தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 18


கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 4-0

4-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து அந்நிய பாஷையைப்       பெற்றுக்கொள்ளுதல் v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள்:-

4-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து அந்நிய பாஷையைப்       பெற்றுக்கொள்ளுதல்:-

4-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுதல்:-

4-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து அந்நிய பாஷையைப்       பெற்றுக்கொள்ளுதல்:-

1 தேவனுடைய வார்த்தைகளினால் ஆவி,ஆத்துமாவில் மறுபடியும்  பிறந்து மனந்திரும்பாமல்; தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்துகொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தை  அறிக்கைசெய்து செய்துகொண்டும்

2 மனிதன் தன்னுடைய  சரீரத்தில் செய்த பாவங்களை / கரும பாவங்களை மனிதனுக்கு முன்பாக அறிக்கையிட்டு, மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்காமல் அல்லது நீதியின் கிரியைகளை செய்யாமல்,  பாவமன்னிப்பின்  தேவனுடைய இரட்சிப்பை தன் இச்சையாக அல்லது வலுக்கட்டாயமாக மனிதனே எடுத்துக்கொண்டும்,    

3 சரீரத்தில் எழுத்தின்படி,  ஜலத்தினால் ஸ்நானம் பெற்றுக்கொள்ளூகிறபோது, ஆவியின்படி, ஆவி  ஆத்துமாவிலும், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு விட்டதாக நினைத்துக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தின் தரிசனங்களை பார்க்க முடியாமல் ஆத்துமாவில் குருடராயிருந்துகொண்டிருக்கிறார்கள்;

Mat 23:25  மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

Mat 23:26  குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

Mat 23:27  மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.

Mat 23:28  அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

மாயக்காரராகிய இவர்கள் மனுஷருக்கு முன்பாக நீதிமான்கள் என்று காணப்பட்டு, தேவனுக்கு முன்பாக உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறவர்கள்:  கிறிஸ்தவ மதத்தின் கற்பனைகள் மூலம் பரிசுத்த ஆவிக்காக காத்திருக்கிறபோது, இவர்களூடைய ஆவி,ஆத்துமா, சரீரம், ஒன்றுக்கொன்று விரோதமாக பிரிவினைகளூடனும்  மார்க்கபேதங்களுடனும் இருக்கிறது. 

Gal 6:7  மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Gal 6:8  தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

Gal 6:9  நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

கிறிஸ்தவ மதத்தின் கற்பனைகள் மூலம் இயேசு கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரம் போட்டவர்களின் கிரியைகள் எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதித்து; கிறிஸ்தவ மதத்தை பின்பற்றின காலத்திற்கேற்றபடியுள்ள கிரியைகள்   அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்.

கிறிஸ்தவ மதத்தின் கற்பனைகள் மூலம் பரிசுத்த ஆவிக்காக காத்திருக்கிறபோது, இவர்களூடைய ஆவி,ஆத்துமா, சரீரம், ஒன்றுக்கொன்று விரோதமாக பிரிவினைகளூடனும்  மார்க்கபேதங்களுடனும் இருக்கிறபடியால்,தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மூலம் அர்த்தமில்லாத  அந்நியபாஷையினால் பைத்தியத்தின் ஆவி வெளிப்படுத்தப்படுகிறது.

1Co 14:13  அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்.

1Co 14:14  என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.

1Co 14:15  இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.

1Co 14:16  இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.

1Co 14:17  நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

1Co 14:24  எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.

1Co 14:21  மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.

1Co 14:22  அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

1Co 14:23  ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

1Co 14:25  அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.

Isa 28:11  பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.

Isa 28:12  இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

Isa 28:13  ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.

4-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுதல்:-

1 தேவனுடைய வார்த்தைகளினால் ஆவி,ஆத்துமாவில் மறுபடியும்  பிறந்து / மனந்திரும்பி; தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களை தங்களுடைய இருதயத்திற்கும்  வாய்க்கும் சமீபமாக வைத்திருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தை  அறிக்கைசெய்தல்.

2 மனிதன் தன்னுடைய  சரீரத்தில் செய்த பாவங்களையும் / கரும பாவங்களையும், ஆவி, ஆத்துமாவில், மரணத்தை ஏற்படுத்தும் பாவங்களையும்,/ ஜென்ம பாவங்களையும், தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு, மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கிறபோது;  அல்லது நீதியின் கிரியைகளை செய்கிறபோது,  பாவமன்னிப்பின்  தேவனுடைய இரட்சிப்பு, தேவனுடைய கிருபையினால் தேவனே அந்த மனிதனுக்கு கொடுக்கிறார்.

3 ஆவியின்படி, ஆவி ஆத்துமாவில், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, ஆத்துமாவில் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கிறபோது;  அல்லது நீதியின் கிரியைகளை செய்கிறபோது, ஆவி ஆத்துமாவில், மறுபடி பிறந்த ஆவிக்குரிய மனிதன், தேவனுடைய ராஜ்யத்தின் தரிசனங்களை கண்டு, மகிழ்சியடைகிறான்.

தேவனுடைய ராஜ்யத்தின் தரிசனங்களை கண்டு, மகிழ்சியடைந்திருக்கிற இவர்கள், மனுஷருக்கு முன்பாக நீதிமான்கள் என்று காணப்படாமல், தேவனுக்கு முன்பாக உள்ளத்திலே  தேவனுடைய ராஜ்யத்தின் தரிசனங்களினால் நிறைந்திருந்து:  

கிறிஸ்துவினிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம்  நிறைவேறுவதற்காக, ஓய்வுநாள் பிரமாணங்களை பரிசுத்தமாக ஆசரித்து; எருசலேமாகிய தேவனுடைய வார்த்தைகளில்  காத்திருக்கிறார்கள்.

இவர்கள் பரிசுத்த ஆவிக்காக காத்திருக்கிறபோது, இவர்களூடைய ஆவி,ஆத்துமா, சரீரம், ஒன்றுக்கொன்று ஒருமனப்பட்டும் தேவனுடன் ஐக்கியமாகவும் இருக்கிறது

Gal 6:7  மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Gal 6:8  தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

Gal 6:9  நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

தேவனுடைய வார்த்தைகளின் மூலம் இயேசு கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரம் போட்டவர்களின் கிரியைகள் எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதித்து; தேவனுடைய வார்த்தைகளின் பின்பற்றின காலத்திற்கேற்றபடியுள்ள கிரியைகள்   அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்.

இவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் மூலம் பரிசுத்த ஆவிக்காக காத்திருக்கிறபோது, இவர்களூடைய ஆவி,ஆத்துமா, சரீரம், ஒன்றுக்கொன்று ஒருமனப்பட்டும் தேவனுடன் ஐக்கியமாகவும் இருக்கிறபடியால், பிதாவின் வாக்குத்தத்தின்படி சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் மூலம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு,

அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

அப்பொழுது சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்களூம்/ தேவனுடைய ஆசரிப்பு முறைகளை பின்பற்றுகிறவர்களும்  எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களூம் / தேவனுடைய வார்த்தைகளை பெற்றுக்கொண்டவர்களும்  தங்கள் தங்கள் ஜென்மபாஷைகளிலே அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்து   தேவனுடைய மகத்துவங்களை உணர்ந்து கொண்டார்கள்


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries