தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 9-0

9-0 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான தேவனுடைய நீதியின் கிரியைகள்:-

9-1 ஜென்மசுபாவமான மனுஷனுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தின் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்தின் பாவங்களை,  பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, சரீரத்தின் அவயவங்களில் உண்டாயிருக்கிற, தேவனுடைய நீதியின் பிரமாணத்தின் கிரியைகளிலே உயிர்ப்பிக்கப்படுதல்:-

Rom 12:1  அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

Rom 12:2  நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

Rom 12:3  அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

Rom_12:1-6, Rom_8:1-3,1Pe_3:16-20, 1Pe_4:16-18, Isa_6:1-5; Eze_1:1-5, Eze_1:6-10, Eze_10:11-15; Eze_10:16-22, Num_7:89,

9-2 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, சரீரத்தின் அவயவங்களில் உண்டாயிருக்கிற, தேவனுடைய நீதியின் பிரமாணத்தின் கிரியைகளிலே உயிர்ப்பிக்கப்படுகிறபோது: தேவனுடைய நீதியின் வசனங்கள் வாய்க்கும்  இருதயத்திற்கும் சமீபமாயிருக்கிறது:-

Rom 10:5  மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.

Rom 10:6  விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?

Rom 10:7  அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி;

Rom 10:8  இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

Rom 10:9  என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

Rom 10:10  நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

Rom 10:11  அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

Rom 10:12  யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.

Rom 10:13  ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

Ecc_7:24-29, Rom_10:6-11, Deu_30:11-14; Tit_1:15-16,2Ti_2:15-19;1Co_2:1-5,1Co_2:6-10;1Co_2:11-16;Hos_8:2-3; Isa_29:13;Isa_48:1-2; Eze_33:31; Mat_15:8-9; Mar_7:6;   Jer_12:1-3Psa_73:1-8, Psa_73:9-17, Psa_73:18-20,

9-3 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, சரீரத்தின் அவயவங்களில் உண்டாயிருக்கிற, தேவனுடைய நீதியின் பிரமாணத்தின் கிரியைகளிலே உயிர்ப்பிக்கப்படுகிறபோது: திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பால் பூரணமாய்ப் தங்களுடைய ஆவி,ஆத்துமாவில்  கறக்கிறபடியினால் வெண்ணெயையும் தேனையும்  சாப்பிட்டு பூரண  வளர்ச்சியடைகிறான்:- .

1Pe 2:1  இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,

1Pe 2:2  சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,

1Pe 2:3  நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

1Pe 2:4  மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

1Pe 2:5  ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

1Pe_2:1-5, Isa_7:21-25, Exo_29:1, Heb_6:1-2, Heb_5:12-14;  

9-4 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா, சரீரத்தின் அவயவங்களில் உயிர்ப்பிக்கப்பட்டு: திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பால் பூரணமாய்ப் சாப்பிட்டு பூரண  வளர்ச்சியடைந்தவர்களுக்கு; ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகிய  தேவனுடைய சத்தியமான வசனங்களை புசித்து பரலோக இராஜ்ஜியத்தின் பதவிகளை சுதந்தரித்துகொள்ளுகிறதற்கு முன்னேறுதல்:-

Rev 19:7  நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

Rev 19:8  சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

Rev 19:9  பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

 Rev_3:20-22; Rev_19:7-9; Luk_12:37, Luk_17:8,Isa_65:12-14,Mal_3:15-18; Luk_14:15-20, Luk_14:21-24,

9-5: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகிய  தேவனுடைய சத்தியமான வசனங்களை புசிக்கிறவர்கள்,  சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாயிருந்து;  பரலோக இராஜ்ஜியத்தின் பதவிகளை சுதந்தரித்துகொள்ளும் சிலாக்கியத்தையும் பெற்றுக்கொள்ளூகிறார்கள்:-

Ecc_7:24-29, Job_28:1-11, Job_28:12-19;Job_28:20-28Dan_1:3-5; Dan_1:17-20Ecc_8:1-4; 2Co_4:4-6Ecc_8:5-7; Ecc_9:1; Ecc_8:14-15;Ecc_9:7-12; Mal_2:1-5;

Mal_2:6-10;Mal_2:11-15;Mal_2:16-17;Pro_5:13-23Ecc_9:13-18;1Co_14:1-5; 1Co_14:6-10; 1Co_14:11-15; 1Co_14:16-20; 1Co_14:21-25; 1Co_14:26-30; 1Co_14:31-33;

9-6 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, கிறிஸ்துவாகிய நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்:-

Joh 14:22  ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.

Joh 14:23  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

Joh 14:24  என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

Joh 14:25  நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

Joh 14:26  என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

Joh 14:27  சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

Joh 14:28  நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

Joh 14:29  இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.

Joh 14:30  இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

Joh 14:31  நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

Joh_7:37-40,Joh_14:22-26,1Co_12:8-12,Rom_12:1-6, 2Co_10:13-18,1Pe_4:10,  1Co_14:12-17,1Co_13:8-13;    Joh_14:22-26,Mat_10:16-20Mar_13:9-11

Luk_12:10-12, Luk_21:12-15,Joh_3:27; Eph_6:19-20; Jam_1:5,Isa_50:4;   Joh_20:19-23,Joh_2:20-22, Joh_12:15-16; Act_11:10-16,

9-7 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்:-

Joh 14:16  நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

Joh 14:17  உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

Joh 14:18  நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.

Joh 14:19  இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.

Joh 14:20  நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

Joh 14:21  என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

 Joh 16:7  நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

Joh 16:8  அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

Joh 16:9  அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,

Joh 16:10  நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,

Joh 16:11  இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

Joh 16:12  இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

Joh 16:13  சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

Joh 16:14  அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

Joh 16:15  பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries