தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 12-0

12-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S  இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி கடவுளின் பெயரால் தங்கள் இருதயத்தில் ஆராதனை செய்வதற்கு மனிதர்கள் மூலமாக யூதர்களின்  மார்க்கம்   / யூதர்களின்  மதம் வெளிப்படுத்தப்படுகிறது:-

12-1 சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: ஆபிரகாமின் மூலமாக ஆபிரகாமின் சந்ததிகளுக்கு வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் ஏற்படுத்துகிறார்:- 

12-2 தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;, யேகோவா என்னும்  நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: நிறைவேற்றுகிறார்:-

12-3 இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு தம்முடைய குமாரனை பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்:- 

12-4 இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், புறஜாதிகளுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இவைகளினால் ஒருமனமும் ஐக்கியமும் இல்லாமல் பல மார்க்க பேதங்களூடைய , உட்பிரிவுகள் வெளிப்படுகிறது:-

 

12-1 சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: ஆபிரகாமின் மூலமாக ஆபிரகாமின் சந்ததிகளுக்கு வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் ஏற்படுத்துகிறார்:- 

தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியுல்லவர்களாக இருக்கிறவர்கள்; 

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிற இந்த நாட்களில், நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடிய ஒரு சில ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும் தன்னுடைய விசுவாசத்தினால் தேர்ந்தெடுத்து அவைகளை நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு, 

நேரடியாகவும், நிழலாட்டமாகவும் தேவனுக்கு ஆராதனையாக செலுத்தினபடியால் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: ஆபிரகாமின் மூலமாக ஆபிரகாமின் சந்ததிகளுக்கு வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் ஏற்படுத்துகிறார். 

12-2 தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;, யேகோவா என்னும்  நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: நிறைவேற்றுகிறார்:-

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில், தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும்  நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: ஆபிரகாமின் சந்ததிகளுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்காக பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடியவைகளாக இருக்கிற நிழலாட்டமான தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளைகளாக வெளிப்படுத்திக் கொடுத்தார் .

12-3 இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு தம்முடைய குமாரனை பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்:- 

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும்  நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கொடுத்த, மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனை இயேசு கிறிஸ்து என்னும்   நாமத்தினால் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 

மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

ஆகையால் இதுமுதற்கொண்டு இவைகளை பின்பற்றி நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு இவைகளின் மூலம் தேவனுக்கு ஆராதனையை செலுத்துகிறவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார், 

தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கட்டளைகளாக கொடுக்கப்பட்ட ,தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், இயேசு கிறிஸ்து என்னும்  நாமத்தினால் அவைகளின் நிழலாட்டமானவை களிலிருந்து வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு

மாறக்கூடியவைகளாக இருக்கிறவைகளின் மூலம் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியா மலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, இவர்கள் இந்நாள் வரைக்கும் தாங்கள் விட்டு வந்த  எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படியும் முறைமைகளின்படியும் பின்பற்றி , தேவன்    அவர்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படியும் முறைமைகளின்படியும் பின்பற்றி நடந்து, கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி வருகிறார்கள்.

இந்த காரணங்களினால்  ஒவ்வொரு நாளூம் ஒருமனமும் ஐக்கியமும் இல்லாமல் இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளே மார்க்க பேதங்களும், பிரிவினைகளும்,   பெருகி வருகிறது. 

 

12-4-0 இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், புறஜாதிகளுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இவைகளினால் ஒருமனமும் ஐக்கியமும் இல்லாமல் பல மார்க்க பேதங்களூடைய , உட்பிரிவுகள் வெளிப்படுகிறது:-

12-4-1 லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருக்கிற சுத்திகரிக்கும் முறைமைகளுக்கும், யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமைகளுக்கும் மத்தியில்: கருத்துக்களின் வேறுபாடுகள் காரணாமாக, இஸ்ரவேல் ஜனங்களூக்குள்  ஒருமனமும் ஐக்கியமும் இல்லாமல் பல மார்க்க பேதங்களூடைய , உட்பிரிவுகள் வெளிப்படுகிறது:-   

Joh 3:22  இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார். 

Joh 3:23  சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 

Joh 3:24  அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 

Joh 3:25  அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 

Joh 3:26  அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 

Joh 3:27  யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 

Gal 6:12  மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள். 

Gal 6:13  விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள். 

Gal 6:14  நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். 

Gal 6:15  கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். 

Gal 6:16  இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக. 

Gal 6:17  இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன். 

Gal 6:18  சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென். 

Joh_3:25; Joh_2:6, Gal_6:12-18; Mar_7:2-5; Luk_2:22;Mat_3:11 , Mar_1:4, Mar_1:8, Luk_3:16 , Joh_1:33, Eph_5:26; Heb_9:10, Heb_9:19, Heb_10:22; Mat_3:11;  Mar_7:8

 Heb_9:10, Heb_9:13-14, Heb_9:23; 1Pe_3:21;

12-4-2 யூதா கோத்திரத்தின் ஜனங்கள் மட்டும், எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்:- 

Lev 18:1  பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 

Lev 18:2  நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 

Lev 18:3  நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், 

Lev 18:4  என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 

Lev 18:5  ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர். 

2Ki_17:16-19;Eze_11:11-15,Lev_18:1-5, Lev_20:23; Exo_23:24;

Deu_12:1-5, Deu_12:6-8,Deu_12:30-31; Jer_10:2-3; Rom_12:1-3;

12-4-3 யூதா கோத்திரத்தின் ஜனங்கள் பின் பற்றிக்கொண்டிருக்கிற வழிபாடுகளையும், யூதர்களூடைய  சுத்திகரிக்கும் முறைமைகளை விட்டு பிரிந்து சென்ற இஸ்ரவேல் ஜனங்களூடைய   கருத்துக்களின் வேறுபாடுகள்  காரணாமாக, யூதர்களூடைய மார்க்க பேதங்களூம் , யூத மதத்தினுடைய உட்பிரிவுகளூம்  வெளிப்படுகிறது:-. 

1Ki 12:14  என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான். 

1Ki 12:15  ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. 

1Ki 12:16  ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 

1Ki 12:17  ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான். 

1Ki 12:18  பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான். 

1Ki 12:19  அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போயிருக்கிறார்கள். 

1Ki 12:20  யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை

1Ki_11:13, 1Ki_11:32, 1Ki_11:36, 1Ki_12:20; Hos_11:12; 2Ki_17:20-24; 2Ki_17:25-29; 2Ki_17:32-37; 2Ki_17:38-41;   Mat_15:24-26; Mat_10:5-6;  Mat_2:6, Mat_2:20-21 , Mat_8:10, Mat_9:33, Mat_10:6,  Act_13:23-24 ,  Rom_9:27 , Rom_9:31, Rom_10:1, Rom_10:19, Rom_10:21

12-4-4  இஸ்ரவேல் ஜனங்களை  விட்டு பிரிந்து சென்றவர்கள் சமாரியர்கள்   என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்கள் கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படி,  ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி வருகிறார்கள்:-

2Ki 17:27  அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்தத் தேசத்துத் தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான். 

2Ki 17:28  அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். 

2Ki 17:29  ஆனாலும் அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள். 

2Ki 17:30  பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும், 

2Ki 17:31  ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள். 

2Ki 17:32  அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். 

2Ki 17:33  அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். 

2Ki 17:34  இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை. 

Joh_4:1-5, Luk_17:11;2Ki_17:20-24; 2Ki_17:25-29; 2Ki_17:32-37; 2Ki_17:38-41; 1Ki_13:32, 1Ki_16:24 , 1Ki_16:28-29 , 1Ki_16:32, 1Ki_18:2, 1Ki_20:1,  Joh_4:6-10, Joh_4:11-15, Joh_4:16-20; Joh_4:21-25;Joh_4:26-30;     Luk_17:11;, Joh_4:39-40 , Act_8:25;Luk_17:16, Joh_8:48;Act_8:1,  Act_9:31

 

12-4-5 பாபிலோனின்  சிறையிருப்பிலிருந்து திரும்பி எருசலேமிற்கு வந்த யூதா கோத்திரத்தின் ஜனங்கள் கலிலேயர்கள், என்று அழைக்கப்படுகிறார்கள்; இவர்கள் யூதர்களூடைய  சுத்திகரிக்கும் முறைமைகளை பின்பற்றிக்கொண்டு, புறஜாதிகளின் முறைமைகளின்படி நடவாமல் , இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்:- 

Ezr 1:1  எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: 

Ezr 1:2  பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 

Ezr 1:3  அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். 

Ezr 1:4  அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான். 

Ezr 1:5  அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். 

Ezr 1:6  அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். 

Ezr 1:7  நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். 

Ezr 1:8  அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். 

Dan_1:1-7, 2Ki_24:1-2, 2Ki_24:13;  2Ch_36:5-7;Dan_9:1-5, Dan_9:6-11, Ezr_1:1-5, Ezr_1:6-11,Ezr_4:1-3; Ezr_9:8-9, Ezr_9:14; Mat_2:22, Mat_3:13, Mat_4:12,  Mat_4:15, Mat_4:18, Mat_4:23, Mat_4:25, Joh_7:1 , Joh_7:9, Joh_7:41, Joh_7:52 ,  Joh_12:21, Joh_21:2, Act_1:11, Act_5:37, Act_9:31, Act_10:37, Act_13:31;

12-4-6 ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப்/ நீதியின் கிரியைகளை  பின் பற்றிக்கொண்டு:  பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர், தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் நாங்களூம்  யூதர்களூடைய மார்க்கத்தை  பின் பற்றிக்கொண்டு நடப்போம் என்று சொல்லுகிறார்கள்:-

Isa 2:1  ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். 

Isa 2:2  கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். 

Isa 2:3  திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். 

Isa 2:4  அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. 

Isa 2:5  யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். 

Isa 2:6  யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே. 

Isa 2:7  அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை. 

Isa 2:8  அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள். 

Isa 2:9  சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர். 

Isa 2:10  கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். 

Isa 2:11  நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். 

Jer_31:6, Jer_50:4-5; Zec_8:20-23;Isa_2:1-4,   Isa_2:5-6, Mic_4:1-5;Act_2:7-12 , Act_6:5-7, Act_13:43,Act_13:50, Rev_3:9, Est_8:16-17 ,

12-4-7 பரிசேயர்கள்  மரித்தோரின் உயிர்த்தெழுதலும்,  தேவதூதனும், ஆவியும், உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்;இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இந்த கருத்துக்களின் வேறுபாடுகள் காரணாமாக, யூதர்களூடைய மார்க்க பேதங்களூம் , யூத மதத்தினுடைய உட்பிரிவுகளூம்  வெளிப்படுகிறது:-     

Act 23:6  பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். 

Act 23:7  அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. 

Act 23:8  என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். 

Act 23:9  ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள். 

Mat_23:2, Mat_23:13-15 , Mat_23:23, Mat_23:25, Mat_23:27, Mat_23:29,       Phi_3:5-7;2Co_11:22-24;   Act_22:1-4; Act_26:6-9, Act_15:1-5,             Act_26:6-7;Act_23:1-9 , Act_26:4-5;Rom_11:1-5;Gal_1:22, 1Th_2:14;   ,  Act_23:6-9, Act_24:15, Act_24:21, Act_28:20

12-4-8 சதுசேயர்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலும்,  தேவதூதனும், ஆவியும், இல்லையென்று சொல்லுகிறார்கள்.;இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இந்த கருத்துக்களின் வேறுபாடுகள்  காரணாமாக, யூதர்களூடைய மார்க்க பேதங்களூம் , யூத மதத்தினுடைய உட்பிரிவுகளூம்  வெளிப்படுகிறது:     

Act 23:6  பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். 

Act 23:7  அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. 

Act 23:8  என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். 

Act 23:9  ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள். 

Mat_23:2, Mat_23:13-15 , Mat_23:23, Mat_23:25, Mat_23:27, Mat_23:29,Phi_3:5-7;2Co_11:22-24;  Act_22:1-4; Act_26:6-9,

 Act_15:1-5,            Act_26:6-7;Act_23:1-9 , Act_26:4-5;Rom_11:1-5; Gal_1:22, 1Th_2:14,  Act_23:6-9, Act_24:15, Act_24:21, Act_28:20,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries