5-0. வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைகளிலிருந்து நான்கு வகையான விசுவாசங்கள் வெளிப்படுகிறது
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக்காற்றுகளும் / உபதேசங்களும் பூமியின் மேல் உள்ள எல்லா ஜனங்களின் மேல் மோதியடித்து, ஒன்றன் பின்பு மற்றொன்று முழங்கி வீசுகிறது, இதன் பிரதிபலனாக பூமியின் நான்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் விசுவாசங்களில் ஏதாவது ஒன்று, தேவனுடைய முன் தீர்மானத்தின் படி ஒவ்வொரு மனிதன் மேலும் ஆதிக்கம் செலுத்தி அதற்கு அவனை அடிமைப்படுத்துகிறது.
நான்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் வல்லமை மிக அதிகமாகயிருப்பதால் ஒவ்வொரு திசையின் காற்றும் / உபதேசமும் மற்றொரு திசையின் காற்றின் / உபதேசத்தின் மேல் சுழன்று சுழன்று அடித்து ஒவ்வொரு மனிதன் மேலும் மோதியடிக்கிறது;
இதன் பின் விளைவாக நான்கு திசைகளின் காற்றும் / உபதேசமும் தேவனுடைய முன் தீர்மானத்தின்படி தேவன் ஒவ்வொரு திசைக்கும் பகிர்ந்து கொடுத்த உபதேசத்தின் விசுவாசத்தை பின்பற்றுகிற ஜனங்களை அவர்களுடைய விசுவாசக் கிரியைகளின் மூலம் அடையாளம் கண்டு, அவர்களை பல திசைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையின் உபதேசத்திற்கு முழுமையாக கூட்டிச்சேர்க்கிறது.
இப்படி ஒவ்வொரு திசையின் காற்றும் / உபதேசமும் தனித்தனியாக தங்களுடைய உப தேசத்தை பின்பற்றுகிற ஜனங்களுடைய கூட்டமைப்பை மற்ற திசை களிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி, ஒரு குறிப்பிட்ட திசையின் உபதேசத்திற்கு கொண்டு வந்து மிகத்தெளிவாக வெளிப்படுத் திக்காட்டுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து தேவனுடைய வீடாகிய சபையிலே அறிவிக்கப்படுகிறது.
இதை வாசிப்பவர்கள் தேவனுடைய வார்த்தைகளுடன் உடன்படிக்கை செய்தவர்களாகயிருந்தால் இந்த நேரம் முதல் அவர் களுடைய இருதயமாகிய தேவனுடைய ஆலயத்திலே தேவனுடைய நியாயத்தீர்ப்பு தொடங்குகிறது.
தேவனுடைய முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் பின்பற்றாவிட்டால் அவர்கள் தேவனிட மிருந்து பெற்றுக்கொண்ட இரட்சிப்பு உடனே மரணமடையும், இப் பொழுது அவர்கள் இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாமல் அவர் களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இருளடையும்,
மேலும் அவர்கள் மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் பெற்றுக் கொள்ளும் நாள் வரை, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் சாபங்கள் அவர்களை பின் தொடர்ந்து நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கும்.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி கிழக்கிலிருந்து அறிவிக்கப்படுகிறபோது, பூமியின் நான்கு திசையின் காற்றுகளும் / உபதேசங்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது; இந்த சூழ்நிலையில் நான்கு வகையான உபதேசங்களின் விசுவாசங்களில் ஏதாவது ஒரு விசுவாசத்திற்கு தேவனுடைய முன் தீர்மானத்தின்படி மனிதனை நிச்சயமாக அடிமைப்படுத்துகிறது.
இப்படி பூமியின் மேல் ஜீவனோடிக்கிற ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு வகையான உபதேசத்தின் விசுவாசத்தை பின்பற்றினால் மட்டும் அவன் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் ஜீவ னோடிருந்து பிழைக்க முடியும்.
நான் இந்த நான்கு திசைகளின் விசுவாசத்தை எதையும் பின்பற்றவில்லை என்று யாரும் குறை சொல்வதற்கு இடமில்லாமல், ஏதாவது ஒரு திசையின் விசுவாசங்கள் தேவனுடைய முன் தீர்மானத் தின்படி நிச்சியமாக ஒவ்வொரு மனிதன் மேலும் ஆதிக்கம் செலுத்தி யிருக்கும்; தேவனுடைய இந்த நியாயத்தீர்ப்பின் திட்டத்திலிருந்து எந்த ஒரு மனிதனும் தப்பித்துக்கொள்ள முடியாது.
தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் மூலம் தேவனு டைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தியின் விருந்தை புசித்து அறிந்து கொள்ள தேவையான பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் அவைகளின் விசுவாசக் கிரியைகளும் கீழே விவரிக்கப்படுகிறது.
5-1. வடக்கு திசைக் காற்றின் / உபதேசத்தினால் தேவனுடைய இரட்சிப்பின் விசுவாசக் கிரியைகள்.
5-2. தெற்கு திசைக் காற்றின் / உபதேசத்தினால் தேவனுடைய உடன்படிக்கைகளின் நீதியையும், நியாயத்தீர்ப்பையும் நிறைவேற்றும் விசுவாசக் கிரியைகள்.
5-3. கிழக்கு திசைக்காற்றின் / உபதேசத்தினால் தேவனுடைய வெளிப்பாடுகளையும் மனிதனுடைய வெளிப்பாடுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மாயையின் வெளிப்பாடுகளின் இராஜரீகமும் அதன் சிங்காசனப் பதவிகளின் விசுவாசக் கிரியைகளும்.
5-4. மேற்க்கு திசைக் காற்றின் / உபதேசத்தினால் அசுத்த ஆவியின் அதிகாரங்களும், அதன் அற்புத அடையாளங்களின் விசுவாசக் கிரியைகளும்.
பூமியின் நான்கு திசைக் காற்றுகளையும் / உபதேசங் களையும் அவைகளின் விசுவாசக் கிரியைகளையும் ஒற்றுமை வேற்றுமைப்படுத்தி அதனால் வெளிப்பட்ட காரண காரியங்களில் நன்மை, தீமைகளை பகுத்தறிவதன் மூலம் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து சமைக்கப்பட்டு, புசிப்பதற்கேற்றபடி தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப் பின் நற்செய்தி பரிமாறப்படுகிறது / வெளிப்படுகிறது / அறிவிக் கப்படுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலினால் இரட்சிப்பின் நற்செய்தி தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களுடன் அறிவிக்கப்படுகிறது.
முதலாம் அடையாளம் :- புற ஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக் கூடாது.
இரண்டாம் அடையாளம் :- பலிபீடத்தின் பிரமாணங்களை பின்பற்றி நடக்க வேண்டும்.
மூன்றாம் அடையாளம் :- கர்த்தருடைய பஸ்கா விருந்தை புசிக்க வேண்டும.
நான்காம் அடையாளம் :- ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்.
ஐந்தாம் அடையாளம் :- மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்.
ஆறாம் அடையாளம் :- இயேசுக்கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்.
ஏழாம் அடையாளம் :- பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள் 4-3-3-6 வரிசையில் பார்க்கவும்
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)