தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 03


தேவனுடைய  இரட்சிப்பின் நற்செய்தி

பொருளடக்கம் நான்கு

4-0 ஆவி, ஆத்துமா, சரீரத்தின் மரணமும் உயிர்தெழுதலும்
 
4-1 ஆவி, ஆத்துமா, சரீரத்தின் மரணமும் உயிர்தெழுதலும் 
 
4-2 முதலாம் உயிர்தெழுதல்
 
4-3 இரண்டாம் மரணத்தை ஜெயங்கொள்ளுவது
 
4-4 இரண்டாம் உயிர்தெழுதல் 
 
4-5 இரண்டாம் மரணம்
 
4-6 கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்றுகிறார்
 
4-7 நியாயப்பிரமாணம் ஒரு பள்ளி ஆசிரியர்
 
4-8 நீதிப்பிரமாணத்தின் நீதியினால் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் முதலாம் உயிர்தெழுதல்
 
4-9 நீதிப்பிரமாணம் ஒரு தலைமை ஆசிரியர்
 
4-10 கிறிஸ்து ஒரு தலைமை ஆசிரியர் 
 
4-1-0, ஆவி, ஆத்துமா சரீரத்தின் மரணமும் உயிர்தெழுதலும் :-
 
4-1-1 சாவுள்ள ஆவி, ஆத்துமா, தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் சாவாமையை தரித்துக் கொள்ளும்போது; ஆவி, ஆத்துமாவின் மரணம், ஜெயமாக விழுங்கப்பட்டு ஆவி, ஆத்துமாவின் மரணம், ஜீவனாக உயிர்ப்பிக்கப்படுகிறது. 1Co_15:50-54,
 
4-1-2 அழிவுள்ள சரீரம் தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் அழியாமையை தரித்துக் கொள்ளும் போது சரீர மரணம், ஜெயமாக விழுங்கப்பட்டு, மரணம் உயிர் தெழுதலாக வெளிப்படுகிறது 1Co_15:50-54,.
 
4-1-3 ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் மரணம் தேவனு டைய நித்திய ஜீவ வார்ததைகளினால் ஜெயமாக விழுங்கப்படாமல் இருக்கும் போது அவைகள் தொடர்ந்து மரணத்திலே நிலை கொண் டிருக்கிறது.
 
4-1-4 ஆவி, ஆத்துமாவின் மரணமும், சரீரத்தின் மரணமும் தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஜெயமாக விழுங்கப் படாமல் இருக்கும் போது; அவைகள் இரண்டாம் உயிர்தெழுதலில் வெளிப்பட்டு, நியாயத்தீர்க்கப்படுவதால் மரணத்தின் பல நிலைகள் / தன்மைகள் மதிப்பிடப்பட்டு அதற்கேற்றபடியுள்ள பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளுகிறது. Rev_20:4-6,Rev_20:11-15,1Co_15:35-42, 1Co_15:43-49,Mat_6:25-30,
 
4-2-0, முதலாம் மரணத்தையும், இரண்டாம் மரணத்தையும் ஜெயங்கொள்ளுகிற முதலாம் உயிர்தெழுதல் :-
 
ஆவி, ஆத்துமாவும் சரீரமும் தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளினால் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டு முதலாம் உயிர்தெழுதலை பெற் றுக் கொள்ளுகிறது; இந்த ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு இரண்டாம் மரணமாகிய அக்கினி நரக நியாயத்தீர்ப்பு இல்லை, எனவே முதலாம் மரணமாகிய பாதாளத்தின் வல்லமையை ஜெயங்கொண்டவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினி நரகத்தையும் ஜெயங்கொள்ளு கிறார்கள், இது கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் கிடைக்கும் சரீர இரட்சிப்பு / விசேஷ இரட்சிப்பு / முழுமையான இரட்சிப்பு Rev_20:4-6,Rev_20:11-15,
 
4-3-0 முதலாம் மரணத்தில் பங்கடைந்து இரண்டாம் மரணத்தை ஜெயங்கொள்ளுவது :-
 
4-3-1 சரீரம், முதலாம் மரணமாகிய பாதாளத்தின் வல்லமை யினால் மரணமடைந்து, ஆவி, ஆத்துமா, மட்டும் இரண்டாம் மரண மாகிய அக்கினி நரக நியாயத்தீர்ப்பை ஜெயங்கொள்ளுவது. Rev_20:4-6,Rev_20:11-15,
 
4-3-2 அழிவுள்ள சரீரம் கிறிஸ்துவின் விசுவாச நீதியினால் அழியாமையாகிய நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள முடியா மல், முதலாம் மரணமாகிய பாதாளத்தின் வல்லமையினால் தேவனு டைய ரூபத்திலும் சாயலிலும் மரணமடைகிறது. இப்படி சரீரம் மட் டும் முதலாம் மரணத்தில் மரணமடைந்து, ஆவி, ஆத்துமா மட்டும் தேவனுடைய நியாயப்பிரமாண நீதியினால் பிழைக்கிற படியால், இந்த ஆவி, ஆத்துமாவிற்கு தேவனுடைய கோபாக்கினையாகிய இரண்டாம் மரணத்தின் ஆக்கினித்தீர்ப்பு இல்லை. Rev_20:4-6,Rev_20:11-15,
 
4-3-3 முதலாம் மரணத்தில் மரணமடைந்த சரீரம் இரண்டாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து, அதன் நீதிக்கிரியைகளின் படி ஏதாவது ஒரு மிருக சாயலைப் பெற்றுக் கொண்டு நித்திய ஜீவ னில், நித்தியமாக பிழைக்கிறது, இது அக்கினி நரகத்திலிருந்து இரட் சிப்பு / பொதுவான இரட்சிப்பு / பகுதி இரட்சிப்பு. Rev_20:11-15, 1Co_15:35-42, 1Co_15:43-49,Mat_6:25-30,
 
4-3-4 இரண்டாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிற நியாயப் பிரமாண நீதியினால் ஆவி, ஆத்துமாவின் இரட்சிப்பு:-
 
கிறிஸ்து பாவ மாம்சத்திலே பாவத்தை ஆக்கினித் தீர்ப்பு செய்து பாவத்தை பலி செலுத்தினபோது, நியாயப்பிரமாண நீதி நிறைவேற்றப்படுகிறது; அப்பொழுது கிறிஸ்து மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
 
கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்றினது போல, தங்களுடைய பாவ மாம்சத்திலே தங்களுடைய பாவத்தை ஆக்கினித் தீர்ப்பு செய்து பாவத்தை பலி செலுத்துகிறவர்களுக்கு / தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு; அவர்களுடைய ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டு நித்திய ஜீவனை அடைந்து பிழைக்கிறது.
 
இப்படிப்பட்டவர்களுடைய ஆவி, ஆத்துமாக்கள் மட்டும் தேவனுக்கு முன்பாக, பிழைக்கிற படியால் இவர்களுக்கு இரண்டாம் மரணமாகிய அக்கினி நரக ஆக்கினித்தீர்ப்பு இல்லை, மேலும் முதலாம் மரணத்தில் மரணமடைந்த இவர்களுடைய சரீரம் இரண்டாம் உயிர்தெழுதலில் நியாயத்தீர்க்கப்பட்டு, தங்களுடைய நீதிக் கிரியைகளுக்கேற்ப ஏதாவது ஒரு மிருக சாயலைப்பெற்றுக்கொண்டு நித்தியமாக பிழைக்கிறார்கள். Rom_8:1-4, 1Pe_3:18,1Co_15:35-42,
 
4-3-5 பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண நீதியை பின்பற்றினவர்கள் மாம்சத்திலே / சரீரத்திலே ஆக்கினைக் குள்ளாக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக ஆவி, ஆத்துமாவில் பிழைக் கிறார்கள், இவர்கள் தேவனுடைய கோபாக்கினையாகிய அக்கினி நகரகத்திலிருந்து தப்புவிக்கப்படுவார்கள். Rom_2:14-15,Rom_2:25-29, 1Co_3:11-15, 1Co_5:1-5,Gal_3:10-13
 
4-3-6 நியாயப்பிரமாண நீதியைப் பின்பற்றி தங்கள் மாம்சத்திலே / சரீரத்திலே தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பை அடைந்திருக்கிறவர்கள் ; முதலாம் உயிர்தெழுதலில் பங்கு பெற முடி யாமல், தங்கள் சரீரத்தின் முதலாம் மரணமாகிய தேவனுடைய ரூபத் திலும், சாயலிலும் மரணமடைந்து, மிருக சரீரத்தின் சாயலையும் ரூபத்தையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
 
4-3-7 முதலாம் மரணமாகிய பாதளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ள முடியாதவர்கள் இரண்டாம் உயிர்தெழுதலில் வெளிப்பட்டு, வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின் மூலம் தங்கள் நீதிக் கிரியைகளுக்கேற்ப எதாவது மிருக சரீரத்தின் சாலையும், ரூபத்தையும் பெற்று இரண்டாம் மரணமாகிய அக்கினி நரக நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலையாக்கப்படுவார்கள். 1Co_3:11-15, 1Co_5:1-5,1Co_15:35-44,Rev_20:11-15, 
 
4-4-0 இரண்டாவது உயிர்தெழுதல் :-
 
ஆவி, ஆத்துமாவும், சரீரமும், மரணத்திலே நிலை கொண்டிருக்கிறபடியால், இரண்டாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து நியாயத்தீர்ப்பினால் அவர்களுடைய நீதிக்கிரியைகள் கணக் கிடப்படுகிறது.
 
4-5-0 இரண்டாவது மரணம் :-
 
இரண்டாம் உயிர்தெழுதலை பெற்றுக் கொண்ட ஆவி, ஆத்துமாவும், சரீரமும், நியாயத்தீர்க்கப்பட்ட பின்பும், தொடர்ந்து மரணத்திலே நிலை கொண்டிருக்கும்போது, ஆவி, ஆத்துமாவும் சரீரமும் இரண்டாம் மரணமாகிய அக்கினி நரக நியாயத்தீர்ப்பை பெற்றுக்கொள்ளுகிறது.
 
4-6-0 கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்று கிறார் :-
 
4-6-1 சாவுள்ள ஆவி, ஆத்துமா சாவமையாகிய நித்திய ஜீவனை தரித்துக் கொள்ளும் போது ஆவி, ஆத்துமாவின் மரணம் ஜெயமாக விழுங்கப்படுகிறது. 1Co_15:56,Rom_6:23,Jam_1:13-15 , Rom_5:12-13, Rom_7:7-13, Ecc_8:5-6, 
 
4-6-2 நியாயப்பிரமாண நீதியினால் ஒருவனும் தேவனுக்கு முன்பாக நீதிமான் அல்ல, ஆனால் நியாப்பிரமாண நீதியினால் அவர்களுடைய ஆவி, ஆத்துமா, மனுஷ நீதியினால் / சுய நீதியினால் பிழைக்கிறது. Rom_3:19-20, Rom_10:1-5, Lev_18:1-5, Eze_20:25,1Ti_1:8-11,Phi_3:9-11,Rom_4:15,Gal_3:10-13,
 
4-6-3 கிறிஸ்து தன்னுடைய பாவ மாம்சத்திலே பாவத்தை ஆக்கினித் தீர்ப்பு செய்து பலி செலுத்தி, நியாப்பிரமாண நீதியை நிறைவேற்றுகிற படியால் கிறிஸ்து நியாப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார். ஒருவனுடைய பாவ மாம்சத்திலே பாவத்தை ஆக்கினித் தீர்ப்புசெய்து / பலி செலுத்தி, பாவ மாம்ச அவயவங்களிலே நியாயப்பிரமாண நீதியைத் தரித்துக் கொள்ளும் போது ஆவி, ஆத்துமாவின் மரணம் ஜெயமாக விழுங்கப்படுகிறது. 1Co_15:54,Rom_8:2-4,Rom_12:21,Gen_4:5-8,
 
4-6-4 தீமையை நன்மையினால் ஜெயங்கொண்டு பாவ மாம்சத்திலே பாவத்தை ஆக்கினித் தீர்ப்பு / பலி செலுத்தும் போது, ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்படுகிறது ; அந்த ஆவியில் போய் காவலில் உள்ள ஆவிகளுக்கு கிறிஸ்து பிரசங்கித்தார். 1Pe_3:17-20,1Pe_4:5-6,
 
4-6-5 தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் நோவா காலத்து ஜலப்பிரலத்தில் மரித்தவர்கள் மனுஷர் முன்பாக மாம்சத்திலே / சரீரத்திலே ஆக்கினிக் குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன் முன்பாக ஆவி, ஆத்துமாவிலே பிழைக்கும் படியாக; அவர்களுக்கும் பூமியின் தாழ்விடங்களில் / பாதாளத்தில் கிறிஸ்து இறங்கி சுவிஷேசம் பிரசங்கித்தார். . 1Pe_3:17-20,1Pe_4:5-6, 
 
4-7-0 நியாயப்பிரமாணம் ஒரு பள்ளி ஆசிரியர் :-
 
4-7-1 கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிர மாணத்தை, கிறிஸ்துவின் விசுவாசத்தை பின்பற்றுகிறவர்களுக்கு அளிக்கும்படி, வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவத்தின் கீழ் அடைத்து போட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் காவலில் வைத் திருக்கிறது. Gal_3:22-23,Rom_7:14-25, 
 
4-7-2 நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்று கிறபடியால் நியாயப்பிரமாண நீதியானது, பாவத்தின் கீழ் அடைக்கப் பட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் காவல் பண்ணப்பட்டிருந்த நம்மை விடுதலையாக்கி, கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிர மாணத்திற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருக்கிறது. Rom_8:1-4,Rom_8:5-11,Eph_2:1-5, Gal_3:10-13, Rom_5:17-21,
 
4-7-3 நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவின் விசுவாசத் தினால் வருகிற நீதிப்பிரமாணத்திற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருக்கிறது. Gal_3:24, , Heb_10:1-9,Heb_9:8-12,Rom_5:12-13,
 
4-7-4 நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிற படியால், நியாயப்பிரமாண நீதியின் மூலம் கிடைக்கிற ஆவி, ஆத்துமாவின் இரட்சிப்பு, நம்மை கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிரமாணத்திற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருந்து தேவனுடைய ரூபமும் சாயலுமான சரீர இரட்சிப்பிற்கு வழி நடத்துகிறது.
 
4-8-0 நீதிப்பிரமாண நீதியினால் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் முதலாம் உயிர்தெழுதல் :-
 
4-8-1 பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களில் சிலர் மனசாட் சிப் பிரமாணத்தினால் நியாயப்பிரமாணத்தையும் / மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணத்தையும் பெற்றுக் கொண்டார்கள்; இவர்களுக்குள்ளே மேலும் சிலர், தங்களுடைய நீதிக்கிரியைகளில் பசிதாகம் உள்ளவர்களாக இருந்து, கிறிஸ்துவின் மூலம் வருகிற விசுவாச தேவ நீதி வெளிப்படுவதற்கு முன்னே, தங்களுடைய மனசாட்சிப் பிரமாணத்தின் மூலமாகவே, விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிரமாணத்தின் கிரியைகளை செய்து, விசுவாசத்தினால் நீதிமான்களாக மாறியிருக்கிறார்கள்.
 
4-8-2 கிறிஸ்து பாதாளத்தில் இறங்கி பிரசங்கித்தபோது, மனசாட்சியில் நியாயப்பிரமாண நிதியை பின்பற்றினவர்களுக்கு ஆவி, ஆத்துமா, அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாகும் பொதுவான இரட்சிப்பையும்; கிறிஸ்துவின் மூலம் வருகிற விசுவாச தேவ நீதி வெளிப்படுவதற்கு முன்னே, விசுவாச தேவ நீதியை பின்பற்றினவர்களுக்கு, ஆவி, ஆத்துமாவும், சரீரமும் இரட்சிப்படைகிற மேன்மையான முதலாம் உயிர்தெழுதலை பெற்றுக் கொள்ளுகிற விசேஷ இரட்சிப்பின் நற்செய்தியையும் கிறிஸ்து அறிவித்தார்.
 
4-8-3 கிறிஸ்துவின் மூலம் விசுவாச தேவ நீதிப்பிரமாணம் வெளிப்படுவதற்கு முன்னே, தங்களுடைய மனசாட்சி பிரமாணத் தின் மூலமாகவே, கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் கிரியைகளை பின்பற்றினவர்களுடைய ஆவி, ஆத்துமாவும்,சரீரமும், இரட்சி படைந்து மேன்மையான முதலாம் உயிர்தெழுதலுக்கு தகுதி யுள்ளவர்களாக இருந்து, பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங் கொள்ளுகிறபடியால் ; இவர்கள் கிறிஸ்துவின் மூலம் பாதாளத்தி லிருந்து விடுதலையாக்கப்பட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான் களின் இளைப்பாறுகிற பரதேசிக்கு வந்து சேர்ந்து, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் வரிசையில் இணைக்கப்படுகிறார்கள்.
 
கிறிஸ்துவின் மூலம் விசுவாச தேவ நீதியைப் பெற்றுக் கொண்ட புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் இணைந்து, கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் வரிசையில் இணைக்கப்படுகிறார்கள்.
 
4-9-0 நீதிப்பிரமாணத்தை பின்பற்றுகிற சந்ததி வரும் வரை, வேதம் எல்லாரையும் ஏகமாய் மாயையின் காவலின் கீழ் வைத்திருக்கிறது :-
 
4-9-1 கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தின் மூலம் வருகிற, சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு அளிக்கும் படியாக; வேதம் எல்லாரையும் ஏகமாய் பொய்யின் கீழ் அடைக்கலமாக்கி மாயையின் மறைவிடத்தின் கீழ், காவலில் வைத்திருக்கிறது. ,Rom_8:19-23,2Co_5:1-10,Isa_28:14-15,Isa_5:18-25, Isa_8:5-15, Isa_7:1-9, Isa_30:27-28 ,
 
4-9-2 நீதிப்பிரமாணம் ஒரு தiமை ஆசிரியர் :-
 
நீதிப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிற படியால் நீதிப்பிரமாணத்தின் நீதியானது, பொய்யின் கீழ் அடைக்கலமாக்கப் பட்டு மாயையின் மறைவிடத்தின் கீழ் காவலில் இருந்த நம்மை விடு தலையாக்கி, கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகீற சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுதவதற்கு வழி நடத்துகிற ஒரு தலைமை ஆசிரியராக இருக்கிறது.
 
4-10-0 கிறிஸ்து ஒரு தலைமை ஆசிரியர் :-
 
4-10-1 கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிறபடியால், கிறிஸ்து ஒரு தலைமை ஆசிரியர்.
 
கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை தன் சரீரத்தில் நிறை வேற்றின பின்பு, கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தின் நீதிக்கிரியைகளை நிறை வேற்றுவதற்காக, பாதாளத்தில் / பூமியின் தாழ்விடங்களில் இறங்கி, சிறைபட்டவர்களை சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்து, உன்னதத்திற்கு ஏறினார்; கிறிஸ்துவை தலையாகப் பற்றிக்கொண்டு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குக்குத்தக்க பூரண புருஷராக எல்லாவற்றிலும் / நீதிப்பிரமாணத்தின் விசுவாசத்திலும், கிரியைகளிலும் கிறிஸ்துவை பின்பற்றி, வளர்கிறவர்களாக இருக்கும் படி அப்படி செய்தார். Rom_8:2-4, 1Pe_3:18-19, 1Pe_4:5-11, Eph_4:7-16, Psa_68:18, Isa_42:6-7,
 
4-10-2 கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகள் இருதயத்திற்கு சமீபமாக இருக்கும்போது, அவைகள் பாதாளமாகிய இருதயத்திற்கு இறங்கி சென்று நீதிப்பிரமாணத்தை பிரசங்கிக்கிறது :-
 
கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை தன் சரீரத்தில் நிறை வேற்றின போது, கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டது போல, தங்களுடைய சரீரத்தில் நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்றுகிறபோது, தங்களுடைய ஆவி, ஆத்துமாவில் உயிர்ப் பிக்கப்பட்டவர்கள்; கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தை நிறைவேற்று வதற்காக, தேவனுடைய வார்த்தைகளை தங்கள் இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து , கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா, பாதாளத்தில் இறங்கினதுபோல தங்களுடைய ஆவி, ஆத்து மாவையும் பூமிக்குரிய பாதாளமாகிய தங்களுடைய இருதயத்தில் இறங்கச் செய்து நீதியின் பிரமாணத்தை பிரசங்கிக்கிறது. Rom_10:6-11, Deu_30:11-14, Pro_27:20, Pro_30:15-16, Hab_2:4-6,
 
4-10-3 கிறிஸ்து பாதாளத்தில் சிறைபட்டவர்களை விடுதலையாக்கினதுபோல, தன்னுடைய சரீர அவயவங்களை மாயைகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, அவை களை நீதிக்கு அடிமையாக மாற்றுவது :-
 
கிறிஸ்துவின் பிரசங்கத்தினால் பாதாளத்தில் பாவத்திற்கும், மரணத்திற்கும் சிறைபட்டிருந்தவர்களை கிறிஸ்து விடுதலையாக் கினதுபோல; தன்னுடைய ஆவி, ஆத்துமாவே தன்னுடைய இருதய மாகிய பாதாளத்தில் இறங்கிச் சென்று, பொய்யின் ஆவிகளுக்கும் மாயையின் ஆவிகளுக்கும் சிறைபட்டிருக்கிற தன்னுடைய சரீர அவயங்களுக்கு நீதியின் பிரமாணத்தை பிரசங்கித்து, மனந்திருப்பி, அவைகளை நீதிக்கு அடிமையாக்கிக் கொள்ளுகிறார்கள். Rom_7:14-25,Rom_8:7-18, 2Co_5:1-10, 2Co_5:17-20,1Co_15:46-54,
 
4-10-4 கிறிஸ்துவின் புத்திர சுவிகார மகிமையின் சுயா தினத்தை சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள், கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள்.
 
பொய்யின் அடைக்கலத்திலிருந்தும் மாயையின் மறைவிடத் தின் காவலிருந்தும் விடுதலையாகுகிறவர்கள், கிறிஸ்துவின் நீதிப் பிரமாணத்தினால், ஆவியின் வரங்களைப் பெற்றுக் கொண்டு, தங்களுடைய சரீர அவயவங்களை நீதிக்கு அடிமையாகும்படி ஒப்புக் கொடுக்கிறவர்கள்; கிறிஸ்துவின் புத்திர சுவிகார மகிமையின் சுயாதினத்தை சுதந்தரித்துக் கொண்டு, கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள். 1Co_12:1-7, 1Co_12:8-12,,1Co_12:12-21, 1Co_12:22-31,Eph_4:11-13, Eph_4:21-32, 
 
4-10-5 கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தை பின்பற்றாமல் மாயையின் மறைவிடத்திலே அடைக்கலமானவர்களுக்கு தேவனு டைய நித்திய நியாயத்தீர்ப்பு Isa_28:14-15, Isa_28:16-21, Isa_30:27-28, Isa_30:8-17, Psa_2:1-12,
 
4-10-6 இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய அந்திக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்க தரிசிகளும், அவர்கள் கட்டின மனோ இராஜ்ஜியமான மாயையின் மாளிகையும் தேவனுடைய வாதை களினால் நித்தியமாக நியாயத்தீர்க்கப்படுகிறது. Isa_7:1-9, Isa_8:5-15,Isa_30:27-28, Job_15:31-35, Eze_13:1-8, Eze_13:9-16, Eze_13:17-23,Mat_7:15-20,Mat_7:21-29, Isa_8:19-22,1Sa_12:19-25,

Previous
Home Next
Social Media
Location

The Scripture Feast Ministries