தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 07


தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்

பொருளடக்கம் 4-3-3-8

4-3-3-8 ஏழு அடிப்படை உபதேசங்கள்
 
1. பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்ட நியாயப்பிரமாணத்தின் பத்து கற்பனைகள் 
 
2. யேகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட உபதேசங்கள் 
 
3. இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட உபதேசங்கள்
 
4. மனிதனுடைய இராஜ்ஜியத்தில் உண்டாக்கப்பட்ட மனிதனுடைய கற்பனைகள்
 
5. 144,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக வெளிப்பட்ட உபதேசங்கள்
 
6. ஆயிரம் ஆண்டு ஆட்சியில் பங்கடையும் ஜனங்களை பிரித்தெடுக்கும் பிரமாணம்.
 
7. மோசேயின் பத்து கற்பனைகளுக்கு இணையான பன்னிரண்டு தேவ கற்பனைகள்
 
 
1. பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்ட நியாயப்பிரமாணத்தின் பத்து கற்பனைகள்
 
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
 
2. மேலே வனாத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூ பத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும், நீ உனக்கு உண் டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னி டத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளு கிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிற வராயிருக்கிறேன்.
 
3. உன் தேவனாகிய கர்த்தருiடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். 
 
4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாக; ஆறு நாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளை எல்லாம் நடப்பிப் பாயாக; ஏழாம் நாளோ உன் வேதனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியா னாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும் உன் மிருக ஜீவனானாலும் உன் வாசல்களில் இருக்கிற அந்நியானானாலும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
 
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால் கர்த்தர் ஓய்வு நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார்.
 
5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத் திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. 
 
6. கொலை செய்யாதிருப்பாயாக.
 
7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
 
8. களவு செய்யாதிருப்பாயாக.
 
9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லா திருப்பாயாக.
 
10 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக ; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழு தையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சி யாதிருப்பாயாக என்றார். Deu_5:7-21, Exo_20:3-17,
 
 
2. பழைய ஏற்பாட்டில் யேகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:-
 
1. புத்திர சுவீகாரம் 2. மகிமை 3. உடன்படிக்கைகள் 4.நியாயப்பிரமாணம் 5. தேவாரதனை 6. வாக்குத்தத்தங்கள்
 
பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்ட பலமான உபதேசங்கள்:-
 
7. தேவனுடைய வாக்கியங்கள் 8. தேவனுடைய வாக்கியங்களின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Rom_9:4, Rom_3:1-2, 
 
3. புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட
 
மூல உபதேசங்கள்:- 
 
1. செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல்
 
2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்
 
3. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம் 
 
4. கைகளை வைக்குதல் 
 
5. மரித்தோரின் உயிர்த்தெழுதல்
 
6. நித்திய நியாயத்தீர்ப்பு
புதிய ஏற்பாட்டில் வெளிப்பட்ட பலமான உபதேசங்கள்
 
7. நீதியின் வசனம் / பிரமாணம்
 
8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Heb_5:12-14, Heb_6:1-2, 
 
4. மனிதனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் உண்டாக்கப்பட்ட மனிதனுடைய கற்பனைகள் / மூல உபதேசங்கள்:-
 
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கை செய்தல் Rom_10:9-10, 
 
2. பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் Act_2:38, 
 
3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல் Mar_16:16, 
 
4. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் Act_2:1-4,
5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25, 
 
6. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10, 
 
மனிதனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் உண்டாக்கப்பட்ட மனிதனுடைய கற்பனைகள் / பலமான உபதேசங்கள்:- 
 
7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27, Isa_4:1, 
 
8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல் Mar_16:15, 
 
5. தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் 144,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள் / தேவனுடைய இராஜ்ஜியத்தின் மூல உபதேசங்கள்:-
 
1. ஜாதிகளின் எந்த ஒரு முறையையும் பின்பற்றக் கூடாது. 
 
Lev_18:1-5,Eze_11:12-13,
 
2. கர்த்தருடைய பஸ்காவை புசிக்க வேண்டும். Gen_17:9-14, Exo_12:48,.
 
3. ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும். 
 
Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11,
 
4. மனச்சாட்சிப் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்.
 
Rom_2:23-29, 1Jo_3:20-33
 
5. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்ற வேண்டும்.
 
Joh_3:31-36, Rev_6:9,
 
6. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
 
Eph_1:13, Eph_4:30
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் 144,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட பலமான உபதேசங்கள்:-
 
7. பலிபீடத்தின் சட்ட திட்ட பிரமாணங்களை பின்பற்ற வேண்டும். Exo_29:37, Exo_30:28-29,
 
8. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியத்தில் பங்குபெறுதல் Isa_65:8-9, Isa_65:12-16,Isa_33:15-17,
 
6 இந்த பூமியில் உள்ள ஜனங்களுக்குள்ளே ஆயிரம் ஆண்டு ஆட்சியில் பங்கடையும் ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு / பிரமாணம் 
 
1. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் பசியாயிருந்தபோது போஜனம் கொடுக்காதவர்கள்.
 
2. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் தாகமாயிருந்தபோது தாகத்தைத் தீர்க்காதவர்கள் 
 
3. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் அந்நியனாயிருந்த போது சேர்த்துக் கொள்ளாதர்கள்
 
4. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் வஸ்திரமில்லாதபோது வஸ்திரம் கொடுக்காதவர்கள்
 
5. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் வியாதிருந்தபோது விசாரிக்க வராதவர்கள்.
 
6. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் காவலிருந்தபோது பார்க்க வராதவர்கள்
 
7. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் சீயோனுக்கு தேவ ஊழியர்களை அனுப்பாதவர்கள் :-
 
தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத்தியின் மலைக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் கூட்டை விட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப் போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.
 
8. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் சீயோனின் தேவ ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுக்காதவர்கள்:-
 
நீ ஆலோசனைப்பண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக் கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு. மோவாபே, துரத்தி விடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும் ; சங்கரிக்கிற வனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்: சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்து போவார்கள். Mat_25:31-36, Mat_10:40-42, Mar_9:41-42, .Isa_16:1-5, Jos_2:4-6, Jdg_5:20, Job_38:12-13, Job_38:31-33,
 
7. பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்ட நியாயப்பிரமாணத் தின் பத்து கற்பனைகளுக்கு இணையான தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட நியாயப்பிரமாணத்தின் பன்னிரண்டு தேவ கற்பனைகள்
 
1. கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளு டைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டு பண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிற வன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமான ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 
 
2. தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பவட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
 
3. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 
 
4. குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக் கடவர்கள்.
 
5. பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக ; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
 
6. தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக : ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக் கடவர்கள்.
 
7. யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப் பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
 
8. தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக ; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
 
9. தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக் கடவர்கள். 
 
10. ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலை செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
 
11. குற்றமில்லாதவனைக் கொலை செய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
 
12. இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்க ளெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். . Deu_27:15-26,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries