இவர்கள் தேவனுடைய ஆலயத்தில் தேவனை தொழுது கொண்டு, தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். Rev_11:1-3, Rev_7:9-17, Rev_6:9-11,Mal_3:16-18,Eze_11:12-13, Eze_11:14-21, Joh_17:18-24, Psa_16:1-3,
5-1-8 தேவனுடைய ஏழு ஆவிகளுடைய ஏழு பிரமாணங்களை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்கள் தேவனால் போடப்படுகிறது:-
தேவனுடைய ஏழு முத்திரைகளை உடைக்கவும் திறந்து வாசிக்கவும், அதிகாரம் பெற்ற தலையாகிய கிறிஸ்துவினுடைய வார்த்தைகளின் பரிமாணங்களில் பிரதிபலித்து, சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல வெளிப்படுகிற தேவனுடைய ஏழு பிரமாணங்களை யார்? தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக ஏற்றுக்கொண்டு,
அவைகளின் திரளான ஆலோசனைகளினால் நன்மை தீமைகளை உணர்ந்து கொண்டு, அவைகளை தங்கள் வாழ்க்கையில் பின் பற்றுகிறார்களோ, அவர்களுக்கு தேவனால் முத்திரையிடப்பட்டிருக்கிற ஏழு முத்திரை அடையாளங்களுடைய இரகசியங்கள் தேவனுடைய ஆவியினால் வெளிப்படுத்தப்படுகிறது. இவர்கள் கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக இருக்கிற 1,44,000 வரிசையில் இணைந்து கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள்.
5-1-9 கடந்த காலங்களில் வாழ்ந்த அநேக பரிசுத்தவான்கள், தேவனுடைய ஏழு பிரமாணங்களை ஏற்றுக் கொண்டபடியால் அவர்களுக்கு தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்கள் தேவனால் போடப்பட்டிருக்கிறது :-
ஆதாம் முதல் இந்த கடைசி காலம் வரை வாழ்ந்த அநேக பரிசுத்தவான்கள், வேதத்தில் முத்திரையிடப்பட்டிருந்த தேவனு டைய இரகசியங்களை, தேவனுடைய ஏழு பிரமாணங்களின் மூலம் தேவனுடைய ஆவியில் தேவனோடு சஞ்சரித்து, தியான ஆலோ சனைகளினால் உணர்ந்து கொண்டவர்கள், முதலாவது தங்க ளுடைய இருதயத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு மனந்திருப்பினபின்பு ; அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய இரகசியங்களை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள், இவர்கள் கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக இருக்கிற 1,44,000 வரிசையில் இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறியிருக்கிறார்கள். Gen_6:9,Mal_2:5-9, Jer_23:22, 1Pe_4:16-17,
5-1-10 இந்த கடைசி நாட்களில் வாழ்கிற அநேக உபத்திரவகால பரிசுத்தவான்களுக்கு, தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்கள் தேவனால் போடப்படுகிறது:-
உலகம் உண்டானது முதல் இது வரைக்கும் சம்பவித்திராத தும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவ காலத்தில் வெளிப்படப்போகிற அநேக பரிசுத்தவான்களும் 1,44,000 வரிசையில் இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறும்படி காத்திருக்கிறார்கள்.
தேவனுடைய ஏழு ஆவிகளினால் ஏழு முத்திரை அடையா ளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் ஏற்றுக்கொள்ளுகிற படியால் இவர்களும் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களாக மாறி; அழைக்கப்பட்டவர்களின் வரிசையிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் வரிசைக்கு வந்து சேர்ந்து, தேவனுடைய சத்தியமான வசனங்களின் விருந்தை புசித்து கிறிஸ்துவின் மண வாட்டி சபையில் சேர்க்கப்படுகிறார்கள்.
5-1-11 தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொண்ட 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்கள், தேவனுடைய வீட்டிலே முதலாவது நியாயத் தீர்ப்பை துவங்குகிறார்கள்:-
கிறிஸ்துவின் சரீர அவயவங்களான 1,44,000 வரிசையில் வருகிற உபத்திரவ கால பரிசுத்தவான்கள், தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தின்படி, தேவனுடைய வீடாகிய சபையிலே பரிசுத்த ஸ்தலத்தில் நடைபெறும் அருவருப்புக்களின் நிமித்தம் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் நெற்றியிலே / அறிவிலே தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை பிரசங்கிக்கிற படியால் தேவனுடைய வீட்டிலே முதலாவது நியாயத் தீர்ப்பை துவங்குகிறார்கள்.
தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியிலே / அறிவிலே ஏற்றுக்கொள்ள எதிர்த்து நிற்பவர்கள், அந்திக் கிறிஸ்துவின் அடையாளங்களை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் தரித்துக் கொண்டு 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்களை பலிபீடத்திற்கு அருகே கொலை செய்கிறார்கள்.
5-1-12 கிறிஸ்துவின் சரீர அவயவங்களான 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்களில் யாராவது ? தலையாக மாற நினைக்கிறார்களோ, அப்பொழுது அவர்கள் அந்திக் கிறிஸ்துவாக மாறுகிறார்கள்:-
தேவனுடைய ஏழு முத்திரைகளை உடைக்க அதிகாரம் பெற்ற தலையாகிய கிறிஸ்துவின் வார்த்தைகளின் பரிமாணங்களில் பிரதிபலித்து, சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல சத்த மிடுகிற, தேவனுடைய ஏழு பிரமாணங்களுடைய தேவ ஆவியினால்; தேவனால் முத்திரையிடப்பட்டிருந்த ஏழு முத்திரை அடையாளங் களின் இரகசியங்களை அறிந்து உணர்ந்து கொண்டவர்கள்,
1,44,000 வரிசையில் இணைந்து கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள்; இவர்களில் யாராவது ? தலையாக மாற நினைக்கிறார்களோ? அப்பொழுது அந்த அவயவம், அந்திக் கிறிஸ்துவாக மாறுகிற படியால், தேவனுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பின்படி நேரடியாக அக்கினி நரகத்தில் தள்ளப்படுகிறார்கள்.
5-1-13 தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக / அருகில் வைத்திருப்பவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகள் முத்திரையிடப்பட்டிருக்கிறது :-
தேவனுடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து, தேவனு டைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்கள், தேவனுடைய வார்த்தைகளை தங்கள் வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து, கர்த்தருக்கு பயந்தும், தங்கள் விட்டு வந்த ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளை பின்பற்றுகிறவர்களுக்கு, வேத புஸ்தகத்தின் வார்த்தைகள் முத்திரையிடப்பட்டிருக்கிறது; ஆகையால் இவர்களுக்கு தேவனுடைய வீட்டிலே / இருதயத்திலே / சபையிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பினால் அறிiயாமை / இருள் / காரிருள் / மாயை ஆகிய இவைகளினால் இவர்கள் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட இரட்சிப்பு மரணமடைகிறது.
இவர்கள் எப்பொழுது தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் ஏற்றுக்கொண்டு மனந்திரும்புகிறார்களோ! அது வரை தேவனுடைய நியாயத்தீhப்பு கள் இவர்களை பின் தொடரும். Isa_29:10-13, 2Pe_1:20-21,Isa_34:16-17, Luk_8:12-18,2Ki_17:32-41,Isa_8:16-22, Isa_50:10-11, Rev_22:18-19,
5-2-1 ஆயிரம் ஆண்டு ஆட்சி துவங்குவதற்கு முன்பு முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்த பரிசுத்தவான்களை நியாயந்தீர்ப்பதற்காக இரண்டு புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது:-
தேவனுடைய வீட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தேவனுடைய நியாயத் தீர்ப்பதற்காக, தேவனுடைய ஏழு முத்திரைகள் உடைக்கப்பட்டு வேத புஸ்தகம் திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த புஸ்தகத்துடன் இரண்டாவதாக ஞாபக புஸ்தகம் திறக்கப்படுகிறது, இந்த புஸ்தகத்தில் கர்த்தருடைய நாமத்தை தியானிக்கிற 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்களின் அடையாளங்கள் எழுதப்பட்டிருக்கிறது; இவர்களுடன் கர்த்தருடைய நாமத்திற்கு பயப்படுகிற திரளான இரத்த சாட்சிகளின் அடையாளங்களும் எழுதப்பட்டிருக்கிறது. Mal_3:15-18, Dan_12:1, Dan_7:9-10,
தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வந்திருக்கிற இந்த இரண்டு பிரிவு ஜனங்களும் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகிய பட்டாபிஷேக / முடி சூட்டு விழாவில் கலந்து கொண்டு தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். Rev_20:4-6, Dan_7:9-10, Dan_7:18, Dan_7:21-22, Dan_7:25-27 ,Dan_12:1-3, Rev_11:1-2, Rev_6:9-11, Rom_14:10, 2Co_5:10,Rev_7:9-17,
5-2-2 மணவாட்டி சபையாகிய 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்களை அடையாளம் காண்பதற்காக ஞாபக புஸ்தகம் திறக்கப்படுகிறது:-
இந்த பூமியில் தேவனுடைய இராஜ்ஜியமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சி துவங்குவதற்கு முன்பு, முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்று; தேவனுடைய இராஜ்ஜியத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் 1,44,000 வரிசையில் வருகிற பரிசுத்தவான்களாகிய மணவாட்டி சபையை, அடையாளம் காண்பதற்காக ஞாபக புஸ்தகம் திறக்கப்படுகிறது.
மணவாட்டி சபை தேவனுடைய நாமத்தை தியானிக்கிறபடி யால் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகிய பட்டாபிஷேக முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு, தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக புசித்து , பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டு கெம்பீர சத்தமிடுகிறார்கள். மேலும் இவர்கள் சீயோனின் பாடல்களை கற்றுக் கொண்டு தேவ சுரமண்டலங்களோடு பாடுகிறார்கள். Mal_3:13-18, Isa_65:13-15, Rev_19:9-11,Eas_1:4-8, Mat_22:1-8,Mat_22:9-14,Luk_14:7-14,Luk_14:15-24,Luk_12:31-40,Luk_12:41-48,Mat_24:45-51, Rev_3:20-21, Rev_14:1-5, Rev_15:2-4, Rev_5:7-10, Psa_137:1-9,Jer_50:45-48, Psa_149:1-9,
5-2-3 கர்த்தருக்கு பயந்து, தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, இரத்த சாட்சிகளாக மரித்த திரளான ஜனங்களை அடையாளம் காண்பதற்காக ஞாபக புஸ்தகம் திறக்கப்படுகிறது :-
கிறிஸ்துவின் சரீர அவயவங்களாயிருக்கிற 1,44,000 வரிசையில் வருகிற உபத்திரவகால பரிசுத்தவான்கள் பிரசங்கிக்கிற தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் விசுவாச வார்த்தை களினால் பொல்லாப்பை விட்டு விலகி கர்த்தருக்கு பயந்து, தங்களு டைய நெற்றியிலும் வலது கையிலும் மிருகத்தின் முத்திரைகளை ஏற்றுக்கொள்ளாமலிருந்து; தேவனுடைய வார்த்தைகளுக்காக இரத்த சாட்சிகளாக மாறின திரளான ஜனங்கள் தேவனுடைய ஆலயத்தில் வெண்வஸ்திரம் தரித்து கைகளில் குருத்தோலையை பிடித்துக் கொண்டு தேவனை தொழுது கொள்ளுகிறார்கள். Rev_11:1-3, Rev_6:9-11,Rev_7:1-8, Rev_7:9-17, Rev_20:4, Rev_14:1-8,Rev_14:9-12, Rev_14:13-20,
5-3-1 தேவனுடைய பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்காக மூன்று புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது:-
ஆதாம் முதல் ஆயிரம் ஆண்டு ஆட்சி முடியும் வரை மரித்து, பாதாளத்தின் இளைப்பாறிக் கொண்டிருக்கிற அநேக ஆத்துமாக்கள், இந்த வானமும் பூமியும் அகற்று போன பின்பு, புதிய வானமும் பூமியும் தொடங்குவதற்கு முன்பு, இரண்டாம் உயிர்தெழுதலில் பங்கு பெற்று உயிர்ந்தெழுந்தவர்கள், அவர்களுடைய கிரியைகளின் படி, பிரதிபலனைப் பெற்றுக் கொள்ளுவதற்காக 1 வேத புஸ்தகம் 2. ஞாபக புஸ்தகம் 3. ஜீவ புஸ்தகம் , ஆகிய இந்த மூன்று புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது. Rev_3:5-6, Rev_13:8, Rev_17:8, Rev_20:15, Rev_21:27, Rev_22:18-21,Phi_4:3 Rev_20:11-15, Rev_21:27,Rev_3:5-6, Rev_11:18, Mat_5:19,Phi_4:3,
5-3-2 ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவர்களை அடையாளம் கண்டு, அக்கினி நரக நியாயத்தீர்ப்பிற்கு நியமிப்பதற்காக ஜீவ புஸ்தகம் திறக்கப்படுகிறது :-
தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபடியால் ஜீவ புஸ்தகத்திலிருந்து பெயர் கிருக்கிப் போடப்பட்டவர்கள், ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவர்கள், ஆகிய இவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலிலே பங்கடைவார்கள். Exo_32:31-33,Rev_13:8, Rev_17:8, Rev_22:18-21, Jer_17:13, Jer_17:9-13, Psa_69:28, Psa_69:21-27,Rom_11:9-10,