3-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல். v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-
3-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல்:-
3-2 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல்:-
3-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல்:-
தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைசெய்து, தேவனுடைய இரட்சிப்பை தன் இச்சையாக, மனிதனே எடுத்துக்கொண்டு, சரீரத்தில் எழுத்தின்படி, ஜலத்தினால் ஸ்நானம் பெற்றுக்கொள்ளூகிறபோது:
ஆவியின்படி, ஆவியிலும் ஆத்துமாவிலும், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு விட்டதாக நினைத்துக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தின் தரிசனங்களை பார்க்க முடியாமல் ஆத்துமாவில் குருடராயிருக்கிறார்கள்;
இவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; இப்படி கிறிஸ்தவ மதத்தின் கற்பனைகள் மூலம் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய குருடர்கள் ஆவி ஆத்துமாவில் குருடராயிருக்கிறவர்களுக்கு, வழிகாட்டிக்கொண்டிருக்கிறபடியால் இருவரும் குழியிலே விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
1Co 10:1 இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
1Co 10:2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
1Co 10:3 எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
1Co 10:4 எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
1Co 10:5 அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
1Co 10:6 அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
Mar_1:4,Act_2:38; 1Pe_3:21, Heb_9:8-10, 1Co_10:1-6; Exo_13:21-22 , Exo_14:17-20, Exo_14:21-25, Joh_3:3-8,Tit_3:5-7; Mat_23:13-15,Mat_3:11;Mar_16:16, 1Co_3:11-17;
3-2 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல்:-
மனிதன் தன்னுடைய சரீரத்தில் செய்த பாவங்களையும் / கரும பாவங்களையும், ஆவி,ஆத்துமாவில், மரணத்தை ஏற்படுத்தும் பாவங்களையும்,/ ஜென்ம பாவங்களையும்,தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு;
ஆவியின்படி, ஆவி ஆத்துமாவில், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, ஆவி ஆத்துமாவில் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கிறபோது; அல்லது நீதியின் கிரியைகளை செய்கிறபோது, ஆவி ஆத்துமாவில், மறுபடி பிறந்த ஆவிக்குரிய மனிதன், தேவனுடைய ராஜ்யத்தின் தரிசனங்களை கண்டு, மகிழ்சியடைகிறான்.
Mar_1:4,Act_2:38; 1Pe_3:21, Heb_9:8-10, 1Co_10:1-6; Exo_13:21-22 , Exo_14:17-20, Exo_14:21-25, Joh_3:3-8,Tit_3:5-7; Mat_23:13-15,Mat_3:11;Mar_16:16, 1Co_3:11-17;
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)