தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 5-0

5-0 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: பரலோகத்திலும் பூலோகத்திலும்  எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில் சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்களில், மூவரில் முதலாவது வெளிப்பட்ட  வார்த்தையாகிய கிறிஸ்துவானவர் :  ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளை , கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிறபோது.  இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது:- 

5-1 ஆவி / இயேசு கிறிஸ்துவின்  ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் ஆவியும், மனிதனுடைய சரீர அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவம், மரணம் ஆகியவைகளின்  பிரமாணத்தின் ஆவியும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.   

5-2 ஜலம் / இயேசு கிறிஸ்துவினுடைய ஆத்துமாவின்  ஜலமாகிய    நித்திய ஜீவ வார்த்தைகளின்  பிரமாணமும், மனிதனுடைய ஆத்துமாவின் ஜலமாகிய மாயைகளுடைய   வார்த்தைகளின்  பிரமாணமும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.  

5-3 இரத்தம் / இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலான சரீரத்தின்  மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதினால் வருகிற /மாறுகிற  நீதியின் பிரமாணத்தினுடை   வழிமுறைகளும்,  மனிதனின் இரத்தத்திலான சரீரத்தின் மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதினால் வருகிற /மாறுகிற பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினுடைய  வழிமுறைகளும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.   

5-4 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, சரீர அவயவங்கள் இம்மூன்றும் ஒருமைப்பட்டிருந்து, ஐக்கியமாக இருக்கிறபடியால்; பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனையும், சத்திய ஆவியாகிய தேற்றரவாளனையும் பெற்றுக்கொள்ளுகிறதற்கு தகுதியுள்ளவனாக மாறுகிறான்:-

1Jn 5:5  இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 

1Jn 5:6  இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். 

1Jn 5:7  [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 

1Jn 5:8  பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 

1Jn 5:9  நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 

1Jn 5:10  தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். 

5-1 ஆவி / இயேசு கிறிஸ்துவின்  ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின்  ஆவியும், மனிதனுடைய சரீர அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவம், மரணம் ஆகியவைகளின்  பிரமாணத்தின் ஆவியும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது:-   

இயேசு கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம், பூமிக்குரிய மாம்சத்தின்படி பிறந்தவன்/ பழைய மனுஷன்/ ஜென்மசுபாவமான மனுஷனுடைய  ஆவியின்  மரணத்தினால்; ஜென்ம சுபாவமான மனுஷனுடைய பாவம், மரணம் ஆகியவைகளின்    பாவப்பிரமாணத்தின்  வல்லமைகளை,  ஜெயங்கொள்ளுகிறபோது:

பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷன் / ஆவிக்குரிய சுபாவமான மனுஷனுடைய ஆவி தேவனுடைய  நீதியின்  பிரமாணத்திற்கு விரோதமாக வருகிற பாவங்களை  குறித்து  கண்டித்து உணர்த்தப்பட்டு,    பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்த ஒருமனப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துவின் ஆவியும் மனிதனுடைய ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறதற்கு பதிலாக: கிறிஸ்துவின் ஆவியானவர் பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த புதிய மனுஷனை ஆவியிலே உயிர்ப்பித்து, புதிதாகிறதினாலே ஆவியில் மறுரூபத்தை உண்டாக்குகிறார்; இப்படி பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த புதிய மனுஷனுடைய ஆவி   தேவனுடைய ராஜ்யத்தில்  பிரவேசித்து / சஞ்சரித்து பரலோகராஜ்யத்தின் உவமைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளுகிறான். .

Rom_7:14-20, Rom_7:21-25,Rom_8:1-5, Rom_8:6-10, 1Co_2:11-16,Gal_4:22-27, Gal_4:28-31, Eph_4:21-24, Rom_6:6; Col_3:9-10,Rev_1:18,Psa_49:11-15, Job_14:19-22, Job_20:23-29Job_33:15-20;  Job_33:21-28; Job_33:29-33;  Psa_16:8-11, Act_2:25-28

5-2 ஜலம் / இயேசு கிறிஸ்துவினுடைய ஆத்துமாவின்  ஜலமாகிய    நித்திய ஜீவ வார்த்தைகளின்  பிரமாணமும், மனிதனுடைய ஆத்துமாவின் ஜலமாகிய மாயைகளுடைய   வார்த்தைகளின்  பிரமாணமும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.  

கிறிஸ்துவினுடைய ஆத்துமாவின்  ஜலமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின்  நன்மை,தீமைகளின் மூலம், பூமிக்குரிய மாம்சத்தின்படி பிறந்தவன்/ பழைய மனுஷன்/ ஜென்மசுபாவமான மனிதனுடைய ஆத்துமாவில் உண்டாயிருக்கிற மாயைகளுடைய  வார்த்தைகளின்  பிரமாணத்தின் ,  வல்லமைகளை  ஜெயங்கொள்ளுகிறபோது:

பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷன்/ ஆவிக்குரிய சுபாவமான மனிதனுடைய ஆத்துமா, தேவனுடைய  நீதியின் பிரமாணத்தைக் குறித்து  கண்டித்து உணர்த்தப்பட்டு,    பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்த ஒருமனப்படுகிறது,

இந்த நிலையில் கிறிஸ்துவின் ஆத்துமாவும்,  மனிதனுடைய ஆத்துமாவும்  ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறதற்கு பதிலாக: கிறிஸ்துவின் ஆத்துமானவர்,  பரலோகத்திற்குரிய ஆத்துமாவின்படி  மறுபடியும் பிறந்த மனிதனுடைய ஆத்துமாவை   புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து பரிசுத்த ஆவியையும்,சத்திய ஆவியையும்,சுதந்தரித்துக்கொண்டு   தேவனுடைய ராஜ்யத்தில்  பிரவேசித்து /சஞ்சரித்து பரலோகராஜ்யத்தின் உவமைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளுகிறது. 

Isa_11:9; Hab_2:14;Heb_5:12-14, Heb_6:1-2,Rom_10:6-10;Deu_29:1-6, Deu_29:7-12, Deu_29:13-18, Deu_29:19-24, Deu_29:25-29, Deu_30:1-6,Deu_30:7-12, Deu_30:13-18, Deu_30:19-24, Deu_31:1-6, Deu_31:7-13, Deu_31:14-19, Deu_31:20-26, Deu_31:27-30, Deu_32:1-7, Deu_32:8-14, Deu_32:15-20, Deu_32:21-26, Deu_32:27-34, Deu_32:35-40, Deu_32:41-46, Deu_32:47-52,  Eze_22:26-30,  Eze_44:21-23; Lev_10:1-3, Lev_10:8-11,

 

5-3 இரத்தம் / இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலான சரீரத்தின்  மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதினால் வருகிற /மாறுகிற  நீதியின் பிரமாணத்தினுடை   வழிமுறைகளும்,  மனிதனின் இரத்தத்திலான சரீரத்தின் மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதினால் வருகிற /மாறுகிற பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினுடைய  வழிமுறைகளும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.   

இயேசு கிறிஸ்து அநேகருக்காக பாவமன்னிப்புண்டாகும்படி சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய இரத்தமாயிருக்கிற மாம்சத்திலே பாவத்தைப் பலியாக செலுத்தி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கும் வழிமுறைகளின் மூலம். பூமிக்குரிய மாம்சத்தின்படி பிறந்தவன்/ பழைய மனுஷன்/ ஜென்மசுபாவமான மனுஷனுடைய  சரீரத்தின் மாம்சத்திலே, பாவத்தைப் ஜீவபலியாக செலுத்தி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கும் வழிமுறைகளின் மூலம். பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்   வல்லமைகளை, ஜெயங்கொள்ளுகிறபோது: 

பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷன் / ஆவிக்குரிய சுபாவமான மனுஷனுடைய  சரீரத்தின் மாம்சத்திலே தேவனுடைய  நியாயத்தீர்ப்பின் பிரமாணத்தைக்    குறித்து  கண்டித்து உணர்த்தப்பட்டு,    பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்த ஒருமனப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலான சரீரத்தின்  மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதினால் வருகிற /மாறுகிற  நீதியின் பிரமாணத்தினுடை   வழிமுறைகளும்,  மனிதனின் இரத்தத்திலான சரீரத்தின் மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதினால் வருகிற /மாறுகிற பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினுடைய  வழிமுறைகளும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறதற்கு பதிலாக: 

கிறிஸ்துவின் மாம்சமும் சரீரமும் உயிர்த்தெழுந்ததுபோல புதிய மனுஷனின் மாம்சமும் சரீரமும் உயிர்த்தெழுந்து புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து புதிய மனுஷனுடைய  சரீர அவயவங்களில் நீதியின் பிரமாணத்தினுடை   வழிமுறைகள்  பிரவேசித்து /சஞ்சரித்து பரலோகராஜ்யத்தின் ரகசியங்களுடைய நீதியின்  கிரியைகளை நிறைவேற்றுவதில் பிரதிபலித்து  வெளிப்படுகிறது.    

5-4 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, சரீர அவயவங்கள் இம்மூன்றும் ஒருமைப்பட்டிருந்து, ஐக்கியமாக இருக்கிறபடியால்; பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ள தகுதியுள்ளவனாக மாறுகிறான்:- 

1 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சத்தியம்  என்னும் கச்சையை தங்கள் அரையில் கட்டினவர்களாக இருக்க வேண்டும், 

2 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாக இருக்க வேண்டும், 

3 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாக இருக்க வேண்டும், 

4 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர் களாகும்படியும்,  பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப்போடத்தக்கதாயும் , தேவனுடைய  விசுவாசமென்னும் கேடகத்தைப் எல்லாவற்றிற்கும் மேலாக பிடித்துக் கொண்டவர்களாக நிற்க வேண்டும், 

5 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய இரட்சணியமென்னும் தலைச்சீராவை தரித்தவர்களாக இருக்க வேண்டும், 

6 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

7 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் என்னோடேகூட இருக்கிறபடியால் ;  பொல்லாப்புக்குப் பயப்படாமல் இருப்பதற்காக தேவனுடைய ஊழியத்தின் கோலாகிய பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்  என்னைத் தேற்றுகிறார்.

8 பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் என்னோடேகூட இருக்கிறபடியால் ;  பொல்லாப்புக்குப் பயப்படாமல் இருப்பதற்காக; தேவனுடைய நியாத்தீர்ப்பின் தடியாகிய  சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்  என்னைத் தேற்றுகிறார். 

பூமிக்குரிய மாம்சத்தின்படி பிறந்தவன்/ பழைய மனுஷன்/ ஜென்மசுபாவமான மனுஷனுடைய  சரீரத்தின் மாம்சத்திலே, பாவத்தைப் ஜீவபலியாக செலுத்தி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கும் வழிமுறைகளின்/ அன்றாட பலியாகிய  பாவத்தைப் ஜீவபலியாக செலுத்துகிறதன்   மூலம். பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்    வல்லமைகளை, ஜெயங்கொள்ளுகிறபோது:

முதலாவது பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, மறுரூபமடைந்து ஜீவனோடிருக்கும், இரண்டாவது ஆவி,ஆத்துமாவின் குணாதிசியங்களூக்கேற்ப சரீர அவயவங்களில் நீதியின் கிரியைகளை நிறைவேற்றுவதில் பிரதிபலித்து  வெளிப்படுகிறது.    

இந்த நிலையில் பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, சரீர அவயவங்கள் இம்மூன்றும் ஒருமைப்பட்டிருந்து, ஐக்கியமாக இருக்கிறபடியால்; பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனையும், சத்திய ஆவியாகிய தேற்றரவாளனையும் பெற்றுக்கொள்ளுகிறதற்கு தகுதியுள்ளவனாக மாறுகிறான்

Psa 23:1  கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 

Psa 23:2  அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 

Psa 23:3  அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 

Psa 23:4  நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 

Psa 23:5  என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 

Psa 23:6  என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

 1Jo_2:1-8, 1Jo_2:9-15; 1Jo_2:16-22, 1Jo_2:23-29; 1Jo_4:1-6,2Jo_1:7-11


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries