தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 17


ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

பொருளடக்கம் 8-0
 
8-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபைக்கு தேவனுடைய இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பு.

1-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபை தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பு 

2-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட மணவாட்டி சபை 1,44,000 ஆண்பிள்ளைகள் கைப்பற்றும் வழிமுறைகள். 

3-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட மணவாட்டி சபை 1,44,000 ஆண்பிள்ளைகள் நிறைவேற்றுகிறபோது இடறி விழாமல் இருப்பதற்கு ஓய்வு நாளின் பிரமாணங்கள் 

1-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபை தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பு 

இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்கு தண்டுகளும், இரண்டு பரிசுத்தவான்கள் அல்ல, இவைகள் இரண்டும் தேவ னுடைய அபிஷேக ஆவியினுடைய இரண்டு ஊழிய அழைப்பின் இரண்டு விசேஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் Rev_11:3-4, Rev_11:1-14, Zec_4:11-14, Zec_4:1-14, 1Co_12:4-7, 

1-1. இந்த இரண்டு சாட்சிகளின் பொருள் இரண்டு பரிசுத்தவான்கள் என்று அநேகர் தீர்மானிக்கும் போது அந்த இரண்டு பரிசுத்தவான்கள் எலியா, ஏனோக்கு, என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் இவர்கள் இரண்டு பேரும் மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள், எனவே இவர்கள் மீண்டும் பூமிக்கு வந்து எல்லா மனிதரைப்போல பூமியில் மரித்து பின்பு பரலோகத்திற்கு செல்ல வேண்டும். இப்படிப்பட்ட பிரமாணங்கள் மனுஷர்கள் ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்காக இந்நாள் வரை அநேகர் காத்திருக்கிறார்கள். 

1-2. மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது அதுபோல மனுஷன் மரணத்திற்காக உண்டாக்கப்படவில்லை, மனுஷனுடைய பாவத்தி னால் மரணம் உண்டானது. இப்படி மரணம் நேரிட்ட போது இயேசு கிறிஸ்துவினால் மரணத்திலிருந்து ஜீவன் உண்டானது. Rom_5:12-21, Rom_6:23, Rom_8:2-13, Joh_11:25-26, 1Co_15:50-57, 

Mar 2:27 பின்பு அவர்களை நோக்கி : மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது. 

Joh 11:25-26 நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக் கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயி ரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். 

1-3. தேவனுடைய ஊழியம் செய்கிறவர்கள், தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும் பின்பு பரலோகத்திற்கு செல்ல வேண்டும் அல்லது எலியா, ஏனோக்கு தேவனால் நேரடியாக மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது போல நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இவைகளில் எந்த வழியில் பரலோகத்திற்கு செல்லுவது என்பதைக் குறித்த தீர்மானம் பரிசுத்தவான்களுடைய பொறுமைக்கு விசுவாசத்திற்கும் ஏற்றபடி மாறுபடுகிறது. Rom_13:10 

Rev 13:10 சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட் டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசு வாசமும் இதிலே விளங்கும். 

1-4. பரிசுத்தவான்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயத்தின் வல்லமையை பொறுமையுடன் உபயோகிக்கும் போது சமாதானமாக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தப்படுகிறார்கள். இப் படிப்பட்டவர்களை தேவ துதர்களால் சிறைப்படுத்திக்கொண்டு / நேரடியாக மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டு போவார்கள் பரிசுத்தவான்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயத்தின் வல்லமையை அதிகாரத்துடன் உபயோகிக் கும் போது அதை எதிர்ப்பவர்கள் எழுத்தின் படியுள்ள பட்டயத்தின் வல்லமையுடன் அதிகாரத்தோடு கொலை செய்வார்கள். 

1-5. எலியா, ஏனோக்கு தேவனால் நேரடியாக மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது போல, இந்த காலத்திலும் அநேக தேவ ஊழியர்கள் மரத்தைக் காணமல் உயிரோடு நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுவார்கள். Mat_24:40-41, Luk_17:34-36, Rev_13:10,1Co_15:50-57, 

யோவான் ஸ்நானகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தோடு ஊழியம் செய்து, தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தது போல இந்தக் காலத்திலும் அநேகர் தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்துக் கொண்டிருப்பார்கள். Luk_1:17, , 

1-6. எலியாவைப் பற்றியுள்ள வேத வசனங்களை நாம் சிந்திக்கும் போது, எலியா முதலாவது திரும்ப வரவேண்டும் என்ற நம்பிக்கை இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னே பல ஆண்டுகளாக அநேக பரிசேயரிடம் சதுசேயரிடமும் இருந்தது ஆனால் இவர்களுடைய கேள்விக்கு இயேசு கிறிஸ்து எலியா வந்தாயிற்று என்ற பதிலை கொடுத்தார். Mat_17:10-13, Mat_11:14-15, Mar_9:11-13, 

யோவான் ஸ்நானகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தோடு ஊழியம் செய்து, தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சி யாக மரித்தார். எலியா தீர்க்கதரிசி யோவான் என்ற பெயரில் மீண்டும் இந்த பூமியில் பிறக்கவில்லை, மாறாக எலியாவிற்கு தேவன் கொடுத்த அபிஷேக ஆவியை யோவான் ஸ்நானகன் மேல் தேவன் அனுப்பி கர்த்தருடைய முதல் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பின் கிரியைகளையும், தேவனை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பின் கிரியைக ளையும், ஆகிய இரண்டு வகையான ஊழிய அழைப்புக்களின் திட்டங்களை தேவன் நிறைவேற்றினார். Luk_1:17, 

மேலே குறிப்பிட்டதுபோல இக்காலத்திலும் கர்த்தரின் இரண் டாம் வருகையில் அநேக தேவ ஊழியர்களுக்கு, எலியா, மோசே, ஆகிய இரண்டு தீர்க்கதரிசிகளின் மேல் வைத்த அபிஷேக ஆவியை மீண்டும் தேவன் அனுப்பி கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பின் கிரியைகளையும், கர்த்தரை ஆராதிக்கும்படி ஆயத்தப் படுத்தும் ஊழிய அழைப்பின் கிரியைகளையும், ஆகிய இரண்டு வகையான ஊழிய அழைப்புகளின் திட்டங்களை தேவன் நிறைவேற்றுகிறார். Mal_4:4-6 

1-7. ஆண் பிள்ளைகள் இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டு நிறைவேற்றுதல்:- 

இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்கு தண்டுகளும் பரிசுத்தவான்கள் அல்ல, இவைகள் இரண்டும் தேவனுடைய அபி ஷேக ஆவியினுடைய இரண்டு ஊழிய அழைப்பின் இரண்டு விசே ஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் Rev_11:3-4, Rev_11:1-14, Zec_4:11-14, Zec_4:1-14, 1Co_12:4-7, 

தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் வலது இடது பக்கத்தின் ஊழிய அழைப்பினால் இரண்டு விசேஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரி யைகள் : 1Ki_17:1, 1Ki_18:15, Hos_12:12-13,Exo_23:20-23, Isa_63:7-14, Zec_4:11-14, Rev_11:3-4, 

1. தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் வலது பக்கத்தின் ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியை கள், எலியா தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தைப் போல ஒருவரின் விண்ணப்பத்திகேற்றபடி அவனுக்கு இரண்டு மடங்கு அருளப் படுகிறது. 2Ki_2:7-14,, 

2. தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் இடது பக்கத்தின் ஊழிய அழைப்பினால் விசேஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் :- 

கர்த்தரை ஆராதனை செய்யும்படி ஆயத்தப்படுத்துவதற்காக தேவனுடைய அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் விசே ஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் மோசே தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தைப்போல ஒரு வரின் விண்ணப்பத்திற் கேற்றபடி அவனுக்கு எழுபது பங்காக பிரித்து எழுபது பேருக்கு பகிர்ந்து அருளப்படுகிறது. Num_11:11-17, Num_11:24-29, 

1. தேவனை ஆராதிக்க ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு:- 

எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து ஜனங்கள் விடுதலையாக்கப் பட்டு சுதந்திரமாக தேவனை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்துவதற்காக தேவனுடைய அபிஷேக ஆவியை மோசேக்கு கொடுத்து அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் தேவனுடைய ஊழிய அழைப்பின் திட்டத்தை தேவன் நிறைவேற்றினார். Psa_78:1-12, Psa_78:42-53, Psa_105:23-37, Psa_106:1-12, 

2. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு:- 

எகிப்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக வாக்குத்தத்த தேசத்திற்கு அழைத்துச செல்லும்படி கர்த்தர் காண்பிக்கும் வழியை ஆயத்தப்படுத்து வதற்காக தேவனுடைய அபி ஷேக ஆவியை மோசேக்கு கொடுத்து அற்புதங்களினாலும், அடையா ளங்களினாலும் தேவனுடைய ஊழிய அழைப்பின் திட்டத்தை தேவன் நிறைவேற்றினார். Psa_78:13-41, Psa_78:54-72, Psa_105:38-45, Psa_106:12-30, Psa_106:31-48, 

2-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட மணவாட்டி சபை 1,44,000 ஆண்பிள்ளைகள் கைப்பற்றும் வழிமுறைகள். 

2-1. தேவனுடைய ஜனங்கள் பாவத்தின் அடிமைத்தனத்தி லிருந்து தேவன் தம்முடைய வல்லமையுள்ள கரத்தால் பிரித் தெடுத்து, தமக்கு ஆராதனை செய்யும்படி தெரிந்து கொள்ளு வதற்காக எகிப்திலே நடந்த பத்து வாதைகளில் ஒன்பது வாதைகளை மோசேயின் மூலம் தேவன் நடப்பித்தார். ஆனால் பத்தாவது வாதை யான தலைச்சன் பிள்ளை சங்காரத்தை தேவனே நிறைவேற்றினார். 

2-2. பாவம், மரணம் ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்த தேவ ஜனங்களை விடுதலையாக்கும்படியாக தேவனே தம்முடைய குமரனை பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தை போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினிக்குள்ளாகத் தீர்த்தார், இப்படி இயேசு கிறிஸ்துவின் மூலம் தீமையை அல்லது பாவத்தை நன்மையினால் ஜெயங்கொள்ளும் தத்துவ செயல் முறையை தேவன் நமக்கு முன் மாதிரியாக வெளிப்படுத்திக் கொடுத் தார். Rom_8:1-4, Rom_12:21, Pe_3:16-19, 1Co_11:31, Job_9:16, Job_5:5, Job_28:12-19, Job_28:20-28, 

2-3. பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் இரத்த அடையாளங்களின் பொருளை பின்பற்றுகிறவர்களும், புளிப் பிள்ளாத அப்பாமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிக்கிறவர்களும், தீமையை / பாவத்தை நன்மையினால் ஜெயங்கொள்ளும் அனுபவத்தின் மூலம் பாவத்தின் நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளை பிடித்து அவைகளை மீண்டும் நன்மைக்கு மாற்றியமைத்துக் கொண்டு மோசேயின் கோலினால் உள்ள ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தை கைப்பற்றுகிறார்கள். 

2-4. பாம்பின் வாலைப்பிடித்து, வால்பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாம்பின் தலைப்பகுதிக்கு வரும்போது மீண்டும் மோசேயின் கோலாக மாறுவதுபோல, பத்தாவது வாதையிலிருந்து 10,9,8,7,6,5,4,3,2,1 தலைகீழ் வரிசைப்படி தேவனுடைய நியாய தீர்ப்பை, தேவனை ஆராதிக்க முன் வராதவர்கள் மற்றும் தேவனு டைய இராஜ்ஜியத்திற்கு வழியை ஆயத்தம் பண்ணுவதற்கு முன் வராதவர்கள் ஆகிய இரண்டு பிரிவு ஜனங்களுக்கு மத்தியில் தேவ னுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதின் மூலம் மோசேயின் கோலினால் உள்ள ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தை கைப் பற்றுகிறார்கள். 

2-5. பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் இரத்த அடையாளங்களின் பொருளை பின்பற்றாதவர்களும் புளிப்பில்லாத நித்திய ஜீவ வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிக்காதவர்களும், தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ள முடியாமல் நன்மை யிலிருந்து தீமைக்கும் தொடர்ந்து தீமையிலிருந்து மீண்டும் தீமைக்கு முன்னேறுகிறபடியால்; அவர்களின் தலைச்சன் பிள்ளை யான ஜென்ம பாவ மனிதனுடைய இரட்சிப்பு, தேவனுடைய நியாயத் தீர்ப்பினால் மரணமடைகிறது. தேவனுடைய வார்த்தையின்படி அவர் கள் இரட்சிப்பை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வரை எகிப்தின் வாதைகளும், வனாந்தரத்திலே தேவனுக்கு கோபம் மூட்டினபோது ஏற்பட்ட நியாயத்தீர்ப்புகளும் இவர்களை பின் தொடர்ந்து கொண் டேயிருக்கும். 

2-6. கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பு, மற்றும் கர்த்தரை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு, ஆகிய இரண்டு வகையான ஊழிய அழைப்புகளின் திட்டங்களை தேவன் நிறைவேற்றுவதற்காக தேவன் மோசேக்கு கொடுத்த மூன்று அடையாளங்கள் 

1. மோசேயின் கோல் தரையிலே போட்டபோது பாம்பாக மாறினது, பாம்பின் வாலை மோசே பிடித்தபோது அது மீண்டும் மோசேயின் கையில் கோலாகமாறினது. . Exo_4:1-5, 

2. மோசே தன் கையை தன் மடியில் போட்டு வெளியே எடுத்த போது அந்த கையில் குஷ்டரோகம் காணப்பட்டது. குஷ்ட ரோகமாக மாறின அந்த கையை மோசே மீண்டும் தன் மடியில் போட்டு வெளியே எடுத்த போது அந்த கை முன்போல் குஷ்டரோகமில்லாத மற்ற கையைப் போல மாறினது. Exo_4:6-8, 

3. மோசே நதியில் ஓடுகிற தண்ணீரை மொண்டு அதை வெட்டாந்தரையிலே ஊற்றும்பொழுது அது இரத்தமாக மாறினது , இந்த மூன்று அடையாளங்களையும் மோசே ஜனங்களுக்கு முன்பாக செய்து காட்டி தேவன் தனக்கு தரிசனமானார் என்பதை நம்பும்படி செய்தார். . Exo_4:28-31, Exo_4:9, 

2-7. மோசேயைப்போல நாங்களும் தேவ தரிசனத்தை பெற்றி ருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள், இந்த மூன்று அடையாளங்களை யும் ஆவிக்குரிய நிலையில் ஜனங்களுக்கு முன்பாக செய்து காட்டி தங்களை நம்பவைப்பதற்கு முயற்சி செய்கிறபோது நடைபெறும் கிரியைகள். 

1. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரிய நிலையில் தங்களுடைய கோலை தரையிலே போடுகிற பொழுது பாம்பாக மாறுகிறது, ஆனால் ஆவிக்குரிய நிலையில் அந்த பாம்பின் வாலைப் பிடித்து அதை மீண்டும் தங்களுடைய கோலாக மாற்ற முடியவில்லை. 

2. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரிய நிலையில் தங்களுடைய கையை தங்கள் மடியிலே போட்டு வெளியே எடுத்தபோது அந்த கையில் குஷ்டரோகம் காணப் படுகிறது, ஆனால் ஆவிக்குரிய நிலையில் குஷ்டரோகாமாக மாறின தங்கள் கையை மீண்டும் தங்களுடைய மடியிலே போட்டு வெளியே எடுத்த போது அந்த கையை முன்போல குஷ்டரோகமில்லாத மற்ற கையைப்போல மாற்ற முடியவில்லை. 

3. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரிய நிலையில் நதியில் ஓடுகிற தண்ணீரை மொண்டு வெட்டாந்தரையிலே ஊற்றும்பொழுது அது இரத்தமாக மாறுகிறது. ஆனால் முன்பு சொல்லப்பட்ட இரண்டு அடையாளங்களையும் மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறவைகளாக, ஆவிக்குரிய நிலை யில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் இந்த மூன்றாம் அடை யாளத்தையும் மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறவைகளாக ஆவிக்குரிய நிலையில் நிறைவேற்ற முடியவில்லை. 

2-8. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர் கள், இந்த மூன்று அடையாளங்களையும் ஆவிக்குரிய நிலையில் ஜனங்களுக்கு முன்பாக செய்து காட்டி, மோசேயைப்போல நாங்களும் தேவ தரிசனத்தை பெற்றிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு; ஜங்களை நம்பவைப்பதற்கு முயற்சி செய்கிறபோது இந்த மூன்று அடையாளங்களையும் ஆவிக்குரிய நிலையில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிற முதல் பகுதியை மட்டும் செய்து காட்டுகிறார்கள் 

ஆனால், இந்த மூன்று அடையாளங்களிலும் மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிற மறு பகுதியை ஆவிக்குரிய நிலையில் ஜனங்களுக்கு முன்பாக நிறை வேற்ற முடியவில்லை, இருந்தபோதும் இந்நாள் வரை இவைகளினால் ஜனங்களை வஞ்சித்து, தங்களுக்கு பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். Mat_23:1-2, Mat_23:25-26, 

2-9. மோசேயை ஜனங்கள் விசுவாசிப்பதற்காக தேவன் கொடுத்த முதலாம் அடையாளம் / மோசேயினுடைய கோல் தரையிலே போட்டபோது பாம்பாக மாறினது ஆவியின் படி பொருள்:- 

மோசேயின் கோல் தரையிலே போட்டபோது பாம்பாக மாறி னது / மோசேயின் அதிகாரங்கள் நன்மையிலிருந்து தீமைக்கு மாறுகிறது. 

பாம்பின் வாலை மோசே பிடித்தபோது அது மீண்டும் மோசேயின் கையில் கோலாக மாறினது / மோசேயின் அதிகாரங்கள் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிறது. 

தேவன் மோசேக்கு கொடுத்த ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணங்களும் அதன் நற்கிரியைகளும் அதன் சத்தியத்தின் நிலை யிலிருந்து வழி விலகி; பாம்பைப்nப்hல நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளை நடப்பிக்கும் படி, நன்மையிலிருந்து தீமைக்கு மாறி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக்கொண்டிருக்கிறது. 

2-10. எகிப்திலுள்ள சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதி கள் ஆகிய இவர்களுடைய கோல்களும் தரையிலே போட்டபோது பாம்பாக மாறினது :- 

பூமியில் தோன்றின மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர் கள், மந்திரவாதிகள், ஆகிய இவர்களின் ஆட்சி அதிகாரங்களும்; அதன் சத்தியத்தின் நிலையிலிருந்து வழி விலகி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக் கொண்டிருக்கிறது. 

2-11. மோசேயைப்போல நாங்களும் தேவ தரிசனத்தை பெற்றி ருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மோசேயின் ஆசனத்தில் உட் கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், உலக மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகள் ஆகிய இவர்களின் ஆட்சி அதிகாரத் தின் கோலும்; இப்பொழுது சத்தியத்தின் நிலையிலிருந்து வழி விலகி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்காக, பாம்பைப் போல நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளை நடப்பிக்கும்படி நன்மையிலிருந்து தீமைக்கு மாறி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

2-12. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் உலக மதங்களின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் ஜனங்களை நம்பவைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியினால் தங்களுடைய சத்தியமான ஆட்சி அதிகாரத்தின் கோல்கள் பாம்பாக மாறியிருக் கிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஆட்சி செய்வதற்கு சத்தியமான ஆட்சி அதிகாரங்களுக்கு பதிலாக நயவஞ்சகமான தந்திர ஆலோச னைகளைக்கொண்டு பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக் கொண்டி ருக்கிறார்கள். 

இப்பொழுது சத்தியமான ஆட்சி அதிகாரத்தின் கோலைக் கண்டால் பாம்பைக் காணோம்; பாம்பைக் கண்டால் சத்தியமான ஆட்சி அதிகாரத்தின் கோலைக் காணோம். 

சத்தியமான ஆட்சி அதிகாரங்களைக் கண்டால் நயவஞ்சக மான தந்திரங்களை காணோம்; நயவஞ்சகமான தந்திரங்களை கண் டால், சத்தியமான ஆட்சி அதிகாரங்களைக் காணோம். சத்தியமான ஆட்சி அதிகாரங்கள் அல்லது நயவஞ்சகமான தந்திரங்கள் என்கிற ஏதாவது ஒரு நிலையில் மட்டும் ஆட்சி அதிகாரங்கள் மற்றவர் களுக்கு வெளிப்படுகிறது. 

2-13. மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்களின் கோல்கள் பாம்பாக மாறியிருக்கும்போது அது மற்ற பாம்புகளை விழுங்க முடியவில்லை:- 

மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடம் உள்ள பாம்பைப்போல நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகள், உலக மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகள் ஆகியவர் களிடம் உள்ள பாம்பைப்போல நயவஞ்சகமான தந்திர ஆலோசனை களை விழுங்க / மேற்கொள்ள / ஜெயங்கொள்ள முடியவில்லை. 

2-14. மோசே பாம்பின் வாலை பிடித்தபோது மீண்டும் அது தன் கையில் கோலாக மாறினது; அதுபோல இப்பொழுது மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் ஜனங்களுக்கு முன்பாக ஓடுகிற எல்லா பாம்புகளையும் அதன் வாலை பிடித்து கோலாக மாற்றவேண்டும், அல்லது அவர்களுடைய பாம்பு மற்ற பாம்புகளை விழுங்க வேண்டும். 

இந்நாள் வரை இந்த இரண்டு காரியங்களும் நடைபெறாமல் எல்லாருடைய கோல்களும் / சத்தியமான ஆட்சி அதிகாரங்களும் பாம்பாக மாறி/ நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளாக மாறி ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் காண்பவர்கள் அநேகர் பயந்து இங்கும் அங்கும் மதம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு சிலர் சத்தியமானவைகளை நாடி தேடி ஓடுகிறார்கள். 

2-15. உலக மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகள் ஆகிய இவர்களுக்கு பாம்பின் வாலைப்பிடித்து மீண்டும் கோலாக மாற்றும் தத்துவம் தெரியாது, ஆனால் மோசேக்கு மட்டும் தேவனுடைய ஆலோசனையின்படி இது தெரியும். இந்த நிலையில் மோசே எல்லா பாம்புகளையும் பார்த்து பயப்படாமலிருக் கும் போது மோசேயின் பாம்பு மற்ற எல்லா பாம்புகளையும் விழுங் கிற்று, இப்படி எல்லா பாம்புகளையும் விழுங்கினாலும் அது தன் உரு வத்தால் பெரியதாக மாறுமேயல்லாமல் அது ஒருபோதும் கோலாக மாறது ஆனால், பாம்பின் வாலைப்பிடிக்கும் போது மட்டுமே அது மீண்டும் கோலாக மாற்ற முடியும். 

பாம்பின் வாலை பிடிப்பது போல, நயவஞ்சகமுள்ள தீமையான தந்திர ஆலோசனைகளை, நன்மையாக மாற்றுகிறவர்கள் மட்டும் மோசே அழைக்கப்பட்டதுபோல கனமான ஊழிய அழைப்பின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள / கைப்பற்ற முடிகிறது. 

தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளும் தத்துவத்தின் மூலம் தந்திரமான ஆலோசனைகளை நற்கிரியைகள் செய்வதற்கு பயன் படுத்த முடியும். 

நியாயப்பிரமாணத்தின் கிரியைகளின் மூலம் தீமைக்கு தீமை செய்கிறபோது உதாரணம்: கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்கிற கற்பனையைப் போல தீமைக்கு தீமை செய்கிறபோது / பாம்பின் தலையை பிடிக்க முயற்சி செய்கிறபோது, பாம்பு கடிக்கிறது / பாவம் மரணத்தை கொண்டு வருகிறது; ஆனால் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினால் தீமைக்கு நன்மை செய்யும்போது மட்டும் அது பாம்பின் வாலைப்பிடிக்கிறதற்கு சமமாகிறது, இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின் மூலம் நீதியின் கிரியைகளை செய்யும்போது நயவஞ்ச கமான தந்திர ஆலோசனைகளை தேவனுடைய நீதியின் கிரியைகளாக மாற்றியமைத்து கொள்ள முடியும். 

2-16. மோசேயை ஜனங்கள் விசுவாசிப்பதற்காக தேவன் கொடுத்த இரண்டாவது அடையாளம் / மோசே தன் கையை தன் மடியில் போட்டு வெளியே எடுத்தபோது அந்த கையில் குஷ்டரோகம் காணப்பட்டது ஆவியின்படி பொருள்:- 

மோசே தன்னுடைய நற்கிரியைகளை தன்னுடைய தந்திரங் களினால் மறைத்து, தன்னுடைய கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறபோது அது மாயைக்காரனின் கிரியைகளாக காணப் படுகிறது / மோசேயினுடைய கையின் கிரியைகள் நன்மையிலிருந்து தீமைக்கு மாறுகிறது. 

2-17. மோசே குஷ்டரோகமாக மாறின அந்த கையை மீண்டும் தன் மடியில் போட்டு வெளியே எடுத்தபோது, அந்த கை முன்போல குஷ்டரோகமில்லாத மற்ற கையைப்போல மாறினது / மோசே தன்னுடைய மாயைக்காரனின் கிரியைகளை தன்னுடைய தந்திரங் களிலிருந்து வெளியே வந்து, தன்னுடைய கிரியைகளை வெளிப் படுத்திக்காட்டுகிறபோது அது மீண்டும் நற்கிரியைகளாக காணப் படுகிறது / மோசேயினுடைய கையின் கிரியைகள் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிறது. 

முதல் அiடாயளத்தை ஜனங்கள் கண்டு உன்னை நம்பாமலும் உனக்கு செவிகொடாமலும் போனால், இந்த இரண்டாம் அடையாளத்தைக் கண்டு உன்னை நம்புவார்கள். 

2-18. மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் தங்கள் கையை மடியிலே போட்டு வெளியே எடுத்து, குஷ்டரோகமாக மாற்றியிருக் கிறார்கள் என்பதின் பொருள் ஆவியின் படி:- 

மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் தங்கள் நற்கிரி யைகளை தங்களுடைய தந்திரங்களினால் மறைத்து, தங்கள் கிரியை களை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள்; அப்பொழுது அது மாயக் காரனின் கிரியைகளாக வெளிப்படுகிறது. 

மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் குஷ்டரோகமுள்ள தங்கள் கையை மீண்டும் தங்கள் மடியில் போட்டு வெளியே எடுத்து மற்ற நல்ல கையைபோல மாற்ற முடியவில்லை என்பதின் பொருள் ஆவியின்படி:- 

மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் தங்கள் மாயைக்கார னின் கிரியைகளை, தங்களுடைய தந்திரங்களிலிருந்து வெளியே வந்து மீண்டும் நற்கிரியைகளாக மாற்றியமைத்துக் கொள்ள முடிய வில்லை; இந்த காரணங்களினால் மாயக்காரனகிய பரிசேயனே, வேத பாரகனே என்று இந்நாள் வரை மோசேயின் ஆசனத்தில் இருப்பவர் களை மற்றவர்கள் அழைக்கிறார்கள். 

2-19. மோசேயை ஜனங்கள் விசுவாசிப்பதற்காக தேவன் கொடுத்த மூன்றாவது அடையாளத்தின் பொருள் ஆவியின்படி:- 

மோசே நீ நதியில் ஓடுகிற தண்ணீரை மொண்டு அதை வெட்டாந்தரையிலே ஊற்று அப்பொழுது அது இரத்தமாக மாறும்; மோசே நீ உன்னுடைய அறிவில் நதியைப்போல ஓடிக்கொண்டி ருக்கிற உன்னுடைய அறிவு சிந்தனைகளை எடுத்து அவைகளை நேரடியாக உன்னுடைய கிரியைகளுக்கு பயன்படுத்து, அப்பொழுது உன் ஆலோசனைகள் கிரியைகளுக்கு மாறமலிருந்து உன்னுடைய ஆலோசனைகள் சிதறி, சிதைத்து உருக்குலைந்து, உருமாறிப் போகிறது. 

முந்தின இரண்டு அடையாளங்களை கண்டு ஜனங்கள் உன்னை நம்பாமலும் உன் வாக்குக்கு செவிகொடாமலும் இருப்பார் களாகில் இந்த மூன்றாவது அடையாளத்தை கண்டு உன்னை நம்புவார்கள். 

இந்த மூன்றாவது அடையாளத்தில் நன்மையிலிருந்து தீமைக்கு எப்படி மாறுகிறது என்கிற ஒரு பக்கத்தின் கிரியைகளை மட்டும் தேவன் வெளிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்; ஆனால் இந்த மூன்றாவது அடையாளத்தில் தீமையிலிருந்து எப்படி மீண்டும் நன்மைக்கு மாறுவது என்கிற மறுபக்கத்தை தேவன் நேரடியாக வெளிப்படுத்தாமல், மறைமுகமாக இந்த மூன்று அடையாளங் களுக்குள் மறைத்து தேவன் வெளிப்படுத்திக் கொடுத்திருக்கிறார். 

2-20. பாம்பின் வாலைப்பிடித்து மீண்டும் கோலாக மாற்றுவது, குஷ்டரோகமுள்ள தன் கையை தன் மடியில் போட்டு வெளியே எடுத்து மீண்டும் நல்ல சதையுள்ள கையாக மாற்றுவது, ஆகிய இரண்டு அடையாளங்களையும் தீமையை நன்மையினால் ஜெயங் கொள்ளும் அனுபவத்தின் மூலம் தேவனுடைய பிரமாணங்களைக் கொண்டு தீமையிலிருந்து நன்மைக்கு மாற்றுகிறவர்கள் மட்டும்; மூன்றாவது அடையாளத்தின் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிற செயல் முறையின் மறுபக்கத்தை அறிந்து கொண்டு அவைகளை நடைமுறைப்படுத்த முடியும். . Exo_4:4-5, Exo_4:7-8, 1Pe_3:8-11, Rom_8:10-13, Rom_12:21, Eze_3:17-19, Eze_18:21-23, Eze_33:14-17, 

2-21. மூன்றாம் அடையாளத்தின் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிற செயல் முறை:- 

நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக, அப்பொழுது நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாக மாறாமல் அப்படியே தண்ணீராக இருந்து வெட்டாந் தரையை நல்ல செழிப்பான விளை நிலமாக மாற்றும். 

நீ உன்னுடைய அறிவில் நதிப்போல ஓடிக்கொண்டிருக்கிற உன்னுடைய அறிவு சிந்தனைகளை எடுத்து நேரடியாக உன்னுடைய கிரியைகளுக்கு பயன்படுத்தாமல், அவைகளை தேவனுடைய பிரமா ணங்களுக்கு உட்படுத்தி உன் ஆலோசனைகளை நிறைவேற்று; அப்பொழுது வெட்டாந்தரையில் ஊற்றப்பட்ட தண்ணீர் வெட்டாந் தரையை நல்ல செழுமையான விளை நிலமாக மாற்றுவது போல உன்னுடைய ஆலோசனைகள் நல்ல செழுமையான நீதியின் கிரியைகளுக்கு உருமாறுகிறது. 

இந்த மூன்றாவது அடையாளத்தின் தீமையிலிருந்து மீண் டும் நன்மைக்கு மாறுகிற செயல் முறையின் மறுபக்கத்தில் ஒருவனு டைய அறிவின் ஆலோசனைகளை / விசுவாசங்களை தேவனுடைய பிரமாணங்களுக்கு உட்படுத்தின பின்பு; அவைகளை கிரியைகளுக்கு நிறைவேற்றும்போது அது நல்ல செழுமையான நீதியின் கிரியைகளாக உறுமாறுகிறது, அல்லது மனிதனுடைய விசுவாசங்களை தேவனுடைய பிரமாணங்களுக்கு உட்படுத்துவதின் மூலம் முதலாவது தேவனுடைய நீதியின் விசுவாசத்திற்கு உருமாறு கிறது, இரண்டாவது தேவனுடையை நீதியின் விசுவாசங்கள் தேவனுடைய நீதியின் கிரியைகளுக்கு உருமாறுகிறது Rom_1:17, Hab_2:4, Gal_3:11, Heb_10:38, Isa_7:9, 

2-22. இந்த மூன்று அடையாளங்களிலும் உள்ள தீமை யிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிற மூன்று செயல் முறை களையும் கைக்கொள்ளுபவர்கள், தேவனுடைய நீதியின் விசுவாசத்திலிருந்து கிரியைகளுக்கு முன்னேறி பெலத்தின் மேல் பெலன் அடைந்து சீயோனுக்கும் எருசலேமிற்கும் வந்து சேர்வார்கள். Psa_84:5-7, Isa_35:10, Isa_51:11, 

சீயோனிலும் எருசலேமிலும் தேவ சித்தத்தை நிறை வேற்றுவதின் மூலம் மகிமையின் மேல் மகிமையடைந்து, மறுரு பமடைந்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுகிறார்கள். 2Co_3:18, 2Co_4:16, 

முதல் இரண்டு அடையாளங்களில் உள்ள நன்மையிலிருந்து தீமைக்கு மாறுகிறவர்கள் அவைகளின் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு முன்னேற முடியாமல்; முதல் அடையாளத்தின் தீமையிலிருந்து இரண்டாம் அடையாளத்தின் தீமைக்கு முன்னேறி மீண்டும் முன்றாம் அடையாளத்தின் தீமைக்கும் முன்னேறுகிறார்கள், இப்படி இவர்கள் மூன்று தீமையிலிருந்து தீமைக்கு முன்னேறி தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து மீண்டும் நியாயத்தீர்ப்புக்கு முன்னேறி நித்திய நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 2Pe_2:19-22, Heb_6:4-8, Exo_3:20-21, Exo_18:24-26, Exo_33:13, Exo_33:18, Exo_4:1-3 , Exo_4:6, Exo_4:9, Jer_9:3, 1Th_5:15, 

3-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட மணவாட்டி சபை 1,44,000 ஆண்பிள்ளைகள் நிறைவேற்றுகிறபோது இடறி விழாமல் இருப்பதற்கு ஓய்வு நாளின் பிரமாணங்கள் 

3-1 தேவனுடைய இராஜ்யத்தின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறவர்கள் ஆயிரம் ஆண்டு ஆடசியின் பதவிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது:- 

தேவனுடைய இராஜ்யத்தின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறவர்கள்: ஆயிரம் ஆண்டு ஆட்சியில் ஜெயங்கொண்டவர்களுக்கு தேவன் பிரதிபலனாக கொடுக்கும் பதவிகளை, காலத்திற்கு முன்பாக தாங்களே சுயமாக, இந்த பூமியில் எடுத்துக்கொள்ளுகிறபோது, அவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது. 

3-2 தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை விருந்தாக புசிக்கிறவர்கள் ஆயிரம் ஆண்டு ஆடசியில் 1,44,000 வரிசையில் வருகிற பதவிகளுக்கு போட்டியிடலாம்:- 

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை தேவனுடைய சத்தியமான வசனங்களின் விருந்தாக புசித்து அதன் சுவைகளை உணர்ந்து கொண்டவர்கள்; தேவனுக்கு விருந்து கொடுப்பதற்காக தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறவர்கள், ஆயிரம் ஆண்டு ஆடசியில் 1,44,000 வரிசையில் வருகிற பதவிகளுக்கு போட்டியிடலாம். 

Mat 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். 

Mat 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

Mat 5:19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். 

Mat 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

3-2-1 தேவனுடைய ராஜ்யத்தில் 1,44,000 வரிசையில் வருகிற பதவிகளுக்கு தகுதியும், திறமையும் உள்ள ஆட்கள் தேவை:- 

2Ch 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; இந்த பதவிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆட்கள் தேவை ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான். 

3-3-0 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; கட்டாயமாக பின்பற்ற வேண்டிய பிரமாணங்கள்:- 

3-3-1 ஆரோனின் சந்ததிகள் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவரக்கூடாது:- 

ஆரோனின் சந்ததிகள், தங்கள் தூபகலசங்கலில் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை, கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து அதின் மேல் தூபவர்க்கத்தை போடுகிற போது, தேவனுடைய அக்கினி, கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள். 

அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான். Lev 10:1-5 

ஆரோனின் சந்ததிகள் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவரக்கூடாது:- 

ஆவியின்படி பொருள்:- ஆரோனின் சந்ததிகள் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய நியாத்தீர்ப்பின் வழிமுறைகளை அவருடைய சந்நிதியில் கொண்டு வரக்கூடாது; இவைகளை எடுத்துத்துக்கொண்டு கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆரோனின் சந்ததிகளின் ஊழியர் அழைப்பு மரணமடைகிறது. 

ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதபடிக்கு, உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக. Lev 10:6 

3-3-2 ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தாங்கள் சாகிறதினால் சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கு, உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக. Lev 10:6 

3-3-3 ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களுடைய தலைப்பாகையை எடுத்துப்போடாமலிருப்பதற்காக, உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக. Lev 10:6 

ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களுடைய தலைப்பாகையை எடுத்துப்போடாமல் தரித்திருக்க வேண்டும்:- 

ஆவியின்படி பொருள்:- ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தங்களுக்கு தேவன் கிருபையினால் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தின் வல்லமையும், அதிகாரத்தையும், உடையவர்களாக இருக்க வேண்டும்; இவைகளை மற்றவர்களுக்கு அனுமதிக்கும்போது/ மற்றவர்கள் எடுத்துத்துக்கொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது ஆரோனின் சந்ததிகளின் ஊழியர் அழைப்பு மரணமடைகிறது. 

3-3-4 ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களுடைய வஸ்திரங்களைக் கிழிக்காமல் இருப்பதற்காக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக. Lev 10:6 

ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களுடைய வஸ்திரங்களைக் கிழிக்காமல் இருக்க வேண்டும்:- 

ஆவியின்படி பொருள்:- ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களுடைய நீதியின் கிரியைகளில் குற்றம் சாட்டப்படாதவர்களாக இருக்க வேண்டும்; குற்றம் சாட்டப்படுகிறபோது, ஆரோனின் சந்ததிகளின் ஊழியர் அழைப்பு மரணமடைகிறது. 

3-3-5 ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதபடிக்கு ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.Lev 10:7 

ஆவியின்படி பொருள்:- ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதபடிக்கு: தங்களுக்கு தேவன் கிருபையினால் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தின் வல்லமையும், அதிகாரத்தையும், விட்டு விலகி, அந்நிய காரியங்களில் தலையிட்டு, பொல்லாத ஆதாயத்தை தேடுகிறதினால்; கர்த்தருடைய ஊழியர் அபிஷேகத்தை இழந்து போகாதிருங்கள். 

3-3-6 ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களோடேகூட தங்கள் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம். Lev 10:8-9 

ஆவியின்படி பொருள்:- ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களோடேகூட தங்கள் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், தங்களுக்கு தேவன் கிருபையினால் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தின் வல்லமையும், அதிகாரத்தையும் நிறைவேற்றுகிறபோது; மனுஷரால் வருகிற மகிமையையும் கனத்தையும் பதவிகளையும், விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடாது. 

3-3-7 ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களோடேகூட தங்கள் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். Lev 10:10 

ஆவியின்படி பொருள்:- ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களோடேகூட தங்கள் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், கீழே குறிப்பிட்ட காரியங்க்களில் வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். Lev 10:10 

3-3-7-1 பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-7-2 தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-7-3 நன்மைக்கும் தீமைக்கும், தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-7-4 நித்திய ஜீவனுக்கும் மரணத்திற்கும், தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-7-5 ஆசீர்வாதத்திற்கும் சாபத்திற்கும், தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-7-6 மனுஷருக்கு விரோதமான எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும், ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை; தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-7-7 மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை; தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-7-8 மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார்; தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு, ஜனங்களுக்கு போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 

3-3-8 ஆரோனின் சந்ததிகள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தங்களோடேகூட தங்கள் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். Lev 10:8-11 

3-4-0 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; மனிதனுடைய ஆறு நாட்களுக்கும் தேவனுடைய ஏழாவது நாளாகிய ஓய்வு நாளுக்கும் தொடர்புடைய வித்தியாசங்களை ஏற்படுத்திக்கொண்டு ஜனங்களுக்கு ஓய்வு நாளின் பிரமாணங்கள் போதிக்கப்பட வேண்டும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும். 

தேவனுடைய ஒரு நாள் மனிதனுக்கு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஆறு நாள் மனிதனுக்கு ஆறு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஏழாவது நாள் மனிதனுக்கு ஏழாவது ஆயிரம் வருடங்கள். 2Pe_3:8, Psa_90:4,Heb_3:7-19, Heb_4:1-10,Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11, Isa_56:1-8, 

ஆதாம் முதல் இன்று வரை மனித சரித்திரத்தில் ஆறு ஆயிரம் வருடங்கள் முடிந்து ஏழாவது ஆயிரம் வருடங்கள் ஆரம்பமாகி தொடர்கிறது Ecc_8:5-6, Hos_6:1-3, Joh_12:32-33, 

3-4-1 கீழே குறிப்பிட்ட தலைப்புகள் ஆயிரம் வருடங்களின் சம்பவங்களாக ஆயிரம் தலைமுறைகளுக்குள்ளே ஒரு தலைமுறையான இந்த தலைமுறையில் நடைபெறுகிறது:- 

1. ஓய்வு நாள் Act_2:15-21, Joe_2:28, 

2. பின்மாரியின் மழைக்காலம். Mal_4:1-6, Zec_10:1, 

3. உபத்திரவகாலம்/ மகா உபத்திரவகாலம் Dan_12:1-13,Mat_24:14-22, 

4. நீதியை சரிகட்டும் நாட்கள் Mar_13:8-13, Luk_21:20-28, 

5. அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிற நாட்கள் Dan_7:13-28, Oba_1:17-21, 

6. தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பின் நாள் 1Pe_4:16-17, 

7. ஆயிரம் ஆண்டுகளின் ஆட்சியின் காலம் Rev_15:2, 

8. தேவனுடைய இராஜ்ஜியத்தின் காலம் Rev_20:4-6, 

3-4-2. ஓய்வு நாளில் சாதரண வேலை ஒன்றும் செய்ய வேண்டாம் Exo_31:13-17, Exo_35:2, Deu_5:12-15, 

3-4-3. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட வேண்டாம் Exo_35:1-3, Lev_26:26, Hos_7:4-8, Isa_50:10-11, 

3-4-4. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட விறகு பொறுக்க வேண்டாம்:- 

ஓய்வு நாளில் / தேவனுடைய இராஜ்ஜியத்தில் பரிசுத்த வேதாகம புஸ்தகத்திலிருந்து விருப்பமான / ஆசீர்வாதமான வசனங்களைப் பொருக்கி எடுத்து அவைகளினால் தங்களுக்கு ஆவிக்குரிய அப்பங்களை சுட வேண்டாம் மேலும் தங்களுக்கு ஆவிக்குரிய வெளிச்சம் / எழுப்புதல்களை உண்டாக்குவதற்க்காக கீழே குறிப்பிட்ட கர்த்தருடைய பிரமாணங்களில் மனிதனுடைய கற்பனைகளை இணைக்க வேண்டாம். Num_15:32-36, Jer_7:17-20, Jer_44:16-19, Exo_31:14-17; Exo_35:1-3,Isa_50:10-11,Num_15:32-36, Neh_13:15-19 , Neh_13:20-22 , Jer_17:19-22 

1. கர்த்தருடைய வேதம் 

2. கர்த்தருடைய வழிகள் 

3. கர்த்தருடைய நியாயங்கள் 

4. கர்த்தருடைய சாட்சிகள் 

5. கர்த்தருடைய கட்டளைகள் 

6. கர்த்தருடைய கற்பனைகள் 

7. கர்த்தருடைய பிரமாணங்கள் 

8. கர்த்தருடைய ஆசரிப்பு முறைகள் 

3-4-5. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் Neh_13:15-22, Isa_58:1-14, 

3-4-6. ஓய்வுநாளில் வெளியே இருந்து எந்த ஒரு பொருளையும் எருசேலம் நகரத்திற்கு உள்ளே கொண்டு வரக்கூடாது :- 

தேவனுடைய இராஜ்ஜியத்தில் வெளியே இருந்து எந்த ஒரு சுய விசுவாச எண்ணங்களையும், தேவனுடைய சத்தியமான வார்த்தை களுக்குள்ளே கொண்டு வரக்கூடாது. 

3-4-7. ஓய்வு நாளில் உங்களுடைய வீடுகளிலிருந்து எந்த ஒரு பொருளையும் வெளியே கொண்டு வரக்கூடாது. 

தேவனுடைய இராஜ்ஜியத்தில் உங்களுடைய அறிவு சிந்தனைகளிலிருந்து சொந்தமான யோசனைகளையோ / விதிமுறை களையோ / எந்த ஒரு சுய விசுவாசமான எண்ணங்களையோ வெளியே கொண்டு வரக்கூடாது. 

3-5-0 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரித்து: ஜனங்களுக்கு ஓய்வு நாளின் பிரமாணங்களை போதிக்க வேண்டும்:- 

மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 

காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன். Eze 33:6-7 

Isa_56:1-6,Isa_56:7-12,Isa_52:1-6, Isa_52:7-12, Jer_6:1-7, Jer_6:8-12,Jer_6:13-17,Jer_6:18-21,Mic_7:1-6,Eze_33:1-5, Eze_33:6-9, Eze_22:23-28, Eze_22:29-31, Eze_44:21-24; Lev_10:1-3, Lev_10:10, Lev_20:25; Jer_15:19; Hag_2:11-13, Eze_3:16-21, Eze_34:1-6; Eze_34:7-12; Eze_34:13-18; Eze_34:19-25; Eze_34:26-31; Neh_13:15-19 , Neh_13:20-22 , Joh_10:1-5; Joh_10:6-10; Joh_10:11-16; 

3-5-1 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக/ இரத்தப்பழி சுமராதிருப்பதற்காக; ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரித்து: ஜனங்களுக்கு ஓய்வு நாளின் பிரமாணங்களை போதிக்க வேண்டும் 

3-5-2 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக/இரத்தப்பழி சுமராதிருப்பதற்காக; ஊழியக்காரனாகிய காவற்காரன், பட்டயம் வருவதைக் கண்டு, அவன் எக்காளம் ஊதி, ஜனங்களை எச்சரிக்க வேண்டும். 

3-5-3 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக/ இரத்தப்பழி சுமராதிருப்பதற்காக; ஊழியக்காரனாகிய காவற்காரன், தேவனுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, தேவனுடைய நாமத்தினாலே ஜனங்களை எச்சரிக்க வேண்டும். 

3-5-4 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; ஊழியக்காரனாகிய காவற்காரன், கிறிஸ்துவாகிய வாசல் வழியாய், பரலோகராஜ்யத்தில் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 

3-5-5 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; ஊழியக்காரனாகிய காவற்காரன், கிறிஸ்துவாகிய வாசல் வழியாய், பரலோகராஜ்யத்தில் பிரவேசியாமல், வேறுவழியாய் வருகிறவர்களாகிய கள்ளன், கொள்ளைக்காரன். கூலியாள், ஓநாய்; ஆகியவர்களிடமிருந்து ஆடுகளாகிய ஆத்துமாக்களை பாதுகாத்து, பரலோகராஜ்யத்திற்கு வழிநடத்த வேண்டும். 

3-5-6 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; ஊழியக்காரனாகிய காவற்காரன், தேவனுடைய ஊழியர் அழைப்பில் இடறி விழுந்தவர்களிடமிருந்து ஆடுகளாகிய ஆத்துமாக்களை பாதுகாத்து பரலோகராஜ்யத்திற்கு வழிநடத்த வேண்டும். 

3-5-7 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; ஊழியக்காரனாகிய காவற்காரன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், போஜனபானம் பண்ணி ஆக்கினைத்தீர்ப்பை அடைந்திருக்கிறவர்களிடமிருந்து ஆடுகளாகிய ஆத்துமாக்களை பாதுகாத்து பரலோகராஜ்யத்திற்கு வழிநடத்த வேண்டும். 

3-5-8 ஆரோனின் சந்ததிகள், கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது சாகாதிருப்பதற்காக; ஊழியக்காரனாகிய காவற்காரன், சாத்தான், அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி ஆகியவர்களுடைய வாயிலிருந்து புறப்பட்டு வருகிற மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளின் அற்புதங்கள்/அடையாளங்களினால் வஞ்சிக்கப்படாமல் ஆடுகளாகிய ஆத்துமாக்களை பாதுகாத்து பரலோகராஜ்யத்திற்கு வழிநடத்த வேண்டும். 

3-6-0 அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 

Mat 9:36 அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, 

Mat 9:37 தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; 

Mat 9:38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். 

Joh 4:34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 

Joh 4:35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 

Joh 4:36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். 

Joh 4:37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. 

Joh 4:38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். 

3-7-0 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்:- 

Rev 22:10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. 

Rev 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 

Rev 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. 

Rev 22:13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். 

Rev 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 

Rev 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். 

Rev 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். 

Rev 22:17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். 

Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 

Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

Rev 22:20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். Rev 22:21 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries