தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 08
தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்
பொருளடக்கம் 4-0
அத்தியாயம் நான்கு
4-1 ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் புதிய பாடல்கள்
4-2 ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் முதலாவது புதிய பாட்டு
4-3 ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் இரண்டாவது புதிய பாட்டு
4-4 ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் மூன்றாவது புதிய பாட்டு / ஆட்டுக்குட்டி யானவரின் பாட்டு
அத்தியாயம் நான்கு
4-1 ஆண் பிள்ளைகள் கற்றுக்கொண்ட சீயோனின் புதிய பாடல்கள்:-
முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்படுகிற 1.44.000 ஆண் பிள்ளைகள் மட்டும் கற்றுக்கொள்ளக் கூடிய சீயோனில் பாடும் புதிய பாடல்கள் Rev_15:2-3, Rev_5:10, Rev_14:1-5 ,
சீயோனின் பாடும் புதிய பாட்டைக் கற்றுக் கொள்ள சீயோன் மலைக்கு பல தேசங்களிலிருந்து வருகிறவர்கள். Isa_35:10, Isa_51:11, Isa_51:3-4, Isa_2:1-5, Isa_65:8-16, , Jer_50:4-8, Zec_8:14-23, Jer_31:1-8, Jer_31:9-14, Mic_4:1-3, Psa 137:1-9,
ஒருவர் தேவனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களின் மூலம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் பெற்றுக் கொள்ளும் மகிழ்சியில் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து தேவனுக்குத் துதி செலுத்துவதே, சீயோனில் பாடும் புதிய பாட்டின் சுரமண்டல இராகங்கள். Rev_15:2-3, Rev_5:10, Rev_14:1-5 ,
மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட இரண்டு உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் மோசேயின் இரண்டு பாட்டு, இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட ஒரு உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள், ஆட்டுக் குடியா னவரின் ஒரு பாட்டு.
சீயோனில் பாடும் புதிய பாட்டு-ஒன்று
சீனாய் / ஒரேப் மலையில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக்கொள்ளும் ஓய்வு நாளின் ஆசீர்வாதங்களின் பாட்டு. Lev_26:46, Lev_26:1, Deu_29:1,
சீயோனில் பாடும் புதிய பாட்டு- இரண்டு
மோவாப் தேசத்தில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களின் பாட்டு. Deu_31:19-22, Deu_31:30, Deu_32:44, Mal_3:16-18, Mal_4:1-6,
சீயோனில் பாடும் புதிய பாட்டு- மூன்று
இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்களின் பாட்டு / ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசித்ததினால் மணவாட்டி சபையின் கெம்பீரசத்தத்தின் அல்லேலூயா பாட்டு.
அத்தியாயம் நான்கு
4-2 ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் முதலா வது புதிய பாட்டு சீனாய் / ஒரேப் மலையில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட ஓய்வு நாள் உடன்படிக்கை யின் பிரமாணங்களின் மூலம் ஓய்வு நாளின் ஆசீர்வாதங்கள் Lev_26:1-13, Exo_31:16
பல்லவி
1 Lev 26:1 நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம்:-
எழுத்தின்படி விக்கிரங்களையும் ஆவியின்படி பொருளாசை யாகிய விக்கிரங்களையும் உண்டாக்க வேண்டாம். Eph_5:5
2. நீங்கள் உங்களுக்கு சுரூபங்களையும் உண்டாக்க வேண்டாம்:-
எழுத்தின்படி நீங்களே உருவாக்கின சுருப அடையாளங் களையும், ஆவியின்படி நீங்களே திட்டமிட்ட கற்பனைகளையும் உண்டாக்க வேண்டாம். Isa_2:6-10, Isa_2:18-22,
3. நீங்கள் உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும் இருப்பீர்களாக:-
எழுத்தின்படி உங்களுக்கு சிலையை நிறுத்தாமலும் ஆவி யின்படி மனிதனால் திட்டமிட்ட கற்பனைகளை பின்சந்தியார் பின் பற்றுவதற்காக அறிவிக்க வேண்டாம். Eze_14:1-8,
4. நீங்கள் உங்களுக்கு சித்திரந்தீர்த்த கல்லை நமஸ் கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர் களாக:-
எழுத்தின்படி நீங்களே சித்திரந்தீர்த்த கல்லையும் ஆவியின் படி தங்களுடைய விருப்பத்திற்கேற்றபடியுள்ள அக்கிரம சிந்தை களை இருதயத்தில் வைக்க வேண்டாம்.
அனு பல்லவி
5. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்
உடன்படிக்கையினால் நீங்கள் என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்,
இளம் வயது நாயகன் = பரிசுத்த ஆவி
இளம் வயது நாயகி / மனைவி = பரிசுத்த ஆவியுடன் உன் ஆவி செய்து கொண்ட உடன்படிக்கை. Jer_2:2, Rev_2:4-5, Lev_26:14-15, Mal_2:1-16
6. Lev 26:2 என் ஓய்வு நாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
என் ஓய்வு நாட்களை ஆசரித்து என் பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்துப் பயபக்தியாயிருப்பாயாக மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் அடையாளங்களாக கொடுக்கப்பட்ட ஓய்வு நாட்களையும், பரிசுத்த ஸ்தலைத்தையும் குறித்து சொல்லப்பட்ட, பிரமாணங்களை கைக்கொள்ள வேண்டும். Eze_20:12, Eze_20:20,
சரணங்கள்
7. Lev 26:3 நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்கள் எல்லாம் உன் மேல் வந்து பலிக்கும்.
8. Lev 26:4 நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்;
ஏற்ற வேளையில் சமயத்திற்கேற்ற வார்த்தைகளை பேசும்படி நான் உன் வாயைத்திறப்பேன்.
Isa_50:4, Zec_10:1-3, Amo_4:7, Job_29:21-23, Deu_32:2, Job_28:24-28, Pro_12:25, Pro_15:23, Pro_15:30, Pro_16:24, Pro_17:22, Pro_25:11, Pro_25:15, Jer_3:3, Jer_5:24, Deu_28:12, Deu_28:24, Isa_57:20, Pro_15:2, Mal_3:7-12,
9. பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.
வேத வசனங்களில் மறைபொருளாக உள்ள இரகசியங்களை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.
வேத வசனங்களுக்கு வெளியே உள்ள நன்மை, தீமைகளை எளிமையாக புரிந்து கொள்ள முடியும். Isa_58:11, Pro_3:7-8, Jer_20:9, Lam_1:13, Isa_55:10-13, Isa_37:30-32,
10. Lev 26:5 திராட்சப் பழம் பறிக்குங் காலம் வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும் ;
திராட்சரசம் போன்ற நல்ல மிருதுவான தேவ ஆலோசனை களின் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளும் நாள் வரைக்கும், இருத யத்தில் தேவ வசனத்தை தியானிப்பதினால் கிடைக்கிற நன்மை தீமைகளை பகுத்தறியும் அறிவு இருக்கும் (தேவ ஆலோசனைகளின் புத்திமதிகளை அலட்சியப் படுத்தும்போது இருதயத்தில் நன்மை தீமைகளை பகுத்தறியும் அறிவு ஓய்ந்துபோகும் / குறைந்துபோகும்) Ecc_9:7, Ecc_10:19,Pro_3:9-10 , Psa_104:15 , Zec_9:17, Isa_65:8, Joe_1:5, Joe_2:23-34, Psa_128:3, Isa_36:17, Gen_49:11, Isa_55:1,
11. விதைப்புக் காலம் வரைக்கும் திராட்சப் பழம் பறிக்குங் காலம் இருக்கும்;
தேவ வார்த்தைகளின்படி நற்கிரியைகள் செய்கிற நாள் வரைக்கும் தேவனுடைய புத்திமதிகளின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும் மனசாட்சி இருக்கும் Isa_5:2, Isa_1:22 Jer_2:21, Deu_32:33-35, Isa_56:12, Pro_20:1
12. நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப் பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்
தேவன் உங்களுக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப் பிரமாணத்தில் நிலைத்திருந்து தேவ வார்த்தைகளை நன்றாக நிதானித்து பகுத்தறிகிறபடியால் தேவன் உங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தில் உறுதியாக முழு மனதுடன் நிலைத்திருப்பீர்கள். 2Co_10:12-18, Rom_12:2-6, Eph_4:7, Eph_4:13, Eph_4:16, 1Pe_4:10, 1Co_12:4,
13. Lev 26:6 தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்;
உங்கள் ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தில் நிலைத் திருந்து நீங்கள் ஊழியம் செய்யும்போது உங்கள் ஊழியத்தில் சமாதா னத்தை கட்டளையிடுவேன்; தேவனுடைய விசுவாசத்தில் கலங்கி இடறல் அடையாதபடிக்கு தேவனுடைய உடன்படிக்கையில் உறுதி யாக நிலைத்திருப்பீர்கள். Pro_25:26, 2Th_2:3, 1Ti_1:19, Joh_14:1 , Rev_2:19,
14. துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப் பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
பெருமை, கோபம்,பொறமை போன்ற மிருகத்தனமாக சுபாவங்களை உங்களை விட்டு நீங்கும்படி தேவன் கட்டளை யிடுவார்; நீங்கள் மற்றவர்களை பட்டயக் குத்துக்கள் போல உள்ள வார்த்தைகளைக் கொண்டு பேசமால் இருப்பீர்கள், எனவே மற்றவர் களும் உங்களிடம் ஈட்டியைப்போல உள்ள கசப்பான வார்த்தை களைக் கொண்டு பேசி உங்கள் இருதயத்தை வேதனைப்படுத்த மாட்டார்கள். Lev_26:22, Deu_32:24, Deu_7:22,
15. Lev 26:7 உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள் அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட இருபுறமும் கருக் குள்ள தேவ வார்த்தைகளை நீங்கள் பேசும்போது ;தேவனுடைய விசுவாசத்திற்கு விரோதமாக புற ஜாதிகளிலிருந்து எழும்பும் கள்ள உபதேசம் / விகற்பமான உபதேசம் / நூதன உபதேசம் ஆகியவைகள் விழுந்து நொறுங்கி சிதறடிக்கப்படும்.
16. Lev 26:8 உங்களில் ஐந்து பேர் நூறு பேரைத் துரத்துவார்கள்:
நீங்கள் தேவ ஞானத்துடன் பேசும் ஐந்து வார்த்தைகளைக் கொண்டு, மற்றவர்கள் பேசும் நூறு வார்த்தைகளை மேற்கொண்டு மற்றவர்களை துரத்துவீர்கள். Deu_32:30, Col_4:5-6 , Isa_30:8-24 Eph_6:19-20, 1Co_14:19,
17. உங்களில் நூறு பேர் பதினாயிரம் பேரைத் துரத்து வார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
நீங்கள் தேவ ஞானத்துடன் பேசும் நூறு வார்த்தைகளைக் கொண்டு மற்றவர்கள் பேசும் பதினாயிரம் (1,0,000) வார்த்தைகளை மேற்கொண்டு மற்றவர்களை துரத்துவீர்கள்; தேவனுடைய சத்திய வார்த்தைகளுக்கு விரோதமாக புறஜாதிகள் பேசும் எந்த வார்த்தை களையும் நீங்கள் குற்றப்படுத்துவீர்கள்/ மேற்கொண்டு துரத்துவீர்கள். Isa_54:17 Job_5:21, Psa_31:20 Jer_15:16-21,
18. Lev 26:9 நான் உங்கள் மேல் கண்ணோக்க மாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உங்களோட என் உடன் படிக்கையைத் திடப்படுத்துவேன்.
தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணத்தின்படி தேவன் உங்கள் மேல் கண்ணோக்கமாயிருந்து; தேவ அறிவு, புத்தி, ஞானம் ஆகிய இவைகளில் பலுகி பெருகி வளர்ச்சியடையும்படி செய்து தேவன் உங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள்.
19. Lev 26:10 போன வருஷத்துப் பழைய தானியத் தைச் சாப்பிட்டு; புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
கடந்து போன பழைய வருஷத்தின் தீர்க்கதரிசன வசனங் களை தேவ ஆவியினால் நிதானித்து பகுத்தறிந்து கொண்டு, நிகழ் கால புதிய வசனங்களை / நித்திய ஜீவ வசனங்களை ஏற்றுக் கொண்டு புருஷனாகும்படி: குழந்தைகளுக்கேற்ற கடந்த கால / பழைய அறிவை / புளித்தமாவை நீங்கள் உங்களை விட்டு விலக்கு வீர்கள். . 1Co_13:9-11, Isa_41:21-25,
20. Lev 26:11 உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் உங்களுக்கு நடுவே வாசம்பண்ணுவார், தேவனுடைய ஆத்துமா உங்களை வெறுப் பதில்லை.
21. Lev 26:12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
பரிசுத்த ஆவியானவர் உங்கள் மத்தியில் அசைவாடி, உங்க ளுக்கு எல்லா காரியத்திலும் பகுத்தறிவை உணர்த்துவார் ஆகையால் நீங்கள் எனக்கு பரிசுத்த ஜனமாயிருப்பீர்கள்.
22. Lev 26:13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராத படிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப் பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீங்கள் எகிப்தின் பாவ சந்தோஷத்திற்கு அடிமைகளாயி ராதபடிக்கு, உங்களை விடுதலையாக்கி பாவத்தின் நுகத்தடிகளை முறித்து, உங்களை நித்திய ஜீவ வழியில் நடக்க பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
அத்தியாயம் நான்கு
4-3 ஆண் பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் இரண்டா வது புதிய பாட்டு:-
மோவாப் தேசத்தில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையில் பெற்றுக்கொள்ளும் வாக்கு தந்த தேசத்தின் ஆசீர்வாதங்களின் பாட்டு Deu_31:19-22, Deu_31:30, Deu_32:44, Mal_3:16-18, Mal_4:1-6,
பல்லவி
1. Deu 28:1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கும் உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரு டைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய, நீ கவனமாயிருக்கும் படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவி கொடுப்பாயனால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
அனு பல்லவி
2. Deu 28:2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும் போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்க ளெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்ததத்துக்குச் செவிகொடுக் கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.
சரணங்கள்
3. Deu 28:2 2. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
தேவன் உனக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின் எல்லைகளுக்கு உள்ளும் வெளியேயும் உள்ள காரியங்களிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
4. Deu 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
உன் ஆவி, ஆத்துமாவின், சிந்தனை, தியானம், பகுத்தறிவு ஞானமுள்ள வார்த்தைகளை பேசுதல், ஆகிய குணாதிசயங்களும் தேவன் உனக்கு வாக்குத்தத்தமாக பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின் கிரியைகளின் எல்லைகளியெல்லாம் நீ ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய்.
5. உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தை களுமாகிய உன் மிருக ஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக் கும்.
தேவனுடைய ஆசீர்வாதத்தினால் உன்னுடைய வேலையாட் களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கும். உன் மூலம் பல குழுக் களாக பிரிந்து செயல்படுகிறவர்களும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டி ருப்பார்கள்.
6. Deu 28:5 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டி யும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
உன் ஞாபகத்தில் சேர்த்து வைத்திருக்கிற அறிவு ஞாபக மறதி இல்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும், உன்னுடைய மனசாட்சி யில் நன்மை தீமைகளை பகுத்தறியும் அறிவின் திறமை /பெலன் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
7. Deu 28:6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
நீ உன் காரியத்தை தெளிவாக ஆலோசித்து அதை தேவ பெலனால் செய்து முடிக்க முடியும் என்று தீர்மானித்து, அதை தைரிய மாக நிறைவேற்றும்படி தொடங்குவதில் ஆசீர்வதிக்கப்பட்டிருப் பாய். தேவ பெலத்தின் உதவியால் உன் காரியங்களை ஜெயமாக செய்து முடித்து ஆசீர்வாதமாக திரும்பிக்கொண்டியிருப்பாய்.
8. Deu 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக் களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக் கொடுப்பார்;
உனக்கு விரோமாக எழும்பும் உன் சத்துருக்களாகிய புறஜாதி கள், தேவனுடைய சத்திய வார்த்தைகளுக்கு விரோதமாக பேசும் எந்த வார்த்தைகளையும் நீங்கள் குற்றப்படுத்தி; உனக்கு முன்பாக அவர்களை முறிய அடிக்கப்படும்படி தேவன் ஒப்புக் கொடுப்பார்;
9. ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
உன் சத்துருக்கள் ஒரு வார்த்தையைக் கொண்டு உன்னை குற்றப்படுத்தும்போது நீ அவர்களை ஏழு பழி சுமக்கும் படி குற்றப் படுத்துவாய்
10. Deu 28:8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கை யிடும் எல்லாவேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
நீ சேர்த்து வைத்திருக்கிற உன் அறிவுக் களஞ்சியங்களிலும் பண்டக சாலைகளிலும் உனக்கு ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார், நீ திட்டமிடும் எல்லா வேலைகளிலும் தேவன் உனக்கு ஆசீர் வாதத்தை கட்டளையிடுவார். தேவன் உனக்கு வாக்குதத்தமாக பகிந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின் கிரியைகளின் எல்லைகளிளெல்லாம் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
11. Deu 28:9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளை களைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும் போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜன மாக நிலைப்படுத்துவார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக் கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணை யிட்டபடியே, உன்னை தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.
12. Deu 28:10 அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் உன்னைக் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
13. Deu 28:11 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்கு பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குதத்தமாக தேவன் உனக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின் எல்லைகளிளெல்லாம்; நன்மை தீமைகளை ஆலோசித்து உன் இருதயத்தில் தீர்மானங்களை முடிவெடுப்பதிலும், அதன் கிரியைகளை நிறைவேற்றுவதிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், உன் சரீர அவயவங்களின் ஆரோக்கியத் திலும், உனக்குப் பரிபூரண நன்மை உண்டாக் கட்டளையிடுவார்.
14. Deu 28:12 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர் வதிக்கவும், கர்த்தர் உனக்கு தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்.
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தைகளை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குச் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலை தோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக் கொள்ளுகிறவர்களைப் போல, நான் கேட்கும் படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார். நான் கையிட்டுச் செய்யும் வேலைகளியெல்லாம் என்னை ஆசீர்வதிக்கவும், கர்த்தர் எனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய ஞானத்தை கொடுப்பார்.
15. நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
நீ அநேக ஜாதிகளுக்கு நல்ல ஆலோசனைகளை கொடுப் பாய், ஆனால் உனக்கோ மற்ற அநேக ஜாதிகளின் ஆலோசனையை கேட்க வேண்டிய சந்தர்ப்பம் / அவசியம் உனக்கு இருக்காது.
16. Deu 28:13 இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறு தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலது புறம் இடது புறம் சாயாமல்.
இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி, வேறு தேவர்களைச் சேவிக்கும்படி , நீ வலது புறம் இடது புறம் சாயாமல்
17. Deu 28:14 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின் படி நடக்கவும் அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளில் நடக்கவும் அவை களுக்குச் செவிகொடுத்து வந்தால், கர்த்தர் உன்னை வேலக்கார னாக வைக்காமல் அதிகாரியாக வைப்பார் நீ தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படாமல் மேன்மையான நிலைக்கு உயர்த்துவார்.
அத்தியாயம் நான்கு
4-4 ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் மூன்றாவது புதிய பாட்டு ஆட்டுக் கூட்டியானவரின் பாட்டு /
இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களின் பாட்டு / ஆட்டுக்குட்டியானவரின் கலியான விருந்தை புசித்ததினால் மணவாட்டி சபையின் கெம்பீரசத்தத்தின் பாட்டு அல்லேலூயா, அல்லேலூயா, ஆமென், அல்லேலூயா, அல்லேலூயா, Rev_19:1-9, 1Th_4:16-17, Num_23:21, Psa_89:15-16, Psa_5:11, Job_20:4, Pro_11:10, Psa_65:8-16,
பாட்டு :- அல்லேலூயா,
பாடுகிறவர்கள் :- திரளான ஜனங்கள் (இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்தவான்கள் உள்பட)
பாட்டின் பொருள்:- இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது
பாட்டு :- அல்லேலூயா,
பாடுகிறவர்கள் :- திரளான ஜனங்கள் (இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்தவான்கள் உள்பட)
பாட்டின் பொருள்:- தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத் திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே
பாட்டு :- ஆமென், அல்லேலூயா,
பாடுகிறவர்கள் :- திரளான ஜனங்கள் (இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்தவான்கள் உள்பட)
பாட்டின் பொருள்:- தேவனுடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே அவளுடைய புகை என்னென்றைக்கும் எழும்புகிறது, தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். அப்படியே ஆகக்கடவது நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
பாட்டு :- அல்லேலூயா,
பாடுகிறவர்கள் :- திரளான ஜனங்கள் (இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்தவான்கள் உள்பட)
பாட்டின் பொருள்:- சர்வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
தேவனுடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத் தில் பழிவாங்கினாரே, அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்பு கிறது, அப்படியே ஆகக்கடவது நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்ற புதிய பாட்டைக் கற்றுக் கொள்ள தேவையான சுரமண்டல இரா கங்கள்
1. ஓய்வு நாள் உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள்.
2. வாக்குத்தத்த தேசத்தினுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள்.
3. இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள்
தேவனுடைய இந்த மூன்று உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களுக்கு பதிலாக, ஒருவன் சாபங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது; அவன் மற்றவர்க ளுக்கு வருகிற தேவனுடைய நியாயத்தீர்ப்பை பார்த்து எப்படி ? ஆமென், அல்லேலூயா, அப்படியே தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் உங்களுக்கு பழிக்கடவது, நாங்கள் பூமியில் அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாட முடியும்.
நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடுவதற்கு தேவையான அடிப்படைத் தகுதிகள்.
1. தேவ சுரமண்டலங்களை தங்கள் கரங்களில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.
2. தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடுவதற்கு தேவையான தேவ சுரண்மண்டல இராகங்களை அறிந்திருக்க வேண்டும்.
3. தேவனுடைய சிங்காசனத்திற்கும் முன்பாக வந்து புதிய பாட்டைப்பாட வேண்டும்.
4. பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
5. ஸ்திரீகளாகிய சபைகளால் தங்களைக் கறைப்படுத்தாத வர்களாக இருக்க வேண்டும்.
6. தங்கள் வாயிலே கபடமாகிய கள்ளத் தீர்க்க தரிசனங்கள் காணப்படாமல் இருக்க வேண்டும்.
7. மிருகத்தையாவது அதன் சொரூபத்தையாவது வணங்காம லும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக் கொள்ளக் கூடாதிருக்கிற புதிய பாட்டு.
Rev 14:1 பின்பு நான் பார்த்தபோது, இதோ சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக் கண்டேன்.
Rev 14:2 அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப் போலிருந்தது.
Rev 14:3 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட் டைப் பாடினார்கள்; அந்தப்பாட்டு பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப் பட்ட இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேரேயல்லாமல் வேறொரு வரும் கற்றுக் கொள்ளக் கூடாதிருந்தது.
Rev 14:4 ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே ; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக் கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்.
Rev 14:5 இவர்களுடைய வாயிலே கபடம் காணப்பட வில்லை. இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில் லாதவர்களாயிருக்கிறார்கள்.
1. சீயோனின் புதிய பாடல்களை தடையின்றித் தெளிவாகப் பாடுகிறவர்கள்.
எருசேலமே, நான் உன்னை மறந்தால் / கர்த்தரின் வசனத்தை நான் மறந்தால் என் வலது கை தன் தொழிலை மறப்பதாக,
எருசலேமே, நான் உன்னை நினையாமலும், என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும் போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக் கொள்வதாக / கர்த்தரின் வசனத்தை நான் நினையாமலும், என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும் போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக் கொள்வதாக.
சீயோனின் பாடல்களையும், மங்கள கீதத்தையும் அந்நிய தேசத்தில் இருந்து பாடாமல் ஒருவர் கர்த்தருடைய வேதத்தினிடத் திற்கும் கர்த்தரின் வசனத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்து கர்த்தரின் வசனத்தை நினைத்து, கர்த்தரின் வசனத்தை அவனுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமான எண்ணும்போது , அவனு டைய நாவு அவன் மேல் வாயோடு ஒட்டிக்கொள்ளாமல் சீயோனின் புதிய பாடல்களை தடையின்றித் தெளிவாகப் பாட முடியும்.