தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 2

2-0 கிறிஸ்துவின்  விசுவாசத்தில் உடன்படிக்கை செய்தவர்கள்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின தீர்க்கதரிசன வார்த்தைகளை, பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் வாசித்து, இருதயத்தில் சிந்தித்து, தியானிக்கும்போது, தேவனுடைய  இராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டு  தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்:- 

 

2-1 தேவனுடைய ஆலயத்தின் பிராகாரத்தில்  இடறி விழுந்த குருடரும் சப்பாணிகளும்; சீயோன் கோட்டை/ தேவனுடைய ஆலயத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறவர்கள்    என்ன காரணத்திற்காக தடைசெய்கிறார்கள் என்பதை பகுத்தறிந்து,உணர்ந்து கொண்டு, அந்த கிரியைகளை சீர்திருத்திக்கொண்டு சீயோன் கோட்டைக்கு/ தேவனுடைய ஆலயத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறவர்கள்:-

சீயோன் கோட்டையை / சீயோனாகிய  வேதத்திற்கும்  ,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்களூக்கும், வந்து சேர்ந்து  அவைகளில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த அதிகாரங்களை முழுமனதுடன் சுதந்தரித்துக்கொள்ள வருகிறபோது: கிறிஸ்துவின்  விசுவாசத்தில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரத்தில்  இடறி விழுந்த குருடரும் சப்பாணிகளும்;   

என்ன காரணத்திற்காக அவர்களை தடைசெய்கிறார்கள் என்பதை பகுத்தறிந்து,உணர்ந்து கொண்டு, அந்த கிரியைகளை சீர்திருத்திக்கொண்டு நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறதின் மூலம், சீயோன் கோட்டையை / சீயோனாகிய  வேதத்திற்கும்  ,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்களூக்கும், வந்து சேர்ந்து  அவைகளில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த அதிகாரங்களை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள்.

Job_37:21-24,Psa_48:1-6; Psa_50:1-5;Heb_12:22-26Isa_2:1-6Mic_4:1-5;   

 

2-2 கிறிஸ்துவின்  விசுவாசத்தில் உடன்படிக்கை செய்தவர்கள்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின தீர்க்கதரிசன வார்த்தைகளை, பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் வாசித்து, இருதயத்தில் சிந்தித்து, தியானிக்கும்போது, தேவனுடைய  இராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டு  தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். 

Isa 37:30  உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; இரண்டாம் வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், சாப்பிடுவீர்கள்;  மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

Isa 37:31  யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 

Isa 37:32  மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். 

Isa 55:9  பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. 

Isa 55:10  மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 

Isa 55:11  அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். 

Isa 55:12  நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். 

Isa 55:13  முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.

2-3 கிறிஸ்துவின்  விசுவாசத்தில் உடன்படிக்கை செய்தவர்கள்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின தீர்க்கதரிசன வார்த்தைகளை, பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் வாசித்து, இருதயத்தில் சிந்தித்து, தியானிக்கும்போது, தேவனுடைய  இராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொண்ட உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றான். 

வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான். Dan_7:18, Dan_7:27,

 

2-4 தேவனுடைய ஆலயத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறவர்களை:    இடறி விழுந்த குருடரும் சப்பாணிகளும்;என்ன காரணத்திற்காக தடைசெய்கிறார்கள் என்பதை பகுத்தறிந்து,உணர்ந்து கொண்டு, அந்த கிரியைகளை சீர்திருத்திக்கொண்டு, சீயோன் கோட்டைக்கு/ தேவனுடைய ஆலயத்திற்கு உள்ளே ஆவிக்குரிய யூதர்களாக  பிரவேசிக்கிறவர்கள்:முதலாவது மற்றவர்களூம் தேவனுடைய ஆலயத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறதற்காக வழியை ஆயத்தப்படுத்துகிறார்கள்:-     


இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு பின்பு ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக புறஜாதிகளூக்கு தேவனுடைய இரட்சிப்பு  கிடைத்தது, ஆனால் நாளடைவில்   தேவனுடைய நாமத்தை ஏற்றுக்கொண்ட புறஜாதிகள்:   தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தை விட்டு வழிவிலகி, மனிதனுடைய கற்பனைகளையும்,   ஆராதனை முறைகளையும், கலந்து கிறிஸ்தவ மார்க்கம் / கிறிஸ்தவ மதமாகவும் புறஜாதிகளை போல பல உட்பிரிவுகளையும் உருவாக்கினார்கள் 

Rom_11:17-20, Rom_11:21-24,Jer_11:16; Eze_15:6-8

 

இராஜவாக வெளிப்படுகிற  இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் புறஜாதிகளான கிறிஸ்தவர்களுடைய   மார்க்கத்திலிருந்தும் கிறிஸ்தவர்களுடைய மதத்திலிருந்தும் மனந்திரும்பி ஆவிக்குரிய யூதர்களாக மாறினவர்கள்: நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களை உடையவர்களாகிய பூரண வயதையடைந்து,  பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவர்களாக இருக்கிறார்கள்;

இவர்கள் தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்திற்கும்  / நித்திய சத்திய மதத்திற்கும்  கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் கிறிஸ்தவ  மதத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வெளிப்படுத்தி  தேவனுடைய ஆலயத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறதற்காக வழியை ஆயத்தப்படுத்துகிறார்கள். 

Pro_11:19; Psa_16:11;Pro_5:1-10, Pro_2:1-11,  Pro_2:12-22,       Pro_4:18,  Pro_12:28; Isa_2:3; Mat_7:14;   Mat_16:24-25; Pro_4:26-27

Pro_8:20; Isa_30:21, Isa_35:8, Isa_57:14; Jer_6:16; Mar_8:34;      

Act_14:22; 2Pe_2:15, 2Pe_2:21; Psa_18:21; Isa_35:8; Jer_6:16

Mat_7:14, Mat_22:16;  Mar_12:14; Joh_14:6; Act_13:10, Act_16:17, Act_18:26, Act_19:9, Act_24:14

 

இவைகளைக் குறித்து  மேலும் அறிந்து கொள்ள தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து தலைப்பு பதினெட்டு கிறிஸ்தவ மதத்தினால்  போதிக்கப்பட்ட கற்பனைகள்    V/S தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள்

மற்றும் தலைப்பு பத்தொன்பது கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு;     கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள் ஆகியவைகளில் பார்க்கவும்.

   

Mat 23:15  மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். 

Isa 40:1  என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 

Isa 40:2  எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். 

Isa 40:3  கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 

Isa 40:4  பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும், 

Isa 40:5  கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. 

Isa 40:6  பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. 

Isa 40:7  கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். 

Isa 40:8  புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது. 

Isa 40:9  சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. 

Isa 40:10  இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது. 

Isa 40:11  மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். 

மேலும் சீயோனைக் குறித்து அறிய தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து தலைப்பு பதினான்கு ஞான அர்த்தமுள்ள சீயோனின் வெளிப்பாடுகள் பகுதியில் பார்க்கவும்



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries