தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 8

8-0. வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது;   பூமியின்   நான்கு   திசைக்   காற்றுகளும் / உபதேசங்களும்   ஒன்றுடன்   மற்றொன்று   மோதி, தங்கள் வல்லமையின்   பராக்கிரமத்தை   வெளிப்படுகிறது.


8-1 கிழக்கு திசை மற்றும் மேற்க்கு திசை உபதேசத்தின் அதிபதிகளும் பிரதிநிதிகளும் நான் தான் கிறிஸ்து என்று அநேக ஜனங்களை வஞ்சிப்பார்கள்.

8-2 வடக்கு திசைக் காற்றும் கிழக்கு திசைக் காற்றும் மோதி தங்களுடைய வல்லமைகளை வெளிப்படுத்துகிறது போது தெற்க்கு திசைக் காற்று மூன்றாவதாக மோதுகிறது.

8-3 வடக்கு திசைக் காற்றும் மேற்க்கு திசைக் காற்றும் மோதி தங்களுடைய வல்லமைகளை வெளிப்படுத்துகிறபோது தெற்க்கு திசைக் காற்று மூன்றவதாக மோதுகிறது.

8-4 வடக்கு திசைக் காற்றுக்கும் தெற்க்கு திசைக் காற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

8-5 கிழக்கு திசைச் காற்றுக்கும் மேற்க்கு திசைக் காற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

8-6 வடக்கு திசைக் காற்றுக்கும் கிழக்கு திசைக்காற்றும் நேருக்கு நேர் மோதி தங்கள் வல்லமைகளை வெளிப்படுத்தும் பல இடங்கள்

8-7 நான்கு காற்றுகளும் / உபதேசங்களை பின்பற்றுகிற ஜனங்களும் சிங்கான பதவிகளுக்கு போராடுகிறார்கள்.

8-1 கிழக்கு திசை மற்றும் மேற்க்கு திசை உபதேசத்தின் அதிபதிகளும், பிரதிநிதிகளும் நான் தான் கிறிஸ்து, என்று அநேக ஜனங்களை வஞ்சிப்பார்கள்.

வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக்கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி கிழக்கு திசையிலிருந்து அறிவிக்கப்படுகிறபோது, நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இப்பொழுது  எல்லா  ஆவிகளும்  தங்கள்  கிரியைகளின்  வல்லமைகளை  முழு  பெலத்துடன்  வெளிப்படுத்திக்  கொண்டிருக்  கிறது, அசுத்த  ஆவிகளும்  தங்கள்  கிரியைகளை  அற்புத  அடையாளங்களுடன்  மிக  வல்லமையாக  வெளிப்படுத்திக்  கொண்டிருக்கிறது;

இவைகளுக்கு மத்தியில் சூதும் வஞ்சகமுமான அசுத்த ஆவிகளை யுடைய அநேகர், நான் தான் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டு அற்புத அடையாளங்களை செய்து ஜனங்களை வஞ்சித்துக் கொண்டி ருப்பார்கள். சிலர் கிறிஸ்துவைப் போல பல உபதேசங்களையும், வெளிப்பாடுகளையும்   கொடுத்து, தெரிந்து கொள்ளப்பட்டவர் களையும் வஞ்சிக்கதக்கதாக அற்புத அடையாளங்களையும் செய்வார்கள்.

கிறிஸ்துவின் ஆவியை ஒரு தனி மனிதனுக்கோ அல்லது மனுபுத்திரனுக்கோ, மட்டும் தேவன் தனிப்பட்ட முறையில் சொந்தங்கொண்டாடும்படி கொடுக்கவில்லை, மாறாக கிறிஸ்துவின் விசுவாச அளவுப் பிரமாணத்தில் நிலைத்திருந்து, கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக இருந்து கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் 

அநேக பரிசுத்தவான்களுக்கு கிறிஸ்துவின் ஆவி பகிர்ந்தளிக்கப்படுகிறது; எனவே எனக்கு மட்டும் கிறிஸ்துவின் ஆவி அருளப்பட்டிருக்கிறது, ஆகையால் நான் தான் கிறிஸ்து என்று எந்த ஒரு தனி மனிதனோ, மனுபுத்திரனோ உரிமை பாராட்ட முடியாது.

இந்த பூமியில் ஒரு மனிதனோ அல்லது மனுபுத்திரனோ நான் தான் கிறிஸ்து என்று சொன்னால் அவனை நம்பாமலும் அவனை பின்பற்றாமலும் இருங்கள்,இந்த பூமியில் நான் தான் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை வஞ்சிக்கிறவன், வஞ்சிக்க முயற்சி செய்கிறவன், அந்திக் கிறிஸ்துவின் ஆவியையுடையவர்கள்.

தேவன் தம்முடைய அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிற எந்த ஒரு சிங்காசனத்தின் பதவியையும், தேவனே தம்முடைய சித்தப்படி ஒருவனுக்கு கொடுப்பதற்கு முன் மனுஷர்களிலிருந்தோ, மனுபுத்திரர்களிலிருந்தோ யாராவது; தங்களுடைய சுய திட்டத்தின் படி இந்த குறிப்பிட்ட சிங்காசனத்தின் பதவிக்கு தகுதியான நபர் நான்தான் என்று தானாகவே தீர்மானித்து, தேவன் என்னைத்தவிர வேறு   யாருக்கு? இந்த பதவியை கொடுத்து கனம் பண்ண விரும்புவார் என்றும், தன் மனதிலே தானே தீர்மானித்து எந்த ஒரு சிங்காசனத்தின் பதவியை தனக்கு சொந்தமாக்கும்படி முயற்சிசெய்து   தாங்களாகவே   அதற்கு உரிமை கொண்டாடி எடுத்துக்கொள்ளுகிறார்களோ;

அவர்களுக்கு தேவனுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு, லூசிபர் தூதனுக்கு எப்படி நியாயத்தீர்ப்பு நடந்ததோ அதுபோல அவர்களின் ஆவி, ஆத்துமா, சரீரம் இருடைந்து அவர்கள் அபகரித்துக்கொள்ள முயற்சி செய்த சிங்காசனத்தின் பதவியும் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளப்பட்டு அழகையும் பற்கடிப்பையும் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

வடக்கு திசை காற்றை / உபதேசத்தை பின்பற்றுகிற 1,44,000 பேர் வரிசையில் வருகிற கிறிஸ்துவின் ஆவியுடைய வர்களும் மற்றும் தெற்கு திசை காற்றை / உபதேசத்தை பின்பற்று கிற அநேக ஆத்துமாக்களும் / தேவ தூத சேனைகளும் கிறிஸ்துவின் ஆவியையுடையவர்களாக கிறிஸ்துவின் சரீரத்தில் பல அவயவங்களாக இணைந்து தேவனுடைய சித்ததை நிறைவேற்று கிறார்கள்,

வடக்கு மற்றும் தெற்கு திசைகளிலிருந்து வருகிறவர்களுக்குள்ளே யாருக்கும் நான் தான் கிறிஸ்து மேலும் கிறிஸ்துவின் ஆவி எனக்கு மட்டும் விஷேசமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் யாருக்கும் இல்லை, காரணம் இவர்கள் எல்லாரும் கிறிஸ்துவின் சரீர அவயவங் களாகயிருந்து கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையின் உப தேசத்தை பின்பற்றுகிற அதிபதிகளும் பிரதிநிதிகளும் நான் தான் கிறிஸ்து, கிறிஸ்துவின் ஆவி எனக்கு மட்டும் விசேஷமாக அருளப் பட்டிருக்கிறது என்று கிறிஸ்துவின் பதவிக்கு உரிமை கொண்டாடு கிறார்கள். Rom_12:4-5, 1Co_12:4-12, 1Co_12:13-27, Eph_4:25, Eph_5:30, 1Pe_4:10, Mat_24:20-26, Mar_13:18-23, Luk_21:8, 1Jo_4:6, 2Jo_1:6-11, 2Th_2:1-17,

8-2 வடக்கு  திசை  காற்றும் / உபதேசமும், கிழக்கு  திசை  காற்றும் / உபதேசமும்  நேருக்கு   நேர்  மோதி   தங்களுடைய  வல்லமைகளை  வெளிப்படுத்துகிறபோது  தெற்கு  திசைக்  காற்று  மூன்றாவதாக  மோதுகிறது.

கிழக்கு திசையின் காற்றாகிய புற ஜாதிகளின் மாயா / மாயை வெளிப்பாடுகள் மூலம் தங்களுடைய இராஜரீகத்தையும் அதன் சிங்காசனப் பதவிகளையும், எருசலேமின் தேவனுடைய ஆலயத்திற் குள்ளே கொண்டு வந்து அவைகளை ஸ்தாபிக்க முயற்சி செய்கிற போது; வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி யின் காற்று தன்னுடைய வல்லமைகளை கிழக்கு திசையாரின் மேல் மிக வல்லமையாக முழங்கியடிக்கிறது.

புற ஜாதிகள் எருசலேம் தேவாலயத்தின் பிரமானங்களை மீறி தங்களுடைய மாயை   / மாயா வெளிப்பாடுகளினால் இராஜரீகத்தை யும், அதன் சிங்காசனப் பதவிகளையும் தேவனுடைய ஆலயத்திற் குள்ளே கொண்டு வந்தபடியால்; தேவனுடைய உடன்படிக்கைகளின் நீதியையும் நீயாயத்தீர்ப்பையும் நிறைவேற்றுகிற தெற்கு திசைக் காற்றும், மூன்றாவதாக கிழக்கு திசையாரின் மேல் மிக பலமாக மோதியடிக்கிறது.

தேவனுடைய வார்த்தைகளுடன் உடன்படிக்கை செய்து தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொண்டவர்களின் ஒவ்வொரு இருதயத்திலும், அவர்களுடைய இரட்சிப்பின் நிலையை பரி சோதித்து உறுதிப்படுத்தும்படி, தேவ முத்திரை அடையாளங்களின் மூலம் இரட்சிப்பின் காற்றாகிய வடதிசைக் காற்றும், தேவனுடைய உடன் படிக்கைகளின் நீதியையும், நியாயத்தீர்ப்பையும் நிறை வேற்றும் தெற்கு திசைக்காற்றும் மிக வல்லமையாக சுழன்று, சுழன்று அடிக்கிறது.

இப்பொழுது  யாராவது  தங்களுடைய  இருதயத்தில்  தேவனுக்கும்  மனிதனுக்கும்  மத்தியில்  அடையாளமாக  கொடுக்கப்  பட்டுள்ள  தேவ  முத்திரை  அடையாளங்களை  பின்பற்றாமல்  கிழக்கு  திசையாரின் / புற  ஜாதிகளின்  எந்த  ஒரு  முறையையும்  பின்பற்றுகிற  வார்களாக  இருந்தால்  அவர்கள்  தேவனிடமிருந்து  பெற்றுக்  கொண்ட  இரட்சிப்பு  உடனே  மரணமடையும்,

மேலும்  இவர்கள்  எப்பொழுது  தேவனுடைய  முத்திரை  அடையாளங்களின்  படி  தங்கள்  அறிவில்  தேவனுடைய  இரட்சிப்பை  மீண்டும்  ஏற்றுக்  கொள்ளுகிறார்களோ; அதுவரை  தேவனுடைய  சாபங்களும், வாதைகளும்  பெருகிக்கொண்டே  இருக்கும், அதனால்  அவர்களுடைய  ஆவி, ஆத்துமா, சரீரம்  இருளடைந்து  அந்தகாரத்திலே  அலைந்து  கொண்டிருக்கும். Eze_9:1-11, Eze_8:1-18, Eze_11:1-21,

8-3 வடக்கு  திசைக்  காற்றும், மேற்க்கு  திசைக்காற்றும்  நேருக்கு  நேர்  மோதி  தங்களுடைய  வல்லமைகளை  வெளிப்படுத்து  கிறபோது  மூன்றாவதாக  தெற்க்கு  திசைக்  காற்றும்  மோதியடிக்கிறது.

வடக்கிலுள்ள  சீயோன்  பர்வதத்திலிருந்து  தேவனுடைய  முத்திரைக்  கோலின்  அடையாளங்களுடன்  இரட்சிப்பின்  காற்று  எருசேலம்  பட்டனத்து  குடிகளின்  மேல்  வீசும்  போது, அதை  எதிர்க்கும்  படியாக  மேற்கு  திசையின்  அசுத்த  ஆவிகளின்  காற்று  புறப்பட்டு  வடதிசைக்  காற்றோடு  மிக  பலமான  மோதியடிக்கிறது.

வடதிசையின்  தேவ  முத்திரை  அடையாளத்தின்  காற்று  எருசலேமில்  வாசம்செய்யும்  ஜனங்களுடைய  நெற்றியில்  தேவனுடைய  முத்திரையை  அடையாளத்தை  தரித்துக்  கொள்ள  கட்டாயப்படுத்திக்  கொண்டிருக்கிறது, அப்பொழுது  மேற்கு  திசையின்  அசுத்த  ஆவிகளின்  காற்று  மிருகத்தின்  அடையாளத்தை  தங்கள்  நெற்றியிலும்  வலது  கையிலும்  தரித்துக்  கொள்ள  அற்புத  அடையாளங்களை  செய்து  கட்டாயப்படுத்திக்  கொண்டிருக்கிறது.

வடக்கு திசையாரின் தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பை தங்கள் அறிவில் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு, தெற்க்கு திசையிலிருந்து தேவனுடைய உடன்படிக்கைகளின் நீதியையும், நியாயத்தீர்ப்பையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது; மேற்க்கு திசையாரின் அசுத்த ஆவிகளின் காற்று வடக்கு திசை மற்றும் தெற்க்கு திசை ஆகிய இரண்டு காற்றுகளோடு பலமாக மோதுகிறது, மேலும் தெற்கு திசையாரின் காற்று மேற்கு திசையின் காற்றை ஜெயங்கொள்ள முடியவில்லை,

ஆனால் வடதிசையைப் பின்பற்றுகிற 1,44,000 பேர் வரிசையில் வருகிற பரிசுத்தவான்கள், மேற்க்கு திசையின் அசுத்த ஆவிகளுடன் போராடி தங்கள் சரீர மரணத்தையும், ஒரு பொருட்டாக எண்ணாமல், ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத் தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தனை / மேற்கு திசையாரின் அசுத்த ஆவிகளை ஜெயங்கொண்டார்கள்.  Rev_11:1-13, Rev_12:7-17

8-4 வடக்கு திசைக் காற்றுக்கும் தெற்கு திசைக் காற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

வட  திசையிலிருந்து  புறப்படும்  சீயோன்  பர்வதத்தின்  தேவனுடைய  முத்திரை  அடையாளங்களின்  காற்றும், தெற்கு  திசை  யிலிருந்து  புறப்படும்  தேவனுடைய  நீதியையும்  நியாயத்தீர்ப்பையும்  நிறைவேற்றும்  காற்றும்; தேவனுடைய  இராஜ்ஜியத்தை  இந்த  பூமியில்  ஸ்தாபிக்கும்படி  தேவனுடைய  பிரமாணங்களின்படி  போராடிக்  கொண்டிருக்கிறது.

8-5 கிழக்கு திசையாரின் காற்றுக்கும் மேற்க்கு திசையாரின் காற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

கிழக்கு திசையாரின் மாயை/ மாயா வெளிப்பாடுகளின் இராஜரீகமும் அதன் சிங்காசனப் பதவிகளும் மற்றும் மேற்கு திசை யாரின் அசுத்த ஆவிகளின் ஆளுகையும் அதிகாரங்களும் கிறிஸ்து வின் சிங்காசப் பதவிற்கு போட்டியிட்டு, தோல்வியடைந்து, தேவனு டைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பினால் தண்டிக்கப்படுகிறார்கள்.

8-6 வடக்கு திசைக் காற்றுக்கும் கிழக்கு திசைக்காற்றும் நேருக்கு நேர் மோதி தங்கள் வல்லமைகளை வெளிப்படுத்தும் பல இடங்கள்

புற ஜாதிகளின் மாயை / மாயா வெளிப்பாடுகளின் அதிபதியான கிழக்கத்திய மனுஷன் / மனுஷக்குமாரன் மற்றும் வடக்கு திசையினுடைய தேவனுடைய முத்திரைக் கோலின் அடை யாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தியை உடைய தேவனுடைய பிரதிநிதிகள் ஆகிய இரண்டு நபர்களும் பூமியின் கிழக்கு திசையிலிருந்து புறப்பட்டு ஒருவரையொருவர், நேருக்குநேர் முகமுகமாக சந்திக்கும் சில இடங்கள்.

1. கிழக்கிலிருந்து ஜாதிகளின் அதிபதி Isa_41:1-6,

2. வடதிசையிலுள்ளவன்  கிழக்கிலிருந்து  வருவான்  Isa_41:21-29,  ,

3. கிழக்கிலிருந்து  ஒரு  பறவை

4. தூரத்தேசத்திலிருந்தும்   / வட திசையிலிருந்து ஒரு மனிதன் Isa_46:10-13 

5. கர்த்தருக்கு பிரியமானவன் Isa_48:14-22,

6. தேவனுடைய  முத்திரைக்  கோலையுடையவன்  Rev_7:1-4,

7. வடக்கே  ஜபிராத்  நதியருகில்  நான்கு  தூதர்கள்  Rev_9:13-16,

8. வடக்கே  ஐபிராத்  நதியருகில்  ஒரு  யாகமுண்டு. Jer_46:6,  Jer_46:10-12,1

9. வடக்கிலிருந்து  தேவ  முத்திரையின்  அடையாளங்கள்    Eze_9:1-11

10. கிழக்கு  திசையார்  சூரியனை  நமஸ்கரித்தார்கள். Eze_8:1-18,

11. கிழக்கு திசையாரும், வடக்கு   திசையாரும் தேவனுடைய ஆலயத்தில் சந்திக்கும்போது தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பு துவங்குகிறது. Eze_11:1-21,

12. தலையாகயிருப்பவன் வாலாகயிருப்பான் வாலாகயிருப் பவன் தலையாகயிருப்பான்.  Deu_28:36-46,

  13. ஜனங்களில் உயர்ந்தவனும், தாழ்ந்தவனும் ஒருவருக் கொருவர் மோதிக்கொள்ளுகிறார்கள். . Isa_3:1-11,

14. இராஜாவின்  பெருமை  Dan_4:29-32,

15. இராஜாவின் பகைவன்   / சத்துரு Dan_5:18-21,

16. இராஜாவும் மனுஷரில் தாழ்ந்தவனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். Dan_4:10-19,

  17. ஆயிரம் பேருக்கு முன்பாக திராட்சரசம் குடிப்பது. . Dan_5:1-7,

18. மெனே  மெனே  தெக்கேல்  உப்பார்சீன். Dan_5:22-28,

19. ஆயிரம்  திராட்சசெடி  இருந்த  நிலம்  முட்காடு  Isa_7:21-25,

20. கிறிஸ்துவின்  பதவிக்கு  போட்டியிருப்பவர்கள்  அநேகர்  Ecc_4:15-16,

21. ஊழிய அழைப்பை பெற்றுக்கொள்ளுதல்   Rth_4:1-10,

22. மரித்தவன் - மாம்சத்தில் வெளிப்பட்ட இரட்சகராகிய இயேசு கிறிஸ்து 

23. மரித்தவனின் மனைவி - உடன்படிக்கை செய்து கொண்ட சபை 

24. மோவாபிய  ஸ்திரி - ஜாதிகளின்  சபை

25. வயல் - ஊழியர்கள்

26. சுதந்திரவாளி - கிறிஸ்துவின்  சிங்காசனத்திற்கு  உரிமை  கொண்டாடுகிறவர்கள்.

27. போவாஸ் - ஜாதிகளின் ஸ்திரியாகிய சபையை நேசித்து அவர்களுக்கு இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பவன்.

28. பறவையும் குதிரையும் ஒன்றையொன்று மோதுகிறது. . Job_39:13-25,

29. பறவைக்கு தேவனுடைய வழிகள் தெரியாது ஆனால் மனிதனுக்கு தேவனுடைய வழிகள் தெரியும்.  Job_28:1-15,

30. திரளான ஆற்று நீர் கழுத்து வரை கரை புரண்டு ஓடவது போல திரளான மாயை / மாயா வெளிப்பாடுகளும் புற ஜாதிகளுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். மெதுவாக ஓடுகிற சிலோவாவின் தண் ணீரைப் போல நித்திய ஜீவ தண்ணீர் / வார்த்தைகள் ஒவ்வொரு நாளும் மனிதனுடைய ஆத்துமாவின் தாகத்தை தீர்த்து ஜீவன் கொடுக்கிறது. Isa_8:5-22,


31. வடக்கு திசையிலிருந்து ஜெயம் வரும். Psa_75:1-10,

32. இரட்சிக்க  திரானியில்லாத  மனுபுத்திரன்  ஞ  Psa_146:1-5

33. இரட்சிக்க திரானியில்லாத மாயை/மாயா வெளிப்பாடுகள்   1Sa_12:19-25

34. இராஜாக்களை பழிவாங்க எழுதப்பட்ட தேவனுடைய நியாயத்தீர்ப்பு   Psa_149:1-9,

35. ஒரு  செங்கோலிலிருந்து  அக்கினி  புறப்பட்டது.  Eze_19:10-14,

36. மூடனும்  தயாளனும்  ஒருவரையயொருவர்  சந்திக்கிறார்  கள். . Isa_32:1-20,

 

8-7 நான்கு காற்றுகளை / உபதேசங்கங்ளை பின்பற்றுகிற ஆத்துமாக்களும் சிங்காசனப் பதவிகளுக்கு போராடுகிறார்கள்.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகளின் காற்றை / உபதேசத்தை பின்பற்றுகிறவர்களும் தேவனுடைய நீதி யுள்ள நியாயத்தீர்ப்பின்படி ஏதாவது ஒரு பதவியை சுதந்தரித் துக்கொள்ள போராடுகிறார்கள்.

மனுஷ  ஆத்துமாக்களும்  தூத  ஆத்துமாக்களும்  தங்களுடைய  நன்மை  தீமை  கிரியைகளின்  படி  அதற்கேற்ப  ஏதாவது  ஒரு  பதவியை  தேவனுடைய  நீதியுள்ள  நியாயத்தீர்ப்பினால்  சுதந்தரித்துக்  கொள்ளு  கிறார்கள்.

மூன்று மிகப்பெரிய பதவி முறைகள்:-

1. நித்திய  ஜீவனுக்கு  பங்குள்ளவர்கள்

2. நித்திய  நிந்தைக்கு  பங்குள்ளவர்கள்

3. நித்திய  இகழ்சிக்கு  பங்குள்ளவர்கள்

 

1. நித்திய  ஜீவனுக்கு  பங்குள்ளவர்கள் :-

முதலாம்  மரணமாகிய  பாதாளத்தின்  வல்லமைகளை  ஜெயங்  கொண்டு, முதலாம்  உயிர்தெழுதலாகிய  தேவனுடைய  ரூபத்திலும், சாயலிலும்  உயிர்தெழுந்து, மகிமையடைந்து, தேவனுடைய  இராஜ்  ஜியத்தை  சுதத்தரித்துக்  கொள்ளுகிறார்கள்.

2. நித்திய  நிந்தைக்கு  பங்குள்ளவர்கள்:

முதலாம்  மரணமாகிய  பாதாளத்தின்  வல்லமைகளை  ஜெயங்  கொள்ளமுடியாமல்  தேவனுடைய  ரூபத்தையும்  சாயலையும்  இழந்து  தங்களுடைய  சரீரத்தில்  மிருகத்தின்  ரூபத்iயும்  சாயலையும்  பெற்று, இரண்டாம்  உயிர்தெழுதலில்  தங்களுடைய  ஆவி, ஆத்துமா  உயிர்  தெழுந்து, இரண்டாம்  மரணமாகிய  அக்கினி  நரகத்திலிருந்து  விடுதலையாக்கப்படுகிறார்கள்.

3. நித்திய  இகழ்சிக்கு  பங்குள்ளவர்கள்:-

இரண்டாம் உயிர்த்தெழுதலில் தேவன் தங்களுக்கு கொடுத்த தேவனுடைய ரூபத்துடன், சாயலுடனும் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் உயிர்த்தெழுந்து இரண்டாம் மரணமாகிய அக்கினி நர கத்தில் பங்கடைபவர்கள்.



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries