தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 7

7-0. வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது;  பூமியின் நான்கு  திசைக் காற்றுகளின் / உபதேசங்களின்  விசுவாசக்  கிரியைகளுடைய          ஏழு குணாதிசயங்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

 

வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது, பூமியின் நான்கு திசைக் காற்றுகளும்   / உபதேசங்களும் தங்களுடைய விசுவாசக் கிரியைகளை பின்பற்றுகிற ஜனங்களின் ஏழு குணாதிசயங்களை அந்தந்த திசைகளுக்கேற்றபடி மிகத் தெளிவாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறது.

இப்பொழுது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைக்காற்றுகளும் / உபதேசங்களும் தனித்தனியாக, முறையே, தங்களுடைய திசைக் காற்றின் / உபதேசத்தின் விசுவாசத்தை பின்பற்றுகிற ஜனங்களை அவர்கள் கிரியைகளின் மூலம் அடையாளம் கண்டு கீழே குறிப்பிட்டுள்ள அவர்களுடைய பல குணாதிசயங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறது.

1. காற்றின் திசை/ காற்றின் பெயர்

2. காற்றின் கிரியைகள் 

3. திசையின் தரிசனங்கள்

4. திசையின் அதிபதியும் பிரதிநிதிகளும்

5. திசையின் பிரதிநிதிகள் புறப்படும் இடம்

6. பிரதிநிதிகளின் கிரியைகள்

7. தரிசனத்தின் பிரதிபலன்கள்

7-1 வடக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதிசயங்கள்.

7-2 தெற்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதிசயங்கள்

7-3 கிழக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதிசயங்கள்.

7-4 மேற்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதிசயங்கள்.

7-1 வடக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதிசயங்கள்.

1. வடக்கு திசைக்காற்று உபதேசத்தின் பெயர்கள்:-

வடக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் பெயர்கள் குளிர்காற்று, மழைக்காற்று , வாடைக்காற்று Pro_25:23, Job_37:1-13,  Son_4:16,

2.வடக்கு திசைக்காற்று உபதேசத்தின் கிரியைகள்:-

வடக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் கிரியைகள் மழை, முன்மாரி மழை, பின்மாரி மழை.

Deu_32:1-3,Hos_6:1-3,  Zec_10:1-6, Mat_7:21 29,Eze_ 13:10-16, Isa_28:14-19, Jer_5:19-31,   Act_2:1-4,   Psa_75:1-10, Jer_3:17-25, Joh_4:16-26,

3. வடக்கு திசைக்காற்று உபதேசத்தின் தரிசனங்கள்:-

வடக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் தரிசனங்கள் வடக்கிலுள்ள சீயோன்  பர்வதத்திலிருந்து தேவனுடைய இரட்சிப் பின் நற்செய்தி 

Psa_48:1-6, Isa_41:25-29, Isa_46:10-13, Isa_33:14-17, Isa_2:1-4, Mic_4:1-3,Zec_8:14-23,  Zec_2:6-13,  Jer_3:17-25, Joh_4:16-26, Psa_14:7, Psa_53:6, Isa_62:1-12

4.-1 வடக்கு திசைக்காற்று உபதேச தரிசனத்தின் அதிபதி :- முதலாவது இரட்சிப்பின் அதிபதி கிறிஸ்து

 Act_5:28-32,  Heb_2:10, Rev_1:4-5, 1Co_15:20-23,

4-2 வடக்கு திசை தரிசனத்தின் பிரதிநிதிகள் :-

கிறிஸ்துவின்  சரீர அவயவங்களாக  இருக்கிற 1,44,000 பேர்  வரிசையில் வருகிற  பிரதிநிதிகள் சணல்  நூல் அங்கிதரித்து, அரையிலே  மைக்கூட்டை  வைத்திருந்து கையிலே  தேவனுடைய முத்திரைக்கோலின்  அடையாளங்களுடன்  இரட்சிப்பின் நற்செய்தியை  பெற்றுக் கொண்டவர்கள்.

Rev_7:1-4, Rev_7:9-17, Rev_14:1-5, Isa_41:25-33, Isa_48:14-22, 1Co_12:7-12,  Eph_4:11-16,Rev_11:1-13, Joh_17:1-8, Joh_17:9-18, Joh_17:19-26, Joh_4:16-26

5. வடக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் அதிபதியும் பிரதிநிதிகளும் புறப்படும் இடம் :-

இரட்சிப்பின் அதிபதி கிறிஸ்து புறப்படும் இடம் கிழக்கு; இரட்சிப்பின் பிரதிநிதிகள் புறப்படும் இடம் கிழக்கு / சூரியோதய திசை / சூரியன் உதிக்கும் திசை, இவர்கள் புற ஜாதிகளிலிருந்து தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய யூதர்கள். Mat_2:1-6, Rev_7:1-4, Isa_41:25-33,  Eze_9:1-11, Rev_16:12

 

6. வடக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் பிரதிநிதி களுடைய கிரியைகள்:-

பரிசுத்த ஸ்தலத்தில் பெருமூச்சு விட்டழுகிறவர்கள் நெற்றி யில் தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பது / அடையாளம் போடுவது. Eze_9:1-11, 2Pe_2:6-10

7. வடக்கு திசை தரிசனத்தை பின்பற்றுகிறவர்களின் பிரதி பலன்கள் :-

முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தை சுதந்திரத்துக் கொள்ளுதல். Rev_14:1-5, Rev_20:4-6, Rev_16:12,

7-2 தெற்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதி சயங்கள்

1. தெற்கு திசைக் காற்று உபதேசத்தின் பெயர்கள்:-

சுழல் காற்று, பெருங்காற்று, புயல் காற்று, சூறைக்காற்று, வனாந்தரக் காற்று Mal_4:1-6, Job_37:9-13, Mat_7:21-29, Psa_75:1-10,Isa_21:1-9, Eze_13:10-16, Zec_9:13-17,  


2. தெற்கு திசைக்காற்று உபதேசத்தின் கிரியைகள் :-

தேவனுடைய உடன்படிக்கைகளின் நீதியையும் நியாத்தீர்ப்பையும் நிறைவேற்றும்   கிரியைகள் Dan_12:1-13, Dan_4:17, Dan_7:9-10, Gal_3:19, Mal_4:1-6,  

3. தெற்கு திசைக்காற்று உபதேசத்தின் தரிசனங்கள் :-

தேவனுடைய உடன்படிக்கைகளின் நீதியையும், நியாயத்தீர்ப்பையும் தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களைக் கொண்டு பரிசோதிக்கும் தரிசனங்கள். Rev_9:1-4, Rev_9:13-16,Jer_46:10-12

4-1. தெற்கு திசைக் காற்று உபதேசத்தின் அதிபதி:-  

தெற்க்கு திசை தரிசனத்தின் அதிபதி : பிரதான தூதனாகிய மிகாவேல், Dan_12:1, Jud_1:9, Rev_12:7-10,  Jos_5:14,  Dan_10:13, Dan_10:21, Rev_9:1-4, Rev_9:13-16

4-2. தெற்கு திசைக் காற்று உபதேசத்தின்   பிரதிநிதிகள்  :-

தெற்க்கு திசை தரிசனத்தின் பிரதிநிதிகள்: பிரதான தூதனை பின்பற்றுகிற தூத சேனைகள். Dan_12:1, Jud_1:9, Rev_12:7-10,  Jos_5:14,  Dan_10:13, Dan_10:21, Rev_9:1-4, Rev_9:13-16

5. தெற்கு திசை உபதேசத்தின் அதிபதி / பிரதிநிதிகள் புறப்படும் இடம் :-

தேவனுடைய ஆலயம் / தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களை நெற்றியில் போடும்போது / இரட்சிப்பின் நற் செய்தியை அறிவிக்கும்போது தேவனுடைய ஆலயமாகிய ஒவ்வொரு இருதயத்திலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிறது. Eze_9:1-11, Jer_25:26-31, Mal_3:1-

6.  தெற்கு திசை உபதேச்த்தின் அதிபதி மற்றும் பிரதி நிதிகளின் கிரியைகள் :-

தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் ஏற்றுக் கொள்ளாதவர்களையும், தேவ னுடைய வார்த்தைகளின்படி நற்கிரியைகள் இல்லாதவர்களையும் உபத்திரவப்படுத்துவது.

7. தெற்க்கு திசை தரிசனத்தை பின்பற்றுகிறவர்களின் பிரதிபலன்கள்:-

தேவ புத்திரர்கள் மகிமையடைந்த பிறகு தேவ தூதர்களும் தங்களுடைய நற்கிரியைகளுக்கேற்றபடி மகிமையை பெற்றுக் கொள்ளுகிறார்கள்.

Rom_8:19-22, Gal_3:19-22, Gal_4:1-2,  Act_7:53,  Rev_22:6-16,  Heb_1:13-14, Jud_1:6,  1Co_6:1-4, 2Pe_2:4, Job_4:18,Eze_28:1-15,

7-3 கிழக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதிசயங்கள்

1. கிழக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் பெயர்கள்:-

கிழக்கு திசைக்காற்று, கீழ் காற்று, கொண்டல் காற்று முகத்தை கருக்கும் உஷ்ணக்காற்று Hab_1:9, Jon_4:8, Gen_41:6-7, Gen_41:23-24,

2. கிழக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் கிரியைகள்:-

தேவனுடைய வெளிப்பாடுகளையும் மனிதனுடைய வெளிப்பாடுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட புற ஜாதிகளின் மாயை / மாயா வெளிப்பாடுகளின் இராஜரீகமும் அதன் சிங்காசன பதவிகளையும் கேட்பவர்களுக்கு முகம் சுழிக்கும் உபதேசங்கள். . Hab_1:9, Jon_4:8, Eze_19:10-14,

3. கிழக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் தரிசனங்கள்:-

தேவனுடைய வெளிப்பாடுகளையும் மனிதனுடைய வெளிப் பாடுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட புற ஜாதிகளின் மாயை / மாiயா வெளிப்பாடுகளின் இராஜரீகமும் மற்றும் அதன் சிங்காசன பதவிகளின் தரிசனங்களும் . Isa_2:5-22,  Amo_7:1-17, Dan_4:30, Dan_5:1-2, Hos_13:9-16,

4-1. கிழக்கு திசைக் காற்றின் மாயை / மாயா உபதேசத்தின் அதிபதி :-  

நான் கிழக்கத்திய மனுஷன் / மனுபுத்திரன் / மனுஷக் குமாரன் நான் கிறிஸ்து என்ற பெயர்களை வைத்துக் கொண்டு கிறிஸ்துவின் பதவிக்கு உரிமை கொண்டாடுகிறவர்கள் 

4-2 கிழக்கு திசைக் காற்றின் மாயை / மாயா உபதேசத்தின் பிரதிநிதிகள்:-

புற ஜாதிகளின் மாயா வெளிப்பாடுகளை பின்பற்றுகிற வர்கள், புற ஜாதிகளின் எண்ணிக்கைக்கு இணையான பத்து சீடர்கள்   மற்றும் அவர்களை பின்பற்றுகிறவர்கள் Isa_41:1-3, Isa_46:10-13,  Amo_5:1-7, Amo_6:8-14,

5. கிழக்கு திசையின் அதிபதியும் பிரதிநிதிகளும் புறப்படும் இடம்:-

கிழக்கு திசையின் அதிபதி இந்தியாவிலிருந்து ஒரு ஆவிக் குரிய கிறிஸ்தவன், மற்றும் பிரதிநிதிகள் அவருடைய மாயா உபதேசத்தை பின்பற்றுகிற பத்து சீடர்கள். Isa_41:1-3, Isa_46:10-13, Amo_5:1-7, Amo_6:8-14,Lev_26:26,

6-1. கிழக்கு திசைக் காற்று உபதேச அதிபதியின் கிரியைகள் :-

நான் கிழக்கத்திய மனுஷன் / நான் மனுஷக்குமாரன் /  நான் கிறிஸ்து, என்பவர்கள் தேவனுடைய வெளிப்பாடுகளையும் மனிதனுடைய வெளிப்பாடுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மாயை / மாயா வெளிப்பாடுகளினால் ஒரு இராஜரீகத்தை அமைக்க தேவையான பிரமாணங்களை உருவாக்கிக் கொண்டு / மணல் மேல் கட்டிண ஒரு அரண்மனையை / மாளிகையை ஏற்படுத்திக் கொண்டு அதில் கிறிஸ்துவிற்கு இணையான இராஜா பதவிக்கு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். . Isa_65:1-9, Isa_65:10-16,  Amo_6:1-14, Eze_8:1-18

6-2 கிழக்கு திசைக்காற்றின் மாயை / மாயா உபதேசத்தின் பிரதிநிதிகளுடைய கிரியைகள்:-

நான் கிழக்கந்திய மனுஷன் / நான் மனுபுத்திரன் / நான் மனுஷக் குமாரன் / நான் கிறிஸ்து என்பவர்களுடைய மாயை / மாயா வெளிப்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள், இராஜாவின் பதவிற்கு அடுத்தப்படியுள்ள முக்கியமான பதவிகளுக்கு உரிமை கொண்டாடுகிறவர்கள் . Isa_65:1-9, Isa_65:10-16,  Amo_6:1-14, Eze_8:1-18

7-1 கிழக்கு திசைக்காற்றின் / உபதேச அதிபதியின் பிரதி பலன்கள் :-

1. முதலாவது கிழக்கு திசை உபதேசத்தினுடைய   அதிபதியின்  இரட்சிப்பு நியாயத்தீர்க்கப்பட்டு மரணமடைகிறது.

கிழக்கு திசைக் காற்றின் மாயை / மாயா வெளிப்பாடுகளின் அதிபதி, தேவனுடைய முத்திரை அடையாளங்களை தன்னுடைய நெற்றியில் / அறிவில் ஏற்றுக் கொள்ளாதபடியினால்; தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பினால், முதலாவது  தேவனிடமிருந்து பெற்றுக் கொண்ட  இரட்சிப்பு மரணமடைகிறது. Eze_9:1-11, Eze_11:1-13, Eze_11:14-21,

 

2 இரண்டாவது கிழக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் அதிபதியான கிழக்கத்திய மனுஷன் / நான் மனுபுத்திரன் / நான் மனுஷக் குமாரன் என்ற பதவி நியாயத்தீர்க்கப்படுகிறது.

நான் கிறிஸ்து என்று உரிமை கொண்டாடுகிறவர்கள், தேவனுடைய இராஜ்ஜியத்தின் வெளிப்பாடுகளையும் புற ஜாதிகளின் இராஜ்ஜியத்தின் வெளிப்பாடுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மாயை / மாயா வெளிப்பாடுகளின் இராஜரீகத்தினுடைய அரண் மணை / மணல் மேல் கட்டிண மாளிகை; ஆவிக்குரிய நிலையில் தகப்பன்  / அதிபதியின் ஸ்தானத்தில் வெளிப்பட்டு நியாயத் தீர்ப்படைகிறது. .  Eze_9:1-11, Eze_11:1-13, Eze_11:14-21,

1. பூமியின் இராஜாக்கள். . Psa_2:1-12,

2. இராஜாவின் சொப்பனம் Dan_4:9-18,

3. சொப்பனத்தின் அர்த்தம் Dan_4:19-27,

4. சொப்பனம் இராஜாவின் மேல் பலித்தது.  .   Dan_4:28-37,

5. இராஜாவின் மனம் கடினப்பட்டது. Dan_5:18-21,

6. இராஜாவின் பகைவன் / சத்துரு இராஜாவின் மேட்டிமை Dan_4:19, Dan_4:30,

7. மனுஷரில் தாழ்ந்தவர் அதிகாரியாக நியமிக்கப்படுகிறான். Dan_4:16-17,

8. கிழக்கத்திய மனுஷனாகிய இராஜாவே நீங்கள் இந்த வார்த்தையின் படி நடந்தால் உம்முடைய வாழ்வு நீடித்திருக்கிலாம். . Deu_28:43-44, Deu_10:18, Isa_3:1-5, Dan_4:27,


7-2 கிழக்கு திசைக்காற்றின் / உபதேச பிரதிநிதிகளின்  பிரதிபலன்கள் :-

1.  முதலாவது கிழக்கு திசையின் உபதேசத்தை பின்பற்றுகிற   பிரதிநிதிகளின் இரட்சிப்பு நியாயத்தீர்க்கப்பட்டு மரணமடைகிறது.

கிழக்கு திசைக் காற்றின் மாயை / மாயா வெளிப்பாடுகளின்   பிரதிநிதிகளும் தேவனுடைய முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் ஏற்றுக் கொள்ளாதபடியினால் தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பினால் முதலாவது அவர்கள் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்ட அவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது.

இரண்டாவது கிழக்கு திசைக் காற்றின் / உபதேசத்தின் அதிபதியான கிழக்கத்திய மனுஷனை / பின்பற்றுகிற பிரதிநிதிகளின் சிங்காசனப் பதவிகள் நியாயத்தீர்ப்படைகிறது.

தேவனுடைய இராஜ்ஜியத்தின் வெளிப்பாடுகளையும் புற ஜாதிகளின் இராஜ்ஜியத்தின்  வெளிப்பாடுகளையும் கலந்து உருவாக்கப் பட்ட மாயை / மாயா வெளிப்பாடுகளின் இராஜரீகத்தின் சிங்காசனப் பதவிகள் ஆவிக்குரிய நிலையில் இராஜாவின் மகனுடைய / பிரதி நிதிகளின் ஸ்தானத்தில் வெளிப்பட்டு நியாயத்தீர்ப்படைகிறது.

1. ஆயிரம் பேருக்கு முன்பாக இராஜா திராட்சரசம் குடித்தார். Dan_5:1-7,

2. மெனே மெனே தெக்கேல் உப்பார்சின். Dan_5:22-28,

 3. ஆயிரம் திராட்சசெடி முட்காடாக மாறினது. Isa_7:21-25,

4. காவலாளரின் தீர்ப்பு Dan_4:17,

5. பரத்திலிருந்து கொடுக்கப்படாவிட்டால் Joh_3:27,

6. அதிகாரம் பரத்திலிருந்து Joh_19:11,

7. தேவனே அதிகாரி Rom_13:1-8,  

8. அதிகாரங்களுக்கு தலைவர் Col_2:10,

9. அதிகாரங்கள் கீழ்படிகிறது 1Pe_3:22,

10. அதிகாரங்கள் தேவனுடையது. Rev_4:11,

 

7-4 மேற்கு திசை காற்றின் / உபதேசத்தின் ஏழு குணாதிசயங்கள்

1. மேற்க்கு திசை காற்றின் / உபதேசத்தின் பெயர்கள்:-

மேற்க்கு திசையின் காற்று, அசுத்த ஆவிகளின் காற்று Rev_16:13-15,

 2. மேற்க்கு திசை காற்றின் / உபதேசத்தின் கிரியைகள்:-

அசுத்த ஆவியின் அதிகாரங்கள். அசுத்த ஆவிகளின் அற்புத அடை யாளங்கள். Rev_16:13-15,

 3. மேற்க்கு திசை உபதேசத்தின் தரிசனங்கள்:-

அசுத்த ஆவிகளின் அதிகாரங்கள் அசுத்த ஆவிகளின் அற்புத அடையாளங்கள் Dan_8:5-12, Dan_8:20-25,

4-1. மேற்க்கு திசை உபதேசத்தின் அதிபதி:-

மேற்க்கு திசையின் அதிபதி :- சாத்தான் /  லுசிபர் தூதன் 

4-2. மேற்க்கு திசை உபதேசத்தின் பிரதிநிதிகள் :-

முதலாவது அந்திக் கிறிஸ்து இரண்டாவது கள்ளத் தீர்க்கதரிசி/ இவர்களைத் தொடர்ந்து ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள். Rev_12:7-17,  Joh_12:31, Joh_14:30, Joh_ 16:11,  Rev_13:1-10,  

5. மேற்க்கு திசையின் பிரதிநிதிகள் புறப்படும் இடம் :-

இஸ்ரவேல் தேசத்திலிருந்து முதலாவது ஒரு எழுத்தின் படியுள்ள யூதன் பின்பு அவருடைய ஆவியை பின்பற்றுகிறவர்கள். Dan_11:20-24,

6. மேற்க்கு திசையின் அதிபதி மற்றும் பிரதிநிதிகளின் கிரியைகள்:-

மேற்க்கு திசையின் அதிபதி தேவனுடைய சிங்காசன பதவிக்கும், அந்திக் கிறிஸ்து கிறிஸ்துவின் சிங்காசன பதவிக்கும் உரிமை கொண் டாடுகிறார்கள்; இவர்களை பின்பற்றுகிறவர்கள் மற்ற பிரதான பதவிகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். Dan_11:36-39,  Dan_8:8-12,

7. மேற்க்கு திசை தரிசனத்தின் பிரதிபலன்கள் :-

தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் ஏற்றுக் கொள்ளாததாலும் தேவனு டைய வார்த்தைகளின் படி நற்கிரியைகள் இல்லாததாலும் நேரடியாக அக்கினி நரக நீயாயத்தீர்ப்பு. . Rev_19:17-21, Rev_20:7-10,



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries