தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 08


தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்

பொருளடக்கம் 5-0

அத்தியாயம் ஐந்து
 
5-1 மகா பாபிலோன் மாநகர வேசியினுடைய புலம்பலின் பாடல்கள்
 
5-2 தேவமுத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கனுக்கு வரும் உடன்படிக்கையின் சாபங்கள் - ஒன்று
 
5-3 தேவமுத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கனுக்கு வரும் உடன்படிக்கையின் சாபங்கள் - இரண்டு
 
5-4 தேவமுத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கனுக்கு வரும் உடன்படிக்கையின் சாபங்கள் - மூன்று
 
5-1 மகா பாபிலோன் மாநகர வேசியின் புலம்பல் பாடல்கள் / சீயோனுக்கு வராதவர்களுடைய புலம்பல் பாட்டு. 
 
தேவனுடன் செய்து கொண்ட உடன்படிக்கை, ஒருவனால் மீறி முறிக்கப்பட்டால், அந்த உடன்படிக்கை துரோகிக்கு தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களெல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் சாபங்களினால் வரும் புலம்பல் பாட்டின் சுரமண்டல இராகங்களாக மாறுகிறது. Isa_65:8-16, Hos_2:13, Rev_18:1-4, Jos_7:23-26, 2Th_2:7-13, Isa_2:1-6, Isa_2:7-13, Isa_2:18-22, Isa_50:10-11, 
 
மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட இரண்டு உடன்படிக்கைகள் ஒருவனால் மீறி முறிக்கப்பட்டால், அந்த உடன்படிக்கை துரோகிக்கு தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்கள், எல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமா வில் சாபங்களினால் வரும் இரண்டு புலம்பல் பாட்டாக மாறுகிறது.
 
இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட ஒரு உடன்படிக்கை ஒருவனால் மீறி முறிக்கப்பட்டால், அந்த உடன்படிக்கை துரோகிக்கு தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள், எல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் சாபங்களினால் வரும் ஆட்டுக்குடியானவரின் ஒரு புலம்பல், பாட்டாக மாறுகிறது. 
 
5-2 தேவ முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்க் கனுக்கு வரும் முதலாவது உடன்படிக்கையின் சாபங்களில் பாட்டு / பாபிலோன் மாநகர வேசியின் முதலாவது புலம்பல் பாட்டு.
 
சீனாய் / ஒரேப் மலையில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக்கொள்ளும் ஓய்வு நாளின் ஆசீர்வாதங்களின் பாட்டு; எப்பொழுது ஒருவனால் தேவனுடைய உடன்படிக்கை மீறி முறிக்கப்பட்டாலும் அந்த உடன்படிக்கை துரோகிக்கு தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஓய்வு நாளின் ஆசீர்வாதங்கள், எல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் சாபங்களினால் வரும் புலம்பல் பாட்டாக மாறுகிறது.
 
5-3 தேவ முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்க் கனுக்கு வரும் இரண்டாவது உடன்படிக்கையின் சாபங்களின் பாட்டு / பாபிலோன் மாநகர வேசியின் இரண்டாவது புலம்பல் பாட்டு.
 
மோவாப் தேசத்தில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக்கொள்ளும் வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களின் பாட்டு, எப்பொழுது ஒரு வனால் தேவனுடைய உடன்படிக்கை மீறி முறிக்கப்பட்டாலும்; அந்த உடன்படிக்கை துரோகிக்கு தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட வாக்குதத்த தேசத்தின் ஆசீர்வாதங்கள், எல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் சாபங்களினால் வரும் புலம்பல் பாட்டாக மாறுகிறது. 
 
5-4 தேவ முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்க் கனுக்கு வரும் மூன்றாவது உடன்படிக்கையின் சாபங்களில் பாட்டு / பாபிலோன் மாநகர வேசியின் மூன்றாவது புலம்பல் பாட்டு
 
இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட ஒரு உடன்படிக்கை, ஒருவனால் மீறி முறிக்கப்பட்டால் அந்த உடன்படிக்கை துரோகிக்கு; தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசிர்வாதங்கள், எல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் சாபங்களினால் வரும் ஆட்டுக்குட்டியானவரின் ஒரு புலம்பல் பாட்டாக மாறுகிறது.
 
அத்தியாயம் ஐந்து
 
5-2 தேவ முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்க் கனுக்கு வரும் முதலாவது உடன்படிக்கையின் சாபங்களின் பாட்டு / பாபிலோன் மாநகர வேசியின் முதலாவது புலம்பல் பாட்டு. 
 
சீனாய் / ஒரேப் மலையில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக்கொள்ளும் ஓய்வு நாளின் ஆசீர்வாதங்களின் பாட்டு, எப்பொழுது ஒருவனால் தேவனுடைய உடன்படிக்கை மீறி முறிக்கப்பட்டாலும் அந்த உடன்படிக்கை துரோகிக்கு; தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றக்கொண்ட ஓய்வுநாளின் ஆசீர்வாதங்கள், எல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் சாபங்களினால் வரும் புலம்பல் பாட்டாக மாறுகிறது. Lev_26:46, Lev_26:1, Deu_29:1, 
 
பாபிலோன் மாநகர வேசியின் முதல் புலம்பல் பாட்டின் முதல் ஏழு மடங்கு புலம்பலின் பல்லவி Lev_26:14-17, Num_6:25-26, Psa_89:14-17, Lev_17:10, Deu_31:17-18, Deu_32:20, 
 
1. Lev 26:14 -15 நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின் படியும் செய்யாத படிக்கு, என் உடன் படிக்கையை நீங்கள் மீறிப் போடுவீர்களாகில் :
 
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள்
 
எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில். 
 
அனுபல்லவி
 
2. Lev 26:16 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால்,
 
திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்™வேன்;
 
திகில் = பயம் + வெறுப்பு + எரிச்சல் + சந்தேகம்.
 
ஈளை (மலையாள வார்த்தை )= சோம்பல் + வறுமை + கஞ்சத்தனம் 
 
காய்ச்சல் = தீமையின் குணாதிசயங்கள் திராத வியாதிகள் போல ஒருவனை தொடர்ந்து வருதல், ஆகிய இவைகளை தேவன் உங்க ளுக்குள்ளே வரும்படி கட்டளையிடுவார்.
 
சரணங்கள்
 
3. அதனால் நான் உங்கள் கண்களைப் பூத்துப் போகப் பண்ணுவேன்;
 
தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஒருவனை தாக்கும்போது அவனுடைய ஆவிக்குரிய கண்களின் பார்வை மங்கலாகி, தரிசனங் கள் நாளுக்கு நாள் இருளடைந்து அவனுக்கு அறியாமை பெருகிக் கொண்டே வரும்.
 
4.அதனால் நான் உங்கள் இருதயத்தைத் துயப்படுத்து வேன்;
 
தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் இருதயம் சோர்வடைந்து வேதனைப்பட்டு, துயரத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கும்.
 
5. நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; 
 
நீங்கள் விதைக்கும் நற்கிரியைகளின் பயன்கள் விருதா வாயிருக்கும், 
 
6. உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.
 
உங்கள் நற்கிரியைகளின் பயனை உங்கள் சத்துருக்கள் அனுபவிப்பார்கள்.
 
7. Lev 26:17 நான் உங்களுக்கு விரோமாக என் முகத்தைத் திருப்புவேன்; 
 
தேவன் உங்களுக்கு விரோதமாக அவர் முகத்தைத் திரும்பும் போது தேவன் உங்களுக்கு கொடுத்த தரிசனத்தின் வெளிச்சம் / கிருபை, சமாதானம் ஆகியவைகள் உங்களை விட்டு நீங்கப்பட்டு தேவனுடைய கோபாக்கினையின் நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது.
 
8. உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியடிக்கப்படுவீர்கள் உங்களுடைய தீமைகள் உங்களை தண்டிக்கும் 
 
9. உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்;
 
உங்களுடைய தீமைகள் உங்களை மேற்க்கொண்டு அது உங்களை ஆட்சி செய்யும் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருப் பீர்கள். 
 
10. துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.
 
உங்களுக்கு சத்துருக்கள் இல்லாதிருந்தும் நீங்கள் செய்த தீமையான செயலை நினைத்து அதற்கு பயந்து நீங்கள் ஓடுவீர்கள். 
 
பாபிலோன் மாநகர வேசியின் முதல் புலம்பல் பாட்டின் இரண்டாவது ஏழு மடங்கு புலம்பலின் பல்லவி Lev_26:18-20, Deu_32:36, Dan_12:4-8, Jer_13:1-11, Eze_24:15-27, Amo_2:12-16, Rev_3:14-22, Hos_12:6-8, Hos_2:8-16, 
 
11. Lev 26:18 இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்க ளினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து, 
 
சரணங்கள்
 
12. Lev 26:19 உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவேன். 
 
கீழே குறிப்பிட்டவைகளில் உங்கள் வல்லமையின் பெரு மையை முறித்து உங்களுடைய மகிழ்சியை தேவன் உங்களை விட்டு விலக்குவார்:-
 
1. பெலத்தின் முக்கியமானவைகள் = உங்கள் பெலன்
 
2. அகங்காரத்தின் மகிழ்சி = பெருமையின் மகிழ்சி
 
3. கண்களின் விருப்பம் = தரிசனத்தின் விருப்பம்
 
4. ஆத்துமாவின் விசேஷ வாஞ்சை = சுய இஞ்சைகள்
 
5. குமாரர்கள் = சபை மூப்பர்கள்
 
6. குமாரத்திகள் = சபை விசுவாசிகள்
 
7. பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்த குலைச்சலாக மாறுதல் / அன்றாட பலி நீக்கப்பட்டு பாழாக்கும் அருவருப்பு இருதயத்தின் மத்தியில் ஸ்தாபிக்கப்படுதல்.
 
8. உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், ஆக்குவேன் :-
 
உங்கள் சிந்தனைகளை நிதானிக்கும் பகுத்தறிவில் உங்கள் தேவைக்கேற்றபடியுள்ள அறிவை நீங்கள் அறிந்து உணர்ந்து கொள்ள முடியாமல், உங்கள் அறிவின் செயல்பாடுகள் உங்களுக்கு இரும்பைபோல மிக கடினமாயிருக்கும்.
 
9. உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவேன் :-
 
உங்கள் கைகளின் கிரியைகளை செயல்படுத்த முடியாமல் காரியசித்தியுள்ள உங்கள் செயல் திறமைகள் வெண்கலத்தை போல உங்களுக்கு மிக கடினமாக இருக்கும். 
 
13. Lev 26:20 உங்கள் பெலன் விருதாவிலே செல வழியும் 
 
உங்களுடைய எல்லா கிரியைகளும் உங்களுக்கு எந்த பிரதிப்பலனையும் கொடுக்காமல், அவைகள் ஒழுங்கின்மையும் வெறுமையாக மாறி, உங்களுடைய பணம், பொருள், காலம் ஆகிய இவைகள் வீணாக செலவழிந்து கொண்டேயிருக்கும்.
 
14. உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.
 
உங்களுடைய அறிவின் யோசனைகளை நீங்கள் செயல் படுத்தும்போது அது தன்னுடைய நற்கிரியைகளுக்கு மாறாமல் இருந்து, அவைகள் உங்களுக்கு எந்த பிரதிபலனையும் திரும்பக் கொடுக்காது, ஏற்கனவே உங்களுடைய நடைமுறையில் பின்பற்றிக் கொண்டிருக்கிற உங்கள் அறிவின் கிரியைகள் அதன் முழுப்பயனை யும் உங்களுக்கு திரும்பக்கொடுக்காது. 
 
பாபிலோன் மாநகர வேசியின் முதல் புலம்பல் பாட்டின் மூன்றாவது ஏழு மடங்கு புலம்பலின் பல்லவி Lev_26:21-22,
 
15. Lev 26:21 நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லா மல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக் குத்ததக்கதாக இன்னும் ஏழத்தனையாக வாதையை உங்கள் மேல் வரப்பண்ணி, 
 
16. Lev 26:22 உங்களுக்குள்ளே வெளியின் துஷ்ட மிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களை பிள்ளைகளற்றவர் களாக்கி, உங்கள் மிருக ஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்து போகப்பண்ணும் ; 
 
உங்களுக்குள்ளே வெளியின் துஷ்ட மிருங்களை வரவிடு வேன்:-
 
உங்களுக்குள்ளே தேவ வசனத்திற்கு விரோதமான பெருமை, கோபம், கடினமான சொற்கள், எரிச்சல் ஆகிய துஷ்ட மிருகங்களின் சுபாவங்களை உங்களுக்குள்ளே வரும்படி தேவன் கட்டளையிடுவார் இவைகளினால் நீங்கள் சுபாவ அன்பில்லாதவர் களாக மாறி துஷ்டமிருகங்களைப்போல மாறுவீர்கள். அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கிவிடும்:-
 
இந்த துஷ்டத்தனமான உங்கள் கிரியைகள் உங்களை சுபாவ அன்பில்லாதவர்களாக மாற்றுகிறபடியால், நாளுக்கு நாள் உங்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகிப்போவார்கள்.
 
உங்கள் மிருக ஜீவன்களை அழித்து உங்களைக் குறைத்து போகப்பண்ணும்:-
 
துஷ்டத்தமான கிரியைகள் உங்கள் ஆவியில் வெளிப்படும் போது, அவைகளின் பின்விளைவாக உங்கள் மாம்ச சரீரத்தின் ஆரோக்கியம் பெலவீனமடையும் தேவனுடைய ஆசீர்வாதங்களி லிருந்து நீங்கள் எல்லா வகையிலும் தாழ்ந்து, கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
 
17. உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்:-
 
நீங்கள் திட்டமிட்ட எல்லா யோசனைகளும் கிரியைகளும், ஒழுங்கின்மையும் வெறுமையுமாக மாறி; எந்த பிரதிபலனையும் கொடுக்காமல் அவைகள் பாழடைந்து கிடக்கும்.
 
பாபிலோன் மாநகர வேசியின் முதல் புலம்பல் பாட்டின் நான்காவது ஏழு மடங்கு புலம்பலின் பல்லவி Lev_26:23-26, Deu_32:18-36, Rom_11:8-10, Psa_69:21-28, Psa_109:4-20, Isa_29:8-14
 
18. Lev 26:23-24 நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களினிமித்தம் ஏழத் தனையாக வாதித்து, 
 
சரணங்கள்
 
19. Lev 26:25 என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள் மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்த பின், கொள்ளை நோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன் ; சத்துருவின் கையில் ஒப்புக் கொடுக்கப்படு வீர்கள். 1Ti_6:3-5, 2Ti_2:16-18, Deu_29:11, Deu_31:16-22, Eze_17:11-19
 
என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்ட யத்தை உங்கள் மேல் வரப்பண்னுவேன் :-
 
தேவனுடைய உடன்படிக்கையை மீறினதற்கு பழிவாங்கும் படி தேவனுடைய நியாயத்தீர்ப்பை தேவன் அவர்ககளுக்குள்ளே அனுப்பும்போது, அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையினால் பெற்றுக்கொண்ட எல்லா ஆசீர்வாதங்களும் அவர்களுக்கு சாபமாக மாறுகிறது. 
 
நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளை நோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்:-
 
நீங்கள் நினைத்தபடி உங்கள் காரியங்களின் இலட்சியத்தின் இலக்கை நீங்கள் அடைந்த பிறகு அவைகள் ஒழுங்கின்மையும் வெறுமையுமாக மாறுவதற்காக பெருமையையும் தர்கங்களையும் வாக்குவாதங்களின் நோயையும் உங்களுக்குள்ளே வரும்படி தேவன் கட்டளையிடுவார். 
 
சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள் :-
 
நற்கிரியைகளை முழுவதும் இழந்தபடியால் இப்பொழுது தீமையான கிரியைகளின் கட்டுபாட்டிற்கு முழுமையாக அடிமை யாவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.
 
20. Lev 26:26 உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப் போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச்சுட்டு, அதைத்திரும்ப உங்களுக்கு நிறுத்துக் கொடுப்பார்கள் ; நீங்கள் சாப்பிட்டும் திருப்பதியடைய மாட்டீர்கள். Isa_3:1-9, Isa_3:15-17, Eze_4:16-17, Eze_5:16-17, Eze_12:17-20, Lam_4:4-8, 
 
உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடுவேன்:-
 
உங்கள் அத்துமா பிழைப்பதற்கு ஆதாரமாயிருக்கிற தேவனுடைய வாயின் வார்தைகளின் அப்பத்தை உங்களுக்கு கிடைக்காதபடி தடைபண்ணுவேன்.
 
பத்து ஸ்தீரிகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத்திரும்ப உங்களுக்கு நிறுத்துக் கொடுப்பார்கள். நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்:- Deu_32:8, Zec_8:23, Mic_4:1-3, Jer_50:4-8, 
 
பலவிதமான பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத் தொங்கலைப்பிடித்துக்கொண்டு தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகை யால் உங்களோட கூடப்போவோம் என்று சொல்லி, அவனைப்பற்றிக் கொண்டு புறப்பட்டு வந்து ; நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக் கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப் போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலே மிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் என்று கர்த்தரை பின்பற்றுவார்கள்.
 
அது போல, பத்து ஜாதிகளிலிருந்து உருவான சபைகள் யூதனுடைய சுத்திகரிப்பின் முறைகளை ஆவியில் பின்பற்றாதவர்கள் தேவனுடைய உடன்படிக்கைகளை முறித்து துரோகிகளாக மாறினவர்கள், தேவன் எங்களோடே இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு; தங்களுக்கு விருப்பமான ஒரு மையக்கருத்தை முன் வைத்து அதற்கேற்றபடியுள்ள, நூதன உபதேசம் / விகர்பமான உப தேசம் / நயவஞ்சகமான உபதேசம் ஆகிய உபதேசங்களை தேவ வார்த்தைகளிலிருந்து உருவாக்கி உங்களுடைய விசுவாச 
 
அளவின்படி உங்களுக்கு பகுத்து பிரித்து கொடுப்பார்கள், ஆனால் அவைகளை நீங்கள் நடைமுறைப்படுத்தும்போது உங்கள் ஆத்துமா அவைகளால் திருப்தியடையாமல் இருக்கிறது. Isa_4:1,Jer_7:16-19, Jer_44:16-19
 
பாபிலோன் மாநகர வேசியின் முதல் புலம்பல் பாட்டின் ஐந்தாவது ஏழு மடங்கு புலம்பலின் பல்லவி Lev_26:27-39,
 
21. Lev 26:27 இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், டுநஎ 26:28 நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங் கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன். 
 
சரணங்கள்
 
22. Lev 26:29 உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள். 
 
உங்கள் மூப்பர்கள், சபை விசுவாசிகளின் ஆலோசனை களையும் கேட்டு நடப்பீர்கள்.
 
23. Lev 26:30 நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்துளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள் மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
 
நான் உங்கள் மேடைகளை அழித்து:-
 
நீங்கள் மேன்மையாக நினைத்து நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் உங்கள் பதவி முறைகளின் ஐக்கியத்தை தேவன் அழித்துப் போடுவார். 
 
உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்துளியாக்குவேன்:-
 
பொருளாசையின் அடிப்படையில் நீங்கள் உருவாக்கின உங்கள் திட்டங்களின் சிந்தனைகளை தேவன் சிதறப்பன்னுவார்
 
உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள் மேல் எறிவேன்:-
 
தங்களுடைய இருதயத்திலிருக்கிற அக்கிரம சிந்தனை களுடைய தோல்விகளை தாங்களே வெறுக்கும்படி அவைகளை மற்றவர்களுக்கு முன்பாக தேவன் வெளிப்படுத்துவார்.
 
என் ஆத்துமா உங்களை அரோசிக்கும் / வெறுக்கும்:-
 
இந்த காரியங்களினால் தேவனுடைய ஆத்துமா உங்களை வெறுக்கும்.
 
24. Lev 26:31 நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன். 
 
நீங்கள் உருவாக்கின கற்பனைகளின் உபதேசங்களை தேவன் ஒழுங்கின்மையும் வெறுமையுமாக்கி, நீங்கள் பரிசுத்தமாக தீர்மானித்தவைகளை தேவன் பாழாக்கி, உங்களுடைய ஆராத னையை தேவன் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
 
25. Lev 26:32 நான் தேசத்தைப் பாழாக்குவேன்;
 
அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.
 
உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும் உங்கள் விசுவாச எல்லைகளை தேவன் பாழக்குவார் உங்களுக்கு நன்மைகள் கிடைக் காததைக் கண்ட புற ஜாதிகள் உங்களைக் கண்டு பிரமிப்பார்கள். 
 
26. Lev 26:33 ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
 
ஜாதிகளின் முறைகளை பின்பற்றி அவர்களுக்குள்ளே சிதறி இருக்கும்படி தேவன் உங்களை ஒப்புக் கொடுத்து உங்களுக்கு பின்னே தேவனுடைய நியாயத்தீர்ப்பை அனுப்புவார்; அதனால் உங்கள் நன்மைகளின் விசுவாசங்களும், உங்கள் கற்பனைகளின் உப தேசங்களும் ஒழுங்கின்மையும் வெறுமையுமாக்கப்படுகிறது.
 
27. Lev 26:34 நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும் போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அனுபவிக்கும், அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அனுபவிக்கும்.
 
நீங்கள் உங்களுடைய சத்துருக்களாகிய புற ஜாதிகளின் பிரமாணங்களை கைக்கொண்டிருந்து தேவனை விட்டு விலகியிருக் கும்போது; தேவனுடைய கற்கனைகளை பின்பற்றுவதற்கு ஜனங்கள் இல்லாமல் பாழாய் கிடக்கிற நாளெல்லாம், ஓய்வு நாட்களின் ஆசீர் வாதங்களும் அனுபவிப்பார் இல்லாமல் இரம்மியமாய் ஓய்ந்திருக்கும்.
 
28. Lev 26:35 நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாத படியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும். 
 
நீங்கள் உங்களுடைய சத்துருக்களாகிய புறஜாதிகளின் பிரமாணங்களை கைக்கொண்டிருந்து தேவனை விட்டு விலகி யிருந்து, ஓய்வு நாட்களின் பிரமாணங்களை பின்பற்றாமல் பாழாய் கிடக்கிற நாளெல்லாம் ஓய்வு நாட்களின் ஆசீர்வாதங்களும் ஓய்ந் திருக்கும்.
 
29. Lev 26:36 உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
 
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்:-
 
உங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளின் பிரமாணத்தை பின் பற்றி தேவனை விட்டு விலகியிருக்கும்போது உங்களில் யாராவது தேவனுடைய வார்த்தையின்படி ஆவிக்குரிய காரியங்களில் ஜீவ னோடிருந்தால் அவர்களுடைய இருதயத்தை மனத்தளர்ச்சிய டையும்படி தேவன் கட்டளையிடுவார்.
 
அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்:-
 
ஏதாவது வார்த்தைகளின் சத்தத்தை அவர்கள் கேட்கும் போது, அது தங்களுக்கு விரோதமாக பேசப்படும் வார்த்தை என்று பயந்து ஓடுவார்கள்.
 
அவர்கள் பட்டயத்திற்குத்தப்பி ஓடுகிறது போல ஓடி, துரத்துவார்கள் இல்லாமல் விழுவார்கள்:-
 
தங்களுக்கு விரோதமாக பேசப்படும் வார்த்தைகளை அவர்கள் செயல்படுத்துவார்கள் என்று பயந்து, பட்டயத்திற்கு தப்பி ஓடுகிறது போல ஓடி; யாரும் அவர்களை துரத்தாமல் அவர்களாகவே பயந்து ஓடி விழுவார்கள்.
 
30. Lev 26:37 துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவது போல், ஒருவர் மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்கு முன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.
 
மனுஷர்கள் யாரும் துரத்தாமல், மற்றவர்கள் பேசும் வார்த்தை களுக்கு பயந்து ஒருவன் பயப்படுவதைக் காட்டிலும் தன்னுடன் இருப்பவன் அதிகமாக பயப்பட்டு மற்றவர்களையும் கலங்கச் செய் வான்; இப்படி ஒருவர் மேல் ஒருவர் இடறிவிழுவார்கள் உங்கள் சத்துருக்களாகிய ஜாதிகள் கேட்கும் கேள்விகளுக்கு தேவனுடைய வார்த்தையின்படி மறுமொழி கொடுக்கும் அறிவு உங்களுக்கு இருக்காது. 
 
31. Lev 26:38 புற ஜாதிகளுக்குள்ளே அழிந்து போவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிகும். 
 
புற ஜாதிகளின் முறைகளை நீங்கள் பின்பற்றும்போது தேவ ஜனங்கள் என்ற நல்ல நாமம் உங்களை விட்டு நீங்கிப் போகும் நீங்கள் ஜாதிகளின் முறைகளைப் பின்பற்றும்போது தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்களுக்குள்ளே பெருகிக் கொண்டே இருக்கும். 
 
32. Lev 26:39 உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங் களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினி மித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.
 
தேவனுடைய நாமத்தைப் பெற்ற ஜனங்கள் புற ஜாதிகளின் தேசங்களிலே குடியிருக்கும்போது அவர்களில் யாரவது தேவனுடைய வார்த்தையின்படி ஆவியில் பிழைப்பவர்கள் இருந்தால்; அவர்கள் தங்கள் செய்த அக்கிரமத்தினிமித்தம் தங்கள் பிதாக்கள் செய்த அக் கிரமத்தினிமித்தம் தங்கள் சத்துருக்களாகிய புறஜாதிகளின் தேசத் திற்கு வந்து சேர்ந்ததை நினைத்து தங்கள் இருதயங்களில் சந்தோஷ மில்லாமல் சோர்ந்துபோவார்கள்.
 
பாபிலோன் மாநகர வேசியின் முதல் புலம்பல் பாட்டின் புலம்பல்கள் சந்தோஷப்பட்டாக மாறுவதற்கு பாவ மன்னிப்பின் பாட்டின் பல்லவி.
 
33. Lev 26:40 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம் பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி, Lev_26:40-46,
 
முதலாவது அவர்கள் தேவனுக்கு விரோதமாக துரோகம் பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிட வேண்டும்.
 
34. Lev 26:41 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்த படியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டு போய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், 
 
இரண்டாவது, அவர்கள் தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நடந்தபடியினால், தேவனும் அவர்களுக்கு விரோதமாக எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களாகிய புற ஜாதியாரின் ஆசரிப்பு முறைகளுக்கு தேவன் அவர்களை ஒப்புக்கொடுத்ததை அறிக்கையிட வேண்டும். 
 
மூன்றாவது மனத்திரும்பாத தங்கள் இருதயத்தை தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்திற்கு கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒப்புக்கொண்டு அவைகளை அறிக்கையிட வேண்டும்.
 
சரணங்கள்
 
35. Lev 26:42 நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கை யையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
 
அப்பொழுது நான் யாக்கோபோடே பண்ணின என் உன்படிக் கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களையும் நினைப்பேன்.
 
36. Lev 26:43 தேசம் அவர்களாலே விடப்பட்டு பாழாய்க் கிடக்கிறதினாலே தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அனுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக் கொள்ளுவார்கள்.
 
வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்கள் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே அவைகள் தன் ஓய்வு நாட் களை இரம்மியமாய் அனுபவித்துக்கொண்டிருக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்ட ளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிர மத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.
 
37. Lev 26:44 அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத் திலிருந்தாலும், நான் அவர்களை நிர் மூலமாகத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாகத் தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட் டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.
 
அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாகத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண் ணின என் உடன்படிக்கையை அபத்தமாகத்தக்கதாகவும், நான் அவர் களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனா கிய கர்த்தர்.
 
38. Lev 26:45 அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்து தேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவு கூறுவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
 
அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதி களின் கண்களுக்கு முன்பாக அவர்களை பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர் களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவு கூருவேன், நான் கர்த்ததர் என்று சொல் என்றார்.
 
39. Lev 26:46 கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்நதியாருக்கும் நடுவே இருக்கும் படி மோசேயைக் கொண்டு, சீனாய் மலையின் மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்ளும் இவைகளே. 
 
Eze 20:19-20 உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின் படியே செய்து, என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன். 
 
அத்தியாயம் ஐந்து
 
5-3 தேவனுடைய முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்க்கனுக்கு வரும் இரண்டாவது உடன்படிக்கையின் சாபங்களின் பாட்டு / பாபிலோன் மாநகர வேசியின் இரண்டாவது புலம்பலின் பாட்டு 
 
மோவாப் தேசத்தில் மோசேயின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையினால் பெற்றுக்கொள்ளும் வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களின் பாட்டு, எப்பொழுது ஒருவனால் தேவனுடைய உடன்படிக்கை மீறி முறிக்கப்பட்டாலும் அந்த உடன்படிக்கை துரோகிக்கு தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றுக் கொண்ட வாக்குதத்த தேசத்தின் ஆசீர்வாதங்கள், எல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவில் சாபங்களினால் வரும் புலம்பல் பாட்டாக மாறுகிறது. 
 
பல்லவி
 
1. Deu 28:15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவ னாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும், கட்ட ளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற் குச் செவிகொடாதே போவாயாகில், 
 
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்த ருடைய எல்லாக் கற்பனைகளின் படியும் கட்டளைகளின் படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவி கொடாதே போவாயாகில், 
 
அனு பல்லவி
 
2. இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். 
 
இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
 
3. Deu 28:16 நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்
 
உன் விசுவாச உடன்படிக்கையின் எல்லைகளுக்குள்ளேயும் வெளியே உள்ள எல்லா காரியங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய் 
 
4. Deu 28:17 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டி யும் சபிக்கப்பட்டிருக்கும்.
 
உன் ஞாபகத்தில் சேர்த்து வைத்திருக்கிற ஞானம் ஞாபக மறதியினாலும் உன் மனசாட்சியில் நன்மை தீமைகளை பகுத்தறியும் சக்தி பெலவீனமடைந்தும் சபிக்கப்பட்டிருக்கும்.
 
5. Deu 28:18 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், சபிக்கப்பட்டிருக்கும்.
 
உன் ஆவி, ஆத்துமாவில் சிந்தித்து தியானித்து பகுத்தறிவு டன் வார்த்தைகளை பேசும் குணாதிசயங்களும் உன் விசுவாசக் கிரி யைகளும் தேவானல் சபிக்கப்பட்டிருக்கும்.
 
6. Deu 28:19 உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
 
உன் வேலையாட்களின் எண்ணிக்கையும் குறைந்து சபிக்கப் பட்டிருக்கும். உன் மூலம் பல குழுக்களாக பிரிந்து செயல்படு கிறவைகளும் குறைந்து சபிக்கப்ட்டிருக்கும். 
 
7. Deu 28:19 நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
 
தேவ பெலன் இல்லாதபடியால் நீ உன் காரியத்தை ஜெயமாக முடிக்க இயலாமல் தோல்வியடைந்து திரும்பிக் கொண்டிருப்பாய். நீ உன் காரியத்தை தெளிவாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைக்காமல் அதை நடைமுறைப்படுத்த துவங்கும் போதும் சபிக்கப் பட்டிருப்பாய். 
 
8. Deu 28:20 என்னை விட்டு விலகி நீ செய்து வருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியும் மட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
 
9. Deu 28:21 நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப்பிடித்து கொள்ளப் பண்ணுவார்.
 
நீ சுதந்தரித்துக்கொண்ட வாக்குத்தத்த விசுவாச உடன்படிக் கையின் ஆசீர்வாதங்களை நீர்மூலமாக்கும் வரைக்கும் பெருமை, வாக்குவாதம், தர்க்கங்கள், ஆகியவைகளை; கொள்ளை நோயைப் போல உன்னை பிடித்து அவைகள் உன்னை ஆளுகை செய்யும்படி தேவன் அவைகளுக்கு ஒப்புக்கொடுப்பார்.
 
10. Deu 28:22 கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சி யினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின் தொடரும்.
 
நீ அழியும் மட்டும் / மனத்திரும்பும் வரை / மரணம் வரை கீழே குறிப்பிடும் தேவனுடைய சாபங்கள் உன்னைப் பின் தொடரும்.
 
1. ஈளை - மலையாள வார்த்தை:- சோம்பல், வறுமை, உதாசினம், அலட்சியம், கஞ்சத்தனம், காலத்தை வீணாக்குதல், 
 
2. காய்ச்சல் / நோய் / வியாதி :- வாக்குவாதம், பெருமை, தர்க்கம் பண்ணுதல்.
 
3. உஷ்ணம் :- எரிச்சல் / பொறாமை 
 
4. எரிபந்தம் :- கோபம், கடுங்கோபம்
 
5. வறட்சி :- அறியாமையினால் அறிவில் வறட்சி
 
6. கருக்காய்:- கோபத்தில் பட்டயக்கருக்கை போல உள்ள வார்த்தைகளை பதறி / சிதறி பேசுதல்
 
7. விஷப்பனி :- தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படி யாமல் இருக்கும்போது, ஒருவன் சேர்த்து வைத்திருக்கிற ஞானத்தில், வெள்ளியின் மேல் படரும் களிம்பு போல; ஞாபக மறதி பனி போல படர்ந்து தன்னிடம் உள்ள ஞானத்தை உருவழித்து, சீரழியச் செய் கிறது.
 
11. Deu 28:23 உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண் கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
 
உன் அறிவின் சிந்தனைகளை பகுத்தறியாதபடி அவைகள் உனக்கு வெங்கலம் போல மிக கடினமாக இருக்கும் உன் கிரியை களை நடை முறைப்படுத்தாதபடி உன்னுடைய செயல் திறமைகள் இரும்பைப்போல உனக்கு கடினமுள்ளதாக இருக்கும். 
 
12. Deu 28:24 உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியும் மட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கி வரும்.
 
உன் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் மற்றவர்களை சபிக்கிறதும், தூஷிக்கிறதுமான அவதூறான வார்த்தைகளை மழையாக பொழிந்து, அதனால் உன்னையே நீ சபித்தும், தூஷித்தும் கொண்டிருப்பாய், நீ முற்றிலும் அழிந்து நாசமாகும் வரை / மனத்திரும்பும் வரை அப்படியே உன்னுடைய அறிவு சிந்தனைகளிலிருந்து புறப்பட்டு உன் வாய் வழியாக வந்து கொண்டே இருக்கும்.
 
13. Deu 28:25 உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப் போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டு போவாய். . Num_24:2-9, 1Sa_8:5-8, 1Sa_8:19-22, Deu_28:36, 
 
உன் சத்துருக்களாகிய ஜாதிகளின் கேள்விகளுக்கு மறுபடி கொடுக்க முடியாமல் நீ அவர்களுக்கு பயந்து ஓடுவாய், நீ ஒரு வார்த்தையைக் கொண்டு ஜாதிகளை குற்றப்படுத்த ஆயத்த மாகும்போது; அவர்கள் உன்னை ஏழு வார்த்தைகளைக்கொண்டு குற்றப்படுத்தும்போது அவர்களுக்கு பயந்து சிதறி ஓடுவாய். நீ பூமியிலுள்ள எல்லா ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளைப் பின்பற்றி அவர்களுக்குள்ளே சிதறி உன்னுடைய அடையாளத்தை இழந்து போவாய்.
 
14. Deu 28:26 உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கு இரையாகும்; அவைகளை விரட்டு வாரில்லாதிருப்பார்கள்.
 
உன் தோல்விகளை மனுஷ ஞானத்தை பெற்றவர்களும் பாவிகளான துன்மார்க்கர்களும் விமர்சனம் செய்து பரிகாசம் செய்து அவமானப்படுத்துவார்கள். இப்படி ஏன் ? அவர்களை பரிகாசம் பண்ணுகிறார்கள் என்று யாரும் அவர்களை தடுக்கமாட்டார்கள்.
 
15. Deu 28:27 நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூல வியாதியாதியினாலும், சொறி யினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
 
நீ குணமடையாதபடி கீழே குறிப்பிட்ட பாவ மனிதனின் வியாதிகளைக் கொண்டு கர்த்தர் உன்னை தண்டிப்பார்.
 
1. எகிப்தின் எரிபந்தமான பருங்கள்:- பாவ மனிதனின் கோப மான வார்த்தைகள்
 
2. மூல வியாதி :- காரியத்தின் முடிவில் பிரச்சனைகள்
 
3. சொறி:- நாள் பட்ட பாவங்களை அடிக்கடி தொடருதல்
 
4. சிரங்கு - தீராத ஆசையினால் பழைய பாவங்களை மீண்டும் தொடருதல்
 
16. Deu 28:28 கர்த்தர் உன்னைப் புத்தி மயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
 
நீ குணமடையாதபடி கீழே குறிப்பிட்ட பாவ மனிதனின் வியாதிகளைக் கொண்டு கர்த்தர் உன்னை தண்டிப்பார்.
 
1. புத்திமயக்கம் :- பிடிவாதம் / பைத்தியம் / அறிவினால் பெருமை
 
2. குருட்டாட்டம்:- குறைவான அறிவு 
 
3. மனத்திகைப்பு :- முடிவு எடுப்பதில் திண்டாட்டம் / நன்மை தீமைகளை பகுத்தறிவதில் குழப்பம்.
 
17. Deu 28:29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரி கிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக் கொண்டு திரிவாய்;
 
பார்வையற்றவன் ஒரு எளிமையான காரியத்தை செய்வதற்கு அந்தக்காரத்திலே தடவித்திரிகிறதுபோல கண்பார்வையிருந்தும் பட் டப்பகலிலே நன்மை, தீமைகளை பகுத்தறிய முடியாத அறியாமை யினால் ஒரு காரியத்தை எப்படி செய்து முடிக்கலாம் என்று குருட னைப்போல தொட்டு, தடவிக்கொண்டிருப்பாய்.
 
18. உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதே போம்;
 
நீ திட்டமிடும் ஒரு காரியமும் உன்னால் முழுமையாக நடை முறைப்படுத்த முடியாது.
 
19. உதவி செய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப் படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.
 
உனக்கு ஒருவரும் உதவி செய்யாமல் நீ மற்றவர்களால் எப் பொழுதும் ஒடுக்கப்பட்டும், கொள்ளையிடப்பட்டும் இருப்பாய்.
 
20. Deu 28:30 பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; 
 
நீ உடன்படிக்கை பண்ணுவாய் ஆனால் அதன் பிரதிபலனை வேறொருவன் அனுபவிப்பான்.
 
21. வீட்டைக்கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின்பலனை அனுபவிக்க மாட்டாய். 
 
உனக்கு வீடு / தேவனுடைய ஆலயத்தை கட்டுவாய் ஆனால் அதை நீ அனுபவிக்க முடியாது. நீ ஊழியத்தை ஸ்தாபிப்பாய் ஆனால் அதன் ஆசீர்வாதங்களை நீ அனுபவிக்க முடியாது.
 
22. Deu 28:31 உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை;
 
உன் வேலையாட்களின் ஆசீர்வாதங்கள் உனக்கு முன்பாக பங்கிடப்படும், அதன் பலனை ஒன்றும் நீ அனுபவிக்க முடியாது.
 
23. உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு; உனக்குத்திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும், விடுவிடுப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
 
உன் வேலையாட்களை மற்றவர்கள் கூட்டிக்கொண்டு போவார்கள் அவர்கள் மீண்டும் திரும்ப உன்னிடம் வேலைக்கு வர மாட்டார்கள் உன்னைப் பின்பற்றி வந்தவர்கள், உன் சத்துருக்களை பின்பற்றிச் செல்வார்கள் உன்னுடையவர்களை திரும்ப உனக்கு மீட்டுக்கொடுப்பவர்கள் யாரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
 
24. Deu 28:32 உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெல னில்லாதிருக்கும்.
 
உன் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவர்களும் உனக்கு தகுந்த ஆலோசனையை கொடுப்பவர்களும் உன்னை விட்டு பிரிந்து சென்று மற்றவர்களிடம் ஐக்கியமாக இருப்பார்கள்; அவர்கள் எப் பொழுது உன்னிடம் திரும்ப வருவார்கள் என்று ஒவ்வொரு நாளும் அவர்களை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாய், அவர்களை திரும்ப மீட்டுக்கொள்ளுவதற்கான பெலன் உனக்கு இல்லா திருக்கும்.
 
25. Deu 28:33 உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப்பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஓடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
 
உன் வாக்குத்தத்ததின் ஆசீர்வாதங்களை நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள் இன்நாள் வரை நீ கஷ்டப்பட்டு சேகரித்த எல்லா ஆசீர்வாதங்களையும் நீ அறியாத ஜனங்கள் அனுபவிப் பார்கள் நீ சகல நாளும் குறைவுபட்டும் மற்றவர்களால் குற்றம் சுமத் தப்பட்டும் இருப்பாய்.
 
26. Deu 28:34 உன் கண்கள் காணும் காரியங்களினலே மதி மயங்கிப் போவாய். 
 
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று உனக்கு வெளிப்பட்ட தரிசனங்களினாலே முழு பிடிவாதமாக நம்பிக்கை கொண்டிருந்து அவைகளினாலே மதிமயங்கிப் போவாய்.
 
27. Deu 28:35 உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச் சந்தலை மட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால் களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார். 
 
உன் விசுவாச உடன்படிக்கையின் ஆரம்பம் முதல் உன் விசுவாச கிரியைகளின் முடிவு வரை உள்ள எல்லா காரியங்களிலும் உள்ள உன்னுடைய குறைகளை உணர்ந்து தேவனிடம் பணிந்து, குனிந்து மனத்தாழ்மையாக இருந்து மனந்திரும்பாதபடிக்கு உனக்கு பெருமையையும் கோபத்தையும் தேவன் கட்டளையிடுவார்.
 
28. Deu 28:36 கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற் படுத்திக் கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப்போகப் பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
 
தேவன் எங்களோடிருக்கிறார் என்ற பெருமை கொண்ட நீங்களும் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட உங்கள் இராஜாவும் / தலை வனும் உங்கள் பிதாக்கள் அறியாத புற ஜாதிகளிடத்திற்கு போக பன்னுவார் அங்கே உன் எளிமையான நற்கிரியைகளை செய்து அவைகளின் மூலம் புற ஜாதிகளிடம் நன் மதிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாய் / புற ஜாதிகளின் அன்பையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளுவதற்காக அவர்கள் விரும்புகிற சில காரியங்களை தங்களுக்கு கடினமாக இருந்தாலும் அவைகளையும் செய்து அவர் களிடம் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாய்.
 
29. Deu 28:37 கர்த்தர் உன்னைக் கொண்டு போய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
 
கர்த்தர் உன்னைக் கொண்டு போய் விடும் எல்லா ஜனங் களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
 
30. Deu 28:38 மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டு போவாய் கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப்பட்சித்து போடும்.
 
திரளான வார்த்தைகளை உன் ஊழியத்தில் பயன்படுத்து வாய் ஆனால் சிறிதளவான ஆசீர்வாதங்களை அறுப்பாய் வெட்டுக் கிளியின் இரண்டு இறகுகள் போல உன் தீமையிலிருந்து துள்ளி வரும் உபயோகமில்லாத வார்த்தைகள் உன் ஊழியத்தில் விளைந்த நன்மைகளை வெட்டி பல துண்டுகளாக மாற்றி சேதப்படுத்திவிடும்.
 
31. Deu 28:39 திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடு வாய், ஆனாலும் நீ திராட்சரம் குடிப்பதும் இல்லை, திராட்சப் பழங் களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத்தின்றுபோடும்.
 
நீ அநேகருக்கு தேவனுடைய ஆலோசனைகளை அறிவிப் பாய், ஆனாலும் நீ அந்த தேவனுடைய ஆலோசனைகளை தள்ளி விடுவாய். உனக்கு தேவன் கொடுத்த ஆலோசனைகளை அலட்சியப் படுத்தி அவைகளை மறந்து போவாய்.
 
32. Deu 28:40 ஒலிவ மரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்து போம்.
 
நீ அநேகருக்கு அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி அவைகளை சீர்படுத்துவாய், ஆனால் உன் தவறுகளை சீர்த் திருத்தும் படி தேவனுடைய எச்சரிப்பின் செய்தியை தள்ளி விடுவாய். உனக்கு தேவன் கொடுத்த எச்சரிப்பின் செய்தியை நீ அலட்சியப் படுத்தி அவைகளை மறந்து போவாய்.
 
33. Deu 28:41 நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறு வாய், ஆனாலும் அவர்கள் உன்னோடே கூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். 
 
உனக்கு நம்பிக்கையானவர்களும், உனக்கு நல்ல ஆலோசனைகளை சொல்லுக்கிறவர்களும் உன்னுடன் இருப்பார்கள், ஆனால் அவர்கள் உன்னை நம்பமாட்டார்கள் அவர்கள் மற்றவர்களை பின்பற்றிச் செல்வார்கள்.
 
34. Deu 28:42 உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப் போடும்.
 
உனக்கு கிடைத்த அறிவையும், ஆசீர்வாதங்களையும், உன்னிலிருந்து புறப்படும் தீமைகளும், அறியாமையும் உன்னை ஒழுங்கின்மையும் வெறுமையுமாக மாற்றிவிடும்.
 
35. Deu 28:43 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப் பட்டுப்போவாய்.
 
உன் நடுவிலிருக்கிற அந்நியன் / இடம், மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகிய இவைகளிலிருந்து மாறுபட்டவன், உன்னை விட அறிவிலும், செயலிலும் மேற்பட்டு மேலும் மேலும் உயர்ந்திருப்பான்; நீ அவனை விட அறிவிலும் செயலிலும் மிகவும் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பாய்.
 
36. Deu 28:44 அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
 
அவன் உன்னுடைய ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படாது; ஆனால் நீ அவனுடைய ஆலோச னையை கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவாய், அவன் உனக்கு தலைவனாக இருப்பான் நீ அவனுடைய சொற்படி நடக்கும் வேலைக்காரனாக இருப்பாய்.
 
37. Deu 28:45 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும் படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து, 
 
38. Deu 28:46 உன்னிலும் உன் சந்நதியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
 
39. Deu 28:47 சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மன மகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவி யாமற்போனதினிமித்தம் 
 
40. Deu 28:48 சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; 
 
சகலமும் குறைவுபட்டு, ஆவி, ஆத்துமாவின் ஆகாரமாகிய ஜீவ அப்பம், ஜீவத்தண்ணீர் இல்லாமல் ஆவி, ஆத்துமாவில் பட்டினி யோடும் தாகத்தோடும் நீதியின் கிரியைகளின் வஸ்திரம் இல்லாமல் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் புறஜாதி களைச் பின்பற்றுவாய்.
 
41. அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத் தடியை உன் கழுத்தின் மேல் போடுவார்கள்.
 
நீ பூமியிலுள்ள எல்லா ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளைப் பின்பற்றி அவர்களுக்குள்ளே சிதறி உன்னுடைய அடையாளத்தை இழுந்துபோகும் வரைக்கும், உன்னால் முடியாத வேலைகளையும் உன் மேல் சுமத்துவார்கள்.
 
42. Deu 28:49 கிழவன் என்று முகம் பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடியமுகமுள்ளதும்,
 
43. Deu 28:50 உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறது மான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்தி லிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப் பண்ணு வார்.
 
நீங்கள் பெற்றுக்கொண்ட தேவ தரிசனங்களினால் ஆவிக் குரிய நிலையில் நீங்கள் பேசுகிற பாஷையை அறியாத ஜாதியை வெகுதூரத்திலிருந்து பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன் மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார். அவர்கள் தேவ வார்த்தைகளின் படியுள்ள ஆசரிப்பு முறைகளின் கலாச்சார பாஷையை தெளிவாக பேச அறிந்தவர்கள்.
 
44. Deu 28:51 நீ அழியும் மட்டும் அந்த ஜாதியான் உன் மிருக ஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப் பான்;
 
1. உன் மிருக ஜீவன்களின் பலன்கள் :- தேவனுடைய நாமத்திற்காக இந்நாள் வரை சரீர பிராகாரமாக மேற்கொண்ட முயற்சிகள்.
 
2. உன் நிலத்தின் கனிகள்:- உன் ஊழிய அழைப்பின் படி கிடைத்த ஆசீர்வாதங்கள்.
 
45. அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானித் திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்க மாட்டான்.
 
1. உன் தானியம் :- உன் வெளிப்பாடுகளின் இரகசியங்கள்
 
2. உன் திரட்சரசம் :- உன் வெளிப்பாடுகளின் ஆலோசனை கள்
 
3. உன் எண்ணெய் :- உன் வெளிப்பாடுகளின் எச்சரிப்பின் செய்தி
 
4. உன் ஆடு :- உன் விசுவாசிகளின் ஆலோசனைகள் 
 
5. உன் மாடு:- உன் மூப்பர்களின் ஆலோசனைகள் ஆகிய இவைகளின் ஆசீர்வாதங்களை வெறுமையாக்கி உன்னுடைய அடையாளத்தை அழித்துப்போடுவார்கள், உன்னுடைய ஆசீர்வாதம் என்று சொல்லப்படுதற்கு இனி உன்னிடம் ஒன்றும் இருக்காது.
 
46. Deu 28:52 உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன்வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்;
 
உனக்கு கிடைத்த விசேஷ வெளிப்பாடுகளின் மூலம் நல்ல சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சி முறையின் இரகசியங்கள், உன் மூலம் உலகெங்கும் உடனே நடை முறைக்கு வரும் என்று நம்புகிற உன் நம்பிக்கை உன்னை விட்டு நீங்கும் வரை; உனக்கு தெரியாத பாஷையைப் பேசும் அந்த அந்நி யன் தேவனுடைய பிரமாணங்களைக் கொண்டு உன்னுடைய பிரமா ணங்களை முற்றுகை போடுவான்.
 
47. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள் தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.
 
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விசேஷ வெளிப்பாடு களின் மூலம் வெளிப்படுத்தின நல்ல சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உன்னுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சி முறையின் இரகசிய ஆலோசனைகள் விழுந்துபோகும் வரை தேவனுடைய இராஜ்ஜியத் தைக்குறித்தும் அவருடைய நீதியைக் குறித்தும் சொல்லப்பட்ட, கிறிஸ்துன் மூல உபதேசங்களின் பிரமாணங்களைக் கொண்டு, உன்னுடைய பிரமாணங்களை முற்றுகை போடுவான்.
 
48. Deu 28:53 உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப் போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திர புத்திரிகளின் மாம் சத்தைத் தின்பாய். 
 
உனக்கு தெரியாத பாஷையைப் பேசும் உன் சத்துருக்களான அந்நியர்கள் கிறிஸ்துவின் மூல உபதேசங்களின் பிரமாணாங்களைக் கொண்டு, உன்னுடைய பிரமாணங்களை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் ஆவிக்குரிய பிள்ளைகளான விசுவாசி கள், மூப்பர்கள் ஆகியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப் பாய்.
 
49. Deu 28:54 உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன்பிள்ளைகளின் மாம்சத்திலே, 
 
50. Deu 28:55 தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாத படி அவர்கள் மேல் வன் கண்ணாயிருப்பான்.
 
உன் சத்துருக்கான அந்நியர்கள், தேவனுடைய பிரமாணங் களைக் கொண்டு உன்னுடைய பிரமாணங்களை முற்றுகையிட்டு நெருக்கும் காலத்தில், உங்கள் நடுவே விசேஷ வெளிப்பாட்டை பெற்று எல்லாவித இரகசியங்களையும் அறிந்தவன் என்ற பெயரோ டும், புகழோடும் வாழ்ந்த உங்கள் தலைவன்; 
 
சகலத்தையும் இழந்து தன் இல்லாமையிலே தன்னுடைய ஆவிக்குரிய பிள்கைளின் ஆலோ சனைகளை இரகசியமாக கேட்டு, அவைகளால் ஆவியில் பிழைக்கும் போது தன்னுடன் இருப்பவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக் கையை நிலைநிறுத்துவதற்காக, அதை மற்றவர்கள் அறிந்து கொள் ளாதபடி தன்னை பின்பற்றுகிற ஒருவராவது கொஞ்சமாகிலும் அறிந்து கொள்ளாதபடி அவர்கள் மேல் வன்கண்ணாயிருப்பான்.
 
51. Deu 28:56 உன்னிடத்தில் சுக செல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின் மேல் வைக்க அஞ்சின செருக்கும் செல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக் கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளை களினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன் மேலும் தன் குமாரன் மேலும் தன் குமாரத்தியின் மேலும் வன்கண்ணாயிருப்பாள்;
 
உங்களுக்குள்ளே விசேஷ வெளிப்பாட்டின் இரகசியங்களை அறிந்தவர்கள் என்ற பெயரோடும் புகழோடும் சுகபோகமாக வாழ்கிற சபையானது, ஆவியில் பிள்ளைகளை பெற்றேடுப்பதற்காக சபையின் மூலம் நடந்த காரியங்ககளை, சபை பெற்றெடுத்த ஆவிக்குரிய பிள்ளைகள், சபையுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நிலைநிறுத்துவதாக; சபை மூப்பர்கள் மற்றும் விசுவாசிகள் யாராவது தன்னுடைய இரகசியங்களை, கொஞ்சமாகிலும் அறிந்து கொள்ளாதபடி சபையானது அவர்கள்மேல் வண்கண்ணாயிருக்கும்.
 
52. Deu 28:57 உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடு வதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.
 
உனக்கு தெரியாத பாஷையைப் பேசும் உன் சத்துருக்களான அந்நியர்கள் கிறிஸ்துவின் மூல உபதேசங்களின் பிரமாணங்களைக் கொண்டு, உன்னுடைய பிரமாணங்களை முற்றிகைப்போட்டு நெருங்குக்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், உன் தேவனா கிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் ஆவிக் குரிய பிள்ளைகளான விசுவாசிகள், மூப்பர்கள் ஆகியவர்களின் ஆலோசனைகளைக் இரகசியமாய்க் கேட்டு நடப்பாய்.
 
53. Deu 28:58 உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமைiயும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த் தைகளின் படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,
 
54. Deu 28:59 கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து, 
 
நீ குணமடையாதபடி கீழே குறிப்பிட்ட பாவ மனிதனின் வியாதிகளைக் கொண்டு கர்த்தர் உன்னை தண்டிப்பார் நீ நிர் மூலமாகும் வரைக்கும் பெருமை, வாக்குவாதம், தர்க்கங்கள் ஆகியவைகள்; கொள்ளை நோயைப்போல உன்னை பிடித்து அவைகள் உன்னை ஆளுகை செய்யும்படி தேவன் அவைகளுக்கு ஒப்புக்கொடுப்பார். 
 
நீ அழியும்மட்டும் / மனத்திரும்பும் வரை / மரணம் வரை கீழே குறிப்பிடும் தேவனுடைய சாபங்கள் உன்னைப் பின் தொடரும்.
 
1. ஈளை:- சோம்பல், வறுமை, உதாசினம், அலட்சியம் கஞ்சத்தனம் காலத்தை வீணாக்குதல், 
 
2. காய்ச்சல் / நோய் / வியாதி :- வாக்குவாதம், பெருமை, தர்க்கம், பண்ணுதல்.
 
3. உஷ்ணம் :- எரிச்சல் / பொறாமை
 
4. எரிபந்தம் :- கோபம், கடுங்கோபம்.
 
5. வறட்சி :- அறியாமையினால் அறிவில் வறட்சி 
 
6. கருக்காய் :- கோபத்தில் பட்டயக்கருக்கை போல உள்ள வார்த்தைகளை பதறி / சிதறி பேசுதல்.
 
7. விஷப்பனி :- தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படி யாமல் இருக்கும்போது ஒருவன் சேர்த்து வைத்திருக்கிற ஞானத்தில், வெள்ளியின்மேல் படரும் களிம்பு போல, ஞாபகமறதி பனி போல படர்ந்து தன்னிடம் உள்ள ஞானத்தை உருவழித்து, சீரழியச் செய்கிறது. 
 
55. Deu 28:60 நீ கண்டு பயந்த எகிப்தின் வியாதிக ளெல்லாம் உன்மேல் வருவிப்பார், அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும். 
 
நீ கண்டு பயந்த பாவ மனிதனின் வியாதிகளெல்லாம் உன் மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக் கொள்ளும்.
 
1. மூல வியாதி :- காரியத்தின் முடிவிலே பிரச்சனைகள்
 
2. சொறி :- நாள் பட்ட பாவங்களை அடிக்கடி தொடருதல்
 
3. சிரங்கு :- தீராத ஆசையினால் பழைய பாவங்களை மீண்டும் தொடருதல்.
 
4. புத்திமயக்கம் :- பிடிவாதம் / பைத்தியம் அறிவினால் பெருமை.
 
5. குருட்டாட்டம் :- அறிhயமை / குறைவான அறிவு
 
6. மனத்திகைப்பு :- முடிவு எடுப்பதில் திண்டாட்டம் / நன்மை தீமைகளை பகுத்தறிவதில் குழப்பம் ஆகியவைகளைக் கொண்டு கர்த்தர் உன்னை தண்டிப்பார்.
 
56. Deu 28:61 இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப்பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன் மேல் வரப்பண்ணுவார்.
 
57. Deu 28:62 திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப் போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப் போவீர்கள்.
 
திரளாக வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற் போனதினால், கொஞ்சம் ஜனமாக இருப்பீர்கள்.
 
58. Deu 28:63 கர்த்தர் உங்களுக்குள் நன்மை செய்யவும் உங்களைப் பெருகப் பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மிய மாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம் பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.
 
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெரு கப் பண்ணவும் எப்படி உங்கள் மேல் மன மகிழ்ச்சியாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை நிர்மூலம் பண்ணவும் மன மகிழ்ச்சியாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற ஆசீர்வாதங்களிலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.
 
59. Deu 28:64 கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங் களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
 
கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு திசை துவக்கி பூமியின் மறு திசை மட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
 
60. Deu 28:65 அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்கு தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்து போகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
 
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்து போகிற கண் களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
 
61. Deu 28:66 உன் ஜீவன் உனக்கு சந்தேகத்தில் ஊச லாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில் கொண்டிருப்பாய்.
 
நான் ஏன்? வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று வாழ்க்கை யில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் உன் ஜீவன் உனக்குச் சந்தேகத் தில் ஊசலாடும்; உன் ஜீவனைப் பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில் கொண்டிருப்பாய்.
 
62. Deu 28:67 நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலி னாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய். 
 
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், இரவு பகலாக தூக்கமில்லாமல் வேதனைப் பட்டு விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
 
63. Deu 28:68 இனிக்காணதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்ன வழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் கொண்டு போகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.
 
இனிமேல் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்ன வழியாய், கர்த்தர் உன்னைத் திரும்பவும் பாவத்தின் அடிமைத்தனத் திற்கு கொண்டு போகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களான புற ஜாதிகளுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப் படுவீர்கள். உங்களுக்கு யாரும் வேலை கொடுப்பவர்கள் இல்லாதிருப்பார்கள்.
 
அத்தியாயம் ஐந்து
 
5-4 தேவ முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கனுக்கு வரும் மூன்றாவது உடன்படிக்கையின் சாபங்களின் பாட்டு / பாபிலோன் மாநகர வேசியின் மூன்றாவது புலம்பல் பாட்டு
 
இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதனுடன் தேவன் செய்து கொண்ட ஒரு உடன்படிக்கை, ஒருவனால் மீறி முறிக்கப்பட்டால் அந்த உடன்படிக்கை துரோகிக்கு தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பெற்றக்கொண்ட ஆசீர்வாதங்களெல்லாம் தங்கள் ஆவி, ஆத்துமாவின் சாபங்களினால் வரும் ஆட்டுக்குட்டியானவரின் ஒரு புலம்பல் பாட்டாக மாறுகிறது.
 
தேவனைக் குறித்து விசாரித்துக் கேளாமல் தேடுகிறவர் களுக்கு நம்பிக்கையின் வாசலாகிய ஆகோரின் பள்ளத்தாக்கின் பாட்டு
 
Isa 65:10 நாடோறும் என்னைத் தேடி, என்னைக்குறித்து விhசரித்துக் கேளாதிருக்கிற என் ஜனத்துக்கு நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்து தேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினது போல் பாடுவாள்.
 
Hos 2:14 ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டு போய், அவளோடே பட்சமாய்ப் பேசி, 
 
Hos 2:15 அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்து தேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினது போல் பாடுவாள்.
 
Hos 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். 
 
Hos 2:17 பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற் போகும். 
 
Hos 2:18 அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கை பண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப்படுத்துக் கொண்டிருக்கப்பண்ணுவேன். 
 
Hos 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்.
 
Hos 2:20 உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்.
 
Hos 2:21 அக்காலத்தில் நான் மறுமொழி கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழி கொடுப் பேன், அவைகள் பூமிக்கு மறு மொழி கொடுக்கும்.
 
Hos 2:22 பூமி தானியத்துக்கும் திராட்சரத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரேலுக் கும் மறு மொழி கொடுக்கும். 
 
Hos 2:23 நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்த வர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.
 
பாட்டு :- ஆமென், அல்லேலூயா, 
 
பாடுகிறவர்கள் :- இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்த வான்கள்.
 
பாட்டின் பொருள்:- தேவனுடைய ஊழியக்காரரின் இரத்தத் திற்காக பாபிலோன் மாநகர வேசியினிடத்தில் பழிவாங்கினாரே அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். அப்படி ஆகக்கட வது நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
 
இளவயதின் நாட்களின் பாட்டு:-
 
நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப் பண்ணுவார் ஆமென், அல்லேலூயா, 
 
பாடுகிறவர்கள் :- இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்தவான்கள் 
 
பாட்டின் பொருள் :- பாபிலோன் மாநகர வேசி உங்களுக்குக் கலந்து கொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்து கொடுங்கள்.
 
Rev 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். சுநஎ 18:5 அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவு கூர்ந்தார்.
 
Rev 18:6 அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத் தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்கு கலந்து கொடுங்கள். 
 
பாட்டு :- அல்லேலூயா, 
 
பாடுகிறவர்கள் :- திரளான ஜனங்கள் (இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பரிசுத்தவான்கள் உள்பட)
 
பாட்டின் பொருள்:- சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார். நாம் சந்தோப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக்குட்டியான வருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries