தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 08


தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்

பொருளடக்கம் 7-8

அத்தியாயம் ஏழு             அத்தியாயம் எட்டு
 
7-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய ஆயத்தப்படுத்தும் ஊழியத்தை நிறைவேற்றுதல்
 
8-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுதல்
 
அத்தியாயம் ஏழு
 
7-0, 1,44,000. ஆண் பிள்ளைகள் இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய ஆயத்தப்படுத்தும் ஊழியத்தை நிறைவேற்றுதல்
 
தேவ முத்திரையை தங்கள் நெற்றியிலே தரித்துக்கொண்ட ஆண்பிள்ளைகள்: தேவ ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய் வதற்காக ஆயத்தமாக்கும்படி, ஞானார்த்தமாக சொல்லப்படும் எகிப்து என்றும், சோதோம் என்றும் அழைக்கப்படும் தேவ ஜனங்களுக்கு மத்தியில்; தேவனுடைய வார்ததையின் கோலால் நியாயத்தீர்ப்பை செலுத்தி தேவ கற்பனைகளின்படி ஆவியோடும் உண்மையோடும், கர்த்தருக்கு பரிசுத்தமாக ஆராதனை செய்யும்படி ஊழியம் செய் வார்கள். Rev_11:3-8, Isa_19:1-16, Isa_1:8-20, Jer_23:14, Exo_12:25-31, Joh_4:19-26, Act_24:14-16, Act_17:23-28, Phi_3:3, Heb_12:28, Rom_12:1, 
 
கர்த்தரை ஆராதிக்காமல் இருப்பவர்களுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு 
 
ஆண் பிள்ளைகள் தேவ ஜனங்களை கர்த்தருக்கு ஆரா தனை செய்வதற்காக ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பை நிறை வேற்றுவதற்கு விரோதமாக, கிரியைகளிலோ, சிந்தனைகளிலோ செயல்படுகிறவர்களுக்கு; மோசேயின் மூலம் எகிப்து தேசத்திலே அறி விக்கப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு கீழ்படியாதவர்களுக்கு நேரிட்ட வாதைகளும் சாபங்களும் முதலாவது ஆவி, ஆத்துமாவின் கிரியை களில் வெளிப்பட்டு, பின்பு சரீரத்தில் அதன் பின் விளைவுகள் வெளிப்படும். Act_7:38-44, Psa_78:42-53, Psa_78:54-72, Psa_105:23-37, Rev_11:3-8, Rev_9:1-11, 
 
1. இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொள்ளாத ஈனமான ஆசாரியர்கள் தற்போது ஜனங்களை கர்த்தரை ஆராதனை செய்வதற்காக ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பை நிறைவேற்றுவதற்காக நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் ஜாதி களின் முறைகளை கலந்த ஆராதனை முறைகள். . Mat_15:1-9, Mar_7:1-13, Isa_29:9-14, Isa_48:1-2, Isa_58:1-5, Eze_33:30-32, Isa_1:10-20, 
 
2. கன்று குட்டியை உண்டாக்கி ஆராதனை செய்தல் 2Ch_29:31, Job_41:16, Exo_32:1-8, Exo_32:17-24, Hos_13:1-6, 1Co_10:1-12, Hos_8:1-6, Act_7:38-44, 
 
3. பெரிய பலிபீடத்தை கட்டி கர்த்தரின் ஆராதனையை நினைவு கூருதல் Jos_22:21-29, Jos_22:9-20, Jos_4:20-24, Deu_27:1-13,
 
4. ஜாதிகளின் முறைகளை கலந்து ஆராதனை செய்தல் 2Ki_21:4, 2Ki_21:7, 2Ki_17:7-12, 2Ki_13:13-20, 2Ki_13:21-33, 2Ki_13:34-41, 
 
ஆண் பிள்ளைகள் கர்த்தருக்கு ஆராதனை செய்யும் ஊழிய அழைப்பை நிறைவேற்றுவதற்கு விரோதமாக செயல்படுகிறவர்களுக்கு வரும் வாதைகள்:-
 
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, வாக்குத்தத்த தேசத்திற்கு கடந்து சென்று ஆராதனை செய்வதற்காக மோசேயின் மூலம் அறிவிக்கப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போன எகிப்தியருக்கும், பார்வோனுக்கும் எழுத்தின்படி தேவனுடைய பத்து வாதைகளினால் அழிக்கப்பட்டது போல; தேவனுடைய வார்த்தையின் மூலம் வெளிப்பட்ட தேவ முத்திரையின் அடையாளங்களுக்கு கீழ்படிந்து தேவனை ஆராதனை செய்ய முன் வராதவர்களுக்கு, முதலாவது ஆவியின்படி அந்த பத்து வாதைகளினால் ஆவி, ஆத்துமாவின் கிரியைகளில் தண்டிக்கப்பட்டு, இரண்டாவது அவைகள் சரீரத்திலும் பிரதிபலிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். 
 
ஆண் பிள்ளைகள் கர்த்தருக்கு ஆராதனை செய்யும் ஊழிய அழைப்பை நிறைவேற்றுவதற்கு விரோதமாக செயல்படுகிறவர் களுக்கு வரும் எகிப்தின் பத்து வாதைகள். (Exo_7:1-5). 
 
1. இரத்தம் (Exo_7:15-25)
 
2. தவளைகள் (Exo_8:1-14)
 
3. பேன்கள் (Exo_8:16-19)
 
4. வண்டுகள் / குழவிகள் (Exo_8:20-24)
 
5. மகாகொடிதான கொள்ளைநோய் (Exo_9:1-7)
 
6. எரிபந்தமான கொப்பளங்கள்(Exo_9:8-14)
 
7. கல்மழை (Exo_9:13-15)
 
8. வெட்டுக்கிளிகள் (Exo_10:13-15)
 
9. காரிருள் (Exo_10:21-23)
 
10. தலைச்சன் பிள்ளை சங்காரம் (Exo_12:21-29). 
 
தேவனுடைய ஜனங்களை பாவத்தின் அடிமைத்தனத்தி லிருந்து தேவன் தம்முடைய வல்லமையுள்ள கரத்தால் பிரித் தெடுத்து, தமக்கு ஆராதனை செய்யும்படி தெரிந்துகொள்ளுவதற் காக எகிப்திலே நடந்த பத்து வாதைகளில் ஒன்பது வாதைகளை மோசேயின் மூலம் தேவன் நடப்பித்தார்; ஆனால் பத்தாவது வாதையான தலைச்சன் பிள்ளை சங்காரத்தை தேவனே நிறை வேற்றினார்.
 
பாவம், மரணம் ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்து தேவ ஜனங்களை விடுதலையாக்கும்படியாக தேவனே தம்முடைய குமரனை, பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தை போக்கும் பலி யாகவும், அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினிக்குள்ளாக தீர்த் தார்; இப்படி இயேசு கிறிஸ்துவின் மூலம் தீமையை அல்லது பாவத்தை நன்மையினால் ஜெயங்கொள்ளும் தத்துவ செயல் முறையை தேவன் நமக்கு வெளிபடுத்திக்கொடுத்தார்.
 
பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் இரத்த அடையாளங்களின் பொருளை பின்பற்றுகிறவர்களும், புளிப் பிள்ளாத அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிக்கிறவர்களும்; தீமையை / பாவத்தை நன்மையினால் ஜெயங்கொள்ளும் அனுபவத்தின் மூலம் பாவத்தின் நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளை பிடித்து அவைகளை மீண்டும் நன்மைக்கு மாற்றியமைத்துக் கொள்ளுகிறவர்கள் மட்டும், மோசேயின் கோலி னால் உள்ள ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தை கைப்பற்று கிறார்கள்.
 
பாம்பின் வாலைப்பிடித்து, வால்பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாம்பின் தலைப்பகுதிக்கு வரும்போது மீண்டும் மோசேயின் கையில் கோலாக மாறுவது போல பத்தாவது வாதை யிலிருந்து 10-9-8-7-6-5-4-3-2-1 வரிசைப்படி தேவனுடைய நியா யத்தீர்ப்பை, தேவனை ஆராதிக்க முன்வராத ஜனங்களுக்கு மத்தியில் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றி தேவனுயைட ஆசீர் வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள்.
 
1. பத்தாவது வாதை தலைச்சன் பிள்ளை சங்காரம் :- (Exo_12:21-29).
 
