தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 10


இந்த மனுஷக்குமாரன் யார்?

பொருளடக்கம் 4

4. மனுஷக்குமாரன் உயர்த்தப்பட வேண்டும்.
 
பழைய ஏற்பாட்டு ஜனங்கள் சரீர ஜீவனில் பிழைப்பதற்காக மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெங்கல சர்ப்பம் போல, புதிய ஏற்பாடு ஜனங்கள் நித்திய ஜீவனை அடைந்து, ஆவி ஆத்துமாவில் பிழைக்கும்படி மனுஷக்குமாரனும், மோசேயினுடைய ஆசனத்தில் வீற்றிருப்பவர்களால் சிலுவையில் அடித்து உயர்த்தப்பட வேண்டும். Joh_3:12-16,
 
பழைய ஏற்பாட்டு ஜனங்கள், சரீர ஜீவனில் பிழைப்பதற்காக மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெங்கல சர்ப்பம்
 
4-1. தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக பேசினபோது, சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் சரீர ஜீவனில் பிழைக்கும்படி மேசேயினால் வனாந்தரத்தில் வெங்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டது. Num_21:5-8, 
 
மோசேயினால் வெங்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டது போல மனுஷக்குமாரனும் / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளும் கொலை செய்யப்பட்டு உயர்த்தப்பட வேண்டும் / மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். Joh_3:12-6,Joh_8:28,Joh_12:32-34, 
 
பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட நித்திய ஜீவ வார்த்தை களை கொலை செய்து, அதன் பொருளை சீங்குலைத்து, தங்களுடைய சுய ஆலோசனைகளுக் கேற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு சுய மகிமையைத் தேடிக் கொண்டு; 
 
தங்களுடைய சுய வெளிப்பாடுகளையும் தரிசனங்களையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டும்போது அல்லது கொலை செய்யப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை உயர்த்திக் காட்டும் போது; அவர்கள் மறைமுகமாக தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை எப்படி? கொலை செய்திருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள் / உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
4-2. தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக பேசினபோது, சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் மோசேயினால் உயர்த்தப்பட்ட வெங்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து சரீர ஜீவனில் பிழைத்தார்கள்.
 
Num_21:9, வெங்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து சரீர ஜீவனில் பிழைக்கிறது போல, மனுஷக் குமாரனை நோக்கிப் பார்க்கும்போது, ஆவி ஆத்துமாவும் நித்திய ஜீவனில் பிழைக்கிறது.
 
பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரித்தவர்கள் தங்களு டைய ஆவி, ஆத்துமா, பிழைப்பதற்காக கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை நோக்கிப் பார்க்கும்போது, அவைகள் சிலுவையில் அறையப்பட்டு உயர்த்தப்பட்டிருக்கிறது / வெளிப்படுத்தப்பட்டி ருக்கிறது; 
 
இந்த நிலையிலும் கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளை ஆராய்ந்து தேடி தங்களுடைய ஆவி, ஆத்துமாவை பிழைக்க வைக்க முயற்சி செய்து போராடிக்கொண்டிருப்பவர்களில் சிலர்; நித்திய ஜீவ வார்த்தைகளை ஏன் ? எப்படி ? எதற்காக ? யார் ? இப்படி சிலுவையில் அறைந்து கொலை செய்திருக்கிறார்கள் என்பதை பகுத்தாராய்ந்து உணர்ந்து கொள்ளுகிறவர்கள் மட்டும், நித்திய ஜீவவார்த்தைகளின் பொருளை அறிந்துகொண்டு, தங்கள் ஆவி, ஆத்துமாவில் நித்திய ஜீவனை அடைந்து பிழைக்கிறார்கள்.
 
4-3. தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக பேசினபோது சர்ப்பத்தால் கடிபட்டிடவர்கள் சரீர ஜீவனில் பிழைப்பதற்காக மோசேயினால் உயர்த்தப்பட்ட வெங்கலசர்ப்பம், காலப்போக்கில் தூபம் காட்டும் விக்கிரகமாக மாறினது 
 
மோசேயினால் உயர்த்தப்பட்ட வெங்கல சர்ப்பம் தூபம் காட்டும் விக்கிரமாக மாறுகிறது போல சிலுவையில் அடித்து உயர்த்தப்பட்ட கிறிஸ்துவின் சரீரமும் தூபம் காட்டும் விக்கிரமாக மாறுகிறது. 2Ki_18:4-5, 
 
மோசேயினால் உயர்த்தப்பட்ட வெங்கல சர்ப்பம் காலப் போக்கில் தூபம் காட்டும் விக்கிரமாக மாறினது போல, மோசேயி னுடைய ஆசனத்தில் வீற்றிருப்பவர்களால் சிலுவையில் அடித்து உயர்த்தப்பட்ட கிறிஸ்துவின் சரீரமும் காலப்போக்கில் தூபம் காட்டும் விக்கிரமாக மாற்றப்படுகிறது; இதனால் கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் கிடைக்கும் இரட்சிப்பு பாழக்கப்பட்டு, அருவருப் பாகிக் கொண்டிருக்கிறது.
 
பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரித்தவர்கள் தங்க ளுடைய ஆவி, ஆத்துமா, பிழைப்பதற்காக கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை நோக்கிப் பார்க்கும்போது, அவைகள் சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளாதவர்கள், 
 
அந்த கொலை செய்யப்பட்டிருக்கிற நிலையின் மூலமாகவே, தங்களுடைய ஆவி, ஆத்துமாவை பிழைக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்; இப்பொழுது இவர்களுடைய ஆவி, ஆத்துமா தொடர்ந்து மரணத்திலே நிலைகொண்டிருக்கிறது, மேலும் இவர்களுடைய இந்த முயற்சி வெங்கல சர்ப்பத்திற்கு தூபம் காட்டி விக்கிரகாரதனை செய்தது போல சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்திற்கும் தூபம் காட்டி விக்கிரகாரதனை செய்து கொண்டிருக்கிறார்கள். Mat_24:15, Mar_13:14 Dan_11:31-35, Dan_12:11,
 
இந்த விக்கிரகம் நிற்கத்தகாத பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருந்து, ஆவி, ஆத்துமாவின் இரட்சிப்பை பாழக்கி, அருவருப்பாக்கிக் கொண்டிருக்கிறது.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries