4-0-0 பிதாவின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக: பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு , தேவனுடைய சத்தியத்தைக் குறித்து சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்:-
4-1-0 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும் தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; பரலோகத்திலே பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்:-
4-1-1 பிதா = ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்
4-1-2 வார்த்தை= ஆதியிலே தேவனிடத்திலிருந்த, வார்த்தையாகிய கிறிஸ்து
4-1-3 பரிசுத்த ஆவி = தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவி
4-2-0 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும் தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; பூலோகத்திலே, பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
4-2-1 ஆவி / இயேசு கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாண த்தின் ஆவியும், மனிதனுடைய சரீர அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவம், மரணம் ஆகியவைகளின் பிரமாணத்தின் ஆவியும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.
4-2-2 ஜலம் / இயேசு கிறிஸ்துவினுடைய ஆத்துமாவின் ஜலமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் பிரமாணமும், மனிதனுடைய ஆத்துமாவின் ஜலமாகிய மாயைகளுடைய வார்த்தைகளின் பிரமாணமும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.
4-2-3 இரத்தம் / இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலான சரீரத்தின் மூலம் மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதினால் வருகிற /மாறுகிற நீதியின் பிரமாணத்தினுடை வழிமுறைகளும், மனிதனின் இரத்தத்திலான சரீரத்தின் மூலம் மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதினால் வருகிற /மாறுகிற பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினுடைய வழிமுறைகளும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.
1Jn 5:5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1Jn 5:6 இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
1Jn 5:7 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
1Jn 5:8 பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
1Jn 5:9 நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
1Jn 5:10 தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
1Jn 5:11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
1Jn 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
1Jn 5:13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
1Jo_5:5-10, Joh_17:1-7, Joh_17:8-12,Joh_17:13-20, Joh_17:21-26, Joh_16:1-8, Joh_16:9-16, Joh_15:26-27,Joh_14:16-21, Joh_16:17-21,Joh_16:22-28,1Pe_1:10-13; Joh_14:22-26,Gen_3:22-24,Gen_2:7-15,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)