ஜென்ம பாவ மனிதன் பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு மரணமடைகிறது /முதற்பலனாகிய ஆண்பிள்ளை/தலைச்சன்பிள்ளை மரணமடைகிறது
 
தேவ வார்த்தைகளின் விசுவாசத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் பஸ்கா ஆட்டுகுட்டியான இயேசுகிறிஸ்து வின் இரத்த அடையாளங்களின் பொருளை பின்பற்றாதவர்களாகவும் புளிப்பில்லாத நித்திய ஜீவ வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிக் காதவர்களாகவும் இருந்து கொண்டு, 
 
தங்கள் விட்டு வந்த ஜாதி களின் முறைகளின் படி நடக்கிறவர்கள்; தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ள முடியாமல் நன்மையிலிருந்து தீமைக்கும், தொடர்ந்து தீமையிலிருந்து மீண்டும் தீமைக்கு முன்னேறுகிற படியால் அவர்களின் தலைச்சன் பிள்ளையான ஜென்ம பாவமனிதன் தேவனுடைய விசுவாச உடன்படிக்கையினால் பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பினால் மரணமடைகிறது.
 
அதனால் தேவ வார்த்தைகளின் விசுவாசத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை முரிக்கப்பட்டு இரட்சிப்பை பெற்ற நாளில் மரணமடைந்த பழைய பாவ ஜென்ம மனுஷன் மீண்டும் உயிர்பிக்கப் பட்டு,தேவனுடைய சாபங்களுக்கும், நித்திய ஆக்கினைத்தீர்ப்புக்கும் நியமிக்கப்படுகிறான் / தகுதியுள்ளவனாக மாறுகிறான்,
 
இந்நிலையில் மீண்டும் தேவனுடைய வார்த்தையின் படி இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவேண்டும்; இல்லையென்றால் இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாமல் சஞ்சலமும், தவிப்பும் கூக்குரலும், பெருகும், தேவனு டைய வார்த்தையின்படி அவர்கள் மீண்டும் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை, எகிப்தின் வாதைகளும், நியாயத்தீர்ப்புகளும் இவர்களை தொடர்ந்து கொண்டேயிருக்கும். 2Th_2:1-4
 
2. ஒன்பதாவது வாதை காரிருள் :- (Exo_10:21-23)
 
ஜென்ம பாவ மனிதன் பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு மரணமடைந்தபடியால் வெளிச்சத்திலிருந்து மீண்டும் காரிருளுக்கு / அறியாமைக்கு தள்ளப்படுதல்; இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளுடன் உடன்படிக்கை செய்து பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் சந்தோசத்தின் வெளிச்சம் இருளடைந்து மீண்டும் முன் இருந்த காரிருளின் ஆழத்திற்கு / அறியாமையின் ஆழத்திற்கு தள்ளப்படுதல்.
 
Rev_16:10-11, 1Sa_2:9, Job_16:16, Job_19:8, Job_38:2, Job_37:19, Mat_6:23, Luk_11:35 , Mat_22:13, Mat_25:30, Joh_12:35, Joh_12:46, 1Jo_2:9,
 
3. எட்டாவது வாதை வெட்டுக்கிளிகள் :- Exo_10:13-15, 
Rev_9:1-12, Joe_2:1-14, 
 
பாதாளத்தின் காரிருளிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வருகிறது. 
 
ஜென்ம பாவ மனிதன் பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு மரணமடைந்தபடியால், அறியாமையின் காரிருள் அந்தகார வல்லமைகளிலிருந்து; வெட்டுக்கிளிகள் போல துள்ளி எழும்பும் தீமையான ஆலோசனைகள் அவனுடைய வாயில் வழியாக வார்த்தை களாக துள்ளி வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.
 
இதன் பின் விளைவாக ஏற்கனவே அவனுக்குள்ளே இருக்கிற நல்ல ஆலோசனைகளும், நற்கிரியைகளும் அழித்து தேவனுடைய சாபத்தையும் கோபாக்கினையையும் மிக வேகமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் 
 
எப்படி இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக் கொண்டபோது சமாதானமும் சந்தோசமும் ஒருவனுடைய இருதயத் தில் துள்ளி வார்த்தைகளாக வெளிப்பட்டதோ அதுபோல தேவனுடைய இரட்சிப்பின் சமாதானமும் சந்தோசமும் இல்லாதபடியால் தீமையான ஆலோசனைகள் ஒருவனுடைய இருதயத்தில் துள்ளி வார்த்தை களாக அவனுடைய வாயின் வழியாக வெளிப்பட்டுக் கொண்டி ருக்கும்.
 
பாதாளத்தின் காரிருளிருந்து வெட்டுக்கிளிகளைப் போல துள்ளி எழும்பும் தீமையான ஆலோசனைகளின் குணாதிசயங்கள் :
 
1. மனிதனுடைய முகம் போல இருந்து:- மனிதனுடைய அறிவுக்கு எட்டக்கூடிய தீமையான ஆலோசனைகள்.
 
2. ஸ்திரீகளின் கூந்தல் போல இருந்தது:-
 
திரளான ஆலோசனைகளைக்கொண்ட தீமையான சிந்த னைக்கருத்துக்கள் 
 
3. சிங்கத்தின் பற்கள் போல இருந்தது:- 
 
மனிதன் மேல் ஆதிகாரம் செலுத்தும் வல்லமையுள்ள தீமையான சிந்தனைக் கருத்துக்கள்.
 
4. யுத்தத்திற்கும் ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரையைப் போல இருந்தது:-
 
மனிதனுடன் போராடி மேற்கொள்ளக்கூடிய வல்லமையுள்ள தீமையான சிந்தனைக் கருத்துக்கள்.
 
5. தலையில் பொண் மயமான கீரிடம் இருந்தது:-
 
மனிதன் மேல் ஆதிகாரம் செலுத்தும் விசேஷ ஞானத்தை யுடைய தீமையான சிந்தனைக் கருத்துக்கள்.
 
6. இரும்பு மார்கவசங்கள் தரித்திருந்தது :-
 
மனிதனால் சுயமாக எதிர்த்து நிற்க முடியாத தீமையான சிந்தனைக் கருத்துக்கள்.
 
7. வால்கள் தேள்களின் கொடுக்கு போல இருந்தது :-
 
தீமையான சிந்தனைக் கருத்தக்களுடைய கிரியைகளின் முடிவு தேள் கொட்டும் வேதனையிலும் அதிகமான வேதனையை இருதயத்தில் கொடுக்க கூடியவைகள். 
 
ஜென்ம பாவ மனிதன் பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு தேவனுடைய வீட்டிலே நடை பெறும் நியாயத்தீர்ப்பினால் மரணமடைந்தபடியால், அறியாமையின் காரிருளின் அந்த கார வல்லமைகளுக்கு அடிமைப்பட்டு தேவனுடைய சாபத்தையும் கோபாக்கினையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள்; அவைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை பின்பற்றி பின்பு படிப்படியாக முன்னேறி தேவனுடைய முத்திரை அடையாளத்தை முழுமையாக தங்களுடைய நெற்றியில் தரித்துக்கொள்ளுவதின் மூலம் தேவனுடைய சாபத்தையும் கோபாக்கினையையும் தப்பித் துக்கொள்ள முடியும்.
 
1. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை தங்கள் அறிவிலும், செயலிலும் எதிர்த்து நிற்காமல் ஏற்றுக்கொண்டு செயல்படுவது. 
 
2. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை ஏற்கனவே அறிந்திருக்கிறவர்கள் அவைகளுக்கேற்ற படியுள்ள நற்கிரியைகளை நிறைவேற்றுவது 
 
3. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தில் தேவ அறி வினால் தங்களால் இயன்ற அளவு நற்கிரியைகளை நிறைவேற்றுவது.
 
4. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவினால் நற்கிரியைகளை நிறைவேற்றுவதற்காக நல்ல மனம் இருந்து தீமை செய்யாமல் விலகியிருப்பது.
 
4 ஏழாவது வாதை கல்மழை:- Exo_9:13-35 , Exo_9:20-21, Rev_16:17-21,
 
இடி, மின்னல், காற்று, அக்கினி இவைகளோடு கலந்த கல்மழை 
 
தேவனுடைய நியாயத்தீர்ப்பின் செய்திகள் மூலம் அறிவிக் கப்படும் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் வேத வசனங்களுக்கு ஒருவன் கீழ்படியாமல் எதிர்த்து நிற்கும்போது, அவனுடைய சரீரத்தில் மேல் கல்மழை விழும்போது எப்படி வேதனைகளை உண்டாக்குகிறதோ? அது போல உள்ள வேதனை களை அவனுடைய ஆவி, ஆத்துமாவில் ஏற்படுத்திக்கொண்டே யிருக்கும் மேலும் அவனை தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ் படியும்படி கட்டாயப்படுத்திக்கொண்டேயிருக்கும். 
 
5. ஆறாவது வாதை எரிபந்தமான கொப்பளங்கள்:- (Exo_9:8-14)Rev_16:2, Rev_16:8-11,
 
சூளையின் சாம்பலில் இருந்து எரிபந்தமான கொப்பளங்கள்/ ஏற்கனவே தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றதினால் சூளையின் சாம்பலைப்போல மாறினவர்களின் சரித்திர சம்பவங்களை வேத புஸ்தகத்திலிருந்து எடுத்து அவர்களுக்கு தேவன் நிறைவேற்றின நியாயத்தீர்ப்பின் வழி முறைகளை வரிசையாக விவரித்துக்காட்டி, 
 
தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் அறிவை ஏற்றுக் கொள்ள எதிர்த்து நிற்பவர்களாகிய உங்களுக்கும் இதுபோல சம்பவிக் கும் என்று அவைகளை மீண்டும் அவர்களுக்கு அறிவிப்பதின் மூலம்; அவைகளை கேட்பவர்களுக்கு அக்கினியின் அணலினால் எரிபந்தமான கொப்பளங்கள் உண்டாவது போல தங்கள் ஆவி, ஆத்துமாவில் எரிச்சலும் கோபமும் கொப்பளித்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். 
 
6. ஐந்தாவது வாதை மகாகொடிதான கொள்ளை நோய்:- (Exo_9:1-7) Exo_9:13-15, 
 
தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் அறிவை ஏற்றுக்கொள்ள எதிர்த்து நிற்பவர்களுக்கும் தேவனுடைய வார்த் தைகளுக்கு கீழ்படியயாமல் இருப்பவர்களுக்கும் சரீரம் கொள்ளை நோயினால் உடனே மரணம் அடைவது போல அவர்களுடைய ஆவி, ஆத்துமாவின் கிரியைகளின் மூலம் அவர்களுக்கு நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வருகிற எல்லா காரியங்களிலும் கொள்ளை நோயைப்போல, உடனே தோல்விகளை உண்டாகும்படி தேவன் கட்டளையிடுவார்; ஏனென்றால் எல்லா காரியத்திற்கும் தேவ னுடைய செயலும் சமயமும் நேரிட வேண்டும்.
 
7. நான்காவது வாதை வண்டுகள் / குழவிகள் :-
 
(Exo_8:20-24) Exo_23:27-28, Deu_7:17-23, Jos_24:12-18, 
 
தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் அறிவை ஏற்றுக்கொள்ள எதிர்த்து நிற்பவர்களுக்கு, தேவனுடைய நியாயத் தீர்ப்பின் நன்மை தீமைகளின் செய்தியை அறிவிக்கும்போது ஒருவனுடைய சரீரத்தை வண்டுகள் / குழவிகள் தாக்க வரும்போது எப்படி? பயப்படுகிறானோ அது போல, அவன் தேவனுடைய நியாயத் தீர்ப்பின் தண்டனைக்கு பயந்து நடுங்குவான். தேவனுக்கு பயந்து தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் அறிவை தங்கள் அறிவில் ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்கனவே தேவனுடைய நியாயத் தீர்ப்பின் தண்டனையிலிருந்து விடுதலையாயிருக்கிறபடியால் சந் தோசமாகயிருக்கிறார்கள்; இப்படி கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக் கும் கர்த்தருக்கும் பயப்படாதவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களை மற்றவர்களுக்கு முன்பாக தேவன் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
 
8. மூன்றாவது வாதை பேன்கள் :- பூமியின் புழுதியிலிருந்து பேன்கள் (Exo_8:16-19) Rev_18:19, Isa_11:4, 
 
தேவனுடைய வார்த்தைகளின் மூலம் தேவனுடைய நியாயத் தீர்ப்பின் செய்தியை அறிவிக்கும்போது தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் அறிவை ஏற்றுக்கொள்ள எதிர்த்து நிற்பவர்க ளுக்கு, தேவனுடைய சாபங்களும் கோபாக்கினையையும் ஓன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் அதனால் தங் கள் தலையின் மேல் பேன்கள் கடிக்கும் போது தலையை சொரிந்து கொண்டிருப்பது போல தங்கள் ஆவி, ஆத்துமாவின் கிரியைகளில் அழுது துக்கித்து புலம்பி ஓலமிடுவார்கள்.
 
9. இரண்டாவது வாதை தவளைகள் :- (Exo_8:1-14) 
 
தண்ணீரிலிருந்து தவளைகள் தேசமெங்கும் பரவுகிறது.
 
தேவனுக்கு பயந்து தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்படி கிறபோது ஒருவனுடைய ஆவி, ஆத்துமாவின் அறிவு சிந்தனை களுக்குள்ளே மட்டும் தன் கட்டுப்பாட்டில் அடங்கியிருக்க வேண்டிய அசுத்த ஆவியின் கிரியைகள், அவனுடைய ஆவி, ஆத்துமா தேவனு டைய வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் இருக்கும் போது; அவனுடைய அறிவு சிந்தனைகளின் கட்டுப்பாட்டின் எல்லையை விட்டு மீறி வெளியே வந்து அவனுடைய அசுத்த ஆவியின் கிரியைகள், தவளைகள் நினைத்த இடங்களிலெல்லாம் துள்ளித்திரிகிறது போல கீழே குறிப்பிட்டுள்ள பல இடங்களின் மற்றவர்களுக்கு முன்பாக அசுத்த ஆவிகளின் கிரியைகள் வெளிப்படுகிறது .
 
1. தேசமெங்கும் - எல்லா ஜனங்களுக்கும்
 
2. வீடு - குடியிருக்கும் இடம்
 
3. படுக்கை அறை - குடும்ப வாழ்க்கை
 
4. மஞ்சம் - பட்டம் பதவி
 
5. வேலைக்காரன் - மனிதனுடைய வேலைகள்
 
6. அடுப்பு - ஆவி, ஆத்துமாவின் சிந்தனைகள் 
 
7. மாவு பிசைகிற தொட்டி - நன்மை தீமைகளை பகுத்தறிகிற இருதயம்.
 
10. முதல் வாதை இரத்தம் :- தண்ணீர் இரத்தமாக மாற்றப் படுகிறது 
 
(Exo_7:15-25)Rev_11:6, Rev_16:3-6,
 
ஒருவனுடைய ஆவி ஆத்துமாவில் தண்ணீரைப்போல மிக திரளாக ஓடுகிற தேவனுடைய வார்த்தைகளை தேவனுடைய பிரமாணங்களுக்கு உட்படுத்துவதன் மூலம் அவனுடைய ஆவி, ஆத்துமாவின் சிந்தனைகளுக்கேற்ற படியுள்ள கிரியைகளை நிறைவேற்ற முடியும், ஆனால் அவனுடைய ஆவி, ஆத்துமாவில் நதியைப்போல ஓடுகிற அறிவு சிந்தனைகளை அவன் தன் இச்சையாக எடுத்து நேரடியாக அவனுடைய தேவைகளுக்கு பயன்படுத்தும்போது;
 
அவன் தன் இச்சையாக எடுத்துக்கொண்ட அவனுடைய அறிவு சிந்தனைகள் பல துண்டுகளாக சிதறி, சிதைந்து உருக்குலைந்து உருமாறிப்போகிறது, இதனால் அவனுடைய அறிவு சிந்தனைகள் கிரியைகளாக உருமாறாமல் உருக்குலைந்து போகிறது மேலும் அவனுடைய அறிவு சிந்தனைகள் நிலைகுலைந்து தடுமாறுகிறது.
 
அத்தியாயம் எட்டு
 
8-0 1.44.000 ஆண்பிள்ளைகளை இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் ஜனங்களை கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுதல்.
 
தேவ முத்திரையை தங்கள் நெற்றியில் தரித்துக்கொண்ட ஆண்பிள்ளைகள், தேவ ஜனங்களை கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தமாக்கும்படி ஞானார்த்தமாக சொல்லப் படும் எருசலேம் என்றும், சீயோன் என்றும் அழைக்கப்படும் தேவ ஜனங்களுக்கு மத்தியில் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தமாக முழங்கி, தேவனுடைய வார்த்தையின் கோலால் நியாயத்தீர்ப்பை செலுத்தி; மோசேயின் மூலம் ஆசரிப்பு முறைகளாக வெளிப்பட்டு பின்பு இயேசுக்கிறிஸ்துவின் மூலம் பொருளுக்கு மாறின தேவ பிரமா ணங்களையும் திட்டங்களையும் எலியாவின் ஆவியின் பெலத்தோடு, கோணலானவைகளை நேராக்கி, கரடுமுரடானவைகள் சமாக்கப் பட்டு, பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல குன்றுகளும் தாழ்த்த்தப்பட்டு, மீண்டும் பூர்வ பாதையின் நிலைக்கு கொண்டு வந்து, கர்த்தருக்கு பரிசுத்தமான / உத்தமமான வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுவார்கள்.
 
Mal_4:4-6, Mal_3:13-18, Mal_4:1-6, Mic_3:8-11, Isa_57:14-15, Isa_62:10, Isa_62:1-12, Luk_1:13-17, Mat_3:1-10, Mar_1:1-8, Luk_3:2-9, Joh_1:15-28, Isa_40:1-11, 
 
கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தமாக்காமல் இருப்பவர்களுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு.
 
ஆண்பிள்ளைகள் தேவ ஜனங்களை கர்த்தருடைய இரண் டாம் வருகைக்கு வழியை ஆயத்தமாக்கும் ஊழிய அழைப்பை நிறை வேற்றுவதற்கு விரோதமாக, கிரியைகளிலோ, சிந்தனைகளிலோ செயல்படுகிறவர்களுக்கு; மோசேயின் மூலம் வனாந்தரத்திலே அறி விக்கப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு கீழ்படியாதவர்களுக்கு நேரிட்ட வாதைகளும் சாபங்களும் முதலாவது ஆவி, ஆத்துமாவின் கிரியைகளில் வெளிப்பட்டு பின்பு சரீரத்தில் அதன் பின்விளைவுகள் வெளிப் படும்.
 
இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொள்ளாத ஈனமான ஆசாரியர்கள் தற்போது ஜனங்களை கர்த்த ருடையை இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக நடைமுறைப்படுத்திக் கொண் டிருக்கும் சில கோணலான வழிகாட்டு முறைகள்.
 
1.கர்த்தருடைய பூர்வ பாதையான நல்ல வழிகளை / பெரும் பாதையான பரிசுத்த வழிகளை காட்டாமல், மனிதனால் உண்டாக் கப்பட்ட வழிகளை காட்டுகிறார்கள்.
 
2. கர்த்தருடைய பூர்வ பாதையான நல்வழிகளை அறியாத ஆவிக்குரிய குருடர்கள், கர்த்தருடைய பூர்வபாதையான நல்லவழிகளை தேடிக்கொண்டிருக்கிற ஆவிக்குரிய குருடர்களுக்கு வழிகளை காட்டுகிறார்கள்.
 
3. கர்த்தருடைய பூர்வபாதையான பரிசுத்த வழிகளை அறியாத ஆவிக்குரிய குருடர்கள் பள்ளமான வழியை காட்டுகிறார்கள் / பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு சமமாக்கப்படாத வழியை காட்டுகிறார்கள்.
 
4. கர்த்தருடைய பூர்வ பாதைiயான பரிசுத்த வழிகளை அறியாத ஆவிக்குரிய குருடர்கள் சகல மலைகளிலும் வழியை காட்டுகிறார்கள் / சகல மலைகளும் தாழ்த்தப்பட்டு சமமாக்கப்படாத வழியை காட்டுகிறார்கள்.
 
5. கர்த்தருடைய பூர்வ பாதையான பரிசுத்த வழிகளை அறியாத ஆவிக்குரிய குருடர்கள் சகல குன்றுகளிலும் வழியை காட்டுகிறார்கள் / சகல குன்றுகளும் தாழ்த்தப்பட்டு சமமாக்கப்படாத வழியை காட்டுகிறார்கள். 
 
6. கர்த்தருடைய பூர்வ பாதையான பரிசுத்த வழிகளை அறியாத ஆவிக்குரிய குருடர்கள் கோணலான வழியை காட்டு கிறார்கள் / கோணலானவைகள் செவ்வையாக்கப்படாமல் உள்ள வழியை காட்டுகிறார்கள்.
 
7. கர்த்தருடைய பூர்வ பாதையான பரிசுத்த வழிகளை அறியாத ஆவிக்குரிய குருடர்கள் கரடுமுரடான வழியை காட்டு கிறார்கள் / கரடுமுரடானவைகள் சமமாக்கப்படாமல் உள்ள வழியை காட்டுகிறார்கள். Jer_6:16-19, Jer_18:15, Eze_18:24-32, Mal_2:1-9, Isa_59:8, Jer_5:1-5, Jer_7:1-12, Jer_35:15, Eze_36:1-7, Mat_15:13-14, , Mat_23:16, , Mat_23:24, Luk_6:39, Rom_2:19-20,
 
ஆண் பிள்ளைகள் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு விரோதமாக செயல் படுகிறவர்களுக்கு வரும் வாதைகள் 
 
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு வாக்குத்தத்த தேசத்திற்கு கடந்து செல்லும் வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக மோசேயின் மூலம் அறிவிக்கப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போன இஸ்ரவேலருக்கும் அவர்களுடன் கலந்து வந்த புற ஜாதிகளுக்கும் எழுத்தின்படி தேவனுடைய பத்து வாதை களினால் அழிக்கப்பட்டது போல, தேவனுடைய வார்த்தையின் மூலம் வெளிப்பட்ட தேவ முத்திரையின் அடையாளங்களுக்கு கீழ்ப் படிந்து கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊரியத்தை நிறைவேற்றுவதற்கு முன் வராதவர்களுக்கு; முதலாவது ஆவியின் படி அந்த பத்து வாதைகளினால் ஆவி, ஆத்துமாவின் கிரியைகளின் தண்டிக்கப்பட்டு இரண்டாவது அவை கள் சரீரத்திலும் பிரதிபலிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். Co_10:1-12, Heb_3:7-19, Heb_4:1-11, Rev_11:3-8, Rev_9:1-11, 
 
ஆண் பிள்ளைகள் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுதற்கு விரோதமாக செயல்படுகிறவர்களுக்கு வரும் வனாந்திரத்தின் பத்து வாதைகள் Num_14:22-35
 
1. சிவந்த சமுத்திரத்தின் ஓரத்திலே கலகம் பண்ணினார்கள். Exo_14:10-13
 
2. மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் முறுமுறுத்தார் கள். . Exo_15:23-26
 
3. அப்பத்திற்காக முறுமுறுத்தார்கள் (Exo_16:1-3); 
 
4. ஓய்நாளை கைக்கொள்ள மனதில்லாதிருந்தார்கள். . Exo_16:4-5,
 
5. தண்ணீருக்காக முறுமுறுத்தார்கள் Exo_17:1-3
 
6. இஸ்ரவேலருக்கு வழியை ஆயத்தம் பண்ணுவதற்கு ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கி அதற்கு ஆராதனை செய்தார்கள். . Exo_32:1-6
 
7. அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்தார்கள்.
 
Lev_10:1-7
 
8. இறைச்சியைப் புசிப்பதற்காக மிகுந்த இச்சையுள்ளவர்களா னார்கள்.
 
Num_11:4-5
 
9. மோசேயின் ஊழிய அழைப்பிற்கு விரோதமாக எழும்பி னார்கள். Num_12:1-2
 
10. துர்ச்செய்தியினால் சபையார் முறுமுறுப்பதற்கு காரண மானவர்கள் கர்த்தருடைய சந்நிதியின் வாதையினால் செத்தார்கள். Num_14:1-4. Num_14:22-35. Num_14:37.


Previous
Home

Social Media
Location

The Scripture Feast Ministries