11-0 பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்களுக்கு / கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களுக்கு; கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்ளுவதற்காக தேவனுடைய எச்சரிப்பின் செய்தி:-
11-1 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து வரப்பண்ணி, தேவனுடைய சமுகத்தில் தேவனுக்கு ஆராதனைசெய்யவதற்காக; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டுக்கொண்ட, ஜனங்களுக்கு; கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்ளுவதற்காக தேவனுடைய எச்சரிப்பின் செய்தி
Mic 6:1 கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது.
Mic 6:2 பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.
Mic 6:3 என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல்.
Mic 6:4 நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.
Mic 6:5 என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
Mic 6:6 என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?
Mic 6:7 ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?
Mic 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
11-2 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை மீட்டுக்கொண்டபோது, பல அந்நிய ஜாதியான ஜனங்களும் அவர்களுடன் புறப்பட்டு வந்தார்கள்:-
தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து வரப்பண்ணி, பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக்கொண்டு தேவனுடைய சமுகத்தில் தேவனுக்கு ஆராதனைசெய்யவதற்காக; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டுக்கொண்டபோது, பல அந்நிய ஜாதியான ஜனங்களும் அவர்களுடன் புறப்பட்டு வந்தார்கள்.
Exo 12:35 மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
Exo 12:36 கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
Exo 12:37 இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
Exo 12:38 அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
Exo 12:39 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.
Exo 12:40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
Exo 12:41 நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
Exo 12:42 கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.
11-3 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை மீட்டுக்கொண்டபோது, பல அந்நிய ஜாதியான ஜனங்களும் அவர்களுடன் புறப்பட்டு வந்து, சரித்திரத்தில் நான்கு இடங்களில் யூதாவின் தேசத்தைப் பாழாக்கி சிதறடித்திருக்கிறார்கள்:-
Zec 1:12 அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
Zec 1:13 அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.
Zec 1:14 அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
Zec 1:15 நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.
Zec 1:16 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
Zec 1:17 இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
Zec 1:18 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.
Zec 1:19 அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
Zec 1:20 பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.
Zec 1:21 இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக்கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.
11-4 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை மீட்டுக்கொண்டபோது, பல அந்நிய ஜாதியான ஜனங்களும் அவர்களுடன் புறப்பட்டு வந்து, சரித்திரத்தில் யூதாவின் தேசத்தைப் பாழாக்கி சிதறடித்திருக்கிற முதலாவது இடம் :-
தேவனுடைய கட்டளையின்படி இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடந்த பின்பு வாக்குத்தத்த தேசத்திலே பன்னிரெண்டு கல்லுகளை நாட்டி அவைகளில் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை எழுதி; ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் கூறின இடத்தில் பிள்ளைகளுக்கு / பின் சந்ததிக்கு அடையாளமாக கட்டப்பட்ட பலிபீடம். (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் பாதுகாக்கப்படுகிறது.) Deu_27:1-10, Deu_28:1-10, Deu_29:1-14, Deu_30:1, Jos_4:1-9, Psa_78:1-5, Psa_78:6-11,
மனிதர்களுடைய சுய ஆலோசனைப்படி தாங்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்யத்தக்கவர்கள் என்பதை தங்களுடைய பிள்ளைகளுக்கு / பின் சந்ததியாருக்கு அறிவிக்கும் படியாக; நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் இல்லாமலும், அதன் தொடர்புடைய ஆசீர்வாதங்களும் சாபங்களும் உள்ளடங்கிய தேவனுடைய வார்த்தைகள் இல்லாமலும், மற்றவர்களுடைய பார்வைக்கு மட்டும் பெரிதாக காட்சியளிக்கும்படியாக கட்டப்பட்ட பெரிய பலிபீடம் (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் சிதறடிக்கப் பட்டது)
Num_32:1-5, Num_32:17-24, Jos_22:1-8, Jos_22:9-14, Jos_22:15-20, Jos_22:21-28, Jos_22:29-33,
11-5 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை மீட்டுக்கொண்டபோது, பல அந்நிய ஜாதியான ஜனங்களும் அவர்களுடன் புறப்பட்டு வந்து, சரித்திரத்தில் யூதாவின் தேசத்தைப் பாழாக்கி சிதறடித்திருக்கிற இரண்டாவது இடம் :-
எருசலேமிலே வாசம் பண்ணின இளைய தலைமுறையினர் தேவனுடைய ஆலோசனைகளிலும் பிரமாணங்களிலும் கண்டிப்பாக இருந்து, எருசலேம் ஆலய பலிபீடத்தில் தேவனுக்கு பலிசெலுத்தி ஆராதித் தார்கள் (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் பாதுகாக்கப் பட்டது.) .) 2Ch_10:1-11, 2Ch_10:12-19, 2Ch_11:1-4, 1Ki_12:1-11, 1Ki_12:12-19, 1Ki_12:20-24,
இஸ்ரவேலின் பத்து கோத்திரத்திலுள்ள முதியோர்களின் ஆலோசனைப்படி, தாவீதின் வம்சத்தை விட்டு பிரிந்து சென்று, மனிதர்களுடைய சுய ஆலோசனையின் படி உருவாக்கப்பட்ட இரண்டு கன்றுக்குட்டிகளை வணங்கி, மேடைகளில் ஆராதனை செய்து வந்தார்கள். (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது) 2Ch_11:13-17, 2Ch_13:8-12, 1Ki_12:25-33, 2Ki_17:13-19, 2Ki_17:20-23,
11-6 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை மீட்டுக்கொண்டபோது, பல அந்நிய ஜாதியான ஜனங்களும் அவர்களுடன் புறப்பட்டு வந்து, சரித்திரத்தில் யூதாவின் தேசத்தைப் பாழாக்கி சிதறடித்திருக்கிற மூன்றாவது இடம் :-
இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் சிறையிருப்புக்கு சென்றபோது, சமாரியாவிலே குடியிருந்து ஜனங்களில் ஈனமானவர்களை ஆசாரியர்களாக நியமித்து, கர்த்தருக்கு பயந்தும், தாங்கள் விட்டு வந்த ஜாதிகளின் முறைமைகளை பின்பற்றியும், மேடைகளை கட்டி ஆராதனை செய்து வந்தார்கள் (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது.) 2Ki_17:21-27, 2Ki_17:28-34, 2Ki_17:35-41, Lev_18:1-5,
11-7 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை மீட்டுக்கொண்டபோது, பல அந்நிய ஜாதியான ஜனங்களும் அவர்களுடன் புறப்பட்டு வந்து, சரித்திரத்தில் யூதாவின் தேசத்தைப் பாழாக்கி சிதறடித்திருக்கிற நாண்காவது இடம் :-
எருசலேமிலுள்ள ஆலய பலிபீடத்தில் ஜாதிகளுடைய ஆசரிப்பு முறைகளை கொண்டு வந்து தேவனுக்கு ஆராதனை செய்து வருகிறார்கள் (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது) ) Eze_9:1-4, Eze_9:5-11, Eze_11:1-6, Eze_11:7-12, Eze_11:13-21, Eze_5:5-11
11-8-0 பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளூகிறதற்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை தேவனுடைய ஆவியினால் அறிந்து உணர்ந்துகொள்ளும் வழிமுறைகள்:-
11-8-1 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது இருளிலே வெளிச்சம் பிரகாசிக்கிறது. Hos_6:1-3, Joh_1:1-5, Joh_3:19-21, 2Pe_1:19, Isa_50:10-1, Job_38:12-13,
11-8-2 கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்களின் நன்மை தீiமைகளை பகுத்தறிகிறபோது இருதயத்தில் தேவ நீதியின் வசனம் வெளிச்சமாக வெளிப்படுகிறது. . Heb_6:1-2, Heb_5:12-14,Rom_9:4, Rom_3:1-2,
11-8-3 தேவனுடைய கற்பனைகளின்படி நடக்கிறபோது நற்கிரியைகளினால் வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. Isa_60:1-9, Isa_60:9-14, Isa_51:3-5, Mic_4:1-4, Isa_2:1-6, Joh_7:18-19, Joh_12:43,
11-8-4 கிறிஸ்துவின் வார்த்தைகளின் மூலம் மனந்திரும்பின பின்பு நீதியின் கிரியைகளை செய்கிறபோது வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. . Mat_6:16-18, Isa_58:5-10, Isa_58:11-14,
11-8-5 கிறிஸ்துவின் வார்த்தைகளின் மூலம் நேரடியாக நீதியின் கிரியைகளை செய்கிறபோது வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. Mat_5:14-16, Mat_6:21-23, Luk_8:16-18, Luk_11:33-36, Luk_12:32-37, Rev_2:5,
11-8-6 தேவனுடைய ஆலோசனைகளை அனு தினமும் சிந்தித்து, தியானிக்கிறவர்களுடைய இருதயத்தில் வெளிச்சம் பிரகாசித்து வார்த்தைகளாக வெளிப்படுகிறது. Gen_6:8-9, Mal_2:5-9, Jer_23:18-24, Jer_23:25-32, 1Co_2:4-10, 1Co_2:11-16, Isa_64:4-14,
11-8-7 ஒரு குறிப்பிட்ட வசனத்தின் தொடர்பில், நியாயப் பிரமாணத்தையும் தீர்க்க தரிசனங்களையும் சிந்தித்து தியானிக்கும் போது, தேவ நீதியின் வசனம், இருதயத்தில் புதிய வெளிச்சமாக வெளிப்படுகிறது. Rom_3:20-22, Rom_10:6-11, Deu_30:11-16, Deu_30:17-20, 1Jo_4:1-6, 2Jo_1:7-11,
11-8-8 ஒரு குறிப்பிட்ட வசனத்தின் தொடர்பில் நியாயப் பிரமாணத்தையும் அவைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றப் பட்ட சாட்சியின் வசனத்தையும் சிந்தித்து தியானிக்கும் போது இருதயத்தில் புதிய விடியக்காலத்து வெளிச்சம் வெளிப்படுகிறது. . Isa_8:16-20, Isa_41:21-29, Joh_10:34-36, Dan_5:12-17, Psa_82:1-8, Psa_75:1-10, Son_6:9-10,
11-9-0 பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியின் மூலம் பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்கள் நிறைவேற்றும் முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஊழியங்கள்:-
11-9-1 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்கள்; முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களினால் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் மூலம் ஆவியில் பெலனடைந்து,
முதலாவது எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிலும், இரண்டாவது யூதேயாவாகிய தேவனுடைய ஆசரிப்பு முறைகளுடைய சுத்திகரிப்பிலும், மூன்றாவது சமாரியாவாகிய கிறிஸ்தவர்களிடத்திலும், நான்காவது பூமியின் கடைசி வரை பரவியிருக்கிற புற ஜாதிகளிடத்திலும் சாட்சியாக இருக் கிறார்கள். Act_1:4-5, Act_1:12, Act_2:1, Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:20-23, Act_1:8, 1Co_12:4-11, Rom_12:2-8, Eph_4:11-13, 1Pe_4:10-11,
11-9-2 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள்; முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்ட படியால், அவர்கள் மூலம் எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், புறஜாதிகளுக்கும் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது. Gal_2:7-10, Rom_9:30-33, Rom_11:11, Rom_11:16-18, Rom_11:19-22, Joh_1:11-13, Joh_4:22-25,
11-9-3 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இடறிவிழுந்தும், கீழ்படியாமலும் இருக்கிறவர்களை தேவன் தள்ளினாலும் /சுபாவ ஒலிவ மரத்திலிருந்து காட்டொழிவ மரக்கிளையாகிய கிறிஸ்தவர்களை தேவன் வெட்டினாலும், அவர்களுக்குள்ளே, யாராவது? கிறிஸ்துவின் விசுவாசத்தினால் தேவ நீதியின் பிரமாணத்தை தேடுகிற ஆவிக்குரிய யூதர்கள் இருந்தால், அவர்களை தேவன் கண்டறிந்து, அவர்கள் மூலமாக தேவனுடைய இரட்சிப்பு, எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும், புறஜாதிகளுக்கும் வெளிப்படுகிறது. Gal_2:7-10, Rom_9:30-33, Rom_11:11, Rom_11:16-18, Rom_11:19-22, Joh_1:11-13, Joh_4:22-25,
11-9-4 மோசே தீர்க்க தரிசியின் மூலம் லேவியர்களுக்கு தேவன் கிருபையாக கொடுத்த தேவனுடைய ஊழிய அழைப்புகள்; கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களிடமிருந்து நீக்கப்பட்டு, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கேற்ற கனிகளை கொடுக்கிற ஆவிக்குரிய யூதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. . Heb_10:19-25, Heb_7:11-14, Num_18:6-7, Mat_10:40-42, Luk_20:9-16,
11-9-5 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எழுத்தின் படியுள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் மூலம் தேவ நீதியின் பிரமாணத்தை தேடாமல், பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடுகிறபோது; கிறிஸ்துவாகிய மூலைக்கல்லில் / மூல உபதேசத்தில் இடறி விழுந்து, இவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது. இவர்கள் கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை தேவனுடைய சாபங்கள் இவர்களை தொடருகிறது. Rom_9:30-33, 1Pe_2:6-8, Rom_11:7-11,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)