தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 14-0

14-0 இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்துவின் பலமான ஆகாரமாகிய தேவநீதியின் சத்தியமான வசனங்களூக்கு முன்னேறி செல்ல தேவனால் மூன்று படிகளின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது: அவைகள் தொடர்புடைய தீர்க்கதரிசன வார்த்தைகளில் இடறி விழுகிறவர்களுக்கு, ஜாதிகளூடைய மாயைகளின் தத்துவ சாஸ்திரங்களிலிருந்து அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப்படுகிறது:-

14-1 இயேசு கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்து வின் பலமான ஆகாரத்திற்கு முன்னேறி செல்ல இம்மானுவேல் / தேவன் எங்களுடன் இருக்கிறார் தொடர்புடைய தீர்க்கதரிசன வசனங்கள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது.

14-2 இயேசு கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்து வின் பலமான ஆகாரத்திற்கு முன்னேறி செல்ல எகிப்திலிருந்து ஈக்களும் அசீரியாவிலிருந்து தேனீக்களும் தொடர்புடைய தீர்க்கதரிசன வசனங்கள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது.

14-3 இயேசு கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்து வின் பலமான ஆகாரத்திற்கு முன்னேறி செல்ல மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீரும் வேகமாக ஓடுகிற ஆற்று நீரைப்போல அசிரீயாவின் தண்ணீரும் தொடர்புடைய தீர்க்கதரிசன வசனங்கள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது.

14-4 இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்துவின் பலமான ஆகாரமாகிய தேவநீதியின் சத்தியமான வசனங்களூக்கு முன்னேறி செல்லுகிறபோது இடறி விழாமல் தேவநீதியின் சத்தியமான வசனங்களை பின்பற்றி தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிக்கிறவர்களின் உட்பிரிவுகள்:-

14-1 இயேசு கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்து வின் பலமான ஆகாரத்திற்கு முன்னேறி செல்ல இம்மானுவேல் / தேவன் எங்களுடன் இருக்கிறார் தொடர்புடைய தீர்க்கதரிசன வசனங்கள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது:-

Amo_5:14,Isa_7:10-16, Isa_7:21-22, Isa_8:8, Hag_1:13, Hag_2:4-5, Joe_2:27, Zec_2:10-11, Zec_8:23, Zec_10:3-5, Isa_45:14, Zep_3:14-17, Rev_21:3,

1நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல நன்மையைத் தேடுங்கள் அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார் Amo_5:14

2 பாலகன் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் வெண்ணையையும் தேனையும் பரிபூரணமாக சாப்பிடுவான்:-

கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த குழந்தை வளரும்படி தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிடைக்கும் நித் திய ஜீவ வார்த்தைகளை நல்ல உணவாக பரிபூரணமாக சாப்பிடு வான்.

14-2 இயேசு கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்து வின் பலமான ஆகாரத்திற்கு முன்னேறி செல்ல எகிப்திலிருந்து ஈக்களும் அசீரியாவிலிருந்து தேனீக்களும் தொடர்புடைய தீர்க்கதரிசன வசனங்கள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது:-

எகிப்திலிருந்து ஈக்களின் / மாயையின் வெளிப்பாடுகளும் அசீரியாவிலிருந்து தேனீக் களின் காரண காரியத்திற்கேற்ற கருத்துக் கோட்பாடுகளின் வெளிப்படுகிறது

1 எகிப்திலிருந்து ஈக்களைப்போல / மாயையின் தத்துவ சாஸ்திரங்களிலிருந்து அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப்படுகிறது. அவைகளை ஒன்று திரட்டும்போது நல்ல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக மாறுவதில்லை / உருவாக்க முடிவதில்லை. Isa_7:17-19,

2அசீரியாவிலிருந்து தேனீக்களைப்போல காரண காரி யத்திற்கு ஏற்ற அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளின் கோட் பாடுகள் வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட தேனீக்களைப்போல பல அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளை பல இடங்களிலிருந்து ஒன்று திரட்டும்போது அவைகள் நல்ல சுவையான தேன் கூட்டி லிருந்து ஒழுகும் தெளிந்த தேன் போல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக இணைக்கப்படுகிறது / உருவாக் கப்படுகிறது.

3தெளிந்த தேன் போன்ற சுவையான அர்த்தமுள்ள வார்த் தைகளை நன்மைகளாக தெரிந்து கொண்டு சுவையில்லாத, அர்த்த மில்லாத வார்த்தைகளை தீமைகளாக வெறுத்து தள்ளிவிட வேண்டும்.

4நல்ல தெளிந்த சுவையான வார்த்தைகளையுடைய நன்மைகளுடன், அர்த்தமில்லாத வார்த்தைகளையுடைய தீமைகளை யும், நம்முடைய அறிவில் கலந்து வைத்திருக்கும்போது நாம் ஏற்கனவே தேனீக்களைப்போல கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கிற தெளிந்த சுவையுள்ள நன்மையான வார்த்தைகளின் முழுக் கட்டமைப்பையும்,

அர்த்தமில்லாத தீமையான வார்த்தைகளாக மாற்றி வெறுமையாக்கி விழுங்கி விடும் ; அல்லது மாயா / மாயையின் வெளிப்பாடுகள் நல்ல சுவையான தெளிந்த கருத்துக்களை உட் கொண்டு அவைகளை ஒழுங்கின்னையும் வெறுமையுமாக மாற்றி விடும். உதாரணமாக நம்முடைய நற்கிரியைகளுடன் சிறிதளவு தீமையான கிரியைகள் கலந்திருக்கும்போது அந்த முழு நற்கிரியை களின் பயனையும் தீமையான செயலாகவே வெளிப்படுத்திக் காட்டுகிறது.

தீமையை வெறுத்து நம்மையை தெரிந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட தலைப்புகளில் சுவையில்லாத அர்த்தமில்லாத வார்த்தைகளும் சுவையுள்ள அர்த்தமுள்ள வார்த்தைகளும் கலந்து தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது.

5 வனாந்தரங்களின் பள்ளத்தாக்கு :- Isa_7:19,

தேவ வார்த்கைளிலிருந்து இதுவரை வெளிப்படாத இரகசியங்கள்.

6 கன்மலைகளின் வெடிப்புகள் :- Isa_7:19,

வேத வார்த்தைகளிலிருந்து இயேசு கிறிஸ்துவரைப் பற்றிய புதிய வெளிப் பாடுகள்.

7 முட்காடுகள் :- Isa_7:19, தேவ வார்த்தைகளிலிருந்து ஜென்ம கரும பாவங்களின் பிரமாணங்கள்

8 மேய்ச்சலுள்ள இடங்கள் :- Isa_7:19 தேவ வார்த் தைகளிலிருந்து ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களை மீண்டும் பசுமையாக தோன்றும் படி வெளிப்படுத்தப்பட்ட புதிய வெளிப்பாடுகள்.

14-3 இயேசு கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்து வின் பலமான ஆகாரத்திற்கு முன்னேறி செல்ல மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீரும் வேகமாக ஓடுகிற ஆற்று நீரைப்போல அசிரீயாவின் தண்ணீரும் தொடர்புடைய தீர்க்கதரிசன வசனங்கள் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது:-

இஸ்ரவேலர் அசட்டை பண்ன்ணுகிற மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத்தண்ணீரும், அவர்கள் சந்தோஷித்து களி கூருகிற வல்லமையுள்ள திரளான / வேகமான அசீரியாவின் ஆற்றுத் தண்ணீரும் வெளிப்படுகிறது

1 இஸ்ரவேல் ஜனங்கள் மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத் தண்ணீரை அசட்டை பண்ணினார்கள் :-

இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து தேவ வசனத்தை படித்து அவைகளை சிந்தித்து தியானித்து அதன் மூலம் தேவனுடைய மிருதுவான ஆலோசனையை கேட்டு, தங்கள் ஆவிக்குரிய காரியங்களில் ஜீவனோடிருந்து வளர்வதை வெறுத்து அசட்டை பன்னினார்கள்.

Jos_18:1, Jos_18:8-10 , Jos_19:51, Jos_22:12, 1Sa_1:3, 1Sa_1:24,, 1Sa_3:21, 1Ki_2:27, Psa_78:60, Jer_7:12, Jer_7:14, Jer_26:6, Jer_26:9, Jer_41:5 Neh_3:15

2 இஸ்ரவேல் ஜனங்கள் வல்லமையுள்ள திரளான ஆற்றுத்தண்ணீரைக் குறித்து சந்தோஷித்து களிகூருகிறார்கள் :-

இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் இராஜாக்களுடைய இராஜரீகத்தையும் அதன் சகல ஆடம்பரங்களையும் குறித்து சந்தோஷித்து களிகூருகிறார்கள். எனவே தேவன் அவர்கள் விருப்பத்திற் கேற்றபடி அவர்கள் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ளும்படி கீழே குறிப்பிட்ட தலைப்புகளில் புற ஜாதிகளின் அரசாட்சி முறைகளும் அதன் பதவிகளின் ஆடம்பரத் தையும் அவர்களின் தரிசன வெளிப்பாடுகளாக தேவன் இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுக்கிறார்.

3 ஓடைகளெல்லாம் வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீர் :- Isa_8:7,

புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் தேவன் வெளிப் படுத்துகிறார்.

4 தண்ணீர் செல்லும் எல்லா வாய்க்காலின் கரைகளின் மேலும் ஆற்றுத்தண்ணீர் புரண்டு செல்லுதல்:-

புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் ஏற்கனவே பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் எல்லைகளை கடந்து, தேவன் தங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட வெளிபாடுகள், மற்ற வற்றை விட மிக புதியதும் மேலானதுமானவைகளாக வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது.

5 ஆற்றுத் தண்ணீர் யூதேயா தேசத்திற்குள்ளே புகுந்து பிரவாகித்து கடந்து செல்லுதல் :- Isa_8:8,

புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும் யூதருடைய முறைகளுடன் கலந்து வெளிப் படும்போது மிக வல்லமையுள்ளதாகவும் மிக திரளான வெளிப் பாடகவும் காணப்படுகிறது.

6 வல்லமையுள்ள ஆற்றுத் தண்ணீர் இஸ்ரவேலரின் கழுத்து மட்டும் பொங்கி திரளாக வெளிப்படுதல் :-

யூதருடைய முறைகளுடன் கலந்த புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும், தங்களுக்கு போதும் என்கிற அளவிற்கு மிக திரளாகவும் நல்ல திருப்தியாகவும் தங்கள் அறிவுக்கேற்றபடி தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது.

இஸ்ரவேல் தாங்கள் விரும்பினபடியே வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீரைப் போல ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையும் குறித்த வெளிப் பாடுகளை மிக திரளாக பெற்றபடியால், தேவன் எங்களோடிருக்கிறார் என்று தாங்கள் சொல்லிக்கொண்டு; மற்றவர்களையும் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட வார்த்தைகளை கொண்டு அழைக்கிறார்கள்.

7 ஜனங்களே நீங்கள் கூட்டங்கூடுங்கள் முறியடிக் கப்படுவீர்கள் :- . Isa_8:9,

ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாடுகள் இல்லாமல் நீங்கள் உங்களுடைய விசுவாசத்தின்படி கூடி வரும்போது மற்றவர்கள் உங்களை மேற்கொண்டு சிதறடிப்பார்கள்.

8 தூரத்தேசத்தராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள் :- Isa_8:9,

தேவனை விட்டு பின்வாங்குகிற நீங்கள் எல்லாரும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையையும் ஏற்றுக்கொண்டு அவைகளை சுதந்தரித்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

9 இடைகட்டிக் கொள்ளுங்கள் முறிந்தோடுவீர்கள்:- Isa_8:9,

உங்களுடைய விசுவாசங்களையும் அதன் வெளிப்பாடு களையும் கொண்டு நீங்கள் உங்களுடைய கட்டமைப்பை பெலப் படுத்திக்கொள்ளுங்கள், ஆனாலும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாட்டிற்கு முன்பாக நீங்கள் எதிர்த்து நிற்க முடியாமல் முறித்தோடுவீர்கள் ஏனென்றால் தேவன் எங்களுடன் இருக்கிறார்.

10 ஆலோசனை செய்யுங்கள் அது அபத்தமாகும்:- Isa_8:10,

தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு விரோதமாக நீங்கள் ஆலோசனை செய்யுங்கள் அவைகள் பொய்யாகமாறும்

11 வார்த்தையை வசனியுங்கள் அது நிற்காது தேவன் எங்களுடன் இருக்கிறார் :-

தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு இணையாகவோ அல்லது எதிராகவோ நீங்கள் வார்த்தையை பேசுங்கள் அது நிலை நிற்காது காரணம் தேவன் எங்களோடிருக்கிறார். நாங்கள் மட்டும் இந்த வெளிப்பாடுகளை பெற்றிருக்கிறோம், ஆகவே எங்களால் மட்டும் இதன் வார்த்தைகளை தெளிவாக பேசமுடியும்.

12 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது, இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள், மேலும் இவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்களின் வரிசையில் வந்து சேர்ந்து, தேவர்கள் என்ற பெயரையும் பெற்றுக் கொள்ளுவார்கள்.

இவைகளைக் குறித்து அறிந்து கொள்ள தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகம் தலைப்பு நான்கு கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள் பொருளடக்கம் மூன்று கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் பகுதியில் பார்க்கவும்.

14-4-0 இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்துவின் பலமான ஆகாரமாகிய தேவநீதியின் சத்தியமான வசனங்களூக்கு முன்னேறி செல்லுகிறபோது இடறி விழாமல் தேவநீதியின் சத்தியமான வசனங்களை பின்பற்றி தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிக்கிறவர்களின் உட்பிரிவுகள்:-

14-4-1 நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறவர்கள் இரண்டாம் மரணத்தை ஜெயங்கொள்ளூகிறார்கள்:-

Rom 2:13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

Rom 2:14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

Rom 2:15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

Rom 2:16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

இவைகளைக் குறிந்து மேலும் அறிந்து கொள்ள தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகம் தலைப்பு மூன்று தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி பொருளடக்கம் இரண்டாவது அத்தியாயம் நியாயப் பிரமாண நீதியினுடைய இரட்சிப்பின் விசுவாசமும் கிரியைகளும் என்ற பகுதியில் பார்க்கவும்

14-4-2 உபத்திரவ காலத்தில் 1,44,000 வரிசையில் வருகிறவர்களுக்கு உதவி செய்து தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்/ மரிக்கிற புறஜாதிகள்:-

Rev 7:9 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

Rev 7:10 அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

Rev 7:11 தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

Rev 7:12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.

Rev 7:13 அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

Rev 7:14 அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

14-4-3 உபத்திரவ காலத்தில் 1,44,000 வரிசையில் வருகிறவர்களுக்கு உதவி செய்து மரிக்காமல் இருக்கிறவர்கள் நேரடியாக , ஆயிரம் ஆண்டு ஆட்சியில் பிரவேசிக்கிற புறஜாதிகள்:-

Mat 25:31 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

Mat 25:32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,

Mat 25:33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

Mat 25:34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

Mat 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

Mat 25:36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.

Mat 25:37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

Mat 25:38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

Mat 25:39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

Mat 25:40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

14-4-4 பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்கள்/ தேவனுடைய இராஜ்யத்திற்காக சமர்பணம் செய்து கொண்டவர்கள்:-

Mat 19:10 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.

Mat 19:11 அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

Mat 19:12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.

14-4-5 இருதயத்தில் ஆவியின்படி உண்டாகும் விருத்தசேதன உடன்படிக்கையில் நிலைத்திருக்கிற ஆவிக்குரிய யூதர்கள்:-

Rom 2:17 நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மை பாராட்டி,

Rom 2:18 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.

Rom 2:19 நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,

Rom 2:20 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.

Rom 2:21 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?

Rom 2:22 விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?

Rom 2:23 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

Rom 2:24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

Rom 2:25 நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.

Rom 2:26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?

Rom 2:27 சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?

Rom 2:28 ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

Rom 2:29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

14-4-6 உபத்திரவ காலத்தில் 1,44,000 வரிசையில் வருகிற தேவனுடைய ஊழியர்கள்:-

Rev 6:9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.

Rev 6:10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

Rev 6:11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

14-4-7 தேவனுடைய இராஜ்யத்திற்காக தேவனால் முன்குறிக்கப்பட்டு பிறந்தவர்கள்:-

Rom 8:27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

Rom 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

Rom 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

Rom 8:30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

Rom 8:31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

Rom 8:32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

Rom 8:33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

14-4-8 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகிய தேவனுடைய சத்தியமான வசனங்களை புசிக்கிற மணவாட்டி சபை:-

Rev 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

Rev 19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

Rev 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries