தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 08


தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்

பொருளடக்கம் 2-3

அத்தியாயம் இரண்டு
 
2-1 தேவனுடைய வீட்டிலே நடைபெறும் முதலாம் நியாயத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக 1,44,000 ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியிலே தேவனுடைய ஏழு முத்திரை அடையளங்களை பெற்றுக் கொள்ளுதல்.
 
2-2 தேவனுடைய ஏழு முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கர்கள், தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் மிருகத்தின் முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொண்டு தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பில் பங்கடையும் வழிமுறைகள்.
 
அத்தியாயம் மூன்று
 
3-0 ஸ்திரியாகிய சபையிலிருந்து 1.44.000 ஆண்பிள்ளைகள் தேவ முத்திரையின் ஏழு அடையாளங்களை பெற்றுகொள்ளுவதால் வெளிப்படுதல் / ஆண்பிள்ளைகளின் பிறப்பு.
 
அத்தியாயம் இரண்டு
 
2-1 தேவனுடைய வீட்டிலே நடைபெறும் முதலாம் நியாயத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக 1,44,000 ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியிலே தேவனுடைய ஏழு முத்திரை அடையளங்களை பெற்றுக் கொள்ளுதல்.
 
முதலாம் அடையாளம்:- புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது. 
 
இரண்டாம் அடையாளம்:- பலிபீடத்தின் பிரமாணங்களை பின்பற்றி நடக்க வேண்டும். 
 
மூன்றாம் அடையாளம்:- கர்த்தருடைய பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும்.
 
நான்காம் அடையாளம்:- ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் 
 
ஐந்தாம் அடையாளம்:- மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும். 
 
ஆறாம் அடையாளம்:- இயேசுக்கிறிஸ்துவின் சாட்சியைப் பின்பற்றி நடக்கவேண்டும். 
 
ஏழாம் அடையாளம்:- பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
2-2 தேவனுடைய ஏழு முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்க்கர்கள், தங்கள் நெற்றியிலும், வலது கையிலும் மிருகத்தின் முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொண்டு தேவ னுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பில் பங்கடையும் வழிமுறைகள்.
 
1. நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும்; துன்மார்க்கர்கள் மிருகத்தின் முத்திரை அடை யாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள் வதின் பொருள், எழுத்திபடி ஆவியின் படி.
 
நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்திபடி:-
 
வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகள், ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகள் ஆகியவற்றை எழுத்திபடி செய்து அவைகளின் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுதல் Heb_8:5, Heb_9:9-10Heb_9:23, Heb_10:1 ,1Pe_3:21Col_2:16-23, Col_2:8-10, 1Th_4:8-11,
 
நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் ஆவியின்படி:
 
இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங் கொண்டதின் மூலம் வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகளும் ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகளும் அதன் பொருளுக்கு மாற்றப்படுகிறது. பொரு ளுக்கு மாற்றப்பட்ட தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை தங் கள் அறிவில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு புதுசிருஷ்டியாக மாற்றப்பட்டு தேவ சித்தத்தை பூரணமாக நிறைவேற்றும்படி தங்கள் சரீர அவயவங்களில் நற்கிரியைகளை அடையாளங்களாக தரித்துக் கொள்ளுதல். 
 
2 துன்மார்க்கர்கள் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருளை அறிந்து கொள்ளுவதற்கு உதாரணமாக கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி ஆவியின் படி:- Mat_24:19, Mar_13:17, Luk_21:23, 
 
கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி:-
 
அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக்கு ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது; பாவங்களும் அக்கிரமங்களும் பூமியில் பெருகி, அதன் பின்விளை வாக கொடிய வியாதிகளும் கொள்ளை நோய்களும் ஜனங்களுக் குள்ளே பரவலாக இருக்கும். 
 
அப்பொழுது நல்ல மருத்துவ சிகிச்சையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், அவர்கள் வியாதியின் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிக்க மாட்டாது; விசேஷமாக கர்ப்பவதிகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் ஏற்படும் வியாதியினாலும் நோயினாலும் அவர்களுக்கு மிகவும் வேதனைகளும் கஷ்டங்களும் பெருகும்.
 
கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட உவமையின் பொருள் ஆவியின்படி:- 
 
அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக் கும் ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கும், அப்பொழுது அறியாமையினால் பல வாக்குவாதங் களும் சண்டைகளும் ஏற்பட்டு தங்கள் சமாதானத்தை இழந்து வேதனைகளும் கஷ்டங்களும் அவர்களுக்குள்ளே பெருகும். 
 
விசேஷமாக ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப்பட்டும், கிறிஸ்துவுக்குள் புதிய ஆத்துமாக்களை பெற்றெடுக்க முடியாதவர் களுக்கும், புதிய ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பாலைக்கொடுத்து ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும்.
 
தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கிறபடியினாலும் அறியாமையினாலும், கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த ஆத்துமாக்கள் களங்கமில்லாத ஞானப்பாலைத்தேடி தாய் சபையை விட்டு மற்ற இடங்களுக்கு கடந்து செல்லுகிறது; இதனால் ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப்பட்டு, ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களை ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும்.
 
3. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்தின் படி:-
 
கணினியின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் மருத்துவ சிகிச்சை மூலம் பெற்றுக்கொண்டு அதனால் பொருளாதாரம் மற்றும் வாணிபத் தேவைகளுக்கு பயன் படுத்துவது.
 
4. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் ஆவியின் படி:- 
 
அந்திக்கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள், தங்கள் மூன்று தலைவர்களான கள்ளத்தீர்க்கதரிசி, அந்தி கிறிஸ்து, சாத்தான், இவர்கள் வாயிலிருந்து புறப்படும் மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு; தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும் விரோதமாகவும் இணையாகவும் விசுவாசத்திலும் கிரியைகளிலும் நடப்பார்கள்.
 
மேலும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்று கிறவர்களை வஞ்சிக்க முயற்சி செய்வது / உபத்திரவப்படுத்துவது / கொலை செய்வது ஆகிய கிரியைகளை செய்வார்கள், எனவே அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும், தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக் கொண்டவர்களை ஆவியின்படி அடையாளம் கண்டு பிடிப்பவர்கள் மட்டும்; பரலோக தேவனின் சத்தியமான வார்த் தைகளின் ஊழியத்தை பயமில்லாமல் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.
 
1-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் அறிவைப் பெற்று தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள் Rev_14:1-5, Rev_19:9,
 
1-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்கள்; மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும், விரோதமாகவும் இணையாகவும், விசுவாசத்திலும் கிரியைகளிலும் செயல்படுவார்கள். Rev_19:20, 
 
2-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
கிறிஸ்துவுடன் இருப்பவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பவட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருப்பார்கள் இவர்கள் பரிசுத்தஆவி, அபிஷேக ஆவி, சத்தியஆவி, ஆகியவைகளின் கிரியைகளினால் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.
 
2-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான் , ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள் Rev_16:13-15, 
 
3-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
ஒரு ஸ்திரீ சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையை பெறும்படி பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறாள். Rev_12:1-5,
 
3-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
ஒரு ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுக்கிறிஸ்துவின் சாட்சிகளுடையவர்களின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறாள் Rev_17:6, Rev_18:4, Rev_18:24,
 
4-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர்எழுதப்பட்டவர்கள் மிருகத்தின்அடையாளத்தையும் அசுத்த ஆவிகளின் அற்புதங்களையும்தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Rev_13:8, Rev_17:8,
 
4-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் மிருகத்தை வணங்கி அசுத்த ஆவிகளின் அற்புதங்களை தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக் கொள்ளுவார்கள் Rev_13:8, Rev_17:8, 
 
5-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
தேவன் பரிசுத்தவான்களுக்கு1260 நாள் அளவும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அதிகாரங்களைக் கொடுத்தார். பரிசுத்தவான்கள் தேவ வசனத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள். Rev_11:3, Rev_12:11
 
5-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
கீழே விழத்தள்ளப்பட்ட சாத்தான் மிருகத்தின் முத்திரையை பெற்றவர்களுக்கு 42 மாதமளவும் பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து ஜெயங்கொள்ளும்படி அதிகாரம் கொடுத்தது Rev_13:1,
 
6-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
பரிசுத்தவான்கள் தங்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வசனத்தைக்கொண்டு கடிந்து கொண்டு உபதேசம் பண்ணும்போது அதை எதிர்ப்பவர்கள் எழுத்தின் படியுள்ள பட்டயத்தைக்கொண்டு வெட்டுவார்கள் ஆனாலும் சமாதானத்தின் சுவிசேஷத்தை உடையவனாயிருந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்கள் எலியாவைப்போல பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் Rev_13:9-10, Rev_14:12-13,
 
6-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
ஒருவன் தீமை செய்கிறதிலிருந்து விலகி நன்மை செய்கிறபோது, தேவன் அவன் மேல் வைத்த நியாயத்தீர்ப்பை அவனை விட்டு விலக்குவார்; ஒருவன் பரிசுத்தவான்களுக்கு தீமை செய்யத் திட்டமிடுகிறபோது, அது போலவே தேவன் அவனுக்கு தீமையை திட்டமிட்டுச் செய்வார் Rev_11:5, 
 
7-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
அந்திக் கிறிஸ்துவின் முத்திரைஅடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக் கொள்ளாதவர்கள் மூன்று அசுத்த ஆவிகளையும் ஜெயங்கொண்டு தேவனுடைய முத்திரை அடை யாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைவார்கள். Rev_20:4-6
 
7-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய கோபாக்கினையில் பங்கடைவார்கள் Rev_16:1-2, Rev_14:9-11, 
 
8-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 
 
தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து அக்கினி கலந்த கண்ணாடிக் கடலில் ஞானஸ்தானம், பெற்று மகிமையடைவார்கள். . Rev_15:2-3, Rev_4:6, 
 
8-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-
 
மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான், ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள். Rev_19:20, Rev_20:10,
 
அத்தியாயம் மூன்று
 
3-0 ஸ்திரியாகிய சபையிலிருந்து 1.44.000 ஆண்பிள்ளை கள் தேவனுடைய ஏழு முத்திரையின் அiடாயளங்களை பெற்றுக் கொள்ளுவதால் ஆண்பிள்ளைகள் பிறக்கிறது .
 
தேவனுடைய வீட்டிலே துவங்கும் நித்திய நியாத்தீர்ப்பின் மூலம் தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்கள் நெற்றில் அடையா ளங்களாகப் பெற்றுக்கொள்ளும் 1.44.000 ஆண் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்காக சபையானது பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறது. 1Pe_4:16-18, Rev_12:1-2, Rom_8:19-22,
 
தேவனுடைய வீட்டிலே நித்திய நியாயத்தீர்பை துவங்கு வதற்காக, எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளின் நிமித்தம் தங்கள் இருத யத்தில் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் நெற்றியில்; தேவனுடைய முத்திரை அடையாளங்களைப்போட்டு, அவர்களின் நடுவிலிருந்து ஆண் பிள்ளைகளை பிரித்தெடுப்பதற்காக பரிசுத்த ஸ்தலத்திலுள்ள மூப்பர்களிடத்திலிருந்து சங்காரம் செய்யத் துவங்கினார்கள். Eze_9:1-11, Eze_11:1-13, Jer_25:29, Isa 66:6-10 
 
ஆண்பிள்ளைகளை இனம் கண்டறிதல் :-
 
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்களை போல, தேவனுடைய முத்திரை அடையாளத்தின் வசனங்களின் தேவ அறிவை, ஒருவனுடைய சரீரமாகிய கூடாரத்தில் வாசம் பண்ணும் தலைச்சன் பிள்ளையாகிய ஜென்ம சுபாவ மனிதன் தரித்திருக்கும் போது; அவன் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் செய்து கொண்ட இரட்சிப்பின் உடன்படிக்கை மரணம் அடையாமல் ஜீவ னோடியிருக்கும். 
 
தேவமுத்திரையின் அடையாளத்தை ஒருவனுடைய ஜென்ம சுபாவ மனிதன் தரித்திருக்கும்போது அவன் முதற்பலனாக / ஆண் பிள்ளையாக / தலைச்சன் பிள்ளையாக பிரித்தெடுக்கப்படுகிறான் இப்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை நிறை வேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக மாறு கிறார்கள்.
 
தேவனுடைய முத்திரை அடையாத்தின் தேவ அறிவை கீழே குறிப்பிட்ட நான்கு வழிமுறைகளில் ஏற்றுக்கொள்ளுபவர்கள் எகிப் தின் வாதைகளிலிருந்து காக்கப்படுவது போல ஆவி ஆத்துமாவில் தேவன் அனுப்பும் நியாயத்தீர்ப்பின் மூலம் உண்டாகும் சாபங் களிலிருந்து காக்கப்படுகிறார்கள்.
 
1. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை தங்கள் அறிவிலும், செயலிலும், எதிர்த்து நிற்காமல் ஏற்றுக்கொண்டு நடைமுறைபடுத்துகிறவர்கள்.
 
2. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை ஏற்கனவே கொஞ்சம் அறிந்தவர்கள், மேலும் முழுமையாக தேவ அறிவை அறிந்து கொண்டு நடைமுறைபடுத்துகிறவர்கள். 
 
3. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறி வினால் இயன்றளவு நற்கிரியைகள் செய்துகொண்டு, மேலும் தேவ அறிவை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சியோடு போராடு கிறவர்கள்
 
4. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவினால் நற்கிரியைகள் செய்வதற்காக நல் மனம் உள்ளவர்களாக யிருந்து, நற்கிரியைகள் செய்து முன்னேறுவது; மேலும் தங்களைப் போல உள்ளவர்களுடன் இணைந்து, கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக நற்கிரியைகளை செய்து தேவ சித்ததை நிறை வேற்றுகிறவர்கள். 
 
மோசேயின் மூலமாக அறிவிக்கப்பட்ட தேவவார்த்தை களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் கீழ்ப்படிந்து எகிப்தின் பத்து வாதை களிலிருந்து காக்கப்பட்டது போல; மேலே குறிப்பிட்ட இந்த நான்கு வகையான ஜனங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றும் போது ஆவி. ஆத்துமாவில் தேவன் அனுப்பும் நியாயத்தீர்ப்பின் மூலம் உண்டாகும் சாபங்களிலிருந்து காக்கப்படுகிறார்கள். Rev_9:1-4, Rev_7:1-4, Rev_7:13-14, 
 
தேவனுடைய முத்திரையின் அறிவை ஏற்றுக் கொள்ளாத வர்களுக்கு தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு :-
 
தேவனால் முன் குறிக்கப்பட்ட 1,44,000 ஆண்பிள்ளை நாங் கள் தான் என்று யார்? உரிமைகொண்டாடாடினாலும், அல்லது யார்? 1,44,000 ஆண்பிள்ளைகள் வரிசையில் சேர்ந்து கொள்ள விரும்பி னாலும், அவர்கள் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாள மாகிய தேவ வார்த்தையின் தேவ அறிவை பெற்று இருக்கிறார்களா? என்று தயவு செய்து பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்; ஏனென்றால் தேவ முத்திரையின் அறிவை சரியாக புரிந்து கொள் ளாமல் அல்லது அறியாதிருக்கும்போது, தேவனுடைய நித்திய நியா யத்தீர்ப்பின் தண்டனையை அடைய நேரிடும்.
 
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்கள் இல்லாத வீட்டில் தலைச்சன் பிள்ளை மரணமடைந்தது போல, தேவ முத்திரை யின் தேவ அறிவை ஏற்றுக்கொள்ளாத தலைச்சன் பிள்ளையாகிய ஜென்ம சுபாவ மனிதனுடைய கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கை யில் இரட்சிப்பு மரணமடையும்; தேவ முத்திரையின் அறிவை ஏற்றுக்கொள்ளும்போது மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற் றுக்கொள்ள அநேக வாய்ப்புகள் உள்ளது.
 
ஒருவன் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாள மாகிய தேவ அறிவை ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய சுய விசுவா சத்தை நிலை நிறுத்தும்படியாக மனிதனுடைய அறிவில் முயற்சி செய்யும் போது; அவனுடைய அறியாமையினால் மிருகமாகிய அந்திக் கிறிஸ்த்துவின் முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியிலும், வலது கையிலும் பெற்றுக்கொண்டு அந்திக் கிறிஸ்துவின் மண வாட்டி சபையாக மாறி, தேவனுடைய ஏழு முத்திரை அடையா ளங்களுக்கும் அவைகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் விரோத மாக அறிவிலும் கிரியைகளிலும், செயல்படுவதால் அந்திக் கிறிஸ்துக்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகள் ஆகிய இவர்களுடன் நேரடியாக அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
 
தேவனால் முன் குறிக்கப்பட்ட 1.44.000 ஆண்பிள்ளை களாகிய மணவாட்டி சபை நாங்கள் என்று உரிமை கொண்டாடுகிற தேவ ஜனமாகிய சீயோன் குமாரத்தியே! உனக்கு கிடைத்த இந்த நாளிலாவது சமாதானத்திற்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயா னால் உனக்கு நலமாயிருக்கும்; முதற்பலனாக / ஆண்பிள்ளையாக / தலைச்சன்பிள்ளையாக 1.44.000 வரிசையில் சேரவிரும்புகிறவர்கள் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை சாந்த மாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
 
இந்த தீர்க்க தரிசன தேவ வார்த்தைகளை வாசிக்கிறவன் கேட்கிறவன் இவைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் பாக்கிய வான்கள் Rev_1:2-3, 
 
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன் ; விருப்பமுள்ள வன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன். Rev_22:14-17, 
 
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்க தரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும், தேவன் சாட்சியாக எச்சரிக்கிற தாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார். 
 
Rev 22:19 ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப்புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத் துப் போடுவார்.
 
ஆண் பிள்ளைகளின் விசுவாச நற்கிரியைகள் Rev_14:1-5 , Rom_7:1-6, 2Th_2:7-12, 2Co_11:2,
 
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் உறுதி யாக நிலைத்திருப்பவர்கள்.
 
2. பிதாவின் நாமமான தேவ வார்த்தையை தங்கள் ஆவியில் ஏற்றுக்கொண்டவர்கள்.
 
3. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றுகிறவர்கள்.
 
4. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளிலே கபடமும் கள்ளத் தீர்க்க தரிசனமும் இல்லாமல் தேவனுடைய வார்த்தையை சாட்சியாக அறிவிப்பார்கள்.
 
5. ஸ்திரியாகிய சபையினால் தங்களை கரைபடுத்திக் கொள்ளாதவர்கள்.
 
6. அந்திக்கிறிஸ்துவின் சொருபத்தையும் அதன் அறிவையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். 
 
7. மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட் டையும் கற்றுக் கொண்டு தேவ சுரமண்டலத்தோடு பாடக்குடிய வர்கள்.
 
8. தேவனுடைய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவைபற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்கதரிசனங்களை வாசித்தும் கேட்டும், இவைகளை கைக்கொண்டு பாக்கியவான்காளாக மாறுகிறவர்கள். Rev_1:2-3, 
 
9. தேவனுடைய வார்த்தை, இயேசு கிறிஸ்துவை பற்றின சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்கதரிசன வசனங்களில் காத்திருந்து ஏழு சபைகளின் தேவதரிசனத்தைப் பெற்று ஆவியில் மருரூபம் அடைந்திருப்பவர்கள். Rev_1:9-11,
 
10. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங் களை புசித்து கிறிஸ்துவை தங்களுடைய இராஜாவாக அங்கிகரித்து அல்லேலூயா; என்று கெம்பீர சத்தமிடுகிறவர்கள் Rev_19:7-10
 
11. தேவனுடைய கற்பனைகளை பின்பற்றி அவருடன் செய்து கொண்ட விசுவாச உடன்படிக்கையில் உறுதியோடு பொறு மையாக காத்திருப்பவர்கள் மிருகத்தின் முத்திரையை தங்கள் நெற்றி யிலும் வலது கையில் தரித்துக் கொள்ளாலும், மிருகத்தின் சொரு பத்தை வணங்காமலும் இருந்து தங்களை காத்துக் கொள்ளுகிற வர்கள். Rev_14:9-13,
 
12. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ் துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங்களை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி சாத்தானை ஜெயிப்பவர் கள். Rev_12:7-12,
 
13. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ் துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங்களை பின்பற்றி 1.44.000 எண்ணிக்கையில் வருகிறவர்களுடன் வலுசர்ப்பம் 42 மாதம் யுத்தம் செய்தது. இந்த யுத்தத்தில் சிரச்சேதம் பன்னப்படு வது அல்லது மரணத்தை காணமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது, தங்கள் விசுவாசத்திற்கும் பொறுமைக் கும் ஏற்றபடி மாறுபடுகிறது. . Rev_12:13-17, Rev_13:7-10
 
14. தேவ வசனத்தின் நிமித்தமும் இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றிதினாலும் கொல்லப்பட்ட ஆத்துமாக்களை பலி பீடத்தின் கீழ் வந்து சேர்வார்கள். அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டு சிறிது காலம் இளைப்பாரிக் கொண்டு இருப்பார்கள். Rev_12:13-17, Rev_13:7-10
 
15. தேவ வசனத்தின் நிமித்தம் இயேசுகிறிஸ்துவின் சாட் சியை பின்பற்றி, மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்ளாமல் மரித்தவர்கள், அல்லது கொல்லப்பட்ட ஆத்துமாக்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் அரசாளுவார்கள். Rev_20:4-6,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries