தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 06


நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி

பொருளடக்கம் 7-8-9

7. நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள்.
8. சகல ஜனங்களுக்கும் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்து
9. சகல பறவைகளுக்கும் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்து
அத்தியாயம் ஏழு
 
நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு ஏற்கனவே அழைப்பப்பட்டவர்கள்:-
 
இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் மூலம் தேவனுடன் உடன்படிக்கை செய்து அவருடைய நாமத்தை 
 
ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேரையும் 
 
இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, தான் இராஜாவாக முடிசூடப்படும் பட்டாபிஷேக விழாவிற்கு அழைத்து, அதில் பங்கடைபவர்களுக்கு தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக கொடுத்து, மேலும் அவர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் பதவிகளை பரிசாக / வெகுமதியாக கொடுத்து சிறப்பிக்கிறார் / மேன்மைபடுத்து கிறார், Mat_22:1-14, Luk_14:1-24, Luk_12:31-48, Luk_13:23-30, Rev_3:20,Rev_19:1-9, Isa_65:13-16, Est_1:4-22,
 
ஆனால் இந்த பட்டாபிஷேக விழாவிற்கு அழைக்கப்பட்டு தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை அசட்டை செய்து அலட்சியப்படுத்தினவர்கள் அநேகர், அபாத்திரராய் போய்விட்டார்கள்; மேலும் சிலர் முந்தினோர் பிந்தினோராகவும், சிலர் பிந்தினோர் முந்தினோராகவும் பங்கடைந்தார்கள், இதில் நம்முடைய பெயர் பாக்கியவான்கள் வரிசையில் இருக்கிறதா? என்பதே கீழே உள்ள தேவனுடைய வார்த்தைகளில் தேடிப்பார்போம்.
 
1. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசிக்க மனம் இல்லாதவர்கள்.
 
2. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை அசட்டை செய்தவர்கள்.
 
3. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்க வந்த வேலையாட்களை அவமானப்படுத்தி கல் லெறிந்து கொலை செய்தவர்கள்.
 
4. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை விட முக்கியமான வேலை இருப்பதாக சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு, தங்கள் மனம் விரும்பின சொந்த காரியங்களுக்கு சென்றவர்கள்.
 
5. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்திற்கு செல்ல முன் ஆயத்தம் இல்லாதவர்கள்.
 
6. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசிப்பதற்கேற்ற நீதியின் வஸ்திரம் / கிரியைகள் இல்லாமல் துணிகரமாக உள்ளே பிரவேசித்து இராஜாவினால் வெளியே தள்ளப்பட்டவர்கள்.
 
7. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்திற்கு விரோதமாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல் பட்டதால் தேவனுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பை அடைந்தவர்கள்.
 
8. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்கப்பட்ட முந்தினோர் பிந்தினோராக வந்தவர்கள்.
 
9. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்கப்பட்ட பிந்தினோர் முந்தினோராக வந்தவர்கள்.
 
10. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தில் தாழ்ந்த நிலையிலிருந்து மேன்மையான நிலைக்கு உயர்த்தப்பட்ட வர்கள்.
 
11. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தில் மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்.
 
12. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசித்து தேவனுக்கு துதி, கனம், மகிமை, செலுத்தி தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சியில் பங்கடைந்து அல்லேலூயா! என்று கெம்பீர சத்தமிடுகிறவர்கள். 
 
கிறிஸ்துவுடன் இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமாயிருக் கிறார்கள்; இந்த பாக்கியத்தை அடையும்படி தேவனுடைய சத்தியமான வசனங்களின் விருந்தை தங்களது, புரிந்து கொள்ளும் அளவிற் கேற்றபடி விவரிக்கப் பட்டுள்ளது. 
 
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி ஆராய்ந்து வாசியுங்கள், கர்த்தருடைய வசனம் கேட்க கிடைக்காத பஞ்ச காலத்திலும் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் உங்களை சகல சத்தியமான வசனங்களின் விருந்தை புசிக்கும் படி வழி நடத்துவார். Amo_8:11-13, Isa_34:16-17, Joh_5:39, Act_1:4-5, Act_8:12, Joh_14:16-17, Joh_16:7-15, 1Co_2:9-16,
 
அத்தியாயம் எட்டு
 
ஏற்கனவே நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள், இப்பொழுது ஆபாத்திராக போனபடியால், இந்த பூமியில் உள்ள சகலவிதமான கருத்துக்கோட்பாடுகளின் விசுவாசங்களை பின்பற்றுகிற சிந்தனையாளார்களும் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு அழைப்படுகிறார்கள்.
 
Mat 22:1 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால் :
 
Mat 22:2 பரலோக ராஜ்யம் தன் குமாரனுக்கு கலியாணஞ் செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது
 
Mat 22:3 அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். 
 
Mat 22:4 அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரை அழைத்து நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது ; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக் கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
 
Mat 22:5 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். 
 
Mat 22:6 மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். 
 
Mat 22:7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். 
 
Mat 22:8 அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். 
 
Mat 22:9 ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். 
 
Mat 22:10 அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. 
 
Rev_14:6-7, Isa_25:6-9, Mat_22:8-10, Luk_14:21-24, Luk_14:7-15, Joh_4:20-24, Joe_2:26-32, Eas_1:5-8, Luk_3:5, Luk_2:7-18, 1Pe_1:10-12, Rev_19:17-21,
 
அத்தியாயம் ஒன்பது
 
சகல பறவைகளுக்கும் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்து:- 
 
ஏற்கனவே நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்கப்ட்டவர்கள், இப்பொழுது ஆபாத்ததிராக போனபடியால், இந்த பூமியில் உள்ள சகல விதமான கருத்துக்கோட்பாடுகளின் நன்மை தீமைகளை பகுத்து ஆராய்கிறவர்களும் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.
 
Mat 24:28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 
 
Rev 19:17 பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: 
 
Rev 19:18 நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். 
 
Rev 19:19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். 
 
Rev 19:20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். 
 
Rev 19:21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன. 
 
Eze 39:17 மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள். 
 
Eze 39:18 நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள். 
 
Eze 39:19 நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள். 
 
Eze 39:20 இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. 
 
Eze 39:21 இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள். 
 
Eze 39:22 அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள்.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries