தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 3-0

3-0 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து, மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்து, தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிகளுக்காக   பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று:-.

3-1 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து, மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்து, தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிகளுக்காக   பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று:-.

Col 1:12  ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,

Col 1:13  இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

Col 1:14  [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

Col 1:15  அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

Col 1:16  ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும்,

சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

Col 1:17  அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

Col 1:18  அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

Col 1:19  சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

Col 1:20  அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

Col 1:21  முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

Col 1:22  நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.

Col 1:23  அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

Rev_5:1-7,Rev_5:8-12, Rev_5:13-14Col_1:12-17, Col_1:18-22,Eph_1:17-23,Eph_3:9-15;Eph_3:16-19; Phi_2:5-11; Heb_2:1-6Heb_2:7-12;Heb_2:13-16Heb_12:22-24; Rev_7:9-12, Rev_19:1-6, 

3-2 யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான்..

Joh 1:28  இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

Joh 1:29  மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி

Joh 1:30  எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

Joh 1:31  நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான்.

Joh 1:32  பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.

Joh 1:33  நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.

Joh_1:29-30; Joh_1:36Isa_53:1-6; Isa_53:7-11;Act_8:30-32; 1Pe_1:19; Rev_5:6, Rev_5:8, Rev_5:12-13, Rev_6:1, Rev_6:16; Rev_7:9-10, Rev_7:14, Rev_7:17,

Rev_12:11, Rev_13:8, Rev_14:1, Rev_14:4, Rev_14:10, Rev_15:3, Rev_17:14, Rev_19:7, Rev_19:9; Rev_21:9, Rev_21:14, Rev_21:22-23, Rev_21:27, Rev_22:1-3

Hos_14:1-2; Mat_20:28; Act_13:39; 1Co_15:3-7; 2Co_5:21; Gal_1:1-4; Gal_3:13; 1Ti_2:6; Tit_2:13-14; Heb_1:1-3, Heb_2:16-17, Heb_9:28; 1Pe_2:24, 1Pe_3:18; 1Jo_2:2, 1Jo_3:5, 1Jo_4:10; Rev_1:5

3-3  உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய  இயேசு கிறிஸ்துவானவர், பிதாவினிடத்தில் ஆதியிலே வார்த்தையாக இருந்தபோது கிறிஸ்துவிற்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது பிதாவானவரிடத்தில் மீண்டும் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்:-

உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய  இயேசு கிறிஸ்துவானவர், தன்னை அனுப்பினவராகிய பிதாவின்  சித்தம் செய்யும்படி, பிதாவானவர்  நியமித்த கிரியையைச் செய்து முடித்து,  ஜெயங்கொண்டபடியால்;  ஒன்றான மெய்த்தேவனாகிய நித்திய சத்தியமுள்ள பிதாவானவர் மூலம்,

ஆட்டுக்குட்டியானவராகிய  இயேசு கிறிஸ்துவின், கலியாணமாகிய பட்டாபிஷேக விழாவில்  இராஜாவாக முடிசூட்டப்பட்டு; உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவினிடத்தில் வார்த்தையாகிய கிறிஸ்துவிற்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது பிதாவானவரிடத்தில் மீண்டும் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

Joh 17:1  இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

Joh 17:2  பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

Joh 17:3  ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

Joh 17:4  பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

Joh 17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

Php 2:5  கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

Php 2:6  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

Php 2:7  தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

Php 2:8  அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

Php 2:9  ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

Php 2:10  இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

Php 2:11  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

Joh_17:1-5, Joh_17:6-10, Joh_17:11-15, Joh_17:16-22, Joh_17:23-26,Joh_4:32-38,   Joh_1:18, Joh_3:13, Joh_10:30, Joh_14:9; Pro_8:22-31Col_1:12-17; Heb_1:1-3, Phi_2:5-11; Rev_5:1-7,Rev_5:8-12, Rev_5:13-14,Rev_4:1-5,Rev_4:6-8, Rev_4:9-11,

3-4 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகிய  தேவனுடைய சத்தியமான வசனங்களை புசித்து, பரிசுத்த ஆவியானவர் தங்களூக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவனுடைய சித்தத்தில்  நியமித்த கிரியையைச் செய்து முடித்து,மணவாட்டி சபையாக  ஜெயங்கொள்ளூகிறவர்களுக்கு ; ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்தில் உட்காரும்படிக்கு அருள்செய்கிறார்:- .

Rev 3:14  லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

Rev 3:15  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

Rev 3:16  இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

Rev 3:17  நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

Rev 3:18  நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

Rev 3:19  நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

Rev 3:20  இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

Rev 3:21  நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

Rev 3:22  ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

Rev_3:14-18, Rev_3:19-22, Rev_19:1-6, Rev_19:7-10; Rev_19:11-16Luk_19:11-16, Luk_19:17-22; Luk_19:23-27, Mat_22:1-7, Mat_22:8-14, Luk_14:7-11, Luk_14:8-12; Luk_14:13-18, Luk_14:19-24; 1Sa_8:7; Psa_2:1-3; ,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries