தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 07
தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்
பொருளடக்கம் 3-0-0
3-0-0 இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-1-0 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-1-1 விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும்
3-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-2-1 யேகோவாவாகிய தேவன் தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.
3-2-2 மனிதனின் கற்பனைகளுக்கு காரணமாயிருந்த ஜாதிகளின் முறைகள்.
3-3-0 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-3-1 இயேசு கிறிஸ்துவின் ஊழிய தரிசனம் தரம் தாழ்த்தப்படுதல்
3-3-2 களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து முன்னேறிச் செல்லும் வழிமுறைகள்
1. இம்மானுவேல் / தேவன் எங்களுடன் இருக்கிறார்
2. எகிப்திலிருந்து ஈக்களும் அசீரியாவிலிருந்து தேனீக்களும்
3. மிருதுவான சீலோவாவின் தண்ணீரும் வேகமான அசீரியாவின் தண்ணீரும்.
3-4-0 தேவ வார்த்தை என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-4-1 திராட்ச தோட்டத்தின் கோபுரத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைதல்.
3-4-2 கிறிஸ்துவின் மூல உபதேசம் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டு வருகிறது.
3-4-3 கிறிஸ்துவினுடைய உபதேசத்தில் பலமான ஆகாரம் தரம் தாழ்த்தப்படுதல்.
3-4-4 மனிதனின் கற்பனைகளிலிருந்து பொங்கி வரும் புதிய வெளிப்பாடுகள்.
3-4-5 இஸ்ரவேலரின் சரித்திரமும் அதன் ஞானர்த்தமுள்ள சம்பவங்களும்
3-0-0 இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-1-0- சர்வ வல்லவமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-1-1 விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும் உண்டாவதற்கு மூலக்காரணங்கள் :-
இந்த தலைப்பைக் குறித்து அறிய 1-1-1 வரிசையின் தலைப்பை பார்க்கவும்
3-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-2-1 யேகோவாவாகிய தேவன் நியாயப்பிரமாண உபதேசத் தையும் அதன் ஆசரிப்பு வழி முறைகளையும் பகுத்து பிரித்து ஜனங் களுக்கு கொடுப்பதின் மூலம் ஜாதிகளின் மத்தியில் இருந்து தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.
இந்த தலைப்பை குறித்து அறிய 1-2-1 வரிசையின் தலைப்பை பார்க்கவும்
3-2-2 மனிதனின் கற்பனைகளை உருவாக்க காரணமா யிருந்த புற ஜாதிகளின் முறைகள்
இஸ்ரவேல் ஜனங்கள் சிறையிருப்புக்கு அனுப்பப்பட்டபோது அவர்கள் புற ஜாதிகளின் முறைகளுடன் கலந்து, தங்கள் விருப்பத் திற்கேற்றபடியுள்ள புதிய பிரமாணங்களும் அதன் ஆசரிப்பு வழிமுறை களும் மனிதனின் கற்பனைகளாக வடிவமைக்கப்பட்டு வெளிப் பட்டது.
யூதா ஜனங்களின் சிறையிருப்பு:-
1. பாபிலோன் சிறையிருப்பு 2. எகிப்து சிறையிருப்பு
Jer_24:1-7, Jer_38:1, Act_1:11-12 , Isa_5:13, Isa_5:24, Isa_1:1-6, Isa_8:8-22, Isa_24:1-7, Isa_42:18-25,Jer_5:20-31, Jer_41:17-18, Isa_30:1-17, Isa_31:1-3, Isa_19:12-25,
இஸ்ரவேல் ஜனங்களின் சிறையிருப்பு:-
1. அசீரியா சிறையிருப்பு 2. சமாரியா சிறையிருப்பு
2Ki_17:20-33, 2Ki_17:34-41, Psa_106:41-48, Hos_7:8-16, Hos_8:1-14, Hos_9:17,
3-3-0 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-3-1 நற்குல திராட்சச்செடியான இயேசு கிறிஸ்துவின் ஊழிய தரிசனம் தரம் தாழ்த்தப்படுதல்:-
நற்குல திராட்சச்செடியான இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவவார்த்தைகளின் உபதேசம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற் பனைகளினால் நாளுக்கு நாள் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டு வருகிறது. Isa_5:7, Gen_49:11, Isa_5:2, Jer_2:21 Isa_1:10-28, 1Pe_2:2-3, 2Co_2:17, 2Co_4:2, 1Co_3:2, Heb_5:12-13 , 1Pe_2:2
3-3-2 கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்துவின் பலமான ஆகாரத்தை புசிக்க முன்னேறிச் செல்லும் வழிமுறைகள்:-
கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்து வின் பலமான ஆகாரத்திற்கு முன்னேறி செல்ல தேவனால் மூன்று படிகளின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
1. இம்மானுவேல் / தேவன் எங்களுடன் இருக்கிறார்
2. எகிப்திலிருந்து ஈக்களும் அசீரியாவிலிருந்து தேனீக்களும்
3. மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீரும் வேகமாக ஓடுகிற ஆற்று நீரைப்போல அசிரீயாவின் தண்ணீரும்.
இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடிப்பதின் மூலம் தீமையை வெறுத்து, நன்மையை தெரிந்து கொள்ளும் பகுத்தறிவை ஒருவன் பெற்றுக் கொள்கிறான். இவைகளை தொடர்ந்த பயிற்சியின் மூலம் தன்னு டைய அன்றாட வாழ்க்கையின் காரண காரியங்களுக்கேற்றபடி நடை முறைப்படுத்தும்போது; பகுத்தறிவின் பூரண வயதை பெற்றுக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பலமான ஆகாரமாகிய நீதியின் வசனத்தை புசிக்க முன்னேறுகிறான்.
1-0 இம்மானுவேல் - தேவன் எங்களுடன் இருக்கிறார்.
Amo_5:14,Isa_7:10-16, Isa_7:21-22, Isa_8:8, Hag_1:13, Hag_2:4-5, Joe_2:27, Zec_2:10-11, Zec_8:23, Zec_10:3-5, Isa_45:14, Zep_3:14-17, Rev_21:3,
1-1 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல நன்மையைத் தேடுங்கள் அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார் Amo_5:14
1-2 பாலகன் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் வெண்ணையையும் தேனையும் பரிபூரணமாக சாப்பிடுவான்:-
கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த குழந்தை வளரும்படி தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிடைக்கும் நித் திய ஜீவ வார்த்தைகளை நல்ல உணவாக பரிபூரணமாக சாப்பிடு வான்.
1-3 ஒரு பசு இரண்டு ஆடுகள் லேவி ஆசாரியத்துவத்தின் முறை :-
ஒருவன் ஒரு இளம் பசுவையும் இரண்டு ஆட்டுக்குட்டி களையும் வளர்த்தால் அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் பரிபூரணமாக கிடைக்கும். Isa_7:21-22, Exo_29:1, Rom_12:1-2, Rom_8:3-4,
1-4 ஒருவன் தன்னுடைய சரீரம், ஆவி, ஆத்துமா, இவை களை தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து வளர்க்கும்போது, அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் தன்னுடைய அறிவு, புத்தி, ஞானம் இவைகளில் நித்திய ஜீவ வார்த் தைகளாக சுரந்து ஆவிக்குரிய நல்ல உணவு பரிபூரணமாக கிடைக் கிறது. 1Pe_3:18,
1-5 இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீத்திரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி ஞானம் இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற் றுக்கொள்ளுகிறது. . Heb_9:8-16, Heb_13:9-15,
1-6 ஒரு பசு, ஏழு ஆடுகள், ஜாதிகளுடைய ஆசாரியத்துவத் தின் பிரதிஷ்டை முறை :-
இயேசு கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக மரித்தார். நான் சபையினுடைய ஏழு உபதேசங்களை விசுவாசித்து அவைகளை ஏற்றுக்கொண்டு என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன். 2Ch_13:9, 2Ki_16:9-11, 2Ki_16:15-16,2Ki_17:27-28,2Ki_17:32,
2-0 ஈக்களின் / மாயையின் வெளிப்பாடுகளும் தேனீக் களின் காரண காரியத்திற்கேற்ற கருத்துக் கோட்பாடுகளின் வெளிப் பாடுகளும்
2-1 எகிப்திலிருந்து ஈக்களைப்போல / மாயையின் தத்துவ சாஸ்திரங்களிலிருந்து அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப் படுகிறது. அவைகளை ஒன்று திரட்டும்போது நல்ல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக மாறுவதில்லை / உருவாக்க முடிவதில்லை. Isa_7:17-19,
2-2 அசீரியாவிலிருந்து தேனீக்களைப்போல காரண காரி யத்திற்கு ஏற்ற அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளின் கோட் பாடுகள் வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட தேனீக்களைப்போல பல அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளை பல இடங்களிலிருந்து ஒன்று திரட்டும்போது அவைகள் நல்ல சுவையான தேன் கூட்டி லிருந்து ஒழுகும் தெளிந்த தேன் போல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக இணைக்கப்படுகிறது / உருவாக் கப்படுகிறது.
2-3 தெளிந்த தேன் போன்ற சுவையான அர்த்தமுள்ள வார்த் தைகளை நன்மைகளாக தெரிந்து கொண்டு சுவையில்லாத, அர்த்த மில்லாத வார்த்தைகளை தீமைகளாக வெறுத்து தள்ளிவிட வேண்டும்.
2-4 நல்ல தெளிந்த சுவையான வார்த்தைகளையுடைய நன்மைகளுடன், அர்த்தமில்லாத வார்த்தைகளையுடைய தீமைகளை யும், நம்முடைய அறிவில் கலந்து வைத்திருக்கும்போது நாம் ஏற்கனவே தேனீக்களைப்போல கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கிற தெளிந்த சுவையுள்ள நன்மையான வார்த்தைகளின் முழுக் கட்டமைப்பையும், அர்த்தமில்லாத தீமையான வார்த்தைகளாக மாற்றி வெறுமையாக்கி விழுங்கி விடும் ; அல்லது மாயா / மாயையின் வெளிப்பாடுகள் நல்ல சுவையான தெளிந்த கருத்துக்களை உட் கொண்டு அவைகளை ஒழுங்கின்னையும் வெறுமையுமாக மாற்றி விடும். உதாரணமாக நம்முடைய நற்கிரியைகளுடன் சிறிதளவு தீமையான கிரியைகள் கலந்திருக்கும்போது அந்த முழு நற்கிரியை களின் பயனையும் தீமையான செயலாகவே வெளிப்படுத்திக் காட்டுகிறது.
தீமையை வெறுத்து நம்மையை தெரிந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட தலைப்புகளில் சுவையில்லாத அர்த்தமில்லாத வார்த்தை களும் சுவையுள்ள அர்த்தமுள்ள வார்த்தைகளும் கலந்து தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது.
2-5 வனாந்தரங்களின் பள்ளத்தாக்கு :- Isa_7:19,
தேவ வார்த்கைளிலிருந்து இதுவரை வெளிப்படாத இரகசியங்கள்.
2-6 கன்மலைகளின் வெடிப்புகள் :- Isa_7:19,
வேத வார்த்தைகளிலிருந்து இயேசு கிறிஸ்துவரைப் பற்றிய புதிய வெளிப் பாடுகள்.
2-7 முட்காடுகள் :- Isa_7:19, தேவ வார்த்தைகளிலிருந்து ஜென்ம கரும பாவங்களின் பிரமாணங்கள்
2-8 மேய்ச்சலுள்ள இடங்கள் :- Isa_7:19 தேவ வார்த் தைகளிலிருந்து ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களை மீண்டும் பசுமையாக தோன்றும் படி வெளிப்படுத்தப்பட்ட புதிய வெளிப்பாடுகள்.
3-0 இஸ்ரவேலர் அசட்டை பண்ன்ணுகிற மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத்தண்ணீரும், அவர்கள் சந்தோஷித்து களி கூருகிற வல்லமையுள்ள திரளான / வேகமான அசீரியாவின் ஆற்றுத் தண்ணீரும்.
3-1 இஸ்ரவேல் ஜனங்கள் மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத் தண்ணீரை அசட்டை பண்ணினார்கள் :-
இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து தேவ வசனத்தை படித்து அவைகளை சிந்தித்து தியானித்து அதன் மூலம் தேவனுடைய மிருதுவான ஆலோசனையை கேட்டு, தங்கள் ஆவிக்குரிய காரியங்களில் ஜீவனோடிருந்து வளர்வதை வெறுத்து அசட்டை பன்னினார்கள்.
Jos_18:1, Jos_18:8-10 , Jos_19:51, Jos_22:12, 1Sa_1:3, 1Sa_1:24,, 1Sa_3:21, 1Ki_2:27, Psa_78:60, Jer_7:12, Jer_7:14, Jer_26:6, Jer_26:9, Jer_41:5 Neh_3:15
3-2 இஸ்ரவேல் ஜனங்கள் வல்லமையுள்ள திரளான ஆற்றுத்தண்ணீரைக் குறித்து சந்தோஷித்து களிகூருகிறார்கள் :-
இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் இராஜாக்களுடைய இராஜரீகத்தையும் அதன் சகல ஆடம்பரங்களையும் குறித்து சந்தோஷித்து களிகூருகிறார்கள். எனவே தேவன் அவர்கள் விருப்பத்திற் கேற்றபடி அவர்கள் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ளும்படி கீழே குறிப்பிட்ட தலைப்புகளில் புற ஜாதிகளின் அரசாட்சி முறைகளும் அதன் பதவிகளின் ஆடம்பரத் தையும் அவர்களின் தரிசன வெளிப்பாடுகளாக தேவன் இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுக்கிறார்.
3-3 ஓடைகளெல்லாம் வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீர் :- Isa_8:7,
புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் தேவன் வெளிப் படுத்துகிறார்.
3-4 தண்ணீர் செல்லும் எல்லா வாய்க்காலின் கரைகளின் மேலும் ஆற்றுத்தண்ணீர் புரண்டு செல்லுதல்:-
புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் ஏற்கனவே பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் எல்லைகளை கடந்து, தேவன் தங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட வெளிபாடுகள், மற்ற வற்றை விட மிக புதியதும் மேலானதுமானவைகளாக வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது.
3-5 ஆற்றுத் தண்ணீர் யூதேயா தேசத்திற்குள்ளே புகுந்து பிரவாகித்து கடந்து செல்லுதல் :- Isa_8:8,
புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும் யூதருடைய முறைகளுடன் கலந்து வெளிப் படும்போது மிக வல்லமையுள்ளதாகவும் மிக திரளான வெளிப் பாடகவும் காணப்படுகிறது.
3-6 வல்லமையுள்ள ஆற்றுத் தண்ணீர் இஸ்ரவேலரின் கழுத்து மட்டும் பொங்கி திரளாக வெளிப்படுதல் :-
யூதருடைய முறைகளுடன் கலந்த புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும், தங்களுக்கு போதும் என்கிற அளவிற்கு மிக திரளாகவும் நல்ல திருப்தியாகவும் தங்கள் அறிவுக்கேற்றபடி தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது. இஸ்ரவேல் தாங்கள் விரும்பினபடியே வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீரைப் போல ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையும் குறித்த வெளிப் பாடுகளை மிக திரளாக பெற்றபடியால், தேவன் எங்களோடிருக்கிறார் என்று தாங்கள் சொல்லிக்கொண்டு; மற்றவர்களையும் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட வார்த்தைகளை கொண்டு அழைக்கிறார்கள்.
3-7 ஜனங்களே நீங்கள் கூட்டங்கூடுங்கள் முறியடிக் கப்படுவீர்கள் :- .ஐளயமூ8:9,
ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாடுகள் இல்லாமல் நீங்கள் உங்களுடைய விசுவாசத்தின் படி கூடி வரும்போது மற்றவர்கள் உங்களை மேற்கொண்டு சிதறடிப்பார்கள்.
3-8 தூரத்தேசத்தராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள் :- Isa_8:9,
தேவனை விட்டு பின்வாங்குகிற நீங்கள் எல்லாரும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையையும் ஏற்றுக்கொண்டு அவைகளை சுதந்தரித்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
3-9 இடைகட்டிக் கொள்ளுங்கள் முறிந்தோடுவீர்கள்:- Isa_8:9,
உங்களுடைய விசுவாசங்களையும் அதன் வெளிப்பாடு களையும் கொண்டு நீங்கள் உங்களுடைய கட்டமைப்பை பெலப் படுத்திக்கொள்ளுங்கள், ஆனாலும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாட்டிற்கு முன்பாக நீங்கள் எதிர்த்து நிற்க முடியாமல் முறித்தோடுவீர்கள் ஏனென்றால் தேவன் எங்களுடன் இருக்கிறார்.
3-10 ஆலோசனை செய்யுங்கள் அது அபத்தமாகும்:- Isa_8:10,
தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு விரோதமாக நீங்கள் ஆலோசனை செய்யுங்கள் அவைகள் பொய்யாகமாறும்
3-11 வார்த்தையை வசனியுங்கள் அது நிற்காது தேவன் எங்களுடன் இருக்கிறார் :-
தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு இணையாகவோ அல்லது எதிராகவோ நீங்கள் வார்த்தையை பேசுங்கள் அது நிலை நிற்காது காரணம் தேவன் எங்களோடிருக்கிறார். நாங்கள் மட்டும் இந்த வெளிப்பாடுகளை பெற்றிருக்கிறோம், ஆகவே எங்களால் மட்டும் இதன் வார்த்தைகளை தெளிவாக பேசமுடியும்.
3-4-0 தேவ வார்த்தை என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்
3-4-1 தேவனுடைய சித்தப்படியுள்ள பரலோக இராஜ் ஜியத்தின் ஆட்சி அதிகாரங்களை (நற்குல திராட்ச தோட்டத் தினுடைய கோபுரத்தின் கட்டுப்பாட்டை) மனிதனின் கற்பனைகளின் சித்தபடி கைப்பற்றும் முயற்சி தோல்வியடைதல்.
இந்த தலைப்பை குறித்து அறிய 2-4-1 வரிசையின் தலைப்பை பார்க்கவும்.
3-4-2 இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசம், கள்ள தீர்க்கதரிசிகளாலும் கபடமுள்ள வேலையாட்களாலும் (கள்ள ஊழியர்கள்) நாளுக்கு நாள் தரம் தாழ்த்தப்பட்டுக் கொண்டு வருகிறது.
இந்த தலைப்பை குறித்து அறிய 2-4-2 வரிசையின் தலைப்பை பார்க்கவும்.
3-4-3 இயேசு கிறிஸ்துவினுடைய உபதேசத்தின் பலமான ஆகாரமான நீதியின் வசனமும், கிறிஸ்துவின் பட்டாபிஷேக முடிசூட்டு விழாவின் விருந்தான தேவனுடைய சத்தியமான வசனங்களும், நாளுக்கு நாள் தரம் தாழ்த்தப்படுதல்.
இந்த தலைப்பை குறித்து அறிய 2-4-3 வரிசையின் தலைப்பை பார்க்கவும்.
3-4-4 மனிதனின் கற்பனைகளிலிருந்து பொங்கி வரும் சுயமான தரிசங்களின் அடர்த்தியான புகை மண்டலம் போன்ற புதிய வெளிப்பாடுகள்.
இந்த தலைப்பை குறித்து அறிய 2-4-4 வரிசையின் தலைப்பை பார்க்கவும்.
3-4-5 இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரமும் அதன் ஞானார்த்தமுள்ள சம்பவங்களும் :-
1. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். Eze_20:1-9
2. இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தந்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளுபடி வனாந்தரத்தின் வழியாக கடந்து வந்தார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள சோதனை களையும் வேதனைகளையும் கடந்து வந்தார்கள் Eze_20:10-14,Eze_20:15-22
3. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய வாக்குத்தத்த தேசத்தில் பன்னிரெண்டு கோத்திரங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட இராஜ்ஜியத்தின் ஆட்சி முறைகள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் பிதாவின் வாக்குத் தத்தமாக கிடைத்த பரிசுத்த ஆவியின் ஊழியங்களும் வரங்களும்; கிறிஸ்துவை தலையாகக் கொண்டுள்ள சரீர அவயவங்களிள் ஒருங் கிணைக்கப்பட்டு ஒரே சரீரத்தின் ஆட்சி முறையாக செயல்படுதல்.
4. இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர் வாதங்களுக்குள்ளே பிரவேசித்து தங்கள் அருவருப்பான காரியங்களி னாலே தேசத்தை தீட்டுப்படுத்தினார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தின் மூலம் கிடைத்த பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களுக்குள்ளே பிரவேசித்து தங்கள் அருவருப்பான காரியங்களினால் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தினார்கள் / ஊழியத்தை தீட்டுபடுத்தினார்கள். . Eze_20:23-39, Eph_4:30
5. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய வாக்குத்தத்த தேசத்திலே பிரிக்கப்பட்ட கோத்திரங்களின் இராஜ்ஜிய ஆட்சி முறைகள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் மூலம் கிடைத்த கிருபை வரங்களில் / ஊழிய உடன்படிக்கையில் தங்களுடைய விசுவாச அளவை மீறி, எண்ணவேண்டியதற்கு மிஞ்சி, தன்னை உயர்த்துகிறவர்களின் கிரியைகளை, நாளானது கிறிஸ்துவின் சரிரத்தை விட்டு பிரிந்து சென்ற அவயவங்களாக தங்களுடைய பிரிக்கப்பட்ட கிரியைகளை / ஊழியத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
6. இஸ்ரவேல் ஜனங்களின் பிரிக்கப்பட்ட இரண்டு பிரிவு ஜனங்களும் மீண்டும் சிறையிருப்பிற்கு அல்லது அடிமைத்தனத் திற்கு தேவனால் அனுப்பப்படுகிறார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தி லிருந்து பிரிந்து சென்று தங்களுடைய விருப்பப்படி செயல்பட விரும்புகிறவர்களை, அவர்கள் பெற்ற பரிசுத்த ஆவியின் ஊழியங்கள், வரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் விருப்பங்களுக்கே அடிமையாகும்படி தேவன் அவர்களை ஒப்புக்கொடுக்கிறார்.
.2Ki_17:7-23, 2Ki_17:24-29 , 2Ki_17:29, 2Ki_17:30-41, Psa_106:41-48, Amo_7:8-17, Hos_4:16-19, Hos_8:1-14, Hos_9:1-10, (Hos_10:1, Hos_11:1, Hos_12:1, Hos_13:1, Chapters)
7. இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் ஆட்சி முறையை பின்பற்றி அதற்கு அடிமைகளாக மாறுதல் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் புறஜாதிகளின் ஆட்சி முறைகளை, தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் / ஊழிய பாதையிலும் பின்பற்றினபடியால் தங்கள் விருப்பங்களுக்கே அடிமை யாகும்படி தேவன் அவர்களை ஒப்புக்கொடுக்கிறார். Hos_4:1-11, Hos_4:12-19, Rom_1:21, Isa_5:5-16,
8. இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் சிறையிருப்பி லிருந்து அல்லது அடிமைத்தனத்திலிருந்து தேவனால் தங்களது இராஜ்ஜியத்திற்கு திரும்புதல் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் புறஜாதிகளின் சிறையிருப்பிலிருக்கிற / அடிமைத்தனத்திலிருக்கிற அருவருக்கப் படதக்கதையும் அசுத்தமானவைகளையும் அகற்றி, தேவனுடைய கட்டளைகளின்படி நடக்க முன் வருகிறவர்கள் எவர்களோ; அவர்களுக்கு தேவன் புதிய ஆவியையும் புதிய இருதயத்தையும் கொடுத்து, தங்களது வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களை திரும்பக் கொடுப்பார் . Eze_20:40-44, Hos_7:1-14, Jer_24:1-7,