தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 06
நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம் 10-11-12
10. வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்து விருந்து
11. திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், அங்கியையும் சுத்தம் செய்தல்.
12. தீமையை ஜெயங்கொள்ளுவதால் நீதியின் வஸ்திரம் தரித்து விருந்து
அத்தியாயம் பத்து
நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளு வதற்கு வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக் கொள்ளுதல்:-
வேத பிரமாணத்தின்படி நன்மை, தீமைகளை அறிந்து கொண்டு, தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளுவதின் மூலம் நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளுதல்
Rev 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
Rev 19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
Isa_64:6, Rev_22:14, Heb_5:12-14, Amo_5:14, Gen_1:16-17, Gen_21:8-10, Gal_4:28-31, Isa_28:9, Heb_6:1-2, 2Ti_3:16-17, Tit_3:8, Eph_5:23-26,
அத்தியாயம் பதினொன்று
யூதர்கள் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து
கொள்ளுவதற்காக தங்கள் வஸ்திரத்தையும், அங்கியையும்
திராட்சரசத்திலே சுத்தம் செய்தல் :-
யூதர்கள் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளுவதற்காக தங்கள் வஸ்திரத்தையும், அங்கியையும் கிறிஸ்து வின் உபதேசத்தினால் சுத்தம் செய்து கொள்ளுதல் Gen_49:8-12
ழு Gen 49:8 யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
Gen 49:9 யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
Gen 49:10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
Gen 49:11 அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக் கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
Gen 49:12 அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.
அத்தியாயம் பன்னிரெண்டு
புற ஜாதிகள் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளுவதற்கு தங்களுடைய மனசாட்சியின் பிரமானத்தின் படி தீமையை நன்மையால் ஜெயங்கொள்ளுவதால் நீதியின் வஸ் திரத்தை தரித்துக் கொள்ளுதல் :-
Joh 9:31 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
Joh 9:32 பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே.
Joh 9:33 அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
Joh 9:34 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.
Joh 9:35 அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.
Joh 9:36 அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
Joh 9:37 இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
Joh 9:38 உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
Joh 9:39 அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
Joh 9:40 அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
Joh 9:41 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.
Rom 4:5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
Rom 4:6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
Rom 4:7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
Rom 4:8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
Rom 4:9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.
Rom 4:10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே.
Pro_1:23-25, Pro_10:17, Pro_4:13, Pro_5:6, Pro_15:31-33 , Isa_2:1-4, Mic_4:1-3,Isa_65:12-14, Jer_15:16-21, Isa_33:15-17, Job_28:12-14, Job_28:20-28, Gen_4:7, Rom_8:27-33,