தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 04


கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள்

பொருளடக்கம் இரண்டு

2-0 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய இருதயத்திற்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்
 
கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள். 
 
2-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக் கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா மனுஷ நீதியில் / சுய நீதியில் பிழைக்கிறது. இவர்கள்பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
 
2-1 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப்பிரமாணத்தின் அப்பங்களை தங்களுடைய வாய்க்கு தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக ஏற்றுக் கொண்டு நன்மை தீமைகளை பகுத்தறிந்து நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறபோது, அவைகளினால் தங்களுடைய ஆத்துமா மனுஷ நீதியினால் பிழைக்கிறது / சுய நீதியில் பிழைக்கிறது. Rom_3:20-21, Gal_3:10-12, Deu_32:45-47, Isa_51:7, Rom_10:5
 
2-2 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப் பிரமாணத்தின் நன்மை தீமைகள் புற ஜாதிகளுடைய மனசாட்சியின் மூலம் அவர்களுடைய இருதயத்திற்கு சமீபமாகயிருந்து, சாட்சியிடுகிறபடியால், அவைகளில் வெளிப்படுகிற சுய நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறபோது, அவர்களுடைய ஆத்துமா மனுஷ நீதியினால் பிழைக்கிறது / சுய நீதியில் பிழைக்கிறது Rom_2:14-16, Rom_2:27-29, Rom_7:22-25, Rom_1:19-23, Rom_10:20, Isa_65:1, Joh_9:31-41
 
2-3 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளை நேரடியாகவோ, மனசாட்சியின் மூலமாகவோ பெற்றுக் கொண்டவர்களுடைய இருதயத்தில், நன்மை தீமைகள் சாட்சியிட்டு வெளிப்படுகிறபடியால் தேவனுடைய வார்த்தைகளுக்கு பஞ்சம் பெருகி வருகிற காலத்தில்; இவர்கள் பயப்படாமலும் கலங்காமலும், பல இடங்களுக்கு அலைந்து திரியாமலும் இருந்து, தங்களுடைய ஆத்துமாவில் சுய நீதியில் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் இவர்கள் உலகத்தில் தோன்றின எந்த ஒரு மதத்தின் அடையாளத்தையோ அல்லது சுயமான அடை யாளத்தையோ தரித்துக் கொள்ள மாட்டார்கள்.
 
2-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருக்கிற, புற ஜாதிகள் தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாயிருக்கிற கர்த்தருடைய வசனங்களையும் வேத பிரமாணங்களையும் பெற்றுக் கொள்ளுவதற்காக, ஒரு யூதனுடைய நீதியின் கிரியைகளை தானும் செய்து, பத்து புற ஜாதிகள் தேவனுடைய சமூகத்திற்கு வந்து சேருவார்கள். Isa_2:1-4, Zec_8:20-23, Mic_4:1-3, Mic_4:4-7, Jer_50:4-8
 
2-5 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருப்பவர்கள்; தங்களுடைய இருதயத்தை பாவத்திலிருந்து மனந்திரும்பி சமர்ப்பண ஊழிய அழைப்புடன் தேவானல் முன் குறிக்கப்பட்டவர்களுடன் இணைந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள். Isa_2:1-4, Zec_8:20-23, Mic_4:1-3, Mic_4:4-7 
 
2-6 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருந்து புசிக்கிறவர்கள், தேவனை விசாரித்து கேளாதவர்களாக இருந்தாலும், தேவன் அவர்களுக்கு வெளிப்படுகிறார். Mat_19:12, Isa_56:3-8, Isa_56:9-12, Isa_65:1, Rom_10:20, Isa_19:19-21 
 
2-7 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருப்பவர்கள் ; சமர்ப்பண ஊழிய அழைப்புடன் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து, இரத்த சாட்சியாகவும் மரிப்பார்கள். Mat_25:31-34, Mat_25:35-40, Mat_25:41-46, Joh_10:15-16, Rev_11:1-2, Rev_7:9-12, Rev_7:13-14, Rev_7:15-17
 
2-8 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு தூரமாக வைத்திருக்கிறவர்கள்; ஒரு யூதனுடைய நீதியின் கிரியைகளை தானும் செய்து, தேவனுடைய வார்த்தைகளிடத்திற்கும், வேதத்தின் பிரமாணங்களுக்கும், வந்து சேராமல், முரட்டாட்டம் பண்ணி, தேவனுடைய சமூகத்தை விட்டு விலகியிருப்பார்கள். Rom_10:21, Pro_1:23-33, Jer_18:15-17, Zec_7:12-13, Isa_2:1-4, Isa_2:5-9, Isa_65:2-7, Isa_65:10-15, Hos_2:13-16, Jos_7:22-26, Jos_6:18-19


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries