தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 07


தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்

பொருளடக்கம் 4-0-0

4-0-0 யூதர்களின் தரிசனங்கள்
 
4-1-0 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள்
 
4-1-1 விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும்
 
4-1-2 தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களில் வெளிப்பட்ட கிரியைகள் 
 
4-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள்
 
4-2-1 யோகோவாவாகிய தேவன் தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.
 
4-2-2 யூதர்கள் வெறுத்து தள்ளின புற ஜாதிகளின் முறைகள்.
 
4-3-0 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள்
 
4-3-1 இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுதல் 
 
4-3-2 நியாப்பிரமாணத்தின் மூல உபதேசத்தை இயேசு கிறிஸ்து நிறைவேற்றுதல்.
 
4-0-0 யூதர்களின் தரிசனங்கள் 
 
4-1-0 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள் 
 
4-1-1 விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும் உண்டாவதற்கு மூலக்காரணங்கள்
 
இந்த தலைப்பை குறித்து அறிய 1-1-1 வரிசையின் தலைப்பை பார்க்கவும் 
 
4-1-2 தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் என பெயரிட்டு அழைக்க காரணமாக வெளிப்பட்ட கிரியைகள்
 
நியாயப்பிரமாணத்தையும் அதன் ஆசரிப்பு முறைகளையும் தேவன் மோசேயின் மூலம் ஜனங்களின் நடைமுறைக்காக கொடுக்கப் படும் காலத்திற்கு முன்னே; அவைகளை தங்களுடைய விசுவாச எண்ணங்களின் மூலம் உணர்ந்து, தங்களுடைய வாழ்க்கையின் நடைமுறைப்படுத்தினவர்களை தேவனால் முன் குறிக்கப்பட்டவர் கள் என பெரியட்டு அழைக்கப்படுகிறார்கள். Heb_11:1-12, Heb_11:13-23, Gen_4:1-8, 1Jo_3:11-12, Gen_14:18-20, Gal_3:15-17, Exo_12:40, Heb_7:9-10, Gen_44:30-34, 
 
4-2-0 யேகோவா தேவன் என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள்
 
4-2-1 யேகோவாகிய தேவன் நியாயப்பிரமாண உப தேசத்தையும் அதன் ஆசரிப்பு வழி முறைகளையும் பகுத்து பிரித்து ஜனங்களுக்கு கொடுப்பதின் மூலம் ஜாதிகளின் மத்தியில் இருந்து தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது. 
 
மோசேயின் மூலம் பரலோகத்தின் தேவன் கொடுத்த நியாயப்பிரமாணத்தையும் அதன் ஆசரிப்பு முறைகளையும் பின்பற்றி; புற ஜாதிகளின் முறைகளுடன் கலவாமல் தனியாக வாழ்ந்து வந்தவர்கள் யூதா கோத்திரம் என்று அடையாளம் காணப்பட்டது. 
 
இந்த யூதர்களின் முறைகளை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றின இஸ்ரவேல் ஜனங்களும் மற்ற சில புற ஜாதிகளும் கலந்த ஜனக்கூட்டமைப்பு இந்நாள்வரை யூதா ஜனங்கள் என்றும், அவர்களின் தேசம் யூதேயா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
இந்த தலைப்பை குறித்து அறிய 1-2-1 வரிசையின் தலைப்பை பார்க்கவும்.
 
4-2-2 யூதர்கள் வெறுத்து தள்ளின புற ஜாதிகளின் முறைகள்:-
 
மனிதனின் கற்பனைகள் உருவாக காரணமாயிருந்த புற ஜாதிகளின் முறைகள்.
 
இஸ்ரவேல் ஜனங்கள் சிறையிருப்புக்கு அனுப்பப்பட்டபோது அவர்கள் புற ஜாதிகளின் முறைகளுடன் கலந்து, தங்கள் விருப்பத்திகேற்ற படியுள்ள புதிய பிரமாணங்களும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளும் மனிதனின் கற்பனைகளாக வடிவமைக்கப்பட்டு வெளிப்பட்டது.
 
யூதா ஜனங்களின் சிறையிருப்பு :-
 
1. பாபிலோன் சிறையிருப்பு 2. எகிப்து சிறையிருப்பு Jer_24:1-7, Jer_38:1, Act_1:11-12 , Isa_5:13, Isa_5:24, Isa_1:1-6, Isa_8:8-22, Isa_24:1-7, Isa_42:18-25,Jer_5:20-31, Jer_41:17-18, Isa_30:1-17, Isa_31:1-3, Isa_19:12-25, 
 
இஸ்ரவேல் ஜனங்களின் சிறையிருப்பு :-
 
1. அசீரியா சிறையிருப்பு 2. சமாரியா சிறையிருப்பு 
 
2Ki_17:20-33, 2Ki_17:34-41, Psa_106:41-48, Hos_7:8-16, Hos_8:1-14, Hos_9:17,
 
4-3-0 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள் 
 
4-3-1 இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுதல் :-
 
நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை இயேசு கிறிஸ்து தன்னுடைய சரீரத்தின் மூலம் பாவம், மரணம், இவைகளை ஜெயங் கொண்டு நியாயப் பிரமாணத்தின் நீதியான ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை வெளிப்படுத்தினார். இப்படி கிறிஸ்து வெளிப்படுத்தி கொடுத்தப் படியால் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை கொடுக்கிறவர் என்ற பெயரையும் பெற்றுக் கொள்ளுகிறார். Gen_49:10, Num_21:18, Deu_33:21, Psa_108:7-8Isa_33:22 Psa_60:7, Heb_7:11-20.Heb_7:21-28, Rom_9:4 , Rom_3:1-3, Mat_5:17-18, 
 
4-3-2 நியாயப்பிரமாணத்தின் மூல உபதேசத்தையும் அதன் ஆசரிப்பு முறைகளையும் இயேசு கிறிஸ்து நிறைவேற்றுதல்.
 
இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங் கொள்ளுவதின் மூலம் நியாயப்பிரமாணத்தின் மூல உபதேசமும் அதன் ஆசரிப்பு முறைகளும் தன் நிழலாட்டமானவைகளிலிருந்து அதன் பொருளுக்கு மாற்றப்படுகிறது. இப்படி கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுகிறார். Rom_8:1-4, Heb_9:16-17, Heb_9:1-10, Heb_9:11-26
 
நியாயப்பிரமாண நீதியின் உபதேசங்களும் கிரியைகளும்
 
1. நியாயப்பிரமாணம் இல்லாமலிருந்தபோது மனிதனின் சரீர அவயவங்களில் பாவப்பிரமாணம்.
 
2. நியாயப்பிரமாண நீதியின் ஆரம்பம்.
 
3. நியாயப்பிரமாணத்தின் உபதேசங்கள் / பிரமாணங்கள்
 
4. நியாயப்பிரமாணத்தின் ஊழியங்கள்
 
5. நியாப்பிரமாண நீதியில் நிலைத்திருப்பவர்கள்.
 
6. நியாப்பிரமாண நீதியில் நிலைத்திருக்காதவர்கள் 
 
7 நியாப்பிரமாண நீதியின் முடிவு 
 
1-1 நியாப்பிரமாணம் இல்லாமலிருந்த போது மனிதனின் சரீர அவயவங்களில் பாவப்பிரமாணம் :-
 
நியாயப்பிரமாணத்திற்கு / மனசாட்சியின் பிரமாணத்திற்கு விரோதமாக சரீர அவயவங்களில் இருக்கிற பாவப்பிரமாணம்; மனிதனை சிறையாக்கிக் கொள்ளுகிறது அல்லது அடிமைப் படுத்துகிறது. Rom_7:14-25, 
 
1-2 மாம்ச சிந்தை ஆவி ஆத்துமாவில் மரணத்தை ஏற்படுத்துகிறது மற்றும் தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு கீழ் படியாமலும், கீழ்படியக்கூடாமலும் இருக்கிறது. Rom_8:5-8
 
1-3 நாமெல்லாரும் முற்காலத்திலேயே நமது மாம்ச இச்சையின் படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவை களைச்செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். Eph_2:1-3, 
 
2-0 நியாயப்பிரமாண நீதியின் ஆரம்பம் :-
 
நியாயபிரமாணத்தின் கிரியைகள் வெளிப்படாமல் இருந்தா லும் அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக் கிறார்கள். Rom_2:14-16, Rom_13:5, 1Jo_3:20-22, Deu_30:11-20, 
 
3-0 நியாயப்பிரமாணத்தின் உபதேசங்கள் / பிரமாணங்கள்:-
 
3-1 சீனாய் மலையிலுண்டான ஏற்பாடு , Gal_4:21-31,
 
3-2 நியாயப்பிரமாணம் பாவிகளுக்கு கொடுக்கப்பட்டது 1Ti_1:9-11
 
3-3 தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும், ஓய்வு நாளையும் 
 
பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால் நன்மைக் கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங் களையும் / பாவிகளின் பிரமாணத்தை வனாந்தரத்திலே தேவன் அவர்களுக்கு கொடுத்தார். Eze_20:19-25, 
 
3-4 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்படுதவற்கு முன்பு தேவனுக்கும், மனிதனுக்கும் மத்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட முதல் அடையாளம் “பஸ்கா” பண்டிகையின் நியமங் கள் இது யூதர்களின் பிரதான முதல் பண்டிகை Exo_12:1-15, Exo_12:16-27,
 
3-5 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு தேவனுக்கும், மனிதனுக்கும் மத்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட இரண்டாம் அடையாளம் ஓய்வுநாள் பிரமாணங்கள். இந்த இரண்டு அடையாளங்களை கொடுத்த பிறகு சீனாய் மலையிலே தேவன் நியாயப்பிரமாணத்தை கொடுத்தார். Exo_16:1-10, Exo_16:11-20, Exo_16:21-35, 
 
4-0 நியாயப்பிரமாணத்தின் ஊழியங்கள்:-
 
4-1 உண்டாக்கப்பட்ட எல்லா அதிகாரங்களும் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது இந்த உலகத்தின் அரசாங்க அதிகாரிகளும் நியாயப்பிரமாணத்தின் அதிகாரங்களையுடைய தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள் Rom_13:1-10, 
 
4-2 தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும் / தாங்கள் பிரசங் கிக்கிறது இன்னதென்றும் தாங்கள் எந்த வகையான ஊழிய அழைப்பை பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியாதிருந்தும் நியாயப் பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். . 1Ti_1:7Rom_2:17-27
 
4-3 நியாயப்பிரமாணத்தின் ஊழியங்கள் மரணத்தை கொடுக்கும் / ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியங்கள் 2Co_3:7-16
 
5-0 நியாயப்பிரமாண நீதியில் நிலைத்திருப்பவர்கள்:-
 
5-1 நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு அவைகளால் ஆவியில் பிழைப்பவர்கள் Gal_3:12, Rom_2:11-13, Rom_3:19-20, Exo_20:10-13, Rom_10:5, Lev_18:1-5, Deu_8:3, Mat_4:4, Luk_4:4, 
 
5-2 நியாயப்பிரமாண நீதியினால் மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமான் அல்ல ஆனால் மனிதனுக்கு முன்பாக நீதிமான் Rom_2:13, Rom_3:20, Gal_2:16, Gal_3:11, Gal_5:4, Rom_9:30-33, Phi_3:4-11
 
5-3 பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண உபதேசத்தை உலக அரசாங்க அதிகாரிகளும் மற்றும் உலகத்தில் உருவான எல்லா மதங்களும் தங்களுடைய அடிப்படை பிரமாணங்களாகவே பின்பற்றுகிறது, எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக்கு கீழ்ப்படியக்கடவன் ; 
 
ஏனென்றால், தேவனாலேயேன்றி ஒரு அதிகாரமுமில்லை, உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானக்கப்படுவதில்லை. எனவே நியாயப்பிரமாண நீதியினால் மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமான் அல்ல, Job_25:1-6, Job_15:1-16, Mat_6:1, Mat_6:5, Mat_6:16, Luk_16:15, Joh_12:43, Isa_2:6
 
5-4 நியாயப்பிரமாண நீதியை பின்பற்றுகிறவர்களின் முடிவு
 
முதலாம் மரணமாகிய பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங் கொள்ள முடியாமல், தேவனால் தங்களுக்கு சரீரத்தில் கிடைத்த தேவனுடைய ரூபமும், சாயலும், நஷ்டமடைந்து மிருகத்தின் சாயலையும் ரூபத்தையும் பெற்று, இரண்டாம் மரணமாகிய அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாக்கப்படுவார்கள். அல்லது பொதுவான இரட்சிப்பினால் ஆவி, ஆத்துமா அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாக்கப்படும் / இரட்சிக்கப்படும் ஆனால் இயேசு கிறிஸ்துவின் விசேஷ இரட்சிப்பின் மூலம் சரீரத்தில் கிடைத்த தேவனுடைய ரூபமும் சாயலும் நஷ்டமடைந்து மிருகத்தின் ரூபமும் சாயலும் கொடுக்கப்படும். 1Co_5:1-5, 1Co_15:35-42, Psa_49:10, Job_14:19-22, Job_18:1-21, 1Pe_4:5-6, Rth_2:20, 
 
6-0 நியாயப்பிரமாண நீதியில் நிலைத்திருக்காதவர்கள்:-
 
6-1 நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாதவர்கள் சபிக்கப் பட்டவர்கள் Deu_11:26-32, Deu_30:11-20, Dan_9:11-14, Rom_3:8-19, Gal_3:10-12, 
 
6-2 சபையின் உபதேசத்தின்படி ஆவியில் மறுபடியும் பிறந்தவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் அல்ல. கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை பின்பற்றி ஆவி, ஆத்துமாவில் பாவத் தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனம் திரும்பாமல்; ஸ்திரீயாகிய சபையின் உபதேசத்தின்படி ஆவி, ஆத்து மாவில் பாவத்தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் கிரியை களிலிருந்து மனந்திரும்புகிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருப்பது எப்படி?
 
Job_15:1-35, Job_25:4, Job_39:1-8, Pro_1:10-19, Pro_2:1-22, Pro_5:1-23, Pro_6:23-35, Pro_7:1-27, Pro_9:13-18, Isa_4:1, Isa_3:12, Rev_18:1-24, Job_15:14, 
 
6-3 சபையின் உபசேத்தின்படி ஆவியில் மறுபடியும் பிறந்தவர்கள் மனுஷர்களுக்கு முன்பாக தங்களை நீதிமான்களாகக் காட்டுகிறார்கள் / விரும்புகிறார்கள் / மகிமையைத்தேடுகிறார்கள். எனவே இவர்கள் மனுஷர்களுக்கு முன்பாகவும் நீதிமான்கள் அல்ல, தேவனுக்கு முன்பாகவும் நீதிமான்கள் அல்ல; பிசாசுக்களுக்கும், அவ னுடைய தூதர்களுக்கும் ஆயத்தமாக்கப்பட்ட அக்கினி நரகத்திற்கு பாத்திரவான்களாக கூடிய அக்கிரமக் கிரியைகளே இவர்களிடத்தில் காணப்படுகிறது.
 
7-0 நியாயப்பிரமாணத்தின் முடிவு கிறிஸ்து :-
 
7-1 விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நன்மை கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்துகிற உபாத்தியனாக / பள்ளி ஆசிரியராக இருக்கிறது Gal_3:22-26, 
 
7-2 தங்கள் இருதயத்தில் எழுதப்பட்ட நியாயப்பிரமாண கிரியைகளின் நன்மை, தீமைகள் இன்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களை யுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு; பலமான ஆகாரமா கிய கிறிஸ்துவின் நீதியின் வசனத்தை அறிந்து கொள்ள நியாயப் பிரமாணம் ஒரு பள்ளி ஆசிரியரைப்போல விசுவாசத்திற்கு வழி நடத்துகிறது Rom_2:14-15, .Heb_5:12-14, 
 
7-3 நியாயப்பிரமாணத்திற்கும் வாக்குதத்தின் மூலம் வருகிற விசுவாச நீதிப் பிரமாணத்திற்கும் உள்ள இடைவெளியின் காலம் 430 வருடங்கள் Gal_3:14-18, 
 
7-4 கிறிஸ்து பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொண்ட படியால் நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுகிறார். Act_2:27, Psa_16:10, Psa_30:3, Psa_49:15, Psa_86:13, Mat_16:18, Rev_1:18, Act_2:31, Hos_13:14, 1Sa_2:6, Eph_4:1-10, 
 
7-5 நியாயப்பிரமாணம், சீர்த்திருத்தல் உண்டாகும் காலம் வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிட்டப்பட்ட போஜன பானங் களும், பலவித ஸ்நானங்களும், சரிரத்திற்கேற்ற சடங்களுமே யல்லாமல் வேறல்ல. / சரீரத்தின் ஆசரிப்பு முறையின் ஒழுங்குகள் Heb_9:8-10, Col_2:13-23, 
 
7-6 முதல் கூடாரமாகிய சரீரத்தில் வெளிப்படும் நன்மை தீமைகளின் கிரியைகளை எப்படி இரண்டாம் கூடராமாகிய இருதயத்தில் தேவ நீதியை நிறைவேற்ற முடியும் என்பதை விவரித்து சரீரத்திற்கும், இருதயத்திற்கும் / முதல் கூடாரத்திற்கும் இரண்டாம் கூடாரத்திற்கும் உள்ள நியாயப்பிரமாணத்தையும், தீர்க்க தரிசனங்களையும் இயேசு கிறிஸ்து நிறைவேற்றுகிறார். Rom_8:1-10, 
 
உதாரணம் :- பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ; நியாயப்பிரமாணத்தை உங்களுக்கு கொடுத்தவராகிய நானே அதை நிiறேவற்றுவதற்காக வந்திருக்கிறேன் (மலைப்பிரசங்கம்)
 
8-0 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே நீதியின் பிரமாணத்தை தேடினபடியால் சீயோனில் இருக்கிற முலைக்கல்லில் இடறிவிழுகிறார்கள்.
 
Rom 9:31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேல் / கிறிஸ்தவர்களில் நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
 
Rom 9:32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தி னாலே அதைத்தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
 
Rom 9:33 இதோ, இடறுதற்கான கல்லையும், இடறுவதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாச மாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதி யிருக்கிறபடியாயிற்று.
 
ஸ்திரியாகிய சபையினிடத்தில் ஆவியில் மறுபடியும் பிறந்த மனுஷனும், மனுபுத்திரனும் தேவனுக்கு முன்பாக நீதிமானக இருப்பது எப்படி? Job_15:1-35, Job_25:1-6, Job_39:1-8, Pro_1:10-19, Pro_2:1-22, Pro_5:1-23, Pro_6:23-35, Pro_7:1-27, Pro_9:13-18, Isa_4:1, Isa_3:12, Rev_18:1-24, Job_15:14, 
 
1Pe 2:4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், 
 
1Pe 2:5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்றமாளிகை யாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த்தேவனக்குப் பிரியமான ஆவிக் கேற்றபலிகளைச் செலுத்தும் படிக்கு பரிசுத்த ஆசாரியக் கூட்ட மாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள். 
 
1Pe 2:6 அந்தப்படியே : இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படு வதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 
 
1Pe 2:7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பபெற்றது; கீழ்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலை யுமாயிற்று;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries