தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 05


ஆவி, ஆத்துமாவின், மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்

பொருளடக்கம் இரண்டு

2-0 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனிதனுடைய ஆத்துமாவில் மறுபிறப்பு
 
யோர்தான் தண்ணீரினால் ஞானஸ்தானம் / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் தன்னுடைய ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து ; தேவனுடைய இராஜ்ஜியத்தினுடைய தரிசனங்களை காண்பது
 
பாவத்திலிருந்து மனம் திரும்பியவர்கள் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக்கொள்ளுதல் / தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று நம்பி, யாரையும் பின்பற்ற வேண்டாம் 
 
அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம், நீங்கள் நித்திய ஜீவ வார்த்தைகளால் ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளும்போது நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் வெகுதூரத்திலிருந்து உங்களால் பார்க்க முடியும். Mar_9:1, Luk_9:24-27,Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21,
 
நித்திய ஜீவ வார்த்தைகள் நித்திய காலமாக இருப்பதால் அவைகளுக்கு குறிப்பிட்ட கால அளவுகள் வரையறுக்கப்படவில்லை, ஆனால் ஒருவர் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் ஞானஸ்தானம் பெற்று அவைகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளும்போது, நித்திய ஜீவ வார்த்தைகளின் கால அளவுகளை அவனுடைய கிரியைகளின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை நிறைவேறுவதற்கு தேவையான கால அளவுகளை எடுத்துக்கொள்ளுகிறது./ உடன் படிக்கை செய்து கொண்டவரின் கிரியைகள் மூலம் நித்திய ஜீவ வார்த்தைகளின் சுவையும் வெளிப்படுகிறது. Mat_16:15-19, Joh_6:65-69, Joh_1:1-5, Isa_51:1, 1Ki_5:17, 1Ki_6:7, 1Pe_1:4, 1Pe_1:23, 1Jo_1:1-4, Act_5:19-20, Pro_5:3-7, Jer_2:13, Phi_2:14-16, Jer_23:28-29,
 
2-1 ஜலத்தினால். ஞானஸ்தானம் :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் ஆலோசனைகள். Isa_11:9, Hab_2:14, Isa_5:13, Hos_4:6, Hos_6:1-3,
 
2-2 ஜலத்தினால். ஞானஸ்தானம் கொடுப்பவர்கள் :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை அறிவிக்கிறவர்கள். Joh_3:3-8, Tit_3:4-8, Eph_5:25-27, Col_2:12, 1Pe_3:20-21 Mar_1:4, Mat_3:11, Luk_7:29-30,
 
2-3 சஞ்சரித்து ஞானஸ்தானம் கொடுப்பவர்கள் :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை சிந்தித்து தியானித்து உணர்ந்து கொள்ளும் வகையில் தெளிவாக போதிக்கிறவர்கள். . Joh_3:22-23 ,Gen_5:24, Gen_6:9, Mal_2:6-9, 1Co_1:14-17, Jer_23:18-22 , Isa_41:21-24, 
 
2-4 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்தானம் கொடுப்பவர்கள் :- 
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றின தேவனுடைய ஆலோசனைகளை தெளிவாக போதிக்கிறவர்கள். Act_2:38, Act_2:41, Act_8:12-13, Act_8:16, Act_8:12-13, Act_19:3-5, Act_22:16, Rom_6:3, Gal_3:27, Act_11:15-18, Act_16:13-15, Act_18:8, Act_22:16, Rom_6:3,
 
2-5 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்தானம் கொடுப்பவர்கள் :- 
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தைப் பற்றின தேவனுடைய ஆலோசனைகளை தெளிவாக போதிக்கிறவர்கள். Mat_28:19-20,
 
2-6 ஜலத்தினால். ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புகிறவர்கள். Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12,
 
2-7-0 ஜலத்தினால். ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டவர்களுடைய ஆத்துமா/இருதயத்திலிருந்து வெளிப்படும் கிரியைகள் :-
 
2-7-1 இருதயமாகிய நிலத்தின் வழியருகே விதைக்கப்பட்ட வர்கள்:- 
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் வசனத்தைக் கேட்டும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறவர்கள்.
 
2-7-2 கற்பாறையான இருதயத்திலே விதைக்கப்பட்டவர்கள்:- 
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் வசனத்தைக் கேட்டு, சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டு கொஞ்சகாலத்தில் வசனத் தின் நிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறவர்கள்.
 
2-7-3 முள்ளுள்ள இருதயத்திலே விதைக்கப்பட்டவர்கள்:-
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் வசனத்தைக் கேட்க்கிறவனாக இருந்தும் உலக கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால் பலன் அற்றுப்போனவர்கள்.
 
2-7-4 நல்ல இருதயத்திலே விதைக்கப்பட்டவர்கள்:-தேவனுடைய இராஜ்ஜியத்தின் வசனத்தைக் கேட்க்கிறவர்களும் இருதயத்தில் உணர்ந்து கொள்ளுகிறவர்களுமாக இருந்து, 30ரூ 60ரூ 100ரூ ஆகிய பல நிலைகளில் பலன்/கனி கொடுக்கிறவர்கள்.
 
Mat_13:3-9, Mat_13:18-23, Mat_13:24-30, Mat_13:31-32, Mat_13:34-44, Mat_13:10-17, Mar_4:2-9, Mar_4:10-12, Mar_4:13-20, Mar_4:26-29, Mar_4:30-34, 1Co_15:35-42, 1Co_15:43-50, Joh_4:34-38, Gal_6:6-10, Luk_8:4-9, Luk_8:10-15, 2Co_9:6-10, Isa_55:6-11, Heb_6:1-8, Jer_23:18-24, Jer_23:25-32, 
 
2-8 ஜலத்தினால். ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறவர்கள்:-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில்/ இருதயத்தில் ஏற்றுக் கொண்டு மனந்திரும்பாமல்; தங்கள் மனிதனுடைய ஆலோசனை களினால் தன்னுடைய ஆத்துமாவில் பிழைக்கிறவர்கள். . Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12,
 
2-9 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகள் ஆத்துமாவில்/ இருதயத்தில் மாம்சமாக உருமாற்றம் அடைகிறது :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை தங்களுடைய வாய்க்கும், இருதயத்திற்கும் சமீபமாக வைத்திருக்கிறபோது: அவைகள் ஆத்துமாவில்/ இருதயத்தில் கர்ப்பம் தரித்து நன்மை தீமைகளை பகுத்தாராய்கிறது.
 
இப்படி பகுத்தறிந்த தீமைகளை / பாவத்தை / மனிதனுடைய ஆலோசனைகளை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புகிறபோது; அவைகள் ஆத்துமாவில்/ இருதயத்தில் உருமாற்றம் அடைந்து தேவனுடைய நீதியின் வார்த்தையாக மறுபடியும் பிறக்கிறது.
 
இந்த தேவனுடைய நீதியின் வார்த்தைகள் கிரியைகளாக நிறைவேறுகிறபோது பூரண வளர்ச்சியடைந்து விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு முன்னேறி தன்னுடைய ஆத்துமா நித்திய ஜீவனில் பிழைக்கிறது. இந்த ஆத்துமாவின் சரீர அவயவங்கள்,உடல் ஊனமில்லாமல் மறுபடியும் பிறந்து. தேவனுக்கு முன்பாக தேவ நீதியில் பிழைத்து தேவனுடைய பிள்ளையாக மாறுகிறது. . Joh_1:12-14, Joh_8:41-44, 1Jo_2:28-29, 1Jo_3:9-10, 1Jo_4:6-7, 1Jo_5:1-2, 1Jo_5:18, Act_13:33, 1Co_4:15, 1Pe_1:23, Jam_1:13-18, Rom_9:10-14, Gal_4:19, Gal_4:19-27, Gal_4:28-31,
 
இந்த ஆத்துமா/ இருதயம் தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்த தரிசனங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து கொண்டு, இருதய சந்தோஷத்தினால் மகிழ்சியடைந்து தன்னுடைய ஆத்துமா நித்திய ஜீவனில் பிழைக்கிறது. Rom_10:6-11, Deu_30:11-14, Eze_11:19, Ecc_5:5-6, Psa_65:1-2 , Pro_4:20-22, Job_14:19-22, Joe_2:28, Job_28:12-14, Job_28:20-22, Zec_2:12-13, Zec_11:9, Zec_11:16, Zec_14:12, Job_26:1-6, Job_14:1-6, Job_15:13-14, Job_25:1-4, 
 
2-10 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகள் ஆத்துமாவில்/ இருதயத்தில் மாம்சமாக உருமாற்றம் அடைகிறது; எழுத்தின்படி பொருள் :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை சிந்தித்து தியானிக்கிறபோது, நன்மை தீமைகள் பகுத்தறியப்பட்டு, உணர்ந்து கொள்ளப்படுகிறது; அவைகளின் பொருளை தெளிவான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தி,கிரியைகளாக நிறைவேறுகிறபோது தன்னுடைய ஆத்துமா நித்திய ஜீவனில் பிழைக்கிறது.
 
2-11 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் ஒரு பகுதி ஆத்துமாவில் / இருதயத்தில் மாம்சமாகி மறு பகுதி அழுகின மாம்சமாக உருமாற்றம் அடைகிறது :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய வாய்க்கு சமீபமாகவும், இருதயத்திற்கு தூரமாகவும், வைத்துக் கொண்டிருக்கிறபோது, அவைகளின் ஒரு பகுதி மாம்சமாக உருமாற்றம் அடைந்தும், மறு பகுதி மாம்சமாக உருமாற்றம் அடையாமலுமிருந்து, இருதயமாகிய கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகி செத்து விழுந்த பிள்ளையைப் போல, மறுபடியும் பிறக்கிற ஆத்துமாவின் சரீர அவயவங்கள்,உடல் ஊனம் உள்ளவைகளாக இருக்கிறது.
 
இப்படி மறுபடியும் பிறக்கிற ஆத்துமாவின் சரீர அவயவங்கள், பாதி மாம்சம் அழுகி செத்து விழுந்த பிள்ளையைப் போல,உடல் ஊனம் உள்ளவைகளாக பிறக்கிறபோது; குருடு, செவிடு, ஊமை, சப்பாணி முடக்குவாதம்,மலட்டுத்தன்மை, மற்றும் பல வகையான ஊனங்கள் வெளிப்படுகிறது.
 
இப்படி அநேக ஊனத்துடன் மறுபடியும் பிறக்கிற ஆத்துமாக்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்த தரிசனங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து கொள்ளாமல் இருந்து, தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளினால் தன்னுடைய ஆத்துமா பிழைக்கிறது., ., 2Ki_5:27, 2Ki_15:5, 2Ch_26:21,
 
2-12 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் ஒரு பகுதி ஆத்துமாவில் / இருதயத்தில் மாம்சமாகி மறு பகுதி அழுகின மாம்சமாக உருமாற்றம் அடைகிறது. எழுத்தின்படி பொருள் :-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை இருதயத்தில்/ ஆத்துமாவில் சிந்தித்து தியானிக்கிறபோது, நன்மை தீமைகளை பகுத்தறியப்பட்டு, உணர்ந்து கொள்ள முடியாமல்; அவைகளின் ஒரு பகுதி பொருளை மட்டும் வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு, மறு பகுதியின் பொருள் சிதைந்து, சிதறி உருக்குலைத்து, நிலைத்தடுமாறி, ஒழுங்கின்மையும் வெறுமையுமான வார்த்தைகளாக வெளிப்படுகிறது.
 
இப்படி கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகள் ஒரு பகுதி மட்டும் பொருளுக்கு உருமாற்றம் அடைந்தும், மறு பகுதி பொருளுக்கு உருமாற்றம் அடையாமல் இருக்கிறபடியால், அவைகளை கிரியைகளுக்கு நிறைவேற்ற முடியாமல், உடல் ஊனம் உள்ள பொருளாகவே மற்றவர்களுக்கு வெளிப்படுகிறது.
 
2-13 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை வாந்தி பண்ணுகிறவர்களை, தேவனும் தன்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணுகிறபடியால் அழுகின மாம்சமாக ஆத்துமாவில் மறுபடியும் பிறக்கிறார்கள்:- 
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை தங்களுடைய வாய்க்கு சமீபமாக வைத்துக் கொண்டிருக்கிறபோது நீதிமானாகவும், இருதயத்திலிருந்து வாந்தி பண்ணுகிறபோது பாவியாகவும் இருக்கிறபடியால் இப்ப டியுள்ளவர்களை, இருதயத்தை சோதித்தறிகிற தேவனும் தன்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிப்போடுகிறார்.
 
தேவனுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணப்பட்டவர்கள் பாதி அழுகின மாம்சமாக இருக்கிறபடியால், மறுபடியும் பிறக்கிற ஆத்துமாவின் சரீர அவயவங்கள்,உடல் ஊனம் உள்ளவைகளாக இருக்கிறது. 
 
மறுபடியும் பிறக்கிற ஆத்துமாவின் சரீர அவயவங்கள்,உடல் ஊனம் உள்ளவைகளாக இருக்கிறபோது; தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்த தரிசனங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து கொள்ளாமல் இருந்து, தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளினால் தன்னுடைய ஆத்துமா பிழைக்கிறது. Rev_3:14-19, Num_12:10-14 
 
2-14 உலகத்தில் தோன்றின மதங்களின் விசுவாசங்களை இருதயத்தில் கர்ப்பம் தரித்து ஊனம் உள்ளவைகளாக ஆத்துமாவில் மறுபடியும் பிறக்கிறவர்கள், வாழ் நாள் குறைந்து, சஞ்சலத்துடன் வாழ்ந்து மீண்டும் ஆத்துமா மரணமடைகிறது:-
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை இருதயத்தில் கர்ப்பம் தரித்து ஆத்துமாவில் மறுபடியும் பிறக்காமல், தன்னுடைய சுய ஆலோசனைகளின் படியோ
 
அல்லது உலகத்தில் தோன்றின மதங்கள் மற்றும் அவைகளின் உட்
 
பிரிவுகளின் விசுவாசங்களையோ இருதயத்தில் கர்ப்பம் தரித்து, ஆத்துமாவில் மறுபடியும் பிறக்கிறபோது; அந்த ஆத்துமா மனிதனுக்கு முன்பாக கொஞ்ச காலம் நீதிமானாக பிழைக்கிறது ஆனால் தேவனுக்கு முன்பாக நீதிமானாக பிழைக்க முடியாது
 
இந்த ஆத்துமாக்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்த தரிசனங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து கொள்ளாமல் இருந்து, வாழ் நாள் குறைந்து, சஞ்சலத்துடன் வாழ்ந்து மீண்டும் ஆத்துமா மரணமடைகிறது. 
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை பின்பற்றி ஆத்துமாவில் மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி மனந்திரும்பாமல், ஸ்திரீயாகிய சபையின் உபசேதத்தின்படி மனந் திரும்புகிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருப்பது எப்படி? ? Job_15:1-35, Job_25:4, Job_39:1-8, Pro_1:10-19, Pro_2:1-22, Pro_5:1-23, Pro_6:23-35, Pro_7:1-27, Pro_9:13-18, Isa_4:1, Isa_3:12, Rev_18:1-24, Job_15:14, 
 
2-15 ஊனம் உள்ளவர்களாகவே ஆத்துமாவில் மறுபடியும் பிறந்தவர்கள்; ஏற்கனவே ஆத்துமாவில் குருடராக இருக்கிற மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறபோது, இருவரும் பாதாளத்தில் இடறி விழுகிறார்கள்:- 
 
ஊனம் உள்ளவர்களாகவே மறுபடியும் பிறந்த ஆத்துமாக்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்த தரிசனங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்; இவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழியத்தைசெய்கிறபோது, குருடனுக்கு வழிகாட்டுகிற குருடராக இருக்கிறார்கள்.
 
இந்தக் குருடர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கிறவர்களையும் பிரவேசிக்க விடாமல் தேவனுடைய இராஜ்ஜியத்தை பூட்டிப்போடுகிறார்கள் இவர்களும் இவர்களை பின் தொடர்கிறவர்களும் பள்ளத்தில் /பாதாளத்தில் இடறி விழுகிறார்கள். Isa_42:18-19, Joh_9:39-41, 2Pe_1:5-9, Mat_15:13-14, Mat_23:16-17, Mat_23:19, Mat_23:24, Mat_23:26, Luk_6:39, Rom_2:18-25, Isa_9:16, Isa_56:10; 
 
2-16 மறுபடியும் பிறந்த ஆத்துமாவின் உடல் ஊனங்களை சுகமாக் குவது அல்லது மீண்டும் ஆத்துமா உடல் ஊனங்கள் இல்லாமல் மறுபடியும் பிறப்பது:-
 
மறுபடியும் பிறந்த ஆத்துமாவின் உடல் ஊனங்களை கண்டறிந்து அவைகளை சுகமாக்குவது தொடர்புடைய தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில்/ இருதயத்தில் ஏற்றுக் கொண்டு மனந்திரும்புகிறபோது, ஆத்துமாவின் உடல் ஊனங்கள் சுகமடைகிறது; அல்லது கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை இருதயத்தில்/ ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு மனந்திரும்புகிறபோது, மீண்டும் மறுபடியும் பிறக்கிற ஆத்துமாவின் சரீர அவயவங்கள்,உடல் ஊனம் இல்லாமல் பிறக் கிறது. Mat_9:27-30, Mat_11:5, Mat_12:22, Mat_15:30-31, Mat_20:30-35, Mat_21:14, Mar_8:22-26, Mar_10:46-54, Luk_4:18-20, Luk_7:21-22, Luk_14:21, Luk_18:35-43, Joh_5:1-9, Joh_9:5-9, Joh_9:30-33, Joh_9:37-41 ,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries