13-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி, கடவுளின் பெயரால், தங்கள் இருதயத்தில் ஆராதனை செய்வதற்கு மனிதர்கள் மூலமாக கிறிஸ்தவர்களின் மார்க்கம் / கிறிஸ்தவர்களின் மதம் வெளிப்படுத்தப்படுகிறது:-
13-1 தேவன் தம்முடைய குமாரனை, இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால்: பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். என்பதை பகுத்தறிந்து உணர்ந்து கொண்டவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக பிரித்தெடுக்கிறார்.:-
13-2 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் கட்டளைகளாக கொடுக்கப்பட்ட ,ஒரு சில ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும்,பின்பற்றி, கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த எகிப்தின் பாவ சந்தோசத்தின் தேசத்தாருடைய ஜாதிகளுடைய முறைமையின்படியே கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்:-
13-3 இஸ்ரவேல் /கிறிஸ்தவர்கள் ஜனங்களின் சரித்திரமும் அதன் ஞானார்த்தமுள்ள சம்பவங்களும் :-
13-4 தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக கிறிஸ்தவர்களுடைய மதம்/ மார்க்கம் ஜாதிகளுடைய ஆசாரியத்துவ பிரதிஷ்டை முறைகளின் மூலம் மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு :-
13-5 ஜாதிகளான கிறிஸ்தவர்களுடைய மார்க்கம் / மதம் ஆகியவைகளின் ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டை முறைகள் எழுத்தின்படி பொருள்:-
13-6 கிறிஸ்தவர்களுக்குள்ளே ஒருமனமும் ஐக்கியமும் இல்லாமல், இந்நாள் வரைக்கும் ஒவ்வொரு நாளூம் மார்க்க பேதங்களும், மதபேதங்களும் கிறிஸ்தவர்களுடைய சபையின் உட்பிரிவினைகளும் பெருகி வருகிறது:-
13-7 கிறிஸ்தவர்களுக்குள்ளே அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்:-
13-8 லேவியர்கள் ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஒருவனை பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு தேவனுக்கு தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் ஆசாரியனாக நியமிக்கப்படுகிறான்:-
13-9 தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக கிறிஸ்தவர்களுடைய மதம்/மார்க்கம் ஆசாரியத்துவ பிரதிஷ்டை முறைகளின் மூலம் மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.
13-10 தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக கிறிஸ்தவர்களுடைய மதம்/மார்க்கம் ஆசாரியத்துவ பிரதிஷ்டை முறைகளை பின்பற்றுகிறவர்கள்: தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு;அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறார்கள்:-
13-1 தேவன் தம்முடைய குமாரனை, இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால்: பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். என்பதை பகுத்தறிந்து உணர்ந்து கொண்டவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக பிரித்தெடுக்கிறார்.:-
தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியுல்லவர்களாக இருக்கிறவர்கள்;
தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும் நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கொடுத்த, மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு,
தம்முடைய குமாரனை இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். என்பதை பகுத்தறிந்து உணர்ந்து கொண்டார்கள்.
மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
ஆகையால் இதுமுதற்கொண்டு இவைகளை பின்பற்றி நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு இவைகளின் மூலம் தேவனுக்கு ஆராதனையை செலுத்துகிறவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக பிரித்தெடுக்கிறார்.
13-2 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் கட்டளைகளாக கொடுக்கப்பட்ட ,ஒரு சில ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும்,பின்பற்றி, கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த எகிப்தின் பாவ சந்தோசத்தின் தேசத்தாருடைய ஜாதிகளுடைய முறைமையின்படியே கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்:-
தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கட்டளைகளாக கொடுக்கப்பட்ட ,தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் அவைகளின் நிழலாட்டமானவை களிலிருந்து வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு /சத்தியத்திற்கு
மாறக்கூடியவைகளாக இருக்கிறவைகளின் மூலம் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியா மலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி வருகிறார்கள்.
ஆகையால் இவர்கள் இந்நாள் வரைக்கும் தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை செய்யாமல் தேவனாகிய கர்த்தர், இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் கட்டளைகளாக கொடுக்கப்பட்ட ,ஒரு சில ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும்,
கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த எகிப்துதேசத்தாருடைய ஜாதிகளுடைய முறைமையின்படியே ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.மற்றும்
தேவன் அவர்களை அழைத்துப்போகிற ஆவிக்குரிய கானான் தேசத்தில், தங்களுக்கு முன்னே கிறிஸ்தவ மதத்தை பின்பற்றின ஆவிக்குரிய கானான், தேசமாகிய கிறிஸ்தவர்களுடைய முறைமையின்படியே ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த காரணங்களினால் ஒருமனமும் ஐக்கியமும் இல்லாமல் இந்நாள் வரைக்கும் ஒவ்வொரு நாளூம் கிறிஸ்தவர்களுக்குள்ளே மார்க்க பேதங்களும்,மத பேதங்களும் பிரிவினைகளும் பெருகி வருகிறது.
13-3-0 இஸ்ரவேல் /கிறிஸ்தவர்கள் ஜனங்களின் சரித்திரமும் அதன் ஞானார்த்தமுள்ள சம்பவங்களும் :-
13-3-1. இஸ்ரவேல் / கிறிஸ்தவர்கள் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். Eze_20:1-9
13-3-2. இஸ்ரவேல்/கிறிஸ்தவர்கள் ஜனங்கள் வாக்குத்தந்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளுபடி வனாந்தரத்தின் வழியாக கடந்து வந்தார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள சோதனை களையும் வேதனைகளையும் கடந்து வந்தார்கள் Eze_20:10-14,Eze_20:15-22
13-3-3. இஸ்ரவேல்/கிறிஸ்தவர்கள் ஜனங்கள் தங்களுடைய வாக்குத்தத்த தேசத்தில் பன்னிரெண்டு கோத்திரங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட இராஜ்ஜியத்தின் ஆட்சி முறைகள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் பிதாவின் வாக்குத் தத்தமாக கிடைத்த பரிசுத்த ஆவியின் ஊழியங்களும் வரங்களும்; கிறிஸ்துவை தலையாகக் கொண்டுள்ள சரீர அவயவங்களிள் ஒருங் கிணைக்கப்பட்டு ஒரே சரீரத்தின் ஆட்சி முறையாக செயல்படுதல்.
13-3-4. இஸ்ரவேல்/கிறிஸ்தவர்கள் ஜனங்கள் வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர் வாதங்களுக்குள்ளே பிரவேசித்து தங்கள் அருவருப்பான காரியங்களி னாலே தேசத்தை தீட்டுப்படுத்தினார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தின் மூலம் கிடைத்த பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களுக்குள்ளே பிரவேசித்து தங்கள் அருவருப்பான காரியங்களினால் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தினார்கள் / ஊழியத்தை தீட்டுபடுத்தினார்கள். . Eze_20:23-39, Eph_4:30
13-3-5. இஸ்ரவேல்/கிறிஸ்தவர்கள் ஜனங்கள் தங்களுடைய வாக்குத்தத்த தேசத்திலே பிரிக்கப்பட்ட கோத்திரங்களின் இராஜ்ஜிய ஆட்சி முறைகள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் மூலம் கிடைத்த கிருபை வரங்களில் / ஊழிய உடன்படிக்கையில் தங்களுடைய விசுவாச அளவை மீறி, எண்ணவேண்டியதற்கு மிஞ்சி, தன்னை உயர்த்துகிறவர்களின் கிரியைகளை, நாளானது கிறிஸ்துவின் சரிரத்தை விட்டு பிரிந்து சென்ற அவயவங்களாக தங்களுடைய பிரிக்கப்பட்ட கிரியைகளை / ஊழியத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
13-3-6. இஸ்ரவேல்/கிறிஸ்தவர்கள் ஜனங்களின் பிரிக்கப்பட்ட இரண்டு பிரிவு ஜனங்களும் மீண்டும் சிறையிருப்பிற்கு அல்லது அடிமைத்தனத்திற்கு தேவனால் அனுப்பப்படுகிறார்கள் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து பிரிந்து சென்று தங்களுடைய விருப்பப்படி செயல்பட விரும்புகிறவர்களை, அவர்கள் பெற்ற பரிசுத்த ஆவியின் ஊழியங்கள், வரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் விருப்பங்களுக்கே அடிமையாகும்படி தேவன் அவர்களை ஒப்புக்கொடுக்கிறார்.
.2Ki_17:7-23, 2Ki_17:24-29 , 2Ki_17:29, 2Ki_17:30-41, Psa_106:41-48, Amo_7:8-17, Hos_4:16-19, Hos_8:1-14, Hos_9:1-10, (Hos_10:1, Hos_11:1, Hos_12:1, Hos_13:1, Chapters)
13-3-7. இஸ்ரவேல்/கிறிஸ்தவர்கள் ஜனங்கள் புற ஜாதிகளின் ஆட்சி முறையை பின்பற்றி அதற்கு அடிமைகளாக மாறுதல் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் புறஜாதிகளின் ஆட்சி முறைகளை, தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் / ஊழிய பாதையிலும் பின்பற்றினபடியால் தங்கள் விருப்பங்களுக்கே அடிமை யாகும்படி தேவன் அவர்களை ஒப்புக்கொடுக்கிறார். Hos_4:1-11, Hos_4:12-19, Rom_1:21, Isa_5:5-16,
13-3-8. இஸ்ரவேல்/கிறிஸ்தவர்கள் ஜனங்கள் புற ஜாதிகளின் சிறையிருப்பி லிருந்து அல்லது அடிமைத்தனத்திலிருந்து தேவனால் தங்களது இராஜ்ஜியத்திற்கு திரும்புதல் :-
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் புறஜாதிகளின் சிறையிருப்பிலிருக்கிற / அடிமைத்தனத்திலிருக்கிற அருவருக்கப் படதக்கதையும் அசுத்தமானவைகளையும் அகற்றி, தேவனுடைய கட்டளைகளின்படி நடக்க முன் வருகிறவர்கள் எவர்களோ; அவர்களுக்கு தேவன் புதிய ஆவியையும் புதிய இருதயத்தையும் கொடுத்து, தங்களது வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களை திரும்பக் கொடுப்பார் . Eze_20:40-44, Hos_7:1-14, Jer_24:1-7,
13-4 தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக கிறிஸ்தவர்களுடைய மதம்/மார்க்கம் ஜாதிகளுடைய ஆசாரியத்துவ பிரதிஷ்டை முறைகளின் மூலம் மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு :-
ஒரு இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாக கிறிஸ்தவர்களுடைய ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டை முறைகளின் மூலம் நியமிக்கப்படுகிறார்கள்:-
கர்த்தராகிய இயேசுவை நான் என்னுடைய வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று நான் என்னுடைய இருதயத்திலே விசுவாசிக்கிறபோது இரட்சிக்கப்படுகிறேன், நான் சபையினுடைய ஏழு உபதேசங்களை விசுவாசித்து அவைகளை ஏற்றுக்கொண்டு என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன். 2Ch_13:9, 2Ki_16:9-11, 2Ki_16:15-16,2Ki_17:27-28,2Ki_17:32, 1Co_2:11, Col_2:21-23, Mat_15:8-9, Isa_29:13, Joh_10:5-13, Jer_12:2, Eze_33:30-32, Jer_14:14-15, Jer_27:14-15, Jer_29:26, Jer_23:23-40, Jer_29:8-9,
மூன்று மேய்ப்பர்களின் ஊழியர் அழைப்பு
Zec_11:5-8, Eze_34:1-5, Jer_23:1-13, Eze_34:9-10, Amo_6:3-7, Eze_34:4-8, Jud_1:16, Jer_22:17, Jer_12:24, Psa_28:3, Isa_66:5, Joh_16:2, Eze_33:30-32, Jer_12:1-6, Isa_29:9-13, Mat_15:7-9, Mar_7:6-8, Amo_6:5-6, Eze_33:31-32, Isa_65:5, Isa_66:3, Isa_66:17, Hos_7:4-6, Isa_56:10-12,
2Ch 13:9 நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.
2Ch 13:10 எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
2Ch 13:11 அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.
2Ch 13:12 இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.
13-5 ஜாதிகளான கிறிஸ்தவர்களுடைய மார்க்கம் / மதம் ஆகியவைகளின் ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டை முறைகள் எழுத்தின்படி பொருள்:-
ஒருவனுடைய மனதின் பிரமாணங்களினால் வரையருக்கப்பட்ட கோட்பாடுகளூடைய கொள்கை முடிவுகளின் மூலம் மனிதனுடைய கற்பனைகளையும்,ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய கற்பனைகளையும்,ஆசரிப்பு முறைகளையும், அவனுடைய விருப்பத்திற்கும், சமயத்திற்கும், ஏற்றபடி கலந்து;
அவனுடைய மாம்சத்தோடும், இரத்தத்தோடும், குடியிருக்கிற பிரமாணங்களோடு இனைந்து, அவனுடைய சரீர அவயவங்களின் மூலமாக மனிதர்களோடும், தங்கள் தேவர்களோடும் தொடர்புடைய காரியங்களை கிரியைகளினால் வெளிப்படுத்துவது.
13-6 கிறிஸ்தவர்களுக்குள்ளே ஒருமனமும் ஐக்கியமும் இல்லாமல், இந்நாள் வரைக்கும் ஒவ்வொரு நாளூம் மார்க்க பேதங்களும், மதபேதங்களும் கிறிஸ்தவர்களுடைய சபையின் உட்பிரிவினைகளும் பெருகி வருகிறது:-
Isa 4:1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
Isa 4:2 இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
Isa 4:3 அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,
Isa 4:4 சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.
Isa 4:5 அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
Isa 4:6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
13-7 கிறிஸ்தவர்களுக்குள்ளே அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்:-
Isa 5:8 தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!
Isa 5:9 சேனைகளின் கர்த்தர் என் செவி கேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
Isa 5:10 பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.
Isa 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Isa 5:12 அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.
Isa 5:13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.
Isa 5:14 அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள் கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்.
Isa 5:15 சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோம்.
Isa 5:16 சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்.
Isa 5:17 அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள்.
Isa 5:18 மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,
Isa 5:19 நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!
Isa 5:20 தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!
Isa 5:21 தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!
Isa 5:22 சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,
Isa 5:23 பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!
Isa 5:24 இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.
Isa 5:25 ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
13-8 லேவியர்கள் ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஒருவனை பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு தேவனுக்கு தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் ஆசாரியனாக நியமிக்கப்படுகிறான்:-
ஒருவன் ஒரு இளம் பசுவையும் இரண்டு ஆட்டுக்குட்டி களையும் வளர்த்தால் அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் பரிபூரணமாக கிடைக்கும். Isa_7:21-22, Exo_29:1, Rom_12:1-2, Rom_8:3-4,
ஒருவன் தன்னுடைய சரீரம், ஆவி, ஆத்துமா, இவை களை தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து வளர்க்கும்போது, அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் தன்னுடைய அறிவு, புத்தி, ஞானம் இவைகளில் நித்திய ஜீவ வார்த் தைகளாக சுரந்து ஆவிக்குரிய நல்ல உணவு பரிபூரணமாக கிடைக் கிறது. 1Pe_3:18,
இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீத்திரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி ஞானம் இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற் றுக்கொள்ளுகிறது. . Heb_9:8-16, Heb_13:9-15,
13-9 தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக கிறிஸ்தவர்களுடைய மதம் மார்க்கம் ஆசாரியத்துவ பிரதிஷ்டை முறைகளின் மூலம் மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.
இவைகளைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகம்- தலைப்பு பதினெட்டு கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் பகுதியில் பார்க்கவும்
13-10 தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக கிறிஸ்தவர்களுடைய மதம்/ மார்க்கம் ஆசாரியத்துவ பிரதிஷ்டை முறைகளை பின்பற்றுகிறவர்கள்: தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு; அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறார்கள்:-
தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக கிறிஸ்தவர்களுடைய மதம்/ மார்க்கம் ஆசாரியத்துவ பிரதிஷ்டை முறைகளின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றுகிறவர்கள்: தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு;
அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறார்கள் / அறிக்கையிடுகிறவர்களுடைய ஆத்துமா, மாயக்காரனுடைய நீதியினால் பிழைக்கிறது. இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவைகளைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகம்: தலைப்பு நான்கு, கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள் பொருளடக்கம் ஒன்று; கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் பகுதியில் பார்க்கவும்
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)