தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 05
ஆவி, ஆத்துமாவின், மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்
பொருளடக்கம் ஏழு
7-0 மனிதனுடைய ஜென்ம சரீரத்தின் மரணமும் ஆவிக்குரிய சரீரத்தின் உயிர்தெழுதலும்
7-1-0, ஆவி, ஆத்துமா சரீரத்தின் மரணமும் உயிர்தெழுதலும் :-
7-1-1 சாவுள்ள ஆவி, ஆத்துமா, தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் சாவாமையை தரித்துக் கொள்ளும்போது; ஆவி, ஆத்துமாவின் மரணம், ஜெயமாக விழுங்கப்பட்டு ஆவி, ஆத்துமாவின் மரணம், ஜீவனாக உயிர்ப்பிக்கப்படுகிறது. 1Co_15:50-54
7-1-2 அழிவுள்ள சரீரம் தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் அழியாமையை தரித்துக் கொள்ளும் போது சரீர மரணம், ஜெயமாக விழுங்கப்பட்டு, மரணம் உயிர் தெழுதலாக வெளிப்படுகிறது 1Co_15:50-54.
7-1-3 ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் மரணம் தேவனு டைய நித்திய ஜீவ வார்ததைகளினால் ஜெயமாக விழுங்கப்படாமல் இருக்கும் போது அவைகள் தொடர்ந்து மரணத்திலே நிலை கொண் டிருக்கிறது.
7-1-4 ஆவி, ஆத்துமாவின் மரணமும், சரீரத்தின் மரணமும் தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஜெயமாக விழுங்கப் படாமல் இருக்கும் போது; அவைகள் இரண்டாம் உயிர்தெழுதலில் வெளிப்பட்டு, நியாயத்தீர்க்கப்படுவதால் மரணத்தின் பல நிலைகள் / தன்மைகள் மதிப்பிடப்பட்டு அதற்கேற்றபடியுள்ள பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளுகிறது. Rev_20:4-6, Rev_20:11-15, 1Co_15:35-42, 1Co_15:43-49, Mat_6:25-30,
7-1-5 இரண்டாவது மரணம் :-
இரண்டாம் உயிர்தெழுதலை பெற்றுக் கொண்ட ஆவி, ஆத்துமா, சரீரம், நியாயத்தீர்க்கப்பட்ட பின்பும், தொடர்ந்து மரணத்திலே நிலை கொண்டிருக்கும்போது, ஆவி, ஆத்துமா சரீரம் இரண்டாம் மரணமாகிய அக்கினி நரக நியாயத்தீர்ப்பை பெற்றுக்கொள்ளுகிறது.
7-2-0 முதலாம் மரணத்தில் பங்கடைந்து இரண்டாம் மரணத்தை ஜெயங்கொள்ளுவது :-
7-2-1 சரீரம், முதலாம் மரணமாகிய பாதாளத்தின் வல்லமை யினால் மரணமடைந்து, ஆவி, ஆத்துமா, மட்டும் இரண்டாம் மரண மாகிய அக்கினி நரக நியாயத்தீர்ப்பை ஜெயங்கொள்ளுவது. Rev_20:4-6, Rev_20:11-15,
7-2-2 அழிவுள்ள சரீரம் கிறிஸ்துவின் விசுவாச நீதியினால் அழியாமையாகிய நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள முடியா மல், முதலாம் மரணமாகிய பாதாளத்தின் வல்லமையினால் தேவனு டைய ரூபத்திலும் சாயலிலும் மரணமடைகிறது. இப்படி சரீரம் மட் டும் முதலாம் மரணத்தில் மரணமடைந்து, ஆவி, ஆத்துமா மட்டும் தேவனுடைய நியாயப்பிரமாண நீதியினால் பிழைக்கிற படியால், இந்த ஆவி, ஆத்துமாவிற்கு தேவனுடைய கோபாக்கினையாகிய இரண்டாம் மரணத்தின் ஆக்கினித்தீர்ப்பு இல்லை. Rev_20:4-6, Rev_20:11-15,
7-2-3 முதலாம் மரணத்தில் மரணமடைந்த சரீரம் இரண்டாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து, அதன் நீதிக்கிரியைகளின் படி ஏதாவது ஒரு மிருக சாயலைப் பெற்றுக் கொண்டு நித்திய ஜீவ னில், நித்தியமாக பிழைக்கிறது, இது அக்கினி நரகத்திலிருந்து இரட் சிப்பு / பொதுவான இரட்சிப்பு / பகுதி இரட்சிப்பு. . Rev_20:11-15, 1Co_15:35-42, 1Co_15:43-49,Mat_6:25-30
7-2-4 இரண்டாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிற நியாயப் பிரமாண நீதியினால் ஆவி, ஆத்துமாவின் இரட்சிப்பு:-
கிறிஸ்து பாவ மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைத் தீர்ப்பு செய்து பாவத்தை பலி செலுத்தினபோது, நியாயப்பிரமாண நீதி நிறைவேற்றப்படுகிறது; அப்பொழுது கிறிஸ்து மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்றினது போல, தங்களுடைய பாவ மாம்சத்திலே தங்களுடைய பாவத்தை ஆக்கி னiத் தீர்ப்பு செய்து பாவத்தை பலி செலுத்துகிறவர்களுக்கு / தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு; அவர்களுடைய ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டு நித்திய ஜீவனை அடைந்து பிழைக்கிறது.
இப்படிப்பட்டவர்களுடைய ஆவி, ஆத்துமாக்கள் மட்டும் தேவனுக்கு முன்பாக, பிழைக்கிற படியால் இவர்களுக்கு இரண்டாம் மரணமாகிய ஆக்கினை நரக ஆக்கினைத் தீர்ப்பு இல்லை, மேலும் முதலாம் மரணத்தில் மரணமடைந்த இவர்களுடைய சரீரம் இரண்டாம் உயிர்தெழுதலில் நியாயத்தீர்க்கப்பட்டு, தங்களுடைய நீதிக் கிரியைகளுக்கேற்ப ஏதாவது ஒரு மிருக சாயலைப்பெற்றுக்கொண்டு நித்தியமாக பிழைக்கிறார்கள். Rom_8:1-4, 1Pe_3:18, 1Co_15:35-42,
7-2-5 பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண நீதியை பின்பற்றினவர்கள் மாம்சத்திலே / சரீரத்திலே ஆக்கினைக் குள்ளாக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக ஆவி, ஆத்துமாவில் பிழைக் கிறார்கள், இவர்கள் தேவனுடைய கோபாக்கினையாகிய அக்கினி நகரகத்திலிருந்து தப்புவிக்கப்படுவார்கள். . Rom_2:14-15, Rom_2:25-29, 1Co_3:11-15, 1Co_5:1-5, Gal_3:10-13 .
7-2-6 நியாயப்பிரமாண நீதியைப் பின்பற்றி தங்கள் மாம்சத்திலே / சரீரத்திலே தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பை அடைந்திருக்கிறவர்கள் ; முதலாம் உயிர்தெழுதலில் பங்கு பெற முடி யாமல், தங்கள் சரீரத்தின் முதலாம் மரணமாகிய தேவனுடைய ரூபத் திலும், சாயலிலும் மரணமடைந்து, மிருக சரீரத்தின் சாயலையும் ரூபத்தையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
7-2-7 முதலாம் மரணமாகிய பாதளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ள முடியாதவர்கள் இரண்டாம் உயிர்தெழுதலில் வெளிப்பட்டு, வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின் மூலம் தங்கள் நீதிக் கிரியைகளுக்கேற்ப எதாவது மிருக சரீரத்தின் சாலையும், ரூபத்தையும் பெற்று இரண்டாம் மரணமாகிய அக்கினி நரக நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலையாக்கப்படுவார்கள். 1Co_3:11-15, 1Co_5:1-5, 1Co_15:35-44, Rev_20:11-15,
7-3-0 பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண நீதியை பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்துவின் ஜீவ அப்பங்கள் தங்களுடைய வாய்க்கு தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக் கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா மனுஷ நீதியில் / சுய நீதியில் பிழைக்கிறது; இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
7-3-1 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப்பிரமாணத்தின் அப்பங்களை தங்களுடைய வாய்க்கு தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக ஏற்றுக் கொண்டு நன்மை தீமைகளை பகுத்தறிந்து நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறபோது, அவைகளினால் தங்களுடைய ஆத்துமா மனுஷ நீதியினால் பிழைக்கிறது / சுய நீதியில் பிழைக்கிறது. Rom_3:20-21, Gal_3:10-12, Deu_32:45-47, Isa_51:7, Rom_10:5
7-3-2 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப் பிரமாணத்தின் நன்மை தீமைகள் புற ஜாதிகளுடைய மனசாட்சியின் மூலம் அவர்களுடைய இருதயத்திற்கு சமீபமாகயிருந்து, சாட்சியிடுகிறபடியால், அவைகளில் வெளிப்படுகிற சுய நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறபோது, அவர்களுடைய ஆத்துமா மனுஷ நீதியினால் பிழைக்கிறது / சுய நீதியில் பிழைக்கிறது Rom_2:14-16, Rom_2:27-29, Rom_7:22-25, Rom_1:19-23, Rom_10:20, Isa_65:1, Joh_9:31-41
7-3-3 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளை நேரடியாகவோ, மனசாட்சியின் மூலமாகவோ பெற்றுக் கொண்டவர்களுடைய இருதயத்தில், நன்மை தீமைகள் சாட்சியிட்டு வெளிப்படுகிறபடியால்
தேவனுடைய வார்த்தைகளுக்கு பஞ்சம் பெருகி வருகிற காலத்தில்; இவர்கள் பயப்படாமலும் கலங்காமலும், பல இடங்களுக்கு அலைந்து திரியாமலும் இருந்து, தங்களுடைய ஆத்துமாவில் சுய நீதியில் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் இவர்கள் உலகத்தில் தோன்றின எந்த ஒரு மதத்தின் அடையாளத்தையோ அல்லது சுயமான அடை யாளத்தையோ தரித்துக் கொள்ள மாட்டார்கள்.
7-3-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருக்கிற, புற ஜாதிகள் தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாயிருக்கிற கர்த்தருடைய வசனங்களையும் வேத பிரமாணங்களையும் பெற்றுக் கொள்ளுவதற்காக, ஒரு யூதனுடைய நீதியின் கிரியைகளை தானும் செய்து, பத்து புற ஜாதிகள் தேவனுடைய சமூகத்திற்கு வந்து சேருவார்கள். Isa_2:1-4, Zec_8:20-23, Mic_4:1-3, Mic_4:4-7, Jer_50:4-8
7-3-5 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருப்பவர்கள்; தங்களுடைய இருதயத்தை பாவத்திலிருந்து மனந்திரும்பி சமர்ப்பண ஊழிய அழைப்புடன் தேவானல் முன் குறிக்கப்பட்டவர்களுடன் இணைந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள். Isa_2:1-4, Zec_8:20-23, Mic_4:1-3, Mic_4:4-7
7-3-6 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருந்து புசிக்கிறவர்கள், தேவனை விசாரித்து கேளாதவர்களாக இருந்தாலும், தேவன் அவர்களுக்கு வெளிப்படுகிறார். Mat_19:12, Isa_56:3-8, Isa_56:9-12, Isa_65:1, Rom_10:20, Isa_19:19-21
7-3-7 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருப்பவர்கள் ; சமர்ப்பண ஊழிய அழைப்புடன் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து, இரத்த சாட்சியாகவும் மரிப்பார்கள். . Mat_25:31-34, Mat_25:35-40, Mat_25:41-46, Joh_10:15-16, Rev_11:1-2, Rev_7:9-12, Rev_7:13-14, Rev_7:15-17, Mat_19:12, Isa_56:1-8, Isa_56:9-12,
7-3-8 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு தூரமாக வைத்திருக்கிறவர்கள்; ஒரு யூதனுடைய நீதியின் கிரியைகளை தானும் செய்து, தேவனுடைய வார்த்தைகளிடத்திற்கும், வேதத்தின் பிரமாணங்களுக்கும், வந்து சேராமல், முரட்டாட்டம் பண்ணி, தேவனுடைய சமூகத்தை விட்டு விலகியிருப்பார்கள். Rom_10:21, Pro_1:23-33, Jer_18:15-17, Zec_7:12-13, Isa_2:1-4, Isa_2:5-9, Isa_65:2-7, Isa_65:10-15, Hos_2:13-16, Jos_7:22-26, Jos_6:18-19