தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 17


ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

பொருளடக்கம் 9-0

9-0 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்ட வர்கள் /கிறிஸ்துவின் மணவாட்டி சபை ஆசரிக்கிற மூன்று பிரதான பண்டிகைகள்.

தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் வலது இடது பக்கங்களின் இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் ஆசாரிக்கிற மூன்று பிரதான பண்டிகைகள் Exo_23:14-18, Exo_34:18-24, Deu_16:16-17, 

1. பஸ்கா பண்டிகை - முதற்பலன்களின் பண்டிகை / இரட் சிப்பை நினைவுகூறும் நாள் / யூதர்களின் பிறந்த நாள். Exo_12:1-14, Exo_12:15-28, Lev_23:1-8, Deu_16:1-8 , Num_28:16-25, 

2. பெந்தெகொஸ்தே பண்டிகை - அறுவடைப் பண்டிகை / வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களை நினைவுகூறும் நாள் / கிறிஸ்தவர்களின் பிறந்த நாள். . Num_28:25-26, Num_28:27-31, Lev_23:9-22 , Deu_16:9-12, Deu_26:1-19, Act_2:1, 1Co_16:8 , Joh_19:14, Joh_19:31, 

3. கூடாரப்பண்டிகை - சேர்ப்புக்கால பண்டிகை / பூமிக்குரிய ஆசீர்வாதங்களை விற்று வாக்குத்தத்த ஆசீர்வதங்களை சேகரிக்கிற நாள் / நான் பரதேசி என்று நினைவுகூறும் நாள் Lev_23:23-44, Lev_26:10Num_29:1-12,Deu_16:13-15 Joh_5:35 

தேவனுடைய நாமம் தரிக்கப்பட்ட தேவ ஜனங்கள் ஜாதி களின் தேவர்களை பணிந்து கொள்ளாமலும், ஜாதிகளின் முறை களைப் பின்பற்றாமலும் அவைகளை உடைத்துப்போட்டு; தேவனு டைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து மூன்று பிரதான பண்டிகைகளி லும் தேவனுடைய சமூகத்தில் வந்திருக்கும்போது அவர்கள் பெற்றுக் கொள்ளுகிற விசேஷித்த ஆசீர்வாதங்கள். Exo_23:24-33, Exo_34:23-24, Deu_16:16-17, 2Co_9:7, 

1. தண்ணீரையும் அப்பத்தையும் ஆசீர்வாதிப்பார் 

நித்திய ஜீவ தண்ணீரையும் நித்திய ஜீவ அப்பத்தையும் ஆசீர்வாதிப்பார் 

2. வியாதியை உன்னிலிருந்து விலக்குவார் 

வாக்குவாதம் பண்ணுகிற வியாதியை உன்னிலிருந்து விலக்குவார். 

3. கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை 

இருதயத்தில் தேவ வார்த்தைகளை கர்ப்பம் தரிக்கும்போது அவைகள் சீர்குலைந்து போவதுமில்லை, கிரியைகள் இல்லாமல் போவதுமில்லை. 

4. உன் சத்துருக்களை முதுகு காட்டப்பண்ணுவேன் 

உன் சத்துருக்கள் பயந்து நடுங்கி ஓடுவார்கள். 

5. உன் சத்துருக்களை துரத்திவிட குழவிகளை அனுப்பு வேன் 

உன் சத்துருக்களை துரத்திவிட தேவனுடைய நியாயத் தீர்ப்பின் பயத்தை அனுப்புவேன். 

6. காட்டுமிருகம் உன்னில் பெருகாதபடி உன் சத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டு துரத்துவேன் 

காட்டுமிருகமாகிய பெருமை உன்னில் பெருகாதபடி உன் சத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விட்டு விலக்கு வேன். 

7. உன் தேசத்தின் எல்லையை பெருகப்பண்ணுவேன் உன்னுடைய ஆசீர்வாதங்கள் நாளுக்கு நாள் பெருகி வளர்ந்து கொண்டே இருக்கும். 

8. நீங்கள் தேவ சமூகத்தில் நிலைத்திருக்கும் போது உங்கள் தேசத்தை யாரும் இச்சிப்பதில்லை 

நீங்கள் தேவ சமூகத்தில் நிலைத்திருக்கும்போது உங்களு டைய ஆசீர்வாதங்களை யாரும் கொள்ளையிட முயற்சி செய்ய மாட்டார்கள். 

1. பஸ்கா பண்டிகை - முதற்பலன்களின் பண்டிகை / இரட் சிப்பை நினைவுகூறும் நாள் / யூதர்களின் பிறந்த நாள்:- 

Exo_12:1-14, Exo_12:15-28, Lev_23:1-8, Deu_16:1-8 , Num_28:16-25, 

புளிப்பில்லா அப்பப்பண்டிகை / பஸ்கா அப்பப்பண்டிகை / முதற்பலன்களின் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பஸ்கா பண்டிகை வருடத்தின் முதல் மாதமாகிய ஆபிப் மாதம் பதினாலாம் தேதி சாயங்கலாந்தொடங்கி மாதத்தின் இருபத்தோரம் தேதி சாயங்கலாம் வரையுள்ள ஏழு நாட்களைக் கொண்டது. இது யூதர்களின் முதலாவது பிரதான பண்டிகை இதை யூதர்களின் பிறந்த நாள் என்று சரித்திர ஆசிரியர்கள் வர்னிக்கிறார்கள் அல்லது கருது கிறார்கள். 

பஸ்கா பண்டிகையின் நியமத்தின்படி எல்லா ஆண்பிள்ளை களும் விருத்தசேதனம் செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் பண்டி கையை ஆசரித்து முதல்பலனான ஆண்பிள்ளைகள் அவரவர் தகுதிக் கேற்றபடி தேவனுடைய சமூகத்தில் காணிக்கையை கொண்டு வரவேண்டும். 

புளிப்பில்லா அப்பப்பண்டிகை / பஸ்கா பண்டிகையை அதன் நியமத்தின் படி ஆசரித்தவர்கள் மட்டும் இரண்டாவது பிரதான பண்டிகையான பெந்தெகொஸ்தே பண்டிகையை ஆசரிக்க முடியும். 

பஸ்கா பண்டிகையின் நியமத்தை ஆசரிக்காமல் பெந்தெ கொஸ்தே பண்டிகையை ஆசரிக்க முயற்சி செய்பவர்கள் அவர்களின் ஆசீர்வாதங்களை அவர்களே சாபமாக மாற்றிக்கொள்ளுகிறார்கள். 

பழைய ஏற்பாட்டின் புளிப்பில்லாத பஸ்கா பண்டிகை இந்த தலைப்பை தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள் ((கூழநு குஐசுளுகூ ஞசுஐசூஊஐஞடுநுளு டீகு ழுடீனு’ளு சுநுஏநுடுஹகூஐடீசூ) இரண்டாவது தலைப்பு 4-3-3-6 என்ற அட்டவணையில் பார்க்கவும் 

புதிய ஏற்பாட்டின் பஸ்கா பண்டிகை:- 

1.புதிய ஏற்பாட்டில் வீட்டு வாசலில் இரத்த அடையாளங் களின் பொருள்:- 

பழைய எற்பாட்டில் ஒவ்வொரு வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்கள், மேல் குறுக்குசட்டம் ஆகிய இவற்றின் மேல் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்களின் பொருள்: புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆத்துமாவிலும் ஆவியிலும் கிரியைகளில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அறிவை அடையாளமாக தரித்துக் கொள்ளுவது. 

புதிய ஏற்பாட்டில் பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங்கொண்டதின் மூலம் பழைய ஏற்பாட்டின் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங் களின் ஆசரிப்பு முறைகள் அதனுடைய பொருளுக்கு மாற்றப்படு கிறது 

இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங்கொள்ளும் படியாக நிறைவேற்றின நியாயத்தீர்ப்பின் தேவ வார்த்தைகளை, தங்கள் அறிவு, புத்தி, ஞானம் இவைகளில் மனப்பூர்வாக ஏற்றுக் கொண்டு புதுசிருஷ்டியாக மாற்றப்பட்டு அவர்கள் நற்கிரியைகளினால் தேவ சித்தத்தை நிறைவேற்றும்படி தங்கள் சரீர அவயவங்களில் அடையாளங்களாக தரித்துக்கொள்ளுவது. Rom_8:3, Exo_12:7 , 1Pe_4:16, Heb_13:10-13, Deu_6:6-9, Gal_6:15-18, Heb_10:1-9, Heb_8:5, Heb_11:24-26, 1Co_5:6-8, 

2. புதிய ஏற்பாட்டில் பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாமிசம் புசிப்பதின் பொருள்:- 

பலமான ஆகரமான நீதியின் பிரமாணத்தை புசிப்பது அல்லது ஏற்றுக்கொள்ளுவது. புதிய ஏற்பாட்டில் பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்து, பாவத்தையும், மரணத்தையும் ஜெயங்கொள்ளும் நீதியின் பிரமாணத்தை நிறைவேற்றுவதின் மூலம் பழைய ஏற்பாட் டின் பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை புசிக்கும் ஆசரிப்பு முறை கள் அதனுடைய பொருளுக்கு மாற்றப்படுகிறது. 

இயேசு கிறிஸ்து பாவத்தையும், மரணத்தையும் ஜெயங்கொள்ளும் நீதியின் பிரமாணத்தை தன்னுடைய ஆத்துமாவில் ஏற்றுக்கொண்டு, அறிவு, புத்தி, ஞானம் இவைகளினால் நிறைவேற்றுகிறபோது பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தினுடைய ஆசாரிப்பு முறைகளுடைய பொருளுக்கு வரு கிறது. Joh_1:14, Joh_6:48-60, Job_33:15-30, Pro_5:1-14, Luk_24:30-44, Isa_9:19-20, Ecc_5:1-6 

3. பழைய ஏற்பாட்டில் புளிப்பில்லா பஸ்கா அப்பம் புசிப்பதின் பொருள்: புதிய ஏற்பாட்டில் நித்திய ஜீவ வார்த்தைகளான பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டு விசுவாசத் திலிருந்து விசுவாசத்திற்கு பிழைப்பது. 

இரண்டு நாளைக்கு பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள் / இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு உயிர்த்தெழுதலின் தொடர்பில் பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களின் வசனப்பண்டிகை வருகிறது. Mat_26:2, Mar_14:1-2 Hos_6:1-3,Psa_90:4, 2Pe_3:8, 

புதிய ஏற்பாட்டில் எழுத்தின்படி பஸ்கா அப்பம் பிட்குதலை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் ஆசரிப்பு முறையாக பின்பற்றும்படி கிறிஸ்து நியமித்து, இதன் தொடர்பில் உள்ள பொருள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய வார்த்தைகளின் உவமைகள் உயிர்த்தெழுந்து தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ளு வதின் தொடர்பில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும்படி கிறிஸ்து நியமிக்கிறார். Mat_26:26-32, Mar_14:22-28, Luk_22:7-20, Joh_6:48-58, 

4. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் உயிர்த்தெழுதலை நினைவு கூறும்படி கிறிஸ்து எழுத்தின்படி பஸ்கா அப்பம் பிட்குதலை நியமிக்கிறார், ஆனால் முதலாம் நூற்றாண்டு அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளின் உயிர்த்தெழுதல் வரை; கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும்படி புதிய ஏற்பாட்டின் பஸ்கா அப்பம் பிட்குதலை எழுத்தின்படி ஆசிப்பு முறையாக பின்பற்றும்படி நியமிக்கிறார்கள். . 1Co_11:23-26, 

5. கிறிஸ்துவின் உயிர்தெழுந்த வசனங்களின் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிந்து கொண்ட வர்கள், ஜீவ அப்பமாகிய தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை புசித்து ஆவியில் பிழைத்து விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு முன்னேறுகிறார்கள் இவர்கள் கிறிஸ்துவின் உயித்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்துவின் உயித்தெழுதலை தெரிவிக்கிறார்கள். 

6. நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆவியில் பிழைக்கிற வர்கள் பஸ்கா அப்பம் பிட்குதலை எழுத்தின் படி ஆசரிப்பு முறைகளாக பின்பற்றாமல் நேரடியாகவே அதன் பொருளாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை புசித்து ஆவியில் பிழைக்கிறார்கள். 

7. எழுத்தின்படி பஸ்கா அப்பம் பிட்குதலை ஆசரிப்பு முறையாக பின்பற்றுகிறவர்கள் இந்நாள் வரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கிறிஸ்துவின் மரணத்தையே நினைவு கூர்ந்து; இப்பொழுதும் கிறிஸ்துவின் மரணத்தை தெரிவிக்கிறார்கள் இவர்கள் மரித்தவர்கள் மத்தியில் ஜீவனுள்ள தேவனை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

8. எழுத்தின்படி நிழலாட்டமாக கொடுக்கப்பட்ட அப்பம் பிட்குதலையே சிலர் பொருளாக நினைத்து அவைகளையே பின்பற் றிக் கொண்டிருக்கிறார்கள்; இதனால் ஆவி, ஆத்துமாவில் ஆவிக் குரிய மரணம் ஏற்பட்டு ஆவியில் மீண்டும் மரணத்தை சந்திக்கிறார் கள். 

கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாமல் அபாத்திரமாக கர்த்தருடைய அப்பத்தை புசிப்பவர்கள் தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜன பானம் பண்ணுகிறார்கள். Co_11:27-32, Jer_23:22-24, Pro_20:25, Joh_1:14, Joh_6:48-53, 

பஸ்கா ஆப்பம் / மாமிசம் புசிப்பது :- தேவனுடைய பிரமா ணங்களை / நித்திய ஜீவ வார்த்தைகளை, தேவ ஆலோசனைகளாக / தேவ வார்த்தைகளாக பகுத்து, பிரித்து, சிந்தித்து, தியானித்து அவைகளை தன்னுடைய ஆவிக்குரிய ஆகாரமாக புசித்து ஆவி, ஆத்துமாவில் பிழைப்பது. 

கிறிஸ்துவின் மரணத்தை தெரிவிக்கும் பஸ்கா பண்டிகையினுடைய ஆசரிப்பு முறைகளில், எழுத்தின்படி பிரிவினைகள், மார்கபேதங்கள். 

1. கர்த்தருடைய பஸ்கா பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் போஜன பானம் பண்ணி எப்பொழுதுமே இருமனம் உள்ளவர்களாக இருப்பது. 

2. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் மனுஷ ஆவியில் உபதேசங்களை உருவாக்கி, மனிதர் களிடம் மகிமையைத் தேடுவதால் அவர்களுக்குள்ளே மார்க்க பேதங்களும், பிரிவினைகளும், வெளிப்படுகிறது. 

3. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் அநேகர் பஸ்கா அப்பமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை புசிக்க பெலவீனராக / பெலமில்லாதவர்களாக மாறி தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக்கொள்ளுவது. 

4. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் அநேகர் பஸ்கா அப்பமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் பண்ணுகிற வியாதிக்கு அடிமைகளாக்கப்பட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்வது. 

5. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் அநேகர் ஆவி, ஆத்துமாவில், இரண்டாம் முறை மரணம் அடைந்து, ஆவி ஆத்துமாவில் நித்திரை மயக்கத்தின் தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்ளுவது. 

6. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்தபடி யால் அநேகர், யூதாசைப் போல இயேசு கிறிஸ்துவை பணத்திற்கு காட்டிக் கொடுத்து; ஆவிக்குரிய காரியங்களில் தலை கீழாக விழுந்து, இரண்டாம் முறை மரணம் அடைந்து, ஆவி ஆத்துமாவில் நித்திரை மயக்கத்தின் தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்ளுவது. 

7. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை புசிப்பதற்கேற்ற நீதியின் கிரியைகளாகிய கலியாண வஸ்திரம் இல்லாதபடியால் பஸ்கா பந்தியிலிருந்து புறம்பான இருளாகிய அறியாமைக்கு தள்ளப்படுதல். 

பெந்தெகொஸ்தே பண்டிகை:- 

பெந்தெகொஸ்தே பண்டிகை / சேர்ப்பு கால பண்டிகை / வாரங்களின் பண்டிகை, அறுவடைப் பண்டிகை / முதற்கனிகளின் பண்டிகை என்கிற பல பொருளை வெளிப்படுத்தும் பண்டிகை. பெந்தெகொஸ்தே என்கிற வார்த்தையின் பொருள் ஐம்பதாவது நாள் இந்த பண்டிகை ஐம்பது நாட்களைக் கொண்டது இது யூதர்களின் பிரதான இரண்டாவது பண்டிகை. 

இந்த பண்டிகையை கிறிஸ்தவர்களின் பிறந்த நாள் என்று சரித்திர ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள் அல்லது கருதுகிறார்கள் Lev_23:9-21, Lev_23:15-16, 

பஸ்கா பண்டிகை முடிந்த மறுநாளே இந்த பெந்தெ கொஸ்தே பண்டிகை ஆரம்பமாகிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்ட மறுநாள் முதல் இந்த பண்டிகை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்து பஸ்கா பண்டிகை அன்று சிலுவையில் அடிக்கப் பட்டார். Joh_13:1, Joh_18:28, Joh_18:39, Joh_19:14, 

புதிய ஏற்பாட்டில் ஆவியின்படி பெந்தெகொஸ்தே பண்டிகையின் பொருள்:- 

1. கிறிஸ்துவின் உபதேசங்களை நடைமுறைப்படுத்தி தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளுகிறவர்கள் / ஆண் பிள்ளைகள், தங்களுடைய, ஆவி, ஆத்துமா, சரீரத்தில் விளைந்த முதற்கனிகளின் முதற்பலன்களை, தங்கள் மனவிருப்பத்தின்படி தேவனுடைய சமூகத்தில் கொண்டு வந்து காணிக்கை செலுத்தி பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுதல். 

பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள வழிமுறைகள். 

1-1 பஸ்கா பண்டிகையின் நியமங்களை ஆவிக்குரிய நிலையில் ஆசரித்திருக்க வேண்டும். 

1-2 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தரிசனத்தை / ஒலிவ மலையின் தரிசனத்தை பெற்றிருக்க வேண்டும். Act_1:1-5, 

1-3 பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுவதற்காக எருசலேமில் / தேவனுடைய வார்த்தைகளின் படி காத்திருக்க வேண்டும். Act_1:1-5, 

1-4 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தரிசனத்தை பெற்றுக் கொண்டதிலிருந்து எருசலேமில் / தேவனுடைய வார்த்தைகளின் படி காத்திருப்பதற்காக வந்து சேருவதற்கு, கடந்து செல்ல வேண்டிய ஓய்வு நாள் பிரயாண தூரம் / ஓய்வு நாள் பிரமாணங்களை கடந்து செல்ல வேண்டும். Act_1:12-15 

1-5 எருசலேமில் பெந்தெகொஸ்தே நாளில் பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவி அருளப்பட்டது. Act_2:1-5, 

1-6 பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்கள் 1Co_12:7-12, 1-7 கிறிஸ்துவின் சரீர அவயவங்களில் பரிசுத்த ஆவியின் கிரியைகள் Eph_4:11-16 

2. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேர்ந்து, அதைக்கட்டிக் கொண்டு, அதில் வாசம் பண்ணும்போது, கர்த்தர் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. Deu_26:1-3 

3. கர்த்தர் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட வாக்கு தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்ட படியால் எனக்கு தேவன் பகிர்ந்து கொடுத்த தேவனுடைய சித் தத்தை அறிந்து கொண்டேன் என்று இன்று உம்முடைய தேவ னாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 

Deu 26:1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம் பண்ணும்போது, 

Deu 26:2 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் சேதத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத் திற்குப்போய், 

Deu 26:3 அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி : கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம் முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன், என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்தியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 

3. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் என்னை விடுதலையாக்கி பாலும், தேனும் ஓடுகிற இந்த நல்ல தேசத்தை தேவன் எங்களுக்கு கொடுத்தார் :- 

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் எங்களை விடுதலையாக்கி தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங் களையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆசீர் வாதங்களையும் தேவன் எங்களுக்கு கொடுத்தார். Deu_26:4-9, 

Deu 26:4 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடைiயை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலி பீடத் திற்கு முன்பாக வைக்கக்கடவன். 

Deu 26:5 அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப் போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து? அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான். 

Deu 26:6 எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப் படுத்தி, எங்கள் மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது, 

Deu 26:7 எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக் கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஓடுக்கத்தையும் பார்த்து, 

Deu 26:8 எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தி னாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற் புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, 

Deu 26:9 எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத் தார். 

4. தேவன் எங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களின் முதற் பலன்களை உம்முடைய சமூகத்தில் கொண்டு வந்து சேர்த்தேன் என்று நீயும், லேவியனும், பரதேசியும் உன் வீட்டாரும் சந்தோஷப் படுவீர்களாக 

தேவன் எங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களின் முதற் பலன்களையெல்லாம் உம்முடைய சமூகத்தில் கொண்டுவந்து சேர்த் தேன்; இவைகள் உம்முடைய சித்தப்படி எங்களுக்கு கொடுத்தீர், எங்களுடைய திறமைகளினால் அல்ல என அறிக்கையிட்டு கர்த் தருக்கு முன்பாக பணிந்து நீயும், லேவியன், பரதேசி உன் வீட்டாரும் சந்தோஷப்படுவீர்களாக Deu_26:10-11, 

Deu 26:10 இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டு வந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்த ருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதி யில் பணிந்து 

5. மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து வந்து, நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற் குக் கீழ்ப்படிந்து தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை. 

தேவனால் முன் குறிக்கப்பட்டு முதலாவது, அழைக்கப்பட்ட வர்களின் நிலையைக் கடந்து, இரண்டாவது தெரிந்து கொள்ளபட்ட வர்களின் நிலையைக் கடந்து, மூன்றாவது உண்மையுள்ளவர்கள் நிலையைக் வந்தடைந்தவர்கள்; தங்கள் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து வந்து, நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத் திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை. Deu_26:12-14, 

Deu 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்து திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்த பின்பு, 

Deu 26:13 நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்தியில் போய் அவரை நோக்கி : தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்ட ளைகளின் படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலி ருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள் ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை. 

Deu 26:14 நான் துக்கங்கொண்டாடும் போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்க வும் இல்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். 

6. முதல் வருஷத்திலே தானாய் விளைகிறதை சாப்பிடு வீர்கள்; இரண்டாம் வருஷத்திலே தப்பிப்பயிராகிறதை, சாப்பிடுவீர் கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். 

Rev 17:14 ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜவுமாயிருக்கிற படியால்; அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்ட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மை யுள்ளவர்களுமா யிருக்கிறார்கள் என்றான். 

தேவனால் முன் குறிக்கப்பட்டு முதலாவது அழைக்கப் பட்டவர்களின் நிலையிலிருந்தபோது என்னுடைய மனதில் தானாக / சுயமாக வெளிப்பட்ட ஆலோசனைகளையே என் ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்தேன். 

இரண்டாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிலையி ருந்தபோது, மற்றவர்களுக்கு வெளிப்படாத தேவ ஆலோசனைகளைத் தேடிப்பார்த்து, தெரிந்து கொண்டு அவைகளை என் ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்தேன், மூன்றாவது உண்மையுள்ளவர்கள் நிலைமைக்கு வந்தடைந்தபோது என்னுடைய இருதயத்தில் தேவனுடைய சத்தியமான வசனங்களை விதைத்து தேவன் பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் ஆசீர்வாதங்களை அறுத்து, அதன் கனிகளை 30% / 60% / 100% என்கிற அளவுகளில் என் ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்தேன் Isa_37:30-32, 

உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால் : இந்த வருஷத்திலே தானாய் விளைகிறதை சாப்பிடுவீர்கள் இரண்டாம் வருஷத்திலே தப்பிப்பயிராகிறதை சாப்பிடுவீர்கள், மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து , திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். 

7. நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப் படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்ட படி சகலமும் செய்தேன். 

Deu 26:15 நீர் உமது பரிசுத்த வாசஸ்தாலமாகிய பரலோகத் திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேல ரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக. 

நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவர்களையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்களையும் பரிசுத்த ஆவியின் கிரியைகளின் மூலம் தேவன் பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் ஆசீர்வாதங்களையும் ஆசீர்வதியும் என்று சொல்லுவாயாக. 

8. பெந்தெஸ்கொஸ்தே பண்டிகையின் நியமங்களை ஆச ரித்து வந்தால் தேவனுக்கு சொந்த ஜனமாயிருப்பாய் / எனக்குப் பரி சுத்த ஜனமாயிருப்பாய் எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்ச்சி யிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன். 

Deu 26:16 இந்தக் கட்டளைகளின் படியும் நியாயங்களின் படியும் நீ செய்யும் பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார் ஆகையால் உன் முழு இருதயத்தோடு உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய். 

Deu 26:17 கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய், 

Deu 26:18 கர்த்தரும் உனக்கு வாக்குக் கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி : நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், 

Deu 26:19 நான் உண்டு பண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும் படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான். 

பெந்தெகொஸ்தே பண்டிகையின் நியமங்களின்படி அறுப் புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவ னாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருத யத்திலே சொல்லுகிறதில்லை. ஆகையால் தேவன் அவர்களுக்கு அந்தந்தப் பருவத்திலே அவர்களுக்கு மழையையும், முன் மாரியையும் பின்மாரியையும் கொடுக்காத படியினால், அவர் களுடைய ஆசீர்வாதங்களை இழந்து போகிறார்கள். 

Jer 5:20 நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால், 

Jer 5:21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கோளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள். 

Jer 5:22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார் ; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாத படிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாத படிக்கும், கடக்கப் கூடாhத நித்திய பிரமாணமாகச் சமுத்திரத்தின் மணலை எல்லை யாய் வைத்திருக்கிறவராகிய எனக்கு முன்பாக அதிராதிருப்பீர்களோ? 

Jer 5:23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம் பண்ணிப் போய்விடுகிறார்கள். 

Jer 5:24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக் குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை. 

Jer 5:25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக் கிறது. 

கூடாரப் பண்டிகை:- 

கூடாரப் பண்டிகை / சேர்ப்புக்கால பண்டிகை ஏழு நாட்களை கொண்டது, இது யூதர்களின் பிரதான மூன்றாவது பண்டிகை, ஏழாம் மாதம் முதலாம் நாள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பின் செய்தியை ஞாகப்படுத்தி, ஏழாம் மாதம் பத்தாம் தேதி தேவ சமூகத் தில் தங்களை தாழ்த்தி பாவ நிவிர்த்தி செய்து; ஏழாம் மாதம் பதி னைந்து முதல் இருபத்தியொன்றாம் தேதி வரை எகிப்தில் கூடாரங் களின் ஏழு நாட்கள் கூடாரங்களில் வாசம் பண்ணவேண்டும் / புதிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுவதற்காக பழையவைகளை தங் களைவிட்டு விலக்கி, தங்கள் தகுதிக்கேற்றபடி தேவ சமூகத்தில் காணிக்கைகளை கொண்டு வரவேண்டும். 

புதிய ஏற்பாட்டில் ஆவியில் படி கூடாரப் பண்டிகையின் பொருள் :- 

1. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரித்து, ஓய்ந்திருந்து கர்த்தருடைய பண்டிகையாக நினைவு கூறுவாயாக Lev_23:1-3, 

2. ஏழாம் மாதம் முதலாம் தேதி தேவனுடைய நியாயத் தீர்ப்பின் செய்தியை எக்காள சத்தத்தால் ஞாபகக் குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடுகிற பரிசுத்த ஓய்வு நாள் Lev_23:23-25, Eze_33:1-7, Hos_8:1-4, Isa_48:1-2, Nag_1:7, 2Ti_2:19, 1Co_8:3, 

3. ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்கள் ஆத்துமாவை தாழ்மைப்படுத்தி, பாவ நிவர்த்தி செய்யும் விசேஷித்த பரிசுத்த ஓய்வு நாள் டு Lev_23:26-32, Heb_11:13-16, 

4. போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகம்படி, பழையதை விலக்கி, பின்பு கூடாரப்பண்டிகையை ஆசாரிக்க வேண்டும். Deu_16:13-15, Lev_26:10, Lev_23:39, Exo_23:14-17, 

5. ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதி முதல் ஏழு நாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக. Lev_23:33-36, Heb_9:8-10, 

6. நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக் கைகளும் பொருத்தனைகளும் உற்சாக பலிகளும் தவிர, நீங்கள் அந்தந்த நாளுக்குத் தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகன பலி, போஜபலி, இரத்த பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும் படி சபை கூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே. Lev_23:37-38, 

7. எகிப்தில் கூடாரங்களின் குடியிருப்பதை உங்கள் சந்ததி யார் அறிந்து கொள்ளும்படி நீங்கள் ஏழு நாட்கள் கூடாரங்களில் வாசம் பண்ண வேண்டும். Lev_23:39-44, Heb_11:13-16, Lev_21:16, Lev_21:24, Lev_22:1,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries