தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 8-0

8-0 தேவனால் பூமியில் உருவாக்கப்பட்ட ஆதாமும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  நித்தியமாக இருப்பதற்காக; ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தின்  பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது:-

8-1 தேவனால் பூமியில் உருவாக்கப்பட்ட ஆதாமும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  நித்தியமாக இருப்பதற்காக; ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தின்  பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது:-

தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தினுடைய ஊழிய தரிசனம் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆதாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபடியால், ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டு; தேவன் எந்த வார்த்தையைக் கொண்டு தன்னை உருவாக்கினாரோ அந்த வார்த்தையைக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட ஊழிய தரிசனத்தை செயல்படுத்த கட்டளை யிட்டார். . Gen_2:8-9, Gen_2:15-17, Gen_3:17-24,

தேவனுடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக்கொண்டிருப்பதற்கு ஆதாமிற்கு  ஏதேன் தோட்டத்தின்  பிரமாணங்கள்  கொடுக்கப்பட்டபோது அவைகளின் மூலம் தேவனுடைய நித்திய சத்தியத்தை பூமியில்  நிலைநிறுத்தாமல், தீமையின் வல்லமைகளுக்கு அடிமைப்ட்டபோது; தேவனுடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிற, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வழிமுறைகள்   வெளிப்பட்டு, தேவனுடைய நித்திய சத்தியத்தை, பரலோகத்தில் நிலைநிறுத்தினதுபோல பூமியிலும் நிலைநிறுத்தினது  

8-2 ஆதாமின் மிறுதலினால் ஆதாமின் சந்த்திகளாகிய நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், தேவனுடைய குமாரனின் மரணத்தினாலே தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  நித்தியமாக இருப்பதற்காக; அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம்:-

Rom 5:7  நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

Rom 5:8  நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

Rom 5:9  இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

Rom 5:10  நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

Rom 5:11  அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

Rom 5:12  இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

Rom 5:13  நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

Rom 5:14  அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

Rom 5:15  ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

Rom 5:16  மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

Rom_5:7-12,Rom_8:1-4,Col_3:1-5; Col_3:6-11; Eph_2:8-16, Eph_4:7-10, Eph_4:21-24,1Pe_3:16-22; Psa_68:18,Pro_30:4; Joh_3:13, Joh_6:33, Joh_6:62, Joh_20:17; Act_2:34-36;Col_2:1-5;Col_2:6-10;Col_2:11-15;Col_2:16-23;

8-3 ஜென்மசுபாவமான மனுஷன்/ஆவி,ஆத்துமா,சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, புத்தியுள்ள ஆராதனை செய்கிறதன் மூலம். தேவனோடே ஒப்புரவாகுதலுக்கேற்றபடி பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த  மனுஷனுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தில்  ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும்  ஒப்புரவாக்குதலின் ஊழியத்தையும்  தேவன் ஒப்புக்கொடுக்கிறார்:-

இயேசு கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம், பூமிக்குரிய மாம்சத்தின்படி பிறந்தவன்/ பழைய மனுஷன்/ ஜென்மசுபாவமான மனுஷனுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து,

புத்தியுள்ள ஆராதனை செய்கிறதன் மூலம். தேவனோடே ஒப்புரவாகுதலுக்கேற்றபடி பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த  மனுஷனுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தில்  ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும்  ஒப்புரவாக்குதலின் ஊழியத்தையும் தேவன் ஒப்புக்கொடுக்கிறார்

பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்தவன்/  புதிய மனுஷன் / ஆவிக்குரிய சுபாவமான மனுஷன் ஆவி,ஆத்துமா,சரீரத்தில்  இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்தவர்கள்:

கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும்  ஒப்புரவாக்குதலின் ஊழியத்தையும்  தேவன் ஒப்புக்கொடுக்கிறார்

2Co 5:14  கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;

2Co 5:15  பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

2Co 5:16  ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

2Co 5:17  இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.

2Co 5:18  இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

2Co 5:19  அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

2Co 5:20  ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.

2Co 5:21  நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

2Co_5:14-20, Mat_5:21-26Luk_12:58-59, Luk_14:31-32;Gen_4:2-8;Gen_4:9-16Pro_6:1-5,2Co_3:6-10;2Co_3:11-18; Eph_4:11-16, Eph_4:7-10,1Pe_3:16-22; Psa_68:18,Gen_49:8-12; Isa_37:30-32;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries