7-0 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: பரலோகத்திலும் பூலோகத்திலும் எந்த விதத்திலும் தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில் சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்களில், மூவரில் மூன்றாவது வெளிப்பட்ட சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்:-
7-1 தேவனுடைய சத்தியத்திற்கு விரோதமாக வருகிற பாவங்கள் 7-2 தேவனுடைய சத்தியத்தை நிலைநிறுத்தும் நீதிகள்
7-3 தேவனுடைய சத்தியத்தை நிலைநிறுத்தும் நியாயத்தீர்ப்புகள்
7-4 சத்திய ஆவியாகிய தேற்றரவாளனுடைய சத்திய ஆவியை பெற்றுக்கொள்ளுவதற்கு தேவையான அடிப்படை தகுதிகள்:-
பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, தேவனுடைய சத்தியத்தைக் குறித்து சாட்சியிடுகிறவர்களில் மூவரில் மூன்றாம் ஆனவரான, பிதாவாகிய, சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்: தேவநீதியை வெளிப்படுத்துவதற்காக,
பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்: பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, போராடிக் கொண்டிருக்கிறதில் ஒன்றாயிருக்கிறது / ஒன்றாயிருக்கிறார்கள்.
Joh 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
Joh 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
Joh 16:9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
Joh 16:10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
Joh 16:11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
Joh 16:12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
Joh 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
7-1 சத்திய ஆவியாகிய தேற்றரவாளன், தேவனுடைய சத்தியத்திற்கு விரோதமாக வருகிற பாவங்களைக் குறித்து கண்டித்து உணர்த்தி, வெளிப்படுத்துகிறதன் மூலம் பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக சத்திய ஆவியாகிய தேற்றரவாளன், போராடிக் கொண்டிருக்கிறார். .
7-2 சத்திய ஆவியாகிய தேற்றரவாளன், தேவனுடைய நீதியை குறித்து கண்டித்து உணர்த்தி, வெளிப்படுத்துகிறதன் மூலம் பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக சத்திய ஆவியாகிய தேற்றரவாளன், போராடிக் கொண்டிருக்கிறார்..
7-3 சத்திய ஆவியாகிய தேற்றரவாளன், தேவனுடைய நியாயத்தீர்ப்பை குறித்து கண்டித்து உணர்த்தி, வெளிப்படுத்துகிறதன் மூலம் பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக சத்திய ஆவியாகிய தேற்றரவாளன், போராடிக் கொண்டிருக்கிறார்.
Joh_14:16-21,Joh_16:7-15,Joh_16:1-6, Joh_15:26-27, Joh_17:1-7,Joh_17:8-12, Joh_17:13-20, Joh_17:21-26, Jam_1:17-18,Isa_11:4, Eze_21:9-13, 2Sa_7:13-15, Psa_89:31-34, Psa_2:1-5 , Psa_2:6-12,1Jo_5:5-10, Joh_16:7-11,1Jo_4:1-6; 2Jo_1:7-11; 2Pe_2:1-3; 1Jo_2:18-22, 1Ti_4:1-6, 2Th_2:1-6; 2Th_2:7-12; 2Th_2:13-17;
7-4 சத்திய ஆவியாகிய தேற்றரவாளனுடைய சத்திய ஆவியை பெற்றுக்கொள்ளுவதற்கு தேவையான அடிப்படை தகுதிகள்:-
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை, தங்களுடைய வாயிலும் இருதயத்திலும் அறிக்கை செய்து; சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை, தங்களுடைய வாயிலும் இருதயத்திலும் சமீபமாக பெற்றுக்கொள்ளுகிறபோது சத்திய ஆவி இன்னதென்று வெளிப்படுகிறது.
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவியும், வஞ்சக ஆவியும் அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்./ அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வஞ்சக ஆவியும் இன்னதென்றும் வெளிப்படுகிறது.
1Jn 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
1Jn 4:2 தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
1Jn 4:3 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
1Jn 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
1Jn 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
1Jn 4:6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.
1Jo_2:1-8, 1Jo_2:9-15; 1Jo_2:16-22, 1Jo_2:23-29; 1Jo_4:1-6,2Jo_1:7-11
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)