தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 07


தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்

பொருளடக்கம் 1-0-0

0-0-1 தேவனுடைய வெளிப்பாடுகளின் காலங்களும் தேவ தரிசனங்களும்
 
1-0-0 ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-1-0 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-1-1 விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும்
 
1-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-2-1 யேகோவாவாகிய தேவன் தமக்கு பரிசத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.
 
1-3-0 இயேசு கிறிஸ்து என்னம் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-3-1 நியாயப்பிரமாண விதி முறைகளுடன் மனிதனின் கற்பனைகள்
 
1-3-2 புற ஜாதிகளுக்கு இரட்சிப்பு இலவசமாக வழங்கப்படுதல்.
 
1-4-0 தேவ வார்த்தை என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-4-1 விக்கிரங்களை நித்தியமாக முடிவுக்கு கொண்டு வருதல்
 
0-0-1 தேவனுடைய வெளிப்பாடுகளின் காலங்களும் தேவ தரிசனங்களும்
 
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்க மாட்டோம் என்கிறார்கள் து Jer_6:16,
 
தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் மூலம், தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்களின் விருந்து சமைக்க தேவை யான தேவ நாமத்தின் நான்கு காலங்களும் அதனுடன் தொடர் புடைய நான்கு தேவ தரிசனங்களும்.
 
தேவனுடைய வெளிப்பாடுகளின் தொடர்புடைய நான்கு நாமங்களின் காலங்கள் :- 
 
1. சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் வெளிப் பட்ட காலம்- ஆதாம் முதல், மோசே வரை. 
 
2. யேகோவா தேவன் என்னும் நாமத்தில் வெளிப்பட்ட காலம்-
மோசே முதல், இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை வரை.
 
3. இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட காலம் 
 
-இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை முதல், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை
 
4. தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட காலம் -இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை முதல் நித்திய காலங்கள்
 
தேவனுடைய வெளிப்பாடுகளின் தொடர்புடைய நான்கு தேவ தரிசனங்கள் :-
 
1-0 ஜாதிகளின் தரிசனங்கள் 2-0 ஊழியத்தின் தரிசனங்கள் 
 
3-0 இஸ்ரவேலரின் தரிசனங்கள் 4-0 யூதர்களின் தரிசனங்கள்
 
தேவனுடைய நாமம் தொடர்புடைய நான்கு காலங்களையும் அதன் தொடர்புடைய நான்கு தேவ தரிசனங்களையும் ஒற்றுமை, வேற்றுமைப்படுத்தி அதனால் வெளிப்பட்ட காரண காரியங்களின் நம்மை தீமைகளை பகுத்தறிவதின் மூலம் தேவனுடைய சத்தியமான வார்தைகளின் விருந்து சமைக்கப்பட்டு புசிப்பதற்கேற்றபடி தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்களாக பரிமாறப்படுகிது.
 
தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்து இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு இந்த தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை பல ருசியுள்ள தேவ வசனத்தின் தலைப்புகளாக புசித்து அதன் சுவைகளை உணர்ந்து கொண்டபடியால், ஆவி, அத்துமாவில் மறுரூபடைந்து, தங்களுக்கு கொடுத்த தேவ சித்தத்தை நிறை வேற்றுவதின் மூலம் ஜெயங்கொள்ளுகிறவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு தங்களை வெளிப் படுத்திக் காட்டுகிறார்கள்.
 
1-0-0 ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-1-0 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-1-1 ஜாதிகளின் விக்கிர வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும் உண்டாவதற்கு மூலக்காரணங்கள்.
 
1-0. ஜாதிகளின் மனசாட்சிப்பிரமாணம்
 
2-0. மனிதன் விக்கிரக வழிபாடுகளை உருவாக்க மூலக்காரணங்கள்.
 
3-0. மனிதன் ஆசரிப்பு வழி முறைகளை உருவாக்க மூலக்காரணங்கள்.
 
4-0. எழுத்து வடிவம் இல்லாத காலத்தில் பொதுவாக மனிதன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் விதங்கள்.
 
5-0. எழுத்து வடிவம் உள்ள காலத்தில் பொதுவாக மனிதன் தன்னு டைய எண்ணங்களை வெளிப்படுத்தும் விதங்கள்
 
1-0 ஜாதிகளின் மனச்சாட்சிப் பிரமாணம்:-
 
தேவனால் மனிதனின் வாழ்க்கை முறைகளுக்கு இந்தக்கால கட்டத்தில் நியாப்பிரமாணத்தின் சட்ட திட்ட பிரமாணங்கள் பகுந்து பிரித்து கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தங் களது விசுவாசத்தின்படி மனச்சாட்சியில் சுயாதீனப் பிரமாணத்தை தெரிந்து கொண்டு அதனால் மனிதனுடனும் தேவனுடனும் தன்னு டைய நன்மை தீமைகளின் கிரியைகள் மற்றும் தன் கருத்துக்களை வெளிப்படுத்தும் மொழி வடிவம் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. Rom_2:14-16, 1Jo_3:20, Deu_30:11-14, Rom_10:5-8,
 
2-0. மனிதன் விக்கிரகங்களை உருவாக்க மூலக்காரணங்கள் :-
 
தேவனைப்பற்றியும், மனிதனைப்பற்றியும், தன்னுடைய மனதில் தோன்றுகிற நிலையான கருத்துக்களின் நன்மை தீமைகளின் குணாதியங்களை, மற்றவர்களுக்கு தன்னுடைய மொழியின் வாயிலாக வெளிப்படுத்த முடியாமலும், தன்னுடைய மொழிக்கு இந்த காலத்தில் எழுத்து வடிவ மில்லாத காரணத்தினாலும், தன்னு டைய நினைவுகளின் எண்ணத்தோற்றங்ளை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் 
 
அவைகளை வரை படமாகவோ அல்லது மண், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு உருவ மாகவோ செய்து வெளிப்படுத்தினான். இவைகளை தன்னுடைய சந்ததிகள் அறிந்து கொள்ளும்படி பல அடையாளச் சின்னங் களாகவும் பல விக்கிரக சிலைகளாகவும் தோற்றுவித்து இந்நாள் வரை மக்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது.
 
3-0 மனிதன் ஆசரிப்பு வழி முறைகளை உருவாக்க மூலக் காரணங்கள் :-
 
தேவனைப்பற்றியும், மனிதனைப்பற்றியும் தன்னுடைய மனதின் சூழ்நிலைகளுக்கேற்றபடி தோன்றுகிற / மாறக்கூடிய கருத்துக்களின் நம்மை தீமைகளின் குணாதிசயங்களை, வரைபடமாக வெளிப்படுத்த முடியாமல் போகும் போது அவைகளை ஒரு செயல் முறை திட்டம் மூலம் மாதிரியாகவோ அல்லது உண்மைச் செயலாகவோ வெளிப்படுத்தப்படுகிறது. 
 
இப்படிப்பட்ட செயல் முறைகளை மீண்டும் கிரியைகள் மூலம் வெளிப்படுத்தும்போது அந்த கருத்துக்கள் மற்றவர்களுக்கு பரிமாறிக்கொள்ளப்படுகிறது. தன் சந்ததிகளுக்கு கிரியைகள் மூலமாகவே வெளிப்படுத்திகாட்டும் இந்த செயல் முறை திட்டங்கள் இந்நாள் வரை மக்கள் மத்தியில் ஆசரிப்பு வழி முறைகளாக இருந்து வருகிறது.
 
Gen_28:18, Gen_31:13-19, Gen_31:44-52, Gen_35:1-4, Gen_35:20, Jdg_17:4-6, Jdg_18:14-26, Rom_1:19-25, , Act_17:29-30,
 
4-0 எழுத்து வடிவம் இல்லாத காலத்தில் பொதுவாக மனிதன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் விதங்கள் :-
 
4-1 தங்களின் மனதின் நிலையான கருத்துக்கள், படமாகவோ அல்லது உருவமாகவோ மாற்றப்படுகிறது.
 
4-2 பலதரப்பட்ட நிலையான கருத்துக்கள் படமாகவோ அல்லது விக்கிரகமாகவோ உருமாற்றப்படுகிறது. ஆனால் இவை களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை.
 
4-3 தங்களின் மனதின் நிலையான கருத்துக்கள் படமாகவோ அல்லது விக்கிரகமாகவோ உருமாறின பின்பு தங்கள் சூழ்நிலைக் கேற்ப மாறக்கூடிய கருத்துக்களை உருமாற்றம் செய்ய முடியாமல் அவைகளை திட்ட செயல் முறைகளாக கிரியைககளின் மூலம் வெளிப்படுத்தி தன்னுடைய முழு மனதின் கருத்துக்களை கொஞ்சம் படமாகவும், விக்கிரமாகவும் மீதியுள்ளவற்றை திட்ட செயல் முறையான ஆசரிப்பு வழிமுறைகளில் வெளிப்படுத்தி மன நிறைவு பெறுதல்.
 
4-4 இவைகள் எழுத்து வடிவம் இல்லாத காலத்தில் தோன்றினபடியால் வரைபடங்கள், விக்கிரகங்கள், ஆசரிப்பு வழி முறைகள் மூலமாகவும், தத்துவ சாஸ்திர சம்பவங்களாக வாய்மொழி வழியாகவும், மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
5-0 எழுத்து வடிவம் உள்ள காலத்தில் பொதுவாக மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதங்கள்.
 
5-1 மனதில் தோன்றுகிற நிலையான கருத்துக்களின் நன்மை தீமைகளுக்கேற்றபடி, அவைகளை பல திட்ட செயல் முறைகளாக பகுத்து பிரிக்கப்படுகிறது.
 
5-2 பகுத்து பிரிக்கப்பட்ட ஒவ்வொரு திட்ட செயல் முறைகளையும் அதன் காரண காரியத்திற்கு கேற்றபடி செயல் முறைப்படுத்த அவைகளை திட்ட வரைபடமாகவோ, அல்லது உலேகாங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருளாகவோ உருமாற்றம் செய்வது. 
 
5-3 பகுத்து பிரிக்கப்பட்ட திட்ட செயல் முறைகள்; வரை படமாகவோ, வடிவமைக்கப்பட்ட பொருளாகவோ மாறாமல் இருக்கும்போது, அவைகளை வரையறுக்கப்பட்ட செயல் வடிவமாக தொகுத்து நிலையான மையக்கருத்துக் கேற்றபடி இணைந்து செயல் பட நேரடியான செயலாகளாகவே செய்து முழுக் கருத்துக்களையும் செயலாகளாக செய்வது.
 
5-4 இப்படி பொருளாக உருமாறின பல திட்டச்செயல்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் போது மனதில் தோன்றின நிலையான கருத்து முழு செயல் வடிவம் பெற்று முழுமையான பொருளாக வெளிப்படுகிறது.
 
5-5 இவைகள் எழுத்து வடிவம் உள்ள காலத்தில் தோன்றிய படியால், திட்ட வரைபடங்கள் திட்டத்திற்கேற்றபடி வடிவமைக்கப் பட்ட உலோகப் பொருள்கள் மற்றும் நேரடியாக வரையறுக்கப்பட்ட செயல் முறைகள்; ஆகியவற்றின் கருத்துக் கோட்பாடுகளை எழுத்து வடிவத்திலும் மொழி வடிவத்திலும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
1-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்
 
1-2-1 யேகோவாவாகிய தேவன் நியாயப்பிரமாண உபதேசத் தையும் அதன் ஆசரிப்பு வழி முறைகளையும் பகுந்து பிரித்து ஜனங் களுக்கு கொடுப்பதின் மூலம் ஜாதிகளின் மத்தியில் இருந்து தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.
 
தேவன் மோசே தீர்க்கதரிசியைத் தெரிந்துகொண்டு அவர் மூலம் சகல ஜனங்களிலிருந்தும் தமக்கு ஒரு பரிசுத்தமான ஜனத்தை பிரித்தெடுப்பதற்காக நியாயப்பிரமாணத்தின் உபதேச சட்ட திட்டங்களை பகுத்து பிரித்து, அவைகளில் முதல் ஆறு படிகளை நியாயப்பிரமாணத்தின் மூல உபதேச அடிப்படை விதி முறை களாகவும், ஏழாவது படியை நியாயபிரமாணத்தின் பலமான உப தேசத்தின் பலமான ஆகாரத்தின் விதி முறைகளாகவும், ஜனங் களுக்கு எழுத்து வடிவத்தில் எழுதிக்கொடுத்து; இவைகளை ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்துகிறவர்களை தேவனுக்கு பரிசுத்த ஜாதியாகவும், மற்றவர்களை புறஜாதிகளாகவும் அறியப்படும்படி தேவன் அடையாளங்களை ஏற்படுத்தினார். Jer_2:3, Deu_14:2, Rom_9:4, Rom_3:1-2, (Psa_19:1-14, Psa_119:1,Chapter) Amo_3:1-2, Psa_33:12, Psa_135:4, Lev_18:24-27, Lev_20:20-24, Deu_27:9
 
நியாயப்பிரமாண உபதேசத்தின் விதிமுறைகள்:-
 
நியாயப்பிரமாண உபதேசத்தின் மிகப்பெரிய இரண்டு உட்பிரிவுகள்
 
1. நியாயப்பிரமாண மூல உபதேசத்தின் ஆறு படிகளைக் கொண்ட அடிப்படை விதிமுறைகள் / களங்கமில்லாத ஞானப்பால்.
 
2. நியாயப்பிரமாண பலமான உபதேசத்தின் ஏழாவது படியான பலமான ஆகாரத்தின் விதிமுறைகள்.
 
1. நியாயப்பிரமாண மூல உபசேதத்தின் ஆறு படிகளைக் கொண்ட அடிப்படை விதிமுறைகள் (களங்கமில்லாத ஞானப்பால்) Rom_9:4, 
 
1. புத்திரசுவீகாரம்
 
2. மகிமை
 
3. உடன்படிக்கைகள்
 
4. நியாயப்பிரமாணம்
 
5. தேவாராதனை
 
6. வாக்குத்தத்தங்கள் 
 
2. நியாயப்பிரமாண பலமான உபதேசத்தின் ஏழாவது படியான பலமான ஆகாரத்தின் விதிமுறைகள் Rom_3:1-2,
 
7. தேவனுடைய வாக்கியங்கள்
 
1-3-0 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்:- 
 
1-3-1 நியாயப்பிரமாண விதி முறைகளுடன் புற ஜாதிகளின் முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மனிதனின் கற்பனைகளும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளும் :-
 
நியாயப்பிரமாணத்தின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் பலமான ஆகாரத்தின் விதிமுறைகளின் உபதேசத்தை நிழலாட்ட மானவைகளிலிருந்து இயேசு கிறிஸ்து தன்னுடைய நித்திய ஜீவ வார்த்தைகளினால் பாவத்தையும், மரணத்தையும் ஜெயக்கொள்ளும் அனுபவத்தின் மூலம் மேற்கொண்டு பொருளுக்கு மாற்றும் போது; 
 
நியாயப்பிரமாண விதிமுறைகளுடன், புறஜாதிகளின் முறைகளும் கலந்து உருவாக்கப்பட்ட மனிதனின் கற்பனைகளும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளும், தேவனுடைய திட்டங்களுக்கு எதிராகவும் இணையாகவும் எழுப்பி போராடிக் கொண்டிருக்கிறது. Mar_7:6-16 1Sa_8:5, 1Sa_8:20, , Joh_6:15, 1Ki_14:24, 2Ki_16:3, 2Ch_33:2, 2Ki_17:112Ki_17:29, 2Ki_17:41, 2Ki_21:2, Neh_13:24, Hos_2:8, Hos_8:1-4Col_2:8, 2Th_3:6
 
1-3-2 நியாயபிரமாணத்தின் விதிமுறைகளை அறியாத புற ஜாதிகளுக்கு இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் இரட்சிப்பு இலவசமாக வழங்கப்படுதல்.
 
மோசே தீர்க்கதரிசியைக் கொண்டு நியாயப்பிரமாணத் தையும் அதன் ஆசரிப்பு விதி முறைகளையும் பெற்றுக்கொண்ட இஸ்ரவேல் ஜனங்கள்; அவைகளை பின்பற்றாமல் மீண்டும் தங்கள் மனதிற்கேற்றபடியுள்ள பிரமாணங்களை தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டபடியினாலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெளிப்பட்ட தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை அங்கீகரியாத படியினாலும், இது வரை நியாப்பிரமாணத்தின் விதி முறைகளை அறியாமல் இருந்த புற ஜாதிகளுக்கு, இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் தேவனுடைய இரட்சிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
Joh_1:11-12, Isa_65:1-5, Mat_24:14, Mat_28:19,Mar_13:10, Rom_16:25, Act_9:15, Act_10:44, Act_11:1, Act_11:18, Act_13:46, Act_18:6, Act_14:27, Act_15:3, Act_15:12-14, Act_21:19, Act_22:12, Act_28:28, Rom_11:13, Gal_2:7-9, Rom_15:10-12, 1Ti_2:7, 1Ti_3:16, 
 
1-4-0 தேவ வார்த்தை என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்:-
 
1-4-1 புற ஜாதிகளின் விக்கிரங்களையும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளையும் நித்தியமாக முடிவுக்கு கொண்டு வருதல் :-
 
புற ஜாதிகளின் விக்கிரங்களையும் அதன் ஆசரிப்பு வழிமுறை களையும் மற்றும் அவர்கள் ஏற்படுத்தின பிரமாணங்களையும் அதன் அசுத்த ஆவிகளையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் நரகத்தில் தள்ளப்பட்டு அவைகள் நித்திய காலமாக இந்த பூமியில் இல்லாமல் அகற்றப்பட்டு முடிவுக்கு வரும். Job_12:23, Isa_30:28, Isa_34:1-2, Rev_16:19, Rev_19:15,


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries