தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 08


தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்

பொருளடக்கம் 1-0

அத்தியாயம் ஒன்று
 
1-1 மனசாட்சியினால் நியாயப்பிரமாணம்
 
1-2 விசுவாசத்தினால் தேவனுடைய நீதியின் பிரமாணம்
 
1-3 விசுவாசத்தினால் நீதியின் பிரமாணத்தை அடைய முடியாதவர்கள், சீயோனிலிருக்கிற மூலைக்கல்லில் இடறிவிழுகிறார்கள்.
 
அத்தியாயம் ஒன்று
 
1-1 மனசாட்சியினால் நியாயப்பிரமாணம்
 
1. நியாயப்பிரமாணம் இல்லாமலிருந்தபோது மனிதனின் சரீர அவயவங்களில் பாவப்பிரமாணம்.
 
2. நியாயப்பிரமாண நீதியின் ஆரம்பம்
 
3. நியாயப்பிரமாணத்தின் உபதேசங்கள் / பிரமாணங்கள்
 
4. நியாயப்பிரமாணத்தின் ஊழியங்கள்
 
5. நியாயப்பிரமாண நீதியில் நிலைத்திருப்பவர்கள்.
 
6. நியாயப்பிரமாண நீதியில் நிலைத்திருக்காதவர்கள்
 
7. நியாயப்பிரமாண நீதியின் முடிவு
 
1. நியாயப்பிரமாணம் இல்லாமலிருந்தபோது மனிதனின் சரீர அவயவங்களில் பாவப்பிரமாணம்:-
 
நியாயப்பிரமாணமாகிய மனதின் / மனசாட்சியின் பிரமாணத் திற்கு விரோதமாக சரீர அவயவங்களில் இருக்கிற பாவப்பிரமாணம் மனிதனை சிறையாக்கிக்கொள்ளுகிறது அல்லது அடிமைப் படுத்துகிறது. Rom_7:14-25, 
 
மாம்ச சிந்தை ஆவி ஆத்துமாவில் மரணத்தை ஏற்படுத்து கிறது மற்றும் தேவனுடைய நியாப்பிரமாணத்திற்கு கீழ்படியாமலும், கீழ்படிய கூடாமலும் இருக்கிறது. Rom_8:5-8
 
நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின் படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். Eph_2:1-3, 
 
2. நியாயபிரமாண நீதியின் ஆரம்பம்:-
 
நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் வெளிப்படாமல் இருந் தாலும் அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச்சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியைகள் தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக் கிறார்கள். Rom_2:14-16, Rom_13:5, 1Jo_3:20-22, Deu_30:11-20, 
 
3. நியாயப்பிரமாணத்தின் உபதேசங்கள் / பிரமாணங்கள்:-
 
சீனாய் மலையிலுண்டான ஏற்பாடு Gal_4:21-31,
 
நியாயபிரமாணம் பாவிகளுக்கு கொடுக்கப்பட்டது 1Ti_1:9-11
 
தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும், ஓய்வு நாளையும் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்; நன்மைக்கேதுவல் லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் / பாவிகளின் பிரமாணத்தை வனாந்தரத்திலே தேவன் அவர்களுக்கு கொடுத்தார். Eze_20:19-25, 
 
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்படுதவற்கு முன்பு தேவனுக்கும், மனிதனுக்கும் மத்தியில் அடையாளமாக கொடுக்கப் பட்ட முதல் அடையாளம்; பஸ்கா பண்டிகையின் நியமங்கள் இது யூதர்களின் பிரதான முதல் பண்டிகை Exo_12:1-15, Exo_12:16-27, 
 
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு தேவனுக்கும், மனிதனுக்கும் மத்தியில் அடையாளமாக கொடுக்கப் பட்ட இரண்டாம் அடையாளம் ஓய்வுநாள் பிரமாணங்கள்; இந்த இரண்டு அiடாயளங்களை கொடுத்த பிறகு சீனாய் மலையிலே தேவன் நியாயப்பிரமாணத்தை கொடுத்தார். Exo_16:1-10, Exo 16:11-20, Exo_16:21-35, 
 
4. நியாயப்பிரமாணத்தின் ஊழியங்கள்:-
 
உண்டாக்கப்பட்ட எல்லா அதிகாரங்களும் தேவனால் நியமிக் கப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தின் அரசாங்க அதிகாரிகளும் நியாயப்பிரமாணத்தின் அதிகாரங்களையுடைய தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள் Rom_13:1-10, 
 
தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக் கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும் / தாங்கள் பிரசங்கிக்கிறது இன்னதென்றும், தாங்கள் எந்த வகையான ஊழிய அழைப்பை பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியாதிருந்தும் நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். 1Ti_1:7,Rom_2:17-27
 
நியாயபிரமாணத்தின் ஊழியங்கள் மரணத்தை கொடுக்கும் / ஆக்கினிதீர்ப்பை கொடுக்கும் ஊழியங்கள் 2Co_3:7-16
 
5. நியாயப்பிரமாண நீதியில் நிலைத்திருப்பவர்கள் :
 
நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு அவைகளால் ஆவியில் பிழைப்பவர்கள் Gal_3:12, Rom_2:11-13, Rom_3:19-20, Exo_20:10-13, Rom_10:5, Lev_18:1-5, Deu_8:3, Mat_4:4, Luk_4:4, 
 
நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு, அவைகளால் ஆவியில் பிழைப்பவர்கள். Rom_2:13, Rom_3:20, Gal_2:16, Gal_3:11, Gal_5:4, Rom_9:30-33, Phi_3:4-11
 
பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாண உபதேசத்தை உலக அரசாங்க அதிகாரிகளும் மற்றும் உலகத்தில் உருவான எல்லா மதங்களும் தங்களுடைய அடிப்படை பிரமாணங்கலாகவே பின்பற்று கிறது.
 
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப் படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமு மில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப் பட்டிருக்கிறது. பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியை களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. எனவே நியாயப்பிரமாண நீதியினால் மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமான் அல்ல, Job_25:1-6, Job_15:1-16, Mat_6:1, Mat_6:5, Mat_6:16, Luk_16:15, Joh_12:43, Isa_2:6
 
நியாயப்பிரமாண நீதியை பின்பற்றுகின்றவர்களின் முடிவு :- முதலாம் மரணமாகிய பாதாளத்தின் வல்லமைகளை ஜெயம் கொள்ளமுடியாமல் தேவனால் தங்களுக்கு சரீரத்தில் கிடைத்த தேவனுடைய ரூபமும், சாயலும், நஷ்டமடைந்து மிருகத்தின் சாயலையும் ரூபத்தையும் பெற்று, இரண்டாம் மரணமாகிய அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாக்கப்படுவார்கள். 
 
இந்த பொதுவான இரட்சிப்பினால் ஆவி, ஆத்துமா அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாக்கப்படும் / இரட்சிக்கப்படும் ஆனால் இயேசு கிறிஸ்துவின் விசேஷ இரட்சிப்பின் மூலம் கிடைத்த தேவனுடைய ரூபமும் சாயலும் நஷ்டமடைந்து மிருகத்தின் ரூபமும் சாயலும் கொடுக்கப்படும். 1Co_5:1-5, 1Co_15:35-42, Psa_49:10, Job_14:19-22, Job_18:1-21, 1Pe_4:5-6, Rth_2:20,
 
6. நியாயப்பிரமாண நீதியில் நிலைத்திருக்காதவர்கள்:- 
 
நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். Deu_11:26-32, Deu_30:11-20, Dan_9:11-14, Rom_3:8-19, Gal_3:10-12, 
 
சபையின் உபதேசத்தின் மூலம் ஆவியில் மறுபடியும் பிறந்தவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் அல்ல, கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமாக கிரியைகளிலிருந்து மனந்திரும்பாமல், ஸ்திரீயாகிய சபையின் உபதேசத்தின் மூலம் மனந்திரும்புகிறவர்கள் தேவனுக்கு முன்பாக நிதிமானாக இருப்பது எப்படி?
 
Job_15:1-35, Job_25:4, Job_39:1-8, Pro_1:10-19, Pro_2:1-22, Pro_5:1-23, Pro_6:23-35, Pro_7:1-27, Pro_9:13-18, Isa_4:1, Isa_3:12, Rev_18:1-24, Job_15:14,
 
சபையின் உபதேசத்தின் மூலம் ஆவியில் மறுபடியும் பிறந்த வர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாகக் காட்டுகிறார்கள் / விரும்புகிறார்கள் / மகிமையைத் தேடுகிறார்கள். எனவே இவர்கள் மனுஷர்களுக்கு முன்பாகவும் நிதிமான்கள் அல்ல, தேவனுக்கு முன்பாகவும் நிதிமான்கள் அல்ல; பிசாசுகளுக்கும், அவனுடைய தூதர் களுக்கும் ஆயத்தமாக்கப்பட்ட அக்கினி நரகத்திற்கு பாத்திரவான் களாகக் கூடிய அக்கிரமக் கிரியைகளே இவர்களிடத்தில் காணப் படுகிறது. 
 
7. நியாயப்பிரமாணத்தின் முடிவு கிறிஸ்து :-
 
விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்துகிற உபாத்தியாய் / பள்ளி ஆசிரியராக இருக்கிறது. . Gal_3:22-26, 
 
தங்கள் இருதயத்தில் எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியை களை நன்மை, தீமை இன்னதென்று பயிற்சியினால், பகுத்தறியத் தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு பலமான ஆகாரமாகிய கிறிஸ்துவின் நீதியின் வசனத்தை அறிந்து கொள்ள நியாயப்பிரமாணம் ஒரு பள்ளி ஆசிரியரைப்போல விசுவாசத்திற்கு வழி நடத்துகிறது. . Rom_2:14-15, .Heb_5:12-14,
 
நியாயப்பிரமாணத்திற்கும், வாக்குதத்ததின் மூலம் வருகிற விசுவாச நீதிப்பிரமாணத்திற்கும் உள்ள இடைவெளியின் காலம் 430 வருடங்கள். Gal_3:14-18,
 
கிறிஸ்து பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொண்ட படியால் நியாயபிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுகிறார். Act_2:27, Psa_16:10, Psa_30:3, Psa_49:15, Psa_86:13, Mat_16:18, Rev_1:18, Act_2:31, Hos_13:14, 1Sa_2:6, Eph_4:1-10, 
 
நியாயப்பிரமாணம், சீர்திருத்தல் உண்டாகும் காலம் வரைக் கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல. இவைகள் சரீரத்தின் ஆசரிப்பு முறையின் ஒழுங்குகள் Heb_9:8-10, Col_2:13-23, 
 
முதல் கூடாரமாகிய சரீரத்தில் வெளிப்படும் நன்மை தீமைகளின் கிரியைகளை, எப்படி இரண்டாம் கூடாரமாகிய இருதயத் தில் தேவ நீதியை நிறைவேற்ற முடியும், என்பதை விவரித்து சரீரத் திற்கும், இருதயத்திற்கும், முதல் கூடாரத்திற்கும் இரண்டாம் கூடாரத் திற்கும் உள்ள நியாயபிரமாணத்தையும், தீர்க்க தரிசனங்களையும் இயேசு கிறிஸ்து நிறைவேற்றுகிறார். Rom_8:1-10, 
 
உதாரணம் :- பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நியாயபிரமாணத்தை உங்களுக்கு கொடுத்தவராகிய நானே அதை நிறைவேற்றுவதற்காக வந்திருக்கிறேன் (மலைப்பிரசங்கம்)
 
அத்தியாயம் ஒன்று 
 
1-2 விசுவாசத்தினால் தேவனுடைய நீதியின் பிரமாணம்
 
1. கிறிஸ்துவின் விசுவாசம் இல்லாமலிருந்தபோது மனிதனின் சரீர அவயவங்களில் பாவப்பிரமாணம்
 
2. கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் ஆரம்பம் 
 
3. கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் பிரமாணம்
 
4. கிறிஸ்துவின் விசுவாச உடனப்டிக்கையின் ஊழியங்கள்
 
5. கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் நிலைத்திருந்து விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு முன்னேரிச் செல்லுவது
 
6. கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் நிலைத்திருக்காதவர்கள்
 
7. கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு
 
1. கிறிஸ்துவின் விசுவாசம் இல்லாமலிருந்தபோது மனிதனின் சரீர அவயவங்களில் பாவப்பிரமாணம்:-
 
நியாயப்பிரமாணமாகிய மனதின் பிரமாணத்திற்கும் / மனசாட்சியின் பிரமாணத்திற்கும் விரோதமாக சரீர அவயவங்களில் இருக்கிற பாவப்பிரமாணம் மனிதனை சிறையாக்கிக் கொள்ளுகிறது அல்லது அடிமைப்படுத்துகிறது. Rom_7:14-25, 
 
மாம்ச சிந்தை ஆவி ஆத்துமாவில் மரணத்தை ஏற்படுத்து கிறது மற்றும் தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படியாம லும், கீழ்படியக்கூடாமலும் இருக்கிறது. . Rom_8:5-8
 
நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின் படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். Eph_2:1-3, 
 
2-0 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் ஆரம்பம்:-
 
கிரியைகளில்லாமல் விசுவாசத்தினால் நீதிமான் / கிறிஸ்து வின் விசுவாச வார்த்தைகள் ஒருவனுடைய வாய்க்கும், இருதயத்திற் கும் சமீபமாகயிருந்தால் மட்டும், ஒருவன் கிரியைகளில்லாமல் தேவ னாலே நீதிமானென்றெண்ணப்படுகிறான், 
 
3-0 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் பிரமாணம்:-
 
இவைகளை இரண்டாம் தலைப்பு தேவனுடைய வெளிப்பாடுகளில் மூல உபதேசங்கள் (கூழநு குஐசுளுகூ ஞசுஐசூஊஐஞடுநுளு டீகு ழுடீனு’ளு சுநுஏநுடுஹகூஐடீசூ) 4-3-3-2 இயேசு கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிஷேசம் என்ற தலைப்பின் கீழ் பார்க்கவும்.
 
4-0 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் ஊழியங்கள்:-
 
1. கிறிஸ்துவின் ஆரோக்கியமான உபதேசத்தின் ஊழியங்கள் 
 
2. இயேசு கிறிஸ்துவின் மகிமையின் சுவிசேஷத்தின் ஊழியங்கள்
 
3. ஒப்புரவாகுதலின் உபதேசத்தின் ஊழியங்கள்
 
4. கிறிஸ்துவின் உபதேசத்தின் ஊழியங்கள்
 
5. ஆவிக்குரிய ஊழியங்கள்
 
6. நீதியைக் கொடுக்கும் ஊழியங்கள் 2Co_3:7-12, 2Co_4:1-7,
 
7. ஒப்புரவாகுதலின் ஊழியங்கள் 2Co_5:18-20, Rom_5:10-11,
 
5-0 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் நிலைத் திருந்து விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு முன்னேறிச் செல் லுவது :-
 
5-1 கிறிஸ்துவின் விசுவாச வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது:- Rom_10:5-10, Deu_30:10-14,
 
கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகள் உன் வாயிலும், இருதயத்தில் சமீபமாயிருந்து அறிக்கையிடுகிறது / வியாகுலப் படுகிறது / பெரு மூச்சுவிட்டழுகிறது Eze_9:4, 2Pe_2:6-
 
5-2 கிறிஸ்துவின் விசுவாச வார்த்தை நீதியின் வார்த்தையாக உருமாறுகிறது :-
 
கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகள் நன்மை, தீமைகளை இருதயத்தில் பகுத்தறிகிறதினால் அந்த வார்த்தை நீதியின் வார்த்தையாக உருமாறி விசுவாசத்திலிருந்து மேலும் விசுவாசத்திற்கு முன்னேறுகிறது. Heb_5:12-14, 
 
5-3 கிறிஸ்துவின் விசுவாசப்பிரமாணம் நீதியின் பிரமாணமாக முன்னேறுகிறது :-
 
கிறிஸ்துவின் விசுவாச வார்த்தை நீதியின் வார்த்தைக்கு முன்னேறுகிறபடியால்; கிறிஸ்துவின் விசுவாசப்பிரமாணம் நீதியின் பிரமாணத்திற்கு முன்னேறுகிறது Rom_1:16-18, ,Rom_12:6-8, Hab_2:1-4,
 
5-4 நீதியின் பிரமாணத்திலிருந்து தங்களுடைய விசுவாச அளவுப்பிரமாணத்திற்கு முன்னேறுகிறது :-
 
நீதியின் பிரமாணத்தில் தங்களுடைய விசுவாச அளவுப் பிரமாணத்தை உணர்ந்து கொண்டு; தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த தேவனுடைய சித்தத்தை அறிந்து கொண்டு, விசுவாசத்தி லிருந்து மேலும் விசுவாசத்திற்கு முன்னேறுவது. . Rom_12:1-6,
 
5-5 தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்திலிருந்து அவைகளின் கிரியைகளுக்கு முன்னேறுவது :-
 
நீதியின் பிரமாணத்தில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப் பிரமாணத்திலிருந்து தேவனுடைய சித் தத்தை நிறைவேற்றுவதற்காக மேலும் அவைகளின் கிரியைகளுக்கு முன்னேறி விசுவாசத்தை பூரணப்படுத்துவது Rom_12:1-6,
 
5-6 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையிலிருந்து தேவனு டைய ஊழியர் உடன்படிக்கைக்கு முன்னேறுவது:- 
 
தேவனுடைய வார்த்தைகளுடன் விசுவாச உடன்படிக்கை செய்து அவருடைய பிள்ளைகளாக மாறினவர்கள் விசு வாசத்திலிருந்து மேலும் விசுவாசத்திற்கு முன்னேறுகிறார்கள். Rom_1:16-18, ,Rom_12:6-8,
 
5-7 விசுவாசத்திலிருந்து மேலும் கிரியைகளுக்கு முன்னேறுவது:- 
 
விசுவாசத்திலிருந்து தேவனுடைய சித்தத்தை நிறை வேற்றுவதற்காக தேவனுடன் ஊழியர் உடன்படிக்கை செய்து தேவ னுடைய பிரதிநிதியாக முன்னேறுகிறார்கள் Mal_2:18,, Rom_12:6-8, 
 
5-8 நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடு கிற தேவ நீதியின் வார்த்தைகளுடையை உவமைகளின் பொருளை அறிந்து கொள்ள முன்னேறுவது:-
 
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் ஒன்றை யொன்று சாட்சியிட்டு இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினால் பலிக் கும் தேவ நீதியை வெளிப்படுத்துகிறது. Rom_3:20-22,
 
இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரி சனங்களையும் நிறைவேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை, உவமைகள் மூலமாக பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களாக வெளிப்படுத்தப்படுத்தப்படுகிறது. Mat_5:17-18, Mat_7:12, Mat_22:35, Mat_11:13, Luk_16:16, 
 
5-9 இயேசு கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமாவில் / இருதயத்தில் நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனங்களும் ஒன்றை யொன்று சந்தித்து சாட்சியிட்டபடியால் நியாயப்பிரமாணம் தீர்க்கதரி சனங்கள் ஆகியவற்றின் நிறைவேறுதலான கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகள் / தேவநீதியின் வார்த்தைகள் மறைபொருளாக / உவமைகளாக கிறிஸ்துவின் வாயிலிருந்து வெளிப்பட்டது அல்லது புறப்பட்டது. Mat_5:17-20,
 
5-10 இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்தைகள் மூலம் வெளிப்பட்ட தேவ நீதியின் சத்தியமான வசனங்களில் உள்ள மறை பொருளை ஒருவன் அறிந்து கொள்ளவும் / உணர்ந்து கொள்ளவும் விரும்பினால், அவர்களின் இருதயத்தில் மீண்டும் நியாயப்பிரமாண மும் தீர்க்கதரிசனங்களும் ஒன்றையொன்று சந்தித்து சாட்சியிட வேண்டும், அப்பொழுது உவமைகளினால் மறைக்கப்பட்ட சத்திய மான மறைபொருள் அவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்படும் 1Co_2:5-10,Isa_64:4-5,
 
5-11 வேதத்தில் உவமைகளாக சொல்லப்பட்ட தேவனு டைய வார்த்தைகளை, கிறிஸ்துவை பின்பற்றின சீஷர்கள் இருளிலே / அறியாமையினால் மற்றவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளமுடியாத வகையில் சொன்னார்கள் ஆனால் கிறிஸ்துவின் விசுவாச வார்த்தை களின் படி வெளிப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. Luk_12:1-3,Mat_10:26-27,
 
5-12 உவமைகளாக சொல்லப்பட்ட தேவனுடைய வார்த் தைகளின் மறைபொருளை சுரமண்டலத்தின் மேல் வெளிப்படுத்து வேன் என்ற தீர்க்கதரிசன வசனத்தின்படி ஆவிக்குரிய சுரமண்டல மாகிய இருதயத்தில் / ஆவி, ஆத்துமாவில் உவமைகளின் மறை பொருளை தியானிக்கும்போது உவமையின் பொருள் வெளிப்படுத் தப்படும். Psa_49:3-4, Psa_92:1-6,Psa_39:1-3, Jer_20: 7-13, 1Ch_25:1, 
 
5-12 சுரமண்டலத்தின் ஏழு வித்தியாசமான சப்த நாதங்கள் அல்லது சுரங்கள் ச-ரி-க-ம-ப-த-னி-ச எழுத்தின் படி இசைக் கருவியில் இசைப்பதுபோல ஆவிக்குரிய இசைக்கருவியான இருதய சுரமண்டலத்தில் ஏழு ஆவிக்குரிய வித்தியாசமான சப்தங்கள் / ஓசைகள் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசனங்களிலும் கோர்வை யாக இரண்டரறக்கலந்திருக்கிறது Job_30:31, Psa_57:7-8,Psa_108:1-3, 
 
ஆவிக்குரிய சுரமண்டலத்தில் ஏழு ஆவிக்குரிய வித்தியாச மான சப்தங்கள் / ஓசைகள் 
 
(1) வேதம் (2) சாட்சிகள் (3) கட்டளைகள் (4) பிரமாணங்கள் (5) வழிகள் (6) கற்பனைகள் (7) நீதி நியாயங்கள் இதை சங்கீதங்களின் புஸ்தகம் 19,119, ஆதிகாரங்களிலும் மோசே யின் ஐந்து புஸ்தகங்களிலும், தீர்க்கதரிசன புஸ்தகங்களிலும் மேலே குறிப்பிட்ட ஏழு சப்தங்கள் கோர்வையாக பல இடங்களில் ஒலிக் கிறது. Psa_49:3-4, Psa_19:1-14,Psa_119:1-16, 
 
5-13 வேதமும் சாட்சி ஆகமமும் வெளிப்படுத்துகிற விடியக்காலத்தின் வெளிச்சத்திற்கு முன்னேறுவது:-
 
தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றும் சீஷர்களுக் குள்ளே வேதத்தை முத்திரையிட்டு, சாட்சியின் ஆகமம் கட்டப் பட்டிருக்கிறபடியால் சீஷர்களுக்கு விடியக்காலத்து வெளிச்சம் இல்லை / தினந்தோறும் புதிய தரிசனங்கள் தேவனிடமிருந்து கிடைப்பது இல்லை. Isa_8:16-20,
 
வேதம் :- உவமைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனு டைய சத்தியமான வார்த்தைகள் 
 
சாட்சியின் ஆகமம்:- இயேசு கிறிஸ்துவின் கிரியைகளின் மூலம் வெளிப்பட்ட சாட்சியின் வார்த்தைகள்
 
உவமைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தியமான வார்த்தைகளையும் இயேசு கிறிஸ்துவினுடைய சாட்சியின் தீர்க்கதரிசன நிறைவேறுதல்களையும் பகுத்தாராய்ந்து, அவைகளில் உள்ள நீதியின் வசனத்தை உணர்ந்து கொள்ளுபவர்களுக்கு; விடியக் காலத்து வெளிச்சம் / அல்லது தினந்தோறும் புதிய தரிசனங்கள் தேவனிடமிருந்து வெளிப்படுத்தப்படும். Isa_41:21-29,Isa_44:6-9,Jer_23:21-22,
 
6-0 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் நிலைத் திருக்காதவர்கள்:-
 
6-1 கிறிஸ்துவுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகருடைய “வாய்க்கு” மட்டும் தேவனுடைய வார்த்தைகள் சமீபமாயிருக்கிறது ஆனால் அவர்களின் இருதயத்திற்கோ வேத னுடைய வார்த்தைகள் துரமாக விலகியிருக்கிறது.
 
6-2 கிறிஸ்துவுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர், விசுவாசத்தினால் வருகிற தேவ நீதியின் ஆவியில் பிழைக்காமல், தங்கள் இருதயத்தின் இச்சையின்படி மாம்சமும் மனசும் விரும்பின வைகளைச் செய்து, இந்த உலகத்திலுண்டான, மாம்சத்தின் இச் சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய இவைகளினால் ஆவி ஆத்துமாவில் பிழைத்து, ஆவி ஆத்துமா சரீரத்தில் தீமையிலிருந்து மேலும் தீமைக்கு முன்னேறுகிறார்கள். Jo_2:14-17, Jer_9:3, Psa_73:1-28, Job_21:1-18, 
 
6-3 கிறிஸ்துவுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் விசுவாசத்தினால் வருகிற தேவ நீதியின் ஆவியில் பிழைக்காமலும், நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிற சுய நீதியில் அல்லது மனுஷனுக்கு முன்பாக உள்ள மனுஷ நீதியில் ஆவியில் பிழைக்காம லும் இருந்துகொண்டு; தங்களை மனுஷர்களுக்கு முன்பாக நீதிமான் களாக காட்டிக் கொள்ளுகிறார்கள். இவர்கள் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவர்களாய் எண்ண வேண்டும்; என்கிற அளவுப்பிரமாணத்தின் எல்லைகளை கடந்து இவர்கள் துன்மார்கர்களாகி தேவனுடைய கோபாக்கினிக்கு பாத்திர வங்களாக மாறியிருக்கிறார்கள். Rom_12:3-6, 2Co_10:12-18, 1Pe_4:10, Mat_6:1, Mat_6:5, Mat_6:16, Luk_16:15, Joh_12:43, Isa_2:6, 
 
6-4 கிறிஸ்துவுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் விசுவாசத்தினால் வருகிற தேவநீதியின் ஆவியில் பிழைக்காமலும் நியாயபிரமாணத்தின் மூலம் வருகிற சுயநீதியின் ஆவியில் பிழைக்காமலும் ஆவியில் மரித்தவர்கள்; உங்கள் அன்பின் விருந்து களில் கறைகளாயிருந்து, பயமின்றிக்கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்.
 
இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களாகவும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டு தரஞ்செத்து வேரற்றுப்போன மரங்களாகவும், தங்கள் அவமானங்களை நுரை தள்ளுகிற அமளியான கடலலைகளாகவும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள், இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. . 2Pe_2:1-14, 2Pe_2:14-22, Jud_1:1-13, Jud_1:14-25, 
 
6-5 கிறிஸ்துவுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் தேவனுடைய வார்தைகளை வாசித்து, சிந்தித்து அவைகளின் பொருளை அறிந்து மனந்திரும்பாதபடி, இவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது மேலும் இவர்களுக்கு தேவனுடைய வார்த்தை வாய்க்கும், இருதயத்திற்கு தூரமாக விலகியிருக்கிறது. 
 
அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக்கேட்டும் உணராமலும், கண்ணாரக் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல், இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளில் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படமாலும், நான் அவர்களை ஆரோக்கிய மாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார். Isa_6:8-10, Mat_13:11-17, Act_7:38-43, 
 
6-6 கிறிஸ்துவுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் விசுவாசத்திலிருந்து பின் வாங்கி; மீண்டும் தங்கள் விட்டு வந்த எகிப்தின் பாவ சந்தோஷங்களுக்கு தங்கள் இருதயத்தில் பின்னிட்டு திரும்பி பார்த்து உப்புதூனாக மாறியிருக்கிறார்கள் Luk_17:28-33, Gen_19:17, Gen_19:26, Mat_5:13, 
 
6-7 தேவனுடைய வார்த்தைகள் தங்கள் வாய்க்கும் மட்டும் சமீபமாகயிருந்து தங்கள் இருதயம் தேவனை விட்டு, துரமாக விலகியிருப்பவர்கள்; எப்பொழுது மனந்திரும்பி தங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைக்கு சமீபமாக கொண்டு வந்து,தங்கள் நற்கிரி யைகளை தேவனுக்கு முன்பாக வெளிப்படுத்துகிறார்களோ அப் பொழுது தேவனுடைய இரட்சிப்பு அவர்களுக்கு சமீபமாயிருக்கிறது.
 
6-8 கிறிஸ்துவுடன் விசுவாச உடன்படிக்கை / ஊழியர் உடன்படிக்கை செய்த அநேகருடைய வாய்க்கும் மட்டும் தேவனுடைய வெளிப்பாடுகளும், தரிசனங்களும் சமீபமாயிருக்கிறது. ஆனால், இவர்களின் இருதயம் தேவனை விட்டு தூரமாக விலகியிருத்து கொண்டு, தங்கள் மனம் விரும்பின அநேக காரியங்களுக்கு பின் சென்று அவைகளுடன் தேவனுடைய வார்த் தைகளை கலப்படம் செய்தபடியால் தேவனுடைய வார்த்தைகளுக்கு இணையாகவும், எதிராகவும் கற்பனைகளையும் பிரமாணங்களையும் உருவாக்கிக் கொண்டு தீமையிலிருந்து மேலும் தீமைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தேவனுடைய கோபாக்கினிக்கு பாத்திரவான்களாக மாறியிருக்கிற இவர்கள், மற்றவர்களையும் தங்கள் மார்க்கத் தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறார்கள்; ஒருவனை தங்கள் மார்க்கத்தானான போது அவனை தங்களிலும் இரட்டிப்பாய் கேட்டின் மகனாக்குகிறார்கள்.
 
6-9 தேவன் தங்களுக்கு கொடுத்த வெளிப்பாடுகளின் தரிச னங்களையும், தங்கள் விட்டு ஜாதிகளுடைய முறைகளையும் கலந்து ஆராதiண் செய்கிற ஈனமான ஆசாரியர்கள் உருவாக்கின மாயை களினால் தேவனைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப் படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதி கெட்ட ஜாதியினால் அவர்களை தேவன் கோபப்படுத்துகிறார். 
 
6-10 ஈனமான ஆசாரியர்கள் கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களையும் + மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளையும் இணைத்து சபையின் மூல உபதேச வசனங்களாக உருவாக்குகிறார்கள்.
 
6-11 களங்கமில்லாத ஞானப்பால் புரணமாகக் கிடைக்காத காரணத்தால் கலப்படமான ஞானப்பால் 
 
Isa_4:1, Pro_5:3-14, Pro_2:16-22, Pro_9:13-18, Pro_7:1-5, Pro_23:29-33, Isa_1:22, Son_7:9, Zep_1:12, 1Co_2:4-5, 1Co_2:13-14, Col_2:8, 2Ti_4:2-5, 2Co_4:2, 2Pe_2:1, Jud_1:4, Jam_3:15, 1Jo_2:16, 1Th_2:7-8, 2Co_2:17, 
 
6-12 மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளின் மூல உபதேச வசனங்கள் / சபையின் மூல உபதேச வசனங்கள்:-
 
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை வாயினால் அறிக்கை செய்து பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் A ct_2:38,Rom_10:9-10, 
 
2. ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுதல் Mar_16:16,
 
3. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுதல் Act_2:1-4, 
 
4. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25,
 
5. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10,
 
மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளின் பலமான ஆகாரத்தின் உபதேச வசனங்கள் 
 
6. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27Isa_4:1,
 
7. தேவனுடைய ஊழியத்தில் பங்குகொள்ளுதல் Mar_16:15,
 
6-13 தேவனுடைய வார்த்தைகளையும் + மனிதனுடைய வார்த்தைகளையும் இணைக்கும்போது = வேற்றுமையான உபதேசங் கள்/விகற்ப்பமான உபதேசங்கள் உருவாகிறது 1Co_2:4-16,, Jer_23:25-40, 1Th_2:3-131Ti_6:3-5, 1Ti_1:3-5,1Ti_4:1,2Ti_4:3-5,Tit_2:8,
 
6-14 தேவனுடைய கற்பனைகளையும் + மனிதனுடைய கற்பனைகளையும் இணைக்கும் போது = மணல் மேல் கட்டின வீடு வெளிப்படுகிறது// Isa_29:10-12, Mat_7:24-29, Mat_15:1-9,Mar_7:1-13, Psa_1:4,, Job_21:17-18,
 
6-15 தேவனுடைய ஆவியையும் + மனிதனுடைய ஆவியையும் = இணைக்கும் போது நயவஞ்சகமுள்ள தந்திரமான ஆவி வெளிப்படுகிறது 1Co_2:4-16 , Pro_5:1-23,
 
6-16 தேவனுடைய தீர்க்கதரிசன ஆவியையும் + மனிதனுடைய தீர்க்கதரிசன ஆவியையும் இணைக்கும்போது கள்ள தீர்ககதரிசன ஆவி வெளிப்படுகிறது Mat_7:24-29, Eze_13:1-16,Jer_23:14-32,
 
6-17 லேவிய ஆசரிப்பு முறைகளையும் + ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளையும் = இணைக்கும் போது எந்தக் காலத்திலும் பொருளுக்கு மாறாத மாயைகளின் ஈனமான ஆசரிப்பு முறைகள் வெளிப்படுகிறது. 1Ki_12:27-33,2Ki_17:6-202Ki_13:8-11, Eze_22:23-31, Eze_44:21-24, 
 
6-18 தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சி முறைகளையும் + மனிதனுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சி முறைகளையும் இணைக் கும்போது = மாயைகளின் ஈனமான இராஜ்ஜியத்தின் ஆட்சி முறை கள் / மணல் மேல் கட்டின மாளிகை / அரண்மணை வெளிப்படுகிறது Hos_2:8-15,, Jos_7:23-26Isa_65:8-16, Hos_13:1-16, 
 
6-19 மாயைகளினால் தேவனுக்கு கோபம் மூட்டுவீர்கள் Deu_32:19-25,
 
6-20 சகல ஜாதிகளைப் போல எங்களுக்கு இராஜா வேண்டும் 1Sa_8:1-9,
 
6-21 சகலஜாதிகளைப்போல இஸ்ரவேலராகிய நாங்களும் இருப்போம் 1Sa_8:10-22,
 
6-22 தேவன் தங்களை ஆளாதபடி தேவனைத்தள்ளி னார்கள். 1Sa_12:7-25,
 
6-23 தேவ நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் சகல ஜாதிகளைப் போல இருக்கிறார்கள் 2Ki_17:13-20 ,
 
6-24 தேவனை மறந்து ஜாதிகளைப் பின்பற்றினார்கள். 2Ki_17:7-8 ,
 
6-25 சகல ஜாதிகளைப்போல இருப்போம் Eze_20:32-37, 
 
6-26 தேவனை தள்ளி மாயைகளை பின்பற்றினார்கள் Jer_2:4-13,
 
6-27 மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன். Deu_32:19-25,
 
எனக்கு ஜனங்களல்லாதவர்களைக் கொண்டு நான் உங்க ளுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் Rom_10:19,
 
6-28 அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங் களைச் செய்வித்தார்கள். . Hos_8:1-6,
 
6-29 உன்னை இரட்சிக்கும் உன் தேவனாகிய கர்த்தரே உன்னுடைய ராஜாவும், நியாயதிபதியுமாக இருக்கிறார் Hos_13:10-16,
 
6-30 தேவன் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். Isa_40:23-24,
 
6-31 கர்த்தரைவிட்டுப் பின் வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். விலகிப் போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜன மற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே. (தேவன் சாலமோன் இராஜாவுக்கு வெளிப்படுத்தின ஞானத்தை மாயைகள் மேற்கொண்டது) ) 1Ki_11:1-13, 2Ki_23:13-15, 1Sa_12:7-25, 
 
6-32 தேவனுடைய வெளிப்பாடுகளும் + ஜாதிகளின் வெளிப்பாடுகளும் மாயைகளின் திரளான வெளிப்பாடுகளாக கழுத்து வரை வந்து கரைபுரண்டோடி தவறான பாதைகளில் வழி நடத்து கிறது . 1Sa_12:7-25, Deu_32:18-36, Deu_28:36, Isa_8:16-22, Eze_7:14-27, Jer_2:4-13, Job_12:24, Psa_107:40, 
 
6-33 இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகள் சிங்காசனத்திற்கு போராடுகிறது Isa_7:1-9,
 
6-34 இம்மானுவேல் / தேவன் நம்மோடியிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்கள் சொல்லுகிறபடி தேவன் அவர்களோடு இல்லை Isa_7:10-20, Isa_7:10-20, , Amo_5:14-15,
 
6-35 மாயைகளின் திரளான வெளிப்பாடுகள் கழுத்து வரை வந்து கரைபுரண்டோடி தவறான பாதைகளில் வழிநடத்துகிறது. Isa_8:1-10, , Isa_30:27-33, 
 
6-36 மெதுவாக ஒடுகிற சீலோவாவின் தண்ணீரைப் போல சியோனின் வெளிப்பாடுகள் Isa_8:11-22, Isa_7:21-25,
 
6-37 தேவனுடைய வெளிப்பாடுகளும் + ஜாதிகளின் வெளிப்பாடுகளும் இணைந்து வெளிப்படுகிற = மாயைகளின் திர ளான வெளிப்பாடுகளைக் குறித்து தேவனுடைய வெளிப்பாடுகளில் சொல்லப்பட்ட சில தீர்க்கதரிசன வசனங்கள்
 
1. மாயையின் கயிறுகள் Isa_5:18-25,
 
2. மாயைகளுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு Isa_5:26-30,
 
3. மாயைகளை பின்பற்றுகிறார்கள் Jer_18:15-17, 
 
4. மாயைகளினால் தேவனுக்கு கோபம் மூட்டுகிறார்கள் Jer_8:19-22, 
 
5. நாங்கள் பொய்யை எங்களுடைய அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் ஆகையால் வாதை பெரு வெள்ளமாய்ப் புரண்டு வந்தாலும் எங்களை அணுகாது Isa_28:14-21, Jer_10:14-15, Jer_51:17-18,
 
6. மாயையின் திரிக்கதரிசனங்கள் / கள்ளதீர்க்க தரிசனங்கள் Eze_13:16, Eze_13:17-23, Eze_21:25-32, Eze_22:23-31, 
 
7. மாயைகளைப் பின்பற்றுகிறார்கள் Isa_59:4, Jon_2:8, Psa_31:6, Isa_59:4, Lam_2:14, Job_15:31, Psa_24:4, Psa_119:37, Psa_144:11-15, Pro_30:5-9,
 
7 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு 
 
இயேசுகிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு கிருபையினால் வெளிப்படாமல் கிரியைகளின் மூலம் வெளிப் படுகிறது. Heb_12:2, Exo_19:5, 2Th_2:3-8, 2Ti_2:12, Rev_1:8, Rev_21:6, Rev_22:13, 
 
7-1 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கை துரோகிகளின் மேல் கீழே குறிப்பிட்ட காரணங்களால் தேவன் அவர் கள் மேல் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார் .Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12, Mal_2:1-10, Pro_2:16-17,.
 
7-2 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை தங்கள் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருந்து இரட்சிப்பை பெற்றுக்கொள்ளாமல், உடன்படிக்கையை காலத்திற்கு முன்பாகவே முறித்தபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது Mat_10:22 Mat_24:13, Mar_13:13, Rev_2:26,
 
7-3 சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரித்து தங்களு டைய விசுவாச உடன்படிக்கையின் ஆவிக்குரிய வாழ்க்கையை காத் துக்கொள்ளாமல் போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது 2Th_2:9-10, Dan_8:11-12,
 
7-4 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து விசுவாசத்தை இழந்து போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது Mat_24:12,
 
7-5 ஒருவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் விசுவாச உடன்படிக்கை செய்தபோது மரணமடைந்த கேட்டின் மகனாகிய அவனுடைய பாவ மனிதன்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பாவம் கிரியைகளின் மூலம் வெளிப்படுகிறபோது அவனுடைய விசுவாச உடன்படிக்கை அவனால் முறிக்கப்பட்டு தேவனுடைய நியாயத் தீர்ப்பு வெளிப்படுகிறது. Rom_6:2-11, Rom_8:9-14, Col_2:11-12, 2Th_2:3, Eph_4:22-24, 
 
7-6 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை நிலை நிறுத்துகிற பரிசுத்த ஆவியை ஒருவன் துக்கப்படுத்துகிறபோது; தேவன் அவனுடன் செய்து கொண்ட உடன்படிக்கை அவனால் முறிக்கப்பட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது. Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12,
 
7-7 தேவனுடைய வார்த்தைகளின் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு இரட்சிப்படைய விரும்பாதபடியால் பொய்யை விசுவாசிக் கும்படி பரிசுத்த ஆவிக்கு பதிலாக வஞ்சக ஆவியை தேவன் அவர் களுக்குள்ளே அனுப்புகிறபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது. 2Th_2:11-12, 1Sa_16:14, 1Sa_16:16, 1Sa_16:23, 
 
அத்தியாயம் ஒன்று
 
1-3 விசுவாசத்தினால் நீதியின் பிரமாணத்தை அடைய முடியாதவர்கள், சீயோனில் இருக்கிற முல்லைக்கல்லில் இடறி விழுகிறார்கள்.
 
1. நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ / கிறிஸ்தவர் களோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
 
Rom 9:31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடின படியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள் 
 
Rom 9:33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப் படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 
 
1Pe 2:4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவ னுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், 
 
1Pe 2:5 ஜீவனுள்ள கற்களைப் போல ஆவிக்கேற்ற மாளிகை யாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக் கேற்ப பலிகளைச் செலுத்தும் படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாக வும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
 
1Pe 2:6 அந்தப்படியே; இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படு வதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 
 
1Pe 2:7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலை யேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக்கட்டு கிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக்கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன் மலை யுமாயிற்று; 
 
1Pe 2:8 அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களா யிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries