தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 07


தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்

பொருளடக்கம் 2-0-0

2-0-0 ஊழியத்தின் தரிசனங்கள்
 
2-1-0 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்
 
2-1-1 ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தின் ஊழிய தரிசனம்
 
2-1-2 மெல்கி சதேக்கின் ஊழிய தரிசனங்கள்
 
2-1-3 ஜாதிகளின் முறையின்படி ஆசாரிய அழைப்பின் ஊழியதரிசனங்கள்
 
2-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்
 
2-2-1 லேவியரின் ஆசாரிய அழைப்பின்படி ஊழிய தரிசனங்கள்
 
2-3-0 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்
 
2-3-1 நியாயப்பிரமாண விதி முறைகளுடன் மனிதனின் கற்பனைகள்
 
2-3-2 இயேசு கிறிஸ்துவின் ஊழிய தரிசனம் தரம் தாழ்த்தப்படுதல்
 
2-3-3 நற்குல திராட்ச தோட்டத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைகிறது.
 
2-4-0 தேவ வார்த்தை என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்
 
2-4-1 திராட்ச தோட்டத்தின் கோபுரத்தை கைப்பற்றும் முயற்சி தோல்விடையதல்.
 
2-4-2 கிறிஸ்துவின் மூல உபதேசம் தரம் தாழ்த்தப்பட்டுக் கொண்டு வருகிறது.
 
2-4-3 கிறிஸ்துவினுடைய உபதேசத்தின் பலமான ஆகாரம் தரம் தாழ்த்தப்படுதல்.
 
2-4-4 மனிதனின் கற்பனைகளிலிருந்து பொங்கி வரும் புதிய வெளிப்பாடுகள்.
 
2-4-5 சாத்தானின் இராஜ்ஜியம் இந்த பூமியில் இருக்கிறது.
 
2-0-0 ஊழியத்தின் தரிசனங்கள் 
 
2-1-0 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்:- 
 
2-1-1 ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தின் ஊழிய தரிசனங்கள்:-
 
தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தினுடைய ஊழிய தரிசனம் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆதாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபடியால், ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டு; தேவன் எந்த வார்த்தையைக் கொண்டு தன்னை உருவாக்கினாரோ அந்த வார்த்தையைக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட ஊழிய தரிசனத்தை செயல்படுத்த கட்டளை யிட்டார். . Gen_2:8-9, Gen_2:15-17, Gen_3:17-24,
 
2-1-2 உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசதேக்கின் ஊழிய தரிசனங்கள்:- Gen_14:18, Psa_110:4 Heb_7:1,Heb_5:6, Heb_5:10, Heb_6:20, Heb_7:1, Heb_7:10-11 , Heb_7:15, Heb_7:17, Heb_6:20
 
2-1-3 ஜாதிகளின் முறையின்படி ஆசாரிய அழைப்பின் ஊழிய தரிசனங்கள்:- Exo_2:16, Exo_3:1, Deu_23:4-5, Num_22:5, Num_22:7-10, Jos_13:22, Jos_24:9-10Neh_13:2, Mic_6:5 2Pe_2:15, Jud_1:11, Rev_2:14, 2Ch_13:9-11
 
2-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்:-
 
2-2-1 லேவியரின் ஆசாரிய அழைப்பின்படி ஊழிய தரிசனங்கள்:- Exo_28:1, Exo_28:3-4 , Exo_28:41, Exo_29:1, Exo_29:44, Exo_30:30, Exo_31:10, Exo_35:19, Exo_39:41, Exo_40:13, Exo_40:15, Lev_7:35, Lev_16:32, Num_3:3-4 , Deu_10:6, 1Ch_6:10, 1Ch_24:2, 2Ch_11:14
 
2-3-0 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்:-
 
2-3-1 நியாயப்பிரமாண விதி முறைகளுடன் புற ஜாதிகளின் முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மனிதனின் கற்பனைகளும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளும் :-
 
நியாயப்பிரமாணத்தின் அடிப்படை விதிமுறைகளின் உபதேசத்தையும் மற்றும் நியாயப்பிரமாணத்தின் பலமான ஆகாரத்தின் விதிமுறைகளின் உபதேசத்தையும், அதன் நிழலாட்ட மானவைகளிலிருந்து இயேசு கிறிஸ்து தன்னுடைய நித்திய ஜீவ வார்த்தைகளினால் பாவத்தையும், மரணத்தையும் ஜெயங்கொள்ளும் அனுபவத்தின் மூலம் மேற்கொண்டு பொருளுக்கு மாற்றும் போது; 
 
நியாயப்பிரமாண விதிமுறைகளுடன் புற ஜாதிகளின் முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மனிதனின் கற்பனைகளும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளும் தேவனுடைய திட்டங்களுக்கு எதிராகவும், இணையாகவும், எழும்பி போராடிக் கொண்டிருக்கிறது. Mar_7:6-16 1Sa_8:5, 1Sa_8:20, , Joh_6:15, 1Ki_14:24, 2Ki_16:3, 2Ch_33:2, 2Ki_17:112Ki_17:29, 2Ki_17:41, 2Ki_21:2, Neh_13:24, Hos_2:8, Hos_8:1-4Col_2:8, 2Th_3:6
 
2-3-2 நற்குல திராட்ச செடியான இயேசு கிறிஸ்துவின் ஊழிய தரிசனம் தரம் தாழ்த்தப்படுதல் :-
 
நற்குல திராட்ச செடியான இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவவார்த்தைகளின் உபதேசத்தை; மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளினால் நாளுக்கு நாள் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டு வருகிறது. Isa_5:7, Gen_49:11, Isa_5:2, Jer_2:21 Isa_1:10-28, 1Pe_2:2-3, 2Co_2:17, 2Co_4:2, 1Co_3:2, Heb_5:12-13 , 1Pe_2:2
 
2-3-3 மனிதனின் கற்பனைகளின்படி நற்குல திராட்சத் தோட்டத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைகிறது :-
 
தேவனுடன் தாங்கள் செய்து கொண்ட ஊழிய தரிசனத்தின் உடன்படிக்கையை மீறி, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளை கொண்டு நற்குல திராட்சத் தோட்டத்தின் ஊழிய தரிசனத்தை தங்களுடைய தாக்கிக்கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது; இதனால் அவர்கள் தேவனுடைய திட்டத்திற்கு எதிராகவும், இணையாகவும் மேற்கொண்ட செயல்களும் அவருடைய குமாரனுக்கும், ஊழியர்களுக்கும் விரோதமாக செய்த துன்மார்க்க கிரியைகளும் வெளிப்பட்டது. Mat_21:33-35,Mat_21:38,Mat_21:40-41Mar_12:1 2Mar_12:7, Luk_20:9-10, Luk_20:14, Luk_20:16 Dan_7:26-27, 2Ch_36:16, Jer_23:34-37, Heb_13:12, Act_7:51-59,
 
2-4-0 தேவ வார்த்தை என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனம் :-
 
2-4-1 தேவனுடைய சித்தத்தின்படியுள்ள பரலோக இராஜ்
 
ஜியத்தின் ஆட்சி அதிகாரங்களை (நற்குல திராட்சத் தோட்டத் தினுடைய கோபுரத்தின் கட்டுப்பாட்டை) மனிதனின் கற்பனை களின் சித்தப்படி கைப்பற்றும் முயற்சி தோல்விடையதல்.
 
பரலோகத்தில் உம்முடைய சித்தம் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக என்ற தேவனுடைய இராஜ்ஜியத்தின் தேவ சித்தத்திற்கு எதிராகவும், இணையாகவும், மனித கற்பனைகளைக்கொண்டு ஏற்படுத்தப்பட்ட தங்களுடைய அதிகார பகிர்வுகளையும் அதன் அரசாட்சியின் கட்டமைப்பும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே கொண்டு வந்து; அவைகளை நடைமுறைப் படுத்தி, தேவனுடைய இராஜ்ஜியத்தின் அதிகாரங்களை தங்க ளுடைய ஆட்சி அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. Eze_8:5, Eze_8:9-14, Eze_8:15-17, Eze_19:10-14, Eze_20:32-38, Isa_65:1-5, Isa_66:15-18 Isa_7:1-2, Isa_7:13-14,Amo_6:8-13, Amo_7:8-17, Hos_7:3-9,Hos_8:1-6, Hos_13:10-11, 1Sa_8:5, 1Sa_8:20, Dan_4:10-27, Dan_5:1-5, Dan_5:18-27,
 
2-4-2 இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசம், கள்ள தீர்க்க தரிசிகளாலும் கபடமுள்ள வேலையாட்களாலும் (கள்ள ஊழியர்கள்) நாளுக்கு நாள் தரம் தாழ்த்தப்பட்டுக் கொண்டு வருகிறது
 
கிறிஸ்துவைப் பற்றி சொல்லிய மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் தரத்தை, மனிதனின் கற்பனைகளின் படி ஏற்படுத்தப்பட்ட கள்ள தீர்க்க தரிசனங்களாலும் கபடமுள்ள வேலையாட்களின் வெளிப்பாடுகளினாலும், அதன் ஆசரிப்பு முறை களினாலும் நாளுக்கு நாள் களங்கமில்லாத ஞானப்பாலின் தரம் தாழ்த்தப்பட்டு கலப்படமான ஞானப்பாலாக மாறிக்கொண்டே வருகிறது. 1Pe_2:2-3, 1Th_2:7-8 1Co_3:1-2, 2Co_2:17, 2Ti_4:2-5, 2Pe_2:1, 2Co_4:2, Jud_1:4, 1Co_2:4-5, 1Co_2:13-14, Jam_3:15, Joh_2:16, Isa_1:22, Pro_5:3-17, Pro_2:16-22, Isa_32:5-7, Eze_22:23-31, 
 
2-4-3 இயேசு கிறிஸ்துவினுடைய உபதேசத்தின் பலமான ஆகாரமான நீதியின் வசனமும், கிறிஸ்துவின் பட்டாபிஷேக முடிசூட்டு விழாவின் விருந்தான தேவனுடைய சத்தியமான வசனங்களும், நாளுக்கு நாள் தரம் தாழ்த்தப்படுதல்.
 
இயேசு கிறிஸ்துவினுடைய பட்டாபிஷேக முடிசூட்டு விழா விருந்தின் மூலம் அவருடைய உபதேசத்தின் பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்கள் அதன் பொருளாகிய தேவனுடைய சத்தியமான வசனங்களுக்கு மாறும்போது; அவைகளை கள்ள அப்போஸ்தலர்கள் மற்றும் தங்களை ஆவிக்குரிய யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களின் சுத்திகரிப்பு முறைகளை கைக்கொள்ளாத வர்களின் திரளான தரிசனத்தின் வெளிப்பாடுகளின் மூலம் நாளுக்கு நாள் அவைகளின் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டு வருகிறது. 
 
இயேசு கிறிஸ்துவினுடைய உபதேசத்தின் பலமான ஆகார மாகிய நீதியின் வசனத்தை தரம் தாழ்த்துவதற்காக எருசலேம் நகரத்தில் மனிதன் கற்பனைகளை உருவாக்குதல் Eze_8:1-15,
 
1. தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிற விக்கிரகம் இருதயத்தின் வாசல் நடையிலே நின்று கொண்டிருக்கிறது. . Eze_8:5
 
2. மனிதன் புதிய கற்பனைகளை உருவாக்குதற்காக தன்னுடைய இருதயத்தின் இரகசியமான இடத்தில் தன்னுடைய வெளிப்பாடுகளுக்கேற்றபடியுள்ள விநோதமான சித்திரங்களை விக்கிரங்களாக வடிவமைத்து வைத்து அவைகளை நினைவு கூறும் போது அதன் அறிவை மீண்டும் வெளியே கொண்டு வந்து வெளிப்படுத்துதல். Eze_8:12
 
3. ஊழியத்தின் அறுவடை காலத்தில் தங்களுக்கு ஆசீர்வாதங்களையும் செழுமையையும் கொண்டு வந்து கொடுக்கிற தங்கள் தேவன்; மீண்டும் கிருபையுள்ள இரட்சகராகவே திரும்ப வரும்படி காத்திருந்து அவருக்காக பெயரளவில் தங்கள் உதட்டளவில் அழுது புலம்பிக்கொண்டிருப்பது. Eze_8:14
 
4. இருதயத்தின் இரகசியமான இடத்தில் விசித்திரமும் வினோதமுமான தந்திரங்களுக்கேற்றபடியுள்ள சித்திரங்கள் வடி வமைக்கப்பட்டு உருவ வரைபடமாக வரையப்பட்டுக் கொண்டி ருக்கிறது. Eze_8:10
 
5. மனிதனின் இருதயத்தில் சகல அருவருப்புகளின் அறிவையுடைய கற்பனைகளினால் நிரம்பி இருக்கிறது.
 
6. தேவ வார்த்தைகளுடன் ஜாதிகளின் முறைகைளையும் கலந்து உருவாக்கப்பட்ட கற்பனைகளின் அறிவை, தங்கள் இருதயத்தில் பச்சை மரத்தில் அடித்த ஆணியைப் போல தங்கள் இருதயப்பலகையில் சிற்பியின் உளியைக் கொண்டு செதுக்கியது போல மிக நன்றாக தெளிவாக என்றைக்கும் அழியாத எழுத்துக்களாக எழுதி வைக்கிறார்கள்.
 
7. தேவனுடைய ஆலயத்திலே இஸ்ரவேல் வம்சத்தாரின் எழுபது மூப்பர்கள் அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூப கலசத்தை பிடித்துக்கொண்டு நின்று கொண்டு இருக்கிறார்கள். Eze_8:11-12
 
8. தூபக்கலசத்தில் தூபவர்க்கம் போடும் போது எப்படி மிகுந்த அடர்த்தியான புகை மண்டலம் காற்றில் எழும்புகிறதோ அதுபோல தங்களுடைய இருதயத்தின் தூபக்கலச வாயிலிருந்து மனிதனுடைய கற்பனைகளின் தரிசன வெளிப்பாடுகள் பொங்கி திரளாக வெளிப்படுகிறது. . Eze_8:11, Rev_8:1-4
 
2-4-4 மனிதனின் கற்பனைகளிலிருந்து பொங்கி வரும் சுயமான தரிசனங்களின் அடர்த்தியான புகை மண்டலம் போன்ற புதிய வெளிப்பாடுகள். Eze_8:16-18, Eze_11:1-21
 
1. பரிசுத்த ஸ்தலத்தில் இருபத்தைந்து புருஷர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் Eze_8:16, 
 
2. இவர்கள் தங்கள் முதுகு பகுதியை (பின் பக்கத்தை) கர்த்தருடைய ஆலயத்திற்கு நேராகவும், தங்கள் முகத்தை (முன் பகுதியை ) கிழக்கு திசைக்கும் நேராகவும் திருப்பி, கிழக்கு தேசத்து ஜனங்களின் தத்துவ சாஸ்திரங்களை நோக்கிக் கொண்டி ருக்கிறார்கள். Eze_8:16, Isa_2:2-9,
 
3. இவர்கள் கிழக்கு தேசத்து தத்துவ சாஸ்திரங்களின்படி நிழலாட்டமானவைகளிலிருந்து பொருளுக்கு மாறும்போது தங்களுடைய ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்ளுவோம் என்ற எதிர்பார்ப்புகளுடன் (நம்பிக்கையுடன்) சூரியனை நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். Eze_8:16,
 
4. இவர்கள் எவ்விதமான பாடுகள் பட்டாவது தங்களது ஆட்சி அதிகாரத்தின் பதவிகளை அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு பதவி ஆசைகளையே மையமாகக் கொண்டு பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். Eze_8:16,
 
5. இவர்கள் எருசலேம் நகரத்தில் அக்கிரமமான நினைவுகளை நினைத்து தூராலோசனை சொல்லுகிற மனுஷர்கள். Eze_11:1-2,
 
6. எருசலேம் நகரத்தின் ஆவிக்குரிய கட்டமைப்பின் தலைமை பதவிகளிலிருந்து நாங்கள் நல்ல புத்தியுள்ள ஆலோசனைகளை சொல்லி வருகிறோம், ஏனென்றால் தேவன் எங்களுடன் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு தூராலோசனை களை சொல்லி நல்ல முறையில் தேவ தரிசனத்தைப்பெற்று ஊழியம் செய்கிறவர்களை நோக்கி; 
 
நீங்கள் இந்தக்காலத்தில் தேவன் உங்களுக்கு கொடுத்த விசுவாச அளவின் படியுள்ள ஊழியத்தை ஸ்தாபிக்க முயற்சி செய்ய வேண்டாம், அதற்கு பதிலாக நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் நாம் ஒருமனமாக இணைந்து ஊழியத்தை மிகப்பெரிய அளவில் செய்ய முடியும், என்று சொல்லி நல்ல ஊழியர்களையும் இடறும்படி செய்து கொண்டிருக்கிறார்கள். Eze_11:2-3,
 
7. பரிசுத்த எருசலேம் நகரத்திற்குள்ளே ஜாதிகளின் முறையின் படியுள்ள ஆட்சியின் பதவிகளை கொண்டு வந்தபடியால் நீங்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தீர்கள். எனவே நீங்கள் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வசனத்தினால் நியாயம் தீர்க்கப்பட்டு தேவனால் உங்களுக்கு கிடைத்த இரட்சிப்பு மரணம் அடையும். 
 
இப்பொழுது நீங்கள் இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாதபடியால் மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள் : எனவே நீங்கள் மீண்டும் மனத்திரும்பி கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும். Eze_11:4-15, Isa_65:11-14,
 
8. எங்களுக்கு மட்டும் தான் ஊழியத்தின் எல்லைகள் சுதந்திரமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று உரிமை கொண்டாடுகிற தேவ ஜனங்களை அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுதலையாக்கி தங்களுடைய சுய தேசத்திற்கு கொண்டு வருவார்; அப்பொழுது அங்கே இருக்கிற அருவருக்கப்படதக்கதையும் அசுத்த மானவைகளையும் அகற்றி தேவனுடைய கட்டளைகளின் நடக்க முன் வருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கு தேவன் புதிய ஆவிiயும் புதிய இருதயத்தையும் கொடுத்து அவர்களின் கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை கொடுப்பார். Eze_11:16-21,,
 
2-4-5 சாத்தானின் இராஜ்ஜியம் இந்த பூமியில் இருக்கிறது
 
கீழே குறிப்பிட்ட ஜனங்கள் பல இடங்களிலிருந்து ஒன்று சேரும்போது அவர்களின் ஐக்கியமே சாத்தானுடைய இராஜ்ஜியமாக மாறுகிறது.
 
1. கள்ள தீர்ககதரிசிகள், கள்ள யூதர்கள், கள்ள அப்போஸ் தலர்கள் ஆகிய மூன்று பெரிய தலைவர்களின் கூட்டமும் அவர்களின் யோசனைகளை பின்பற்றுகிறவர்களும் அந்தக் கிறிஸ்துவின் அதிகாரத்தின் தலைமையின் கீழ் கூடிவந்து ஐக்கியமாக இணைந்து கொள்ளுகிறவர்கள்.
 
2. தங்களின் சுயமான வெளிப்பாடுகளின் தத்துவங்களை பின்பற்றி நடக்கிறவர்கள், 
 
3. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளையும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளையும் பின்பற்றி நடக்கிறவர்கள்,
 
4. மனித கற்பனைகளின் படியுள்ள வெளிப்பாடுகளையும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளையும் பின்பற்றி நடக்கிறவர்கள், 
 
5. நற்குல திராட்சசெடியான இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை தரம் தாழ்த்தினவர்கள்.
 
6. நற்குல திராட்சதோட்டத்தின் ஊழியர் உடன்படிக்கையை முறித்தவர்கள்.
 
7. இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை முறித்தவர்கள். 
 
8. தேவனுடைய வார்த்தைகளுக்கும் அவைகளை பின்பற்று கிறவர்களுக்கும் எதிராகவும் இணையாகவும் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலும் அதன் சிந்தனைகளை பின்பற்றுகிறவர்கள்.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